Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (3)

Posted on July 7, 2013 by admin

சமுதாயத்தைச் சத்திய வழியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும்

  அபூ ஃபாத்திமா    

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?

இந்த மவ்லவிகளால் மக்கள் முன் சத்தியத்தை எடுத்து வைக்க முடியவில்லை. “நாங்கள் பொதுமக்களின் தயவில் வாழ்கிறோம். உண்மையைச் சொன்னால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும். எங்கள் வீட்டு அடுப்பில் பூனை தூங்க ஆரம்பித்து விடும்’ என்று சொல்லுகிறார்கள்.

அந்தச் சத்தியத்தை நாங்கள் எடுத்து வைக்கும்போது எங்களுக்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டுமே? அதற்கு மாறாக எங்கள் மீது அவதூறுகளை அள்ளிச் சொரிந்து பொது மக்களை எங்களுக்கெதிராகத் தூண்டி சத்தியத்தை மறைக்க முனையும்போது, அந்த மவ்லவி வர்க்கத்தை அவர்களின் தரத்தை, அவர்களின் இழி நிலையை அடையாளம் காட்டாமல் சத்தியத்தை நிலைநாட்டக் கடமைப்பட்ட எங்களால் எப்படி இருக்க முடியும்? அதன் விளைவே இந்த ஆக்கம்.

இதன் பின்பாவது அவர்கள் உண்மையை உணர்வார்களாக. எங்களது கூற்றுக்கள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணாக இருந்தால் ஆதாரத்துடன் எடுத்துத் தரட்டும். அதனை ஏற்றுக் கொள்வதில் முன்னணியில் நாங்கள் இருப்போம். அதில் சந்தேகமே இல்லை.

வீண் அவதூறுகளையும், அபாண்டங்களையும் சொல்லுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்குப் பயந்து சத்தியத்தை உணர்ந்து செயல்பட முன்வரட்டும். அவர்கள் சத்தியத்தை மறைக்க பெரும் முயற்சிகள் செய்வதால் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோமேயல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எங்களுக்குக் கோபமோ, குரோதமோ இல்லை.

ஆக இன்றைய மதரஸாக்களில் போதிக்கப்படும் பிக்ஹு நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள அசிங்கங்கள் அங்கு ஓதிவரும் வாலிபர்களைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்து வீணாக வழி வகுக்கின்றன. அதன் விளைவு மதரஸா காலத்தோடு இக்கூடா ஒழுக்கம் ஒழிவதில்லை. இவர்களின் வெளியுலக வாழ்விலும் இது தொடர்கிறது. அவர்கள் மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணி புரியும் காலத்திலும் இக்கூடா ஒழுக்கத்தைச் செயல்படுத்தி மதரஸா பக்கமே செல்லாத சிறார்களையும் கெடுத்து வருகின்றனர். இக்கூடா ஒழுக்கம் எந்த அளவு இந்த மவ்லவிகளை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கொரு ஆதாரம்.

இந்த ஆக்கத்தைத் தயார் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் திருச்சியிலுள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாகப் பணிபுரிந்த ஒரு மவ்லவி ஒரு சிறுவனிடம் தவறாக நடந்து கையும் மெய்யுமாய் பிடிபட்டு உடனடியாகச் சீட்டுக் கிழிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலர் பார்க்க கையும் மெய்யுமாய் பிடிபட்டதால் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இல்லை என்றால் மூடி மறைத்து விடுவர். இதுபோல் இன்னொரு பள்ளியின் இமாம் இதே விஷயத்தில் பிடிபட்டபோது, அவுலியாக்கள் செய்யாத செயலையா நான் செய்துவிட்டேன் என்று கேட்டாரே பார்க்கலாம்.

இதிலிருந்து இவர்கள் அவுலியாக்களாக மதிப்பவர்களிடமும் இத்தீயபழக்கம் இருக்கிறது. இவரும் மாணவராக இருக்கும்போது அப்படிப்பட்ட அவுலியாக்களால்(?) கெடுக்கப்பட்டிருப்பார் என்பது விளங்குகிறதா? இல்லையா?

மவ்லவிகள் மீதுள்ள குருட்டு பக்தியால் சமுதாயத் தலைவர்கள், பள்ளி முத்தவல்லிகள் இவர்களின் இத்தவறுகளையும் மூடி மறைக்கவே முற்படுகின்றனர். இதன் காரணமாக இந்த மவ்லவிகளின் தரங்கெட்ட நிலை வெளியுலகுக்குத் தெரியும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. தனி நபர்களின் தவறுகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.

சமுதாயத்தைச் சத்திய வழியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதற்கு மாறாக சமுதாயத்தை அசத்தியத்தில் மூழ்கடித்து அற்ப உலக ஆதாயம் அடைய இந்த மவ்லவிகள் முற்படுவதால், இவர்களை அடையாளம் காட்டிச் சமுதாயத்தை சிந்தித்து செயல்பட வைப்பது நமது கடமையாகும்.

படித்துத் தேற வேண்டிய அவசியம் இல்லை:

இத்தனை முறைகேடுகள் உள்ள அரபி மதரஸாக்களில் அவர்களே திட்டமிட்டு நடைமுறைப் படுத்தும் கல்வியாவது முறைப்படி கற்பிக்கப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை. உஸ்தாதுகள் மீது குருட்டுப் பக்தியை மாணவர்களிடையே வளர்ப்பதற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்ய, செய்யப்படும் முயற்சியில் பத்தில் ஒரு பங்கு தானும் பாடங்களைப் படிப்பிப்பதில் காட்டப்படுவதில்லை.

அரபி மதரஸாவில் சேரும் ஒரு மாணவன் பாடங்களை ஒழுங்காகப் படித்து பரீட்சைகளில் ஒழுங்காக எழுதி பாஸாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவன் படிக்கிறானோ படுத்துத் தூங்குகிறானோ, 7 வருடங்கள் ஆகிவிட்டால் ஆலிம் பட்டத்துடன்(?) வெளியே வருவான். இந்த மவ்லவி களிடம் என்ன திறமையை எதிர்பார்க்க முடியும்? மதரஸாக்களின் இந்த நிலையை அங்குள்ள உஸ்தாதுகளும், மாணவர்களும் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். மதரஸாக்களில் உஸ்தாதுகள் மாணவர்களைப் பார்த்து அடிக்கடி இவ்வாறு சொல்லுகிறார்கள்.

“”ஒரு மாட்டைக் கொண்டு வந்து மதரஸாவினுள் கட்டி 7 வருடங்கள் சாப்பாடு போட்டால். அதற்கும் மவ்லவி ஆலிம் பட்டம் கிடைத்து விடும்’. என்று கிண்டலாகவே கூறுவார்கள். 4 அல்லது 5 வருடங்களிலேயே மவ்லவி ஆலிம் பட்டம் பெறும் மாணவர்களும் உண்டு. அவர்களின் திறமை காரணமாக Double Promotion என்று எண்ணிவிடாதீர்கள். ஒரு மதரஸாவில் 2-ம் ஜுமரா ஓதிவிட்டு அடுத்த வருடம் வேறொரு மதரஸாவில் 3ம் ஜுமரா ஓதினேன்’ என்று பொய் கூறினால் போதும். 4ம் ஜுமராவில் சேர்த்துக் கொள்வார்கள். காரணம் ஒரு மதரஸாவிலிருந்து இன்னொரு மதரஸாவில் போய்ச் சேர உரிய சான்றிதழ்களோ, பரீட்சை முறையோ கிடையாது.

இவற்றை ஏற்படுத்த முடியாது என்பதல்ல. அப்படி ஏற்படுத்தினால் மதரஸாவைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் பணம் வசூல் செய்ய மாணவர்களின் தலைகளைக் காட்ட வேண்டும். மாணவர்களைச் சேர்ப்பதில் இந்த நியதிகளை எல்லாம் கடை பிடித்தால் மாணவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார்கள். எனவே எண்ணிக்கைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்பதே மதரஸாக்களில் இன்றைய நிலையாக இருக்கிறது.

இதனை 1978-ல் நாம் நன்கு உணர்ந்து கொண்டோம். மதரஸாக்களில் போதனா முறை ஒழுங்கில்லாமல் இருப்பதாலும், படிப்பில் கண்டிப்புக் காட்டுவதற்கு வகை இல்லாததாலும், மதரஸாக்களிலிருந்து தகுதி இல்லாதவர்களே மவ்லவிகளாக வெளி வருகின்றனர். தகுதி உள்ளவர்களை மவ்லவிகளாக வெளிவரச் செய்ய ஒரு காரியம் செய்யலாம். எங்கே யார் மதரஸா நடத்தினாலும் சரி. 1ம் ஜுமராவிலி ருந்து 6ம் ஜுமரா வரை அந்தந்த மதரஸாக்களில் எப்படி பரீட்சை நடத்தினாலும் சரி, நடத்தாவிட்டாலும் சரி, மவ்லவி ஆலிம் பட்டம் கொடுக்க இறுதி 7ம் ஜுமராவின் பரீட்சையை பொதுவாக ஆக்குங்கள்.

தமிழ்நாடு ஜ.உ.சபையினரே கேள்விகளைத் தயாரித்து பரீட்சை நடத்தி வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் மவ்லவி பட்டம் கொடுக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறினோம். இந்த ஆலோசனையை சங்கரன் பந்தலில் நடைபெற்ற ஜ.உ.ச. கூட்டத்திலேயே வைத்தோம். சமூக நலனில் அக்கறை உடையவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த நமது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? நீங்கள் கூறும் ஆலோசனைப்படி பரீட்சை வைத்தால் எங்கள் மதரஸாக்களை எல்லாம் இழுத்து மூட வேண்டி வரும் என்று பலர் வாய் கூசாமல் கூறினார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதியற்றவர்களை எண்ணிக்கைக்காக மக்களிடம் காட்டி பணம் வசூலித்து காலத்தை ஓட்டி வருகிறோம். நீங்கள் ஆலோசனை கூறுவது போல் பொதுப் பரீட்சை வைத்தால் பெரும்பான்மையினர் தேறமாட்டார்கள். தங்கள் மதரஸாக்களின் கையாலாகாத நிலை வெட்ட வெளிச்சமாகி விடும். பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருப்பது தானே நமது இந்த ஆலோசனையை அன்று ஏற்க ஜ.உ. சபை யினர் மறுத்து விட்டதற்குரிய காரணம்! புரிகிறதா?

இந்த மவ்லவிகளை சத்தியத்தை உணரச் செய்ய நம்மால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து, அவற்றில் தோல்வியுற்ற பின்பே மவ்லவிகளைப் புறக்கணித்து சத்தியத்தைப் பொதுமக்கள் முன் எடுத்து வைக்க ஆரம்பித்தோம். இந்த மவ்லவி வர்க்கம் நமது இந்த சத்திய முயற்சிக்கு ஆதரவு தராவிட்டாலும், மெளனமாக ஒதுங்கி இருந்தாலும் நாம் அவர்களைக் கண்டு கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் அன்றைய ஜ.உ. சபையினராகிய தாருந் நத்வாவினர் செயல்பட்டது போல், சத்தியத்தை எடுத்துச் சொல்லும் நம்மீது வீண் அபாண்டங்களையும் பழிகளையும், அவதூறுகளையும் கூறி நம்மை எதிர்ப்பது கொண்டும், மக்களிடம் எங்களைக் குழப்பவாதிகள், அமானித மோசடியாளர்கள், தீவிரவாதிகள், வழிகேடர்கள் என்றும் ஓயாது பிரச்சாரம் செய்வது கொண்டும் சத்தியம் பொது மக்களை சென்றடைய முடியாமல் தடுப்பதற்கு முனைந்து விட்டனர். இந்த நிலையில் அவர்களின் உண்மையான இழிநிலைகளை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் வேறு என்ன செய்ய முடியும்? சத்தியம் நிலை நாட்டப்படுவது இந்த முல்லாக்களின் வரட்டுக் கெளரவத்தை விட முக்கியமானதாகும்.

மவ்லவிகளை நம்பினால் மறுமலர்ச்சி உண்டா?

இந்த மவ்லவி வர்க்கத்தை மக்கள் நம்பி இருக்கும் காலமெல்லாம் மக்களிடையே மறுமலர்ச்சி ஏற்படப் போவதில்லை. மக்கள் சத்தியத்தை உணர்ந்து கலப்படமில்லாத தூய இஸ்லாம் மார்க்கத்தை விளங்கி ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. காரணம் மக்கள் குர்ஆன், ஹதீஸை கேட்பதையோ, பார்ப்பதையோ இந்த முல்லாக்கள் சகிக்காமல் தடுத்து வருகின்றனர். எனவே இந்த மவ்லவிகளையும் அவர்களது பின்னணிகளையும் பச்சையாக எதையும் மறைக்காமல் மக்கள் முன் எடுத்து வைப்பது எங்களுக்குக் கடமையாகி விட்டது. அதனையே செய்து வருகிறோம்.

இந்த மவ்லவி வர்க்கத்தினர் அறியாத நிலையில் இந்தத் தவறுகளைச் செய்து வருகிறார்கள் என்று சொல்ல முடியாது. நன்கு அறிந்த நிலையிலேயே சத்தியத்தை எதிர்த்து வருகின்றனர். தங்கள் மதர ஸாக்களில் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் போதிக்க ஆரம்பித்து விட்டால், இதுவரைத் தங்களுக்கென்று ஒரு தனி அந்தஸ்தை-ஹஜ்ரத்-ஹழரத்-சந்நிதானம்-ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர் அல்லவா? அது என்னாவது?

அதாவது பிராமணர்கள் தாங்கள்தான் பிரம்மாவின் முகத்திலிருந்து படைக்கப்பட்டவர்கள். தங்களுக்கு தெய்வாம்சம் உண்டு. எனவே மக்கள் தங்களை ஸ்வாமி என்று அழைத்துக் கொண்டு தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகக் கருதி மரியாதை செய்து வர வேண்டும் என்ற தவறான-மோசமான நிலையை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதேபோல் இந்த மவ்லவி வர்க்கமும் தாங்கள் அரபி கற்றிருப்பதால் உயர்ந்தவர்கள் மவ்லவி-அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள்-தெய்வத் தன்மையுடையவர்கள், மக்கள் தங்களை ஹஜ்ரத்-சந்நிதானம் என அழைத்துக் கொண்டு தங்களின் வாக்கை வேதவாக்காக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்ற தவறான-ஷிர்க்கான நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். தெரிந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். பிராமண முஸ்லிம்களாகப் பவனி வருகின்றனர்.

மதரஸா மாணவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகக் கற்றுத் தெளிவு பெற்றால், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக கட்டிக்காத்து வரும் தங்களின் தனி அந்தஸ்து தவிடு பொடியாகி விடும் என்ற அச்சமே அவர்களை குர்ஆன், ஹதீஸை போதிப்பதை விட்டும் தடுக்கிறது. மற்றபடி அவர்கள் மனம் வைத்தால் சத்தியத்தைப் போதிக்க முடியும். ஆற்றல் குறைந்தவர்களையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குர்ஆனை முறைப்படி தஜ்வீது சட்டத்துடனும், இனிமையாகவும் ஓதக் கற்றுக் கொடுக்கத்தானே செய்கிறார்கள். குர்ஆனை மனப்பாடமிட்டு ஹாபிழ்களாக உருவாக்கத்தானே செய்கிறார்கள். இந்த இரு காரியங்களைத்தான் இன்றைய அரபி மதரஸாக்கள் உருப்படியாகச் செய்து வருகின்றன. தங்களின் புரோகிதத் தொழிலுக்கு இவை இரண்டும் மிகமிக அவசியம் என்பதாலேயே இவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்; இங்கும் அவர்களின் சுயநலமே வெளிப்படுகிறது.

அதாவது அற்ப உலக ஆதாயம் கருதியே இவை இரண்டையும் கற்றுத் தருகின்றனர். இமாமத் செய்யவும், ரமழானில் தராவீஹ் என்ற பெயரால் 8+3க்குப் பதிலாக 20+3 தொழ வைத்து பல ஆயிரக் கணக்கில் ஊதியம்-பெறவுமாகும். மஸ்ஜிதுகளில் இமாமாகப் பணியாற்ற வேண்டும். மவ்லவிகள் நல்ல கிராஅத்தைக் கொண்டு மக்களைக் கவர வேண்டும் என்பதில் அக்கறையாகச் செயல்படத்தானே செய்கின்றனர். அப்படியானால் அந்த மவ்லவிகள் சத்தியத்தை உணர்ந்து செயல்படும் வகையில் குர்ஆன், ஹதீஸை ஏன் போதிக்க முடிய வில்லை? சிந்திக்க வேண்டுகிறோம்.

தங்களின் தனி அந்தஸ்து தக்க வைக்கப்பட வேண்டும். உஸ்தாது என்ற போர்வையில் ஹஜ்ரத்-சந்நிதானம் என்ற இறைத் தன்மையை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மவ்லவி என்று அரபியில் கூறினால் அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள் படுகிறது. இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்களா? மற்ற மக்கள் எல்லாம் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் இல்லையா? மவ்லவி, ஹஜ்ரத் போன்ற பதங்களை அவர்கள் விரும்புவதிலிருந்தே அவர்கள் தங்களை இறைத் தன்மை-தெய்வாம்சம் பொருந்தியவர்களாகக் கருதுகிறார்கள் என்பது புரிகிறதல்லவா?

மவ்லவி வர்க்கத்தின் மீதுள்ள குருட்டுப் பக்தியை விட்டு நிதானமாகச் சிந்தித்தால் இந்த மவ்லவி வர்க்கம் இந்தச் சமுதாயத்திற்கு எத்தனைப் பெரிய கொடுமையை இழைத்து வருகிறது என்பது புரியவரும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலிருந்தே இந்த முல்லா வர்க்கம் மார்க்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற எண்ணம் மிகப்பெரிய தவறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷிகளிடையே வேறூன்றிப் போயிருந்த முல்லாப் பரம்பரையினரை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் காட்டினார்கள். தாருந் நத்வா இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டது. இஸ்லாத்தில் புரோகிதர்களுக்கு இடமே இல்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கப்பட்டது. தனக்குப் பின்னால் புரோகிதக் கூட்டமான இந்த முல்லா வர்க்கம் மீண்டும் சமுதாயத்தில் நுழைந்து விடாதிருக்க “”அஜமியை(அரபி மொழி தெரியாதவன்) விட அரபி (அரபி மொழி தெரிந்தவன்) உயர்ந்தவன் அல்ல. அதே போல் அர பியை விட அஜமி உயர்ந்தவன் அல்ல” என தெள்ளத் தெளிவாக தனது ஹஜ்ஜின் இறுதி உரையில் அறிவித்து விட்டார்கள்.

அரபி மொழியைக் கொண்டு இந்த முல்லா வர்க்கம் பெருமை பேசிச் சமுதாயத்தைக் கூறு போடுவார்கள் என்று தெரிந்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு எச்சரித்தார்கள் போலும். காரணம் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தப் புரோகிதர்கள் கூட்டமே (முல்லா வர்க்கமே) மனித சமுதாயத் தில் ஏற்றத்தாழ்வைப் போதித்து பல பிரிவினர் களாகவும், அது முற்றிப் பல ஜாதிகளாகவும் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்துபட காரணமாக இருந்து வருகிறது. இந்தச் சாபக்கேடு தமது உம்மத்தைத் தொடராதிருக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்தாலும், இந்த சமுதாயத்தை ஏமாற்றி மீண்டும் இந்த புரோகிதர்களான முல்லா வர்க்கத்தினர் இந்த சமுதாயத்தில் வந்து நுழைந்து ஆதிக்கம் செலுத்து கின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துச் சொன்ன காலம் பாரீர் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்த நபி தோழர்களில் அரபி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், அரபி நாட்டைச் சாராத பார்ஸி, ஹபஷிஒ தேசத்தைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். நபி தோழர்களில் குர்ஆன் ஹதீஸை அதிகமாக அறிந்தவர்களும், அறியாதவர்களும் இருந்துதான் இருக்கிறார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை அறிந்தவர்கள் தங்களை ஆலிம்-அறிந்தவர் என்றும் மற்றவர்களை அவாம் -பாமரர் என்றும் பிரித்துச் செயல்பட்டதாகச் சரித்திரமே இல்லை.

மார்க்க விஷயங்களில் பல விஷயங்களை நன்கு தெரிந்தவர், தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அந்த ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்த வரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அழகிய நடை முறையைக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கவில்லை. அல்லது தனக்குக் குர் ஆன், ஹதீஸைக் கற்றுக் கொடுத்த உஸ்தாதுக்கு தெய்வாம்சம் கற்பித்து அவர்களை மனித நிலையிலிருந்து தவறே செய்யாத தெய்வ நிலைக்கு உயர்த்த வில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்னும் இந்த அழகிய நிலை நீடித்தே வந்திருக்கிறது. இதற்கு அந்த நான்கு இமாம்களுமே தக்க சான்றாகும். இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உஸ்தாது. இமாம் ஷாஃபிஈ அவர்கள் இமாம் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உஸ்தாது. இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உஸ்தாதாக ஹம்மாது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

இவர்களில் யாரும் தங்களின் உஸ்தாதுகளின் சொல் நூறு கிதாபுகளைப் பார்க்கிலும் ஆதாரப்பூர்வமானது என குருட்டுத்தனமாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை. குர்ஆன், ஹதீஸைப் பார்த்தே செயல்பட்டது தெளிவாகத் தெரிகிறது. அதனைத் தெளிவாக அவர்கள் அறிவித்துள்ளதும் சரித்திர ஏடுகளில் பதிவு செய்து பாதுகாக்கப் பட்டுள்ளது. அவற்றை நாம் 1986 நவம்பர் அந்நஜாத் இதழில் வெளியிட்டிருந்தோம். இப்போது “”முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்று தனி நூலாக வந்துள்ளதிலும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய கால கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்தபடியே குர்ஆன், ஹதீஸையே ஒருவருக்கொருவர் போதித்து வந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிந்து கொள்வதில் அந்த இமாம்கள் பெரிதும் முயற்சிகள் எடுத்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கிடைத்தால் அதனை அவசியம் எனக்கு அறிவிக்கவும் என உஸ்தாகிய இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது மாணவராகிய ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கூறி இருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து என்ன தெரிகிறது? உஸ்தாதின் வாக்கை வேத வாக்காகக் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்படுபவராக இமாம் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இருந்ததில்லை.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தனது மாணவரிடமிருந்து கிடைத்தால் அதனை உதாசீனம் செய்யும் நிலையில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இருந்ததில்லை. ஆசிரியராக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிவதிலும், அவற்றின்படி செயல்படுவதிலுமே குறியாக இருந்திருக்கிறார்கள். அதல்லாமல் ஆசிரியரின் வாக்கை வேதவாக்காக எடுத்துச் செயல்படுபவர்களாகவோ, ஒருவரை ஒருவர் தக்லீது செய்பவர்களாகவோ இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?

ஒரு முக்கியமான விளக்கம்:

இங்கு குர்ஆன், ஹதீஸை வைத்துச் சுயமாகச் சிந்தித்து விளங்கிச் செயல்படுவதற்கும், உஸ்தாதையோ, முன்னோர்களையோ நம்பி தக்லீது செய்வதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டை விளக்குவது நமது கடமையாகும். அல்லாஹ் தனது நெறிநூல் கட்டளையில்,
“”உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், மற்றவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்’ ( அல்குர்ஆன் 7:3) என்று தெளிவாகக் கட்டளையிட்டுள்ளான்.

ஒருவர் குர்ஆன், ஹதீஸை வைத்து சத்தியத்தை விளங்கிக் கொள்ளும் தூய்மையான எண்ணத்துடன் முயற்சி செய்து அதில் அவர் சரியான முடிவுக்கு வந்தால் அவருக்கு இரண்டு நன்மை. ஒன்று முயற்சி செய்ததற்கு, மற்றொன்று சரியான முடிவுக்கு வந்ததற்கு, ஆயினும் அவர் தவறான முடிவுக்கு வந்தால் முயற்சி செய்ததற்கு ஒரு நன்மை உண்டு. (அம்ர்பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ)

இப்போது இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள்.

குர்ஆனையும், ஹதீஸையும் வைத்துக் கொண்டு ஒருவர் சத்தியத்தை விளங்க முற்படுகிறார். அவர் எண்ணத்தில் தூய்மை இருக்கிறது. ஆயினும் அவரது இயலாத தன்மையின் காரணமாக சரியான முடிவுக்கு வர முடியவில்லை. நாளை மறுமையில் அல் தர்பாரில் ஆஜராகும் போது “யா அல்லாஹ் நான் உனது வழிகாட்டல் நூலையும், உனது தூதரின் நடைமுறைகளையும் வைத்து தூய எண்ணத்தோடு 7:3 வசனத்தின்படி உனது கட்டளைக்கு வழிபட்டு ஆராய்ந்து செயல்பட்டேன்.

எனது இயலாமையால் அதில் தவறான முடிவுக்கு வந்து விட்டேன்’ என்று முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் அவரை மன்னிப்பான் என்று நம்ப இடமிருக்கிறது. அதே சமயம் அவர் குர்ஆன், ஹதீஸை தன்னால் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையால் அவற்றில் முயற்சி செய்யாமல், ஒரு இமாமையோ, அல்லது உஸ்தாதையோ அவர்கள் தன்னை நரகத்திலிருந்து பாதுகாப்பார்கள் என நம்பி அவர்களை தனது பாதுகாவலர்களாக்கி அவர்களைத் தக்லீது செய்தார் என்று வைத்துக் கொள்வோம்.

நாளை அல்லாஹ்வின் தர்பாரில் என்ன சொல்வார்? குர்ஆன், ஹதீஸை என்னால் விளங்க முடியாது என எண்ணி இந்த இமாமை நான் தக்லீது செய்தேன்’ என்றுதான் சொல்ல முடியும். அவர் 33:66,67,68 இறைவாக்குகள் படி நரகம் புகுவது உறுதிதானே:
இப்போது சிந்தியுங்கள்! குர்ஆன், ஹதீஸ் எளிதானவை, தெளிவானவை, இரவும், பகலைப் போன்று வெள்ளை வெளேர் என்று தெளிவாக்கப் பட்டவை என்றுதான் குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படுகிறது.

குர்ஆன், ஹதீஸை விளங்க முடியாது; அல்லது விளங்குவதற்குக் குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஒரே ஒரு வசனமும் இல்லை. அதுமட்டுமல்ல, யாரையும் தங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி பின்பற்றுவதற் கும் ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவ்வாறு மற்றவர்களைப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றக் கூடாது என 7:3 வசனத்தில் கட்டளையிட்டிருக்கிறான் அல்லாஹ்.

இந்த நிலையில் நாம் ஒருவரை நம்பி அவரைப் பின்பற்றி நடப்பது அதாவது தக்லீது செய்வது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்ததாகத் தானே முடியும். “நான் என் இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும்படி தான் தெளிவாக கட்டளையிட்டுள்ளேன். மற்றபடி இமாம்களான அபூஹனீஃபாவையோ, மாலிக்கையோ, ஷாஃபிஈ-யையோ, ஹன்பலையோ (ரஹ்-ம்) அல்லது வேறு மவ்லவிகளையோ கண்மூடி பின்பற்றும்படி-அதாவது தக்லீது செய்யும்படி எங்கே கட்டளையிட்டுள்ளேன்’ என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு மாறு செய்த குற்றத்திற்கு ஆளாக வேண்டி வருமா, வராதா? என்பதை நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட முன் வாருங்கள். (பார்க்க அல்குர்ஆன் 33:36, 66,67,68)

 கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb