அவசரகதியில் விதை போடாதீர்
மத்ரசா பாடத்திட்டம் ஷவ்வால் மாதம் துவங்கும். ஷஃபான் மாதத்தில் முடியும். ஆரம்பநிலை படிப்புக்கு பின் பெரிய மத்ரசாக்களில் சேர்ந்து மாணவர்கள் ஹிப்ஸ், ஹதீஸ், கற்றுத் தேறுவார்கள். பின்னர் சனது பட்டம் வழங்கப்படும்.
வாழ்நாளில் திருப்பு முனை இது, சமுதாயத்தின் பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இமாம் பணி, குத்பா ஓதும் பணி, மக்தப் பணி வழக்கமானது. மற்ற வேலைகளும் உண்டு.
உம்மத் தேவையை பூர்த்தி செய்வது, சமாதானம் கூறுவது, பிரச்னை நேரத்தில் ஷரீஅத் கட்டளைகளை சுட்டிக்காட்டுவது, நன்மைதீமை விளக்குவதையும் ஒவ்வொறு ஆலிமும் கடமையாகக் கருதுகின்றனர்.
திறமைக் கேற்றவாறு இத்தகைய பணிகளில் ஆலிம்கள் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் மத்ரசாக்கள் எளிமை கோட்பாட்டில் இயங்குகின்றன.
மாணவர்கள் சிரமமான சூழ்நிலையில் தீன்சேவை, சமுதாய பணியாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். தீனுடைய காரியங்களில் ஈடுபடுவோருக்கு தர்பியத் ஒழுக்கப்பயிற்சி நிஜாம் வளர முறையை அல்லாஹ் எளிதாக்குகிறான் நாட்டம், கஷ்டம், சிரமம், இழிவான பேச்சுக்களை சகித்துக் கொள்ள வேண்டும்.
நபிமார்களுக்கும் சமுதாயத்துக்கும் இடையில் நடந்த போராட்டங்களை குர் ஆன் விவரிக்கிறது. நபிகளார் அதிகமாக துன்புறுத்தப்பட்டார். அல்லாஹ் நினைத்திருந்தால் மக்கா வெற்றி சூழலை இன்னும் முன்னதாகவே ஏற்படுத்தியிருக்க முடியும்.
நபிகளார் காயம்பட்டார். பத்ரையும் கண்டார். உஹது போரையும் கண்டார் முகத்தில் காயமடைந்தார். முனாபிக் கைவரிசை நடந்தது. பசி கிடந்தார். தாயிப் அனுபவமும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் பிறகு மக்கா வெற்றி கிட்டியது. அல்லாஹ் தர்பியத் கொடுத்தான். சோதித்தான்.
உலமா நபிகாளாரின் வாரிசு. துன்பத்தை சகிக்க வேண்டி வரும். எளிய உணவு, உடை, இருப்பிடம் நாடவேணடும். வாழ்கையின் ஆடம்பரத்திலிருந்து தம்மை விலக்கி வைக்க வேண்டும்.
நேற்று எளிமை தேவைப்பட்டது ஆனால் அதனைவிட அதிகமாக இன்று எளிய வாழ்வு அவசியமாகிறது.
நகரத்தை விட்டு தொலைவில் உள்ள முஹல்லாக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம், அல்லாஹ், ரசூல் தெரியாது சரியாக உச்சரிக்கவும் பழகவில்லை. அங்கே வசதிகள் குறைவு. இளைஞர்கள் வேலை செய்ய முன்வருவதில்லை.
பாமர முஸ்லிம்களின் ஈமானுக்கு எவ்வித பாதுகாப்புமில்லை. அவர்களிடையே பணிபுரிய பலரும். முன்வருவதில்லை. இது சட்ட ரீதியான அலுவலக தொடர்பு அல்ல. ரூஹானிய தொடர்பு. சொல்லப்பட்ட டூட்டி, கடமை செய்கின்றனர். கூடுதல் கவனம், அக்கறை இல்லை. ஆலிம் கூலிக்காரர் அல்ல. அல்லாஹ்வின் திருப்திக்காக பணியாற்றுபவர். நேரம், கால எல்லை கிடையாது. பணி விரிவானது.
அல்லாஹ் இந்த உம்மத்தில் என்ன எதிர்பார்க்கிறானோ, அவையனைத்தும் ஆலிம் கடமைக்குள் வருகிறது. அகீதாவை சீரமைப்பது, தொழுகையை வலியுறுத்துவது, ஹராம் தடுப்பது, பரஸ்பர தம்பதி தகராறை தீர்த்து வைப்பது, இயற்கை சீரழிவில் நிவாரணம் உதவுவது. தேர்தல் நேரத்தில் வழிகாட்டுவது, இதர சமுதாயத்துடன் தாவா பணி, வகுப்பு வாத மோதலில் அமைதியை உறுதிப்படுத்துவது. துனியாவின் லாபத்தை நாடாமல் சமூகத்தின் நன்மையை மட்டும் மனதில் வைத்து இயங்குவது அவசியம்.
இன்றைய மத்ரசாக்கள் தமது பணியை மஸ்ஜிது, மத்ரசாவுடன் நிறுத்திக் கொண்டனர்.
இதன் காரணமாக, ஜாஹில் அறிவற்றவர், மூடர், சமூக தொடர்பற்றவர் முஸ்லிம்களின் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு தீர்வு கூறுகின்றனர்.
காலம் புரிந்து திட்டம் வழங்கலாம், இளம் ஆலிம்கள் நிலத்தை தயாரிப்பதற்கு முன் பயிர் நட ஆர்வப்படுகின்றனர். அவசர கதியில் விதை போட்டால் எதிர்பா£க்கும் நல் அறுவடை வாய்க்காது.
ஒரு தீமை அதிகமாக ஊடுறுவியுள்ளது. ஒரு கணத்தில் நீக்கிவிட முடியாது முயற்சி செய்தால் தீமை மட்டுமே அதிகரிக்கும் நன்மை வராது.
ஷரீஅத்தில் சில கட்டளைகள் மெல்ல மெல்ல தடுக்கப்பட்டது. குடி மூன்று தவணைகளில் ஹராமாக்கப்பட்டது.
மனிதன் உண்மையை சொல்ல வேண்டும் எல்லா உண்மைகளையும் எப்போதும் அனைவரிடத்தும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. சமூகத்தை பிரிவினையிலிருந்து காப்பாற்ற வேண்டும். குடும்ப பிரிவினை, அரசியல் பிரிவினை, வணிக பிரிவினை குழப்புகிறது. ஆனால் மத ரீதியான பிரிவினை காரணங்கள் அதிக நட்டத்தை ஏற்படுத்தும்.
பள்ளிவாசல், கல்விக் கூடம், மாநாடு ஒற்றுமைக்கான நமூனா.
இன்று இந்த மூன்றும் பிரிவினைக்கான காரணங்களாயின. ஆலிம் ஒரு குழுவுக்கான வழிகாட்டியல்ல. முழு உம்மத் சமுதாயத்துக்கான வேதனைக்கு மருந்து. ஒவ்வொரு முஸ்லிம் மீதும் பிரியம் முஹப்பத் வைக்க வேண்டும். ஆலிம் கலம், பேனா, நாக்கு பிரிவினைக்கு காரணமாகிவிடக்கூடாது.
“உம்மத்” இன்று மாடர்ன் நவீன படிப்பு கற்று வருகின்றனர். இவர்களின், பங்களிப்பும் சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மதத்தின் மீது இவர்களுக்கு மதிப்பு உண்டு. சிலர் அறியாமை காரணமாக, தவறான வாதம் புரியக் கூடும். “உம்மத்தின் அமானத்” நிலையில் ஆலிம் இத்தகையோரை பாவிக்க வேண்டும். விளக்கம் கூறி நெறிப்படுத்தலாம்.
மௌலானா காலித் சைபுல்லாஹ் ரஹ்மானி & பொதுச் செயலாளர், இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமி
-முன்சிப் நாளிதழ், முஸ்லிம் முரசு ஜூன் 2013
source: http://jahangeer.in/?paged=3