வழிப்பறி பிச்சைக்காரர்கள்!
கடந்த ஜூன் 6 ம் தேதி, நான் சவுதி வருவதற்காக புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த போது, விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலம் கீழே ஒரு போக்குவரத்து அதிகாரி (அவர் பெயர் ….. – கையில் இரண்டு பட்டை கோடிட்ட அதிகாரி) நின்று கொண்டு வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார் (உயர் அதிகாரி ஜீப்பில் அமர்ந்திருந்தார்)
அப்போது சுமார் பிற்பகல் 1:00 மணி இருக்கும்,
எங்கள் வண்டியை நிறுத்தி டாகுமென்ட்களை சோதித்தார்,
ஓட்டுனரின் உரிமத்தையும் சோதித்தார்,
அனைத்தும் சரியாக இருந்தது பிறகு என்ன செய்வது என்று யோசித்த அவர் ”உங்கள் வாகனத்தில் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டி உள்ளீர்கள் ஆகையால் ரூபாய் ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்” என்றார்
மேலும் ஓட்டுனரின் உரிமத்தையும் பிடுங்கிக்கொண்டார், அதற்கு நாங்கள் “இப்போதே சன் கண்ட்ரோல் பிலிம் அனைத்தையும் அகற்றிவிடுகிறோம் என்று நங்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.
இறுதியாக, அவரிடம் வாக்குவாதம் செய்ய நேரம் இல்லை ஆகையால். நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்கவும்… அவர் என்ன சொன்னார் தெரியுமா? “ஏன் இதை முன்னாடியே கொடுக்க வேண்டியது தானே?”
நாங்களும் இந்த வழிப்பறி / பிச்சைக்கார சனியனிடமிருந்து விடுப்பட்டால் போதும் என்று கிளம்பினோம்.
குறிப்பு: எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போது “நிறைய வாகனங்கள் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டியுள்ள நிலையில் சென்றது என்பது குறிப்பிட தக்கது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனமாக பார்த்து பிடிக்கிறார்கள். அப்போது தான் பைசா கறக்க முடியும் என்று. தலைநகரிலே அதுவும் பட்ட பகலிலே, என்ன அநியாயம் இது?!
இப்படிக்கு,
அருண் மொழி தேவன் (புதுச்சேரி)