வாழ்க்கையில் பெண்களின் பல்வேறு நிலைகள்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான்.
மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர்.
o உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம் உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.
o அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர் பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.
o அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.
o பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். இந்த பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.
o அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்கையை மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.