பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா?!
தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே
சத்திய விருட்சம் செழித்து வளர்கின்றது
மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும்
கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு
சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும்
விதையாக வீழத் தயங்குபவன் மனித
அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன்
போராட்ட வரலாறு பஞ்சு மெத்தையில்
படிக்க திகட்டாத சுவையுடையது தான்
யதார்த்தத்தில் அதன் ஓய்வு கூட சுமையாகி
நாளைய பொழுதை புலர்ப்பிக்க இன்று
முற்படுக்கையில் முகவுரை எழுதப் படலாம்
தோல்விகளில் படிப்பினை காணாதவன்
இழப்புக்களில் விரக்தியை நிச்சயம் தழுவுவான்
சோதனைகளை நிஜத்தில் சந்திக்க தயங்குபவன்
வேதனைகளில் அற்புத சுகத்தை காணாத் தயங்குபவன்
களத்தை பற்றி கற்பனை கதை பேசவே தகுதியற்றவன்
இலட்சிய வாதம் அலட்சியமாக்கப்படும் இவர்களால்
தூய புரட்சிகரத்தால் புத்துலகை படைக்க முடியாது
கோழைத்தனத்தின் விலாசத்தை நெற்றியில் சுமந்து
இவன் கட்டில் சாவுக்கே கதி கலங்கியே சாவான்
source: http://aburukshan.blogspot.in/2012/12/blog-post_31.html