இஸ்லாத்தை வெறுக்கும் மக்கள் அதனை அறிய வாய்ப்பு கொடுங்கள்
நண்பர்களே! இஸ்லாத்தை பற்றி அறிந்தவர் எல்லொரும் அதனை ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை…. மதமாற்றம் என்பது அவர்களுடைய தனிபட்ட விருப்பம் …
மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது. மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ,ஃபத்வா என்றும், ஜிஹாத் என்றும். ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர்.
இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் மீடியாவில் வரும் அணைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புபவர் தான்..”–இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள்.
தவறாக கற்பனை செய்து சொல்லும், நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள். தமிழில் திருமறைக் குர்ஆனை வாசியுங்கள் நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர்.
உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டு உங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பாலமாக நான் கருதுகிறேன். நான் உங்களை பற்றி அறியாமல் நீங்கள் என்னை பற்றி அறியாமல் ஒரு கானல் நீர்போல் உள்ள நம் சகோதரத்தை நிஜத்திலே கொண்டுவரவே இந்த முயற்சி. இதனை நீங்கள் எங்களது அன்பளிப்பாக ஏற்றுகொள்ளுங்கள்.
நண்பர்களே! உங்களுடைய நண்பர்களுக்கு இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிருங்கள் இஸ்லாத்தை வெறுக்கும் மக்கள் நம்மை பற்றி அறிய வாய்ப்பு கொடுங்கள்.
-உண்மை முஸ்லிம் சகோதரன்.