Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்…!

Posted on June 26, 2013 by admin

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்…!

தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம்.

அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

இது போன்று விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன. உதாரணமாக, கெட்ட பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துவதோடு, தரத்தையும் குறைத்துவிடும். அதுமட்டுமல்லாமல், நல்ல பழக்கமான குளியல் விஷயமும் விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். அதிலும் குறிப்பாக ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளித்தால், அவை எப்படி உடல் வலியை குறைக்குமோ, அதே போன்று விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படாமல் இருப்பதோடு, இல்லற வாழ்க்கைக்கு ஏற்றவாறே அழகான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம்.

o  சுடுநீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

o  உள்ளாடை

அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

o  மொபைல்

பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

o  மன அழுத்தம்

மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

o  போதிய உடலுறவு இல்லாமை

உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

o  ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

o  புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

o  சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

o  டிவி பார்த்தல்

பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

o  லேப்டாப்

தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

93 − = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb