Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எய்ட்ஸ் – ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா தந்த பரிசு!

Posted on June 13, 2013 by admin

Related image

M U S T    R E A D

எய்ட்ஸ் – ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா தந்த பரிசு!

ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ‘பிரபஞ்ச அழகி’யும், ‘உலக அழகி’யும் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரச்சார நடவடிக்கையாக உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்வதைப் பார்க்கையில் மனம் விம்மி கண்ணீர் வருகிறது.

எப்பேர்பட்ட சேவை? அதுவும் வளர்ந்த, வல்லரசு நாடுகளுக்கு பிரச்சார பயணத்தை மேற்கொள்ளாமல் மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் மட்டுமே எய்ட்ஸ் விழிப்புணர்வு ‘சொற்பொழிவு’ ஆற்றும் அவர்களது கருணை பல கோடிகள் கொடுத்தாலும் ஈடாகாது!

உண்மையில் எய்ட்ஸ் நோய் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே ஏன் இருக்கிறது, அல்லது பரவுகிறது? அமெரிக்காவில் ஒரின காதலர்கள் தவிர வேறு யாரிடமும் எய்ட்ஸ் நோய் ஏன் தென்படவேயில்லை…?

Dr. Alan Cantwell, Jr எழுதிய Queer Blood: The secret AIDS Genocide plot புத்தகம் இதற்கான விடையைத் தருகிறது. எய்ட்ஸால் மரணமடைந்த பலரையும் பரிசோதனை செய்து டாக்டர் அலன் கான்ட்வெல் தனது முடிவை அந்தப் புத்தகத்தில் அறிவித்திருக்கிறார்.

”உண்மையில் எய்ட்ஸ் என்பது சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரம். இத்தகைய சோதனைகள் மூலம் வருங்கால தலைமுறையினருக்கு பேராபத்தை ஏற்படுத்த முடியும். அணு ஆயுதங்களுக்கு ஒப்பான பேரழிவை சோதனைச் சாலை உயிரியியல் கிருமிகளால் உண்டாக்க முடியும் என்பதற்கான ஆதாரமே எய்ட்ஸ்” என்கிறார் டாக்டர் அலன் கான்ட்வெல்.

இந்த எய்ட்ஸ் கிருமியின் உருவாக்கத்துக்கு பின்புலத்தில் இருந்தவர், அமெரிக்காவின் முன்னாள் State Secretery ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும், மூன்றாம் உலக நாடுகளில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவவும், காங்கிரஸ் பணத்திலிருந்து 10 மில்லியன் டாலர்கள் இந்த எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கியதையும் நாம் கவனத்தில் கொள்வதே இல்லை.

உண்மையில் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதாக நடந்த விபரீத சோதனைதான் இன்று பரிணாம வளர்ச்சியுடன் எய்ட்ஸ் நோயாக வளர்ந்திருக்கிறது என்று கூட சுருக்கமாக சொல்லலாம்.

1964ம் ஆண்டு அமெரிக்க அரசின் நிதி உதவியோடு ‘சிறப்பு வைரஸ் புற்று நோய் திட்டம்’ (SVCP) பெத்திஸ்டாவில் தொடங்கப்பட்டது. முதலில் ரத்தப் புற்று நோய், நிணநீர் சம்மந்தமான புற்று நோய்க்கான ஆய்வாக மட்டுமே இருந்த இந்த திட்டம், பின்னர் அனைத்து புற்று நோய்க்கான ஆய்வாக விரிவு படுத்தப்பட்டது.

பல வருடகாலமாக சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்திப் பார்க்கும் சோதனை நடந்து வந்தது. இதற்காக பூனை, சுண்டெலி, கோழி உட்பட பல விலங்குகள் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டன. இப்படி சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்படும் மருந்துகள் விலங்குகளில் வேலை செய்ய ஆரம்பித்ததும் அதை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்த முற்படுவார்கள்.

இதற்காக அவர்கள் எந்த மனிதனிடமும் ஒப்புதலோ, அவனிடமோ அல்லது அவளிடமோ சொல்லிவிட்டோ செய்வதில்லை. இப்படி செய்யப்பட்ட சோதனைகளில் விலங்குகளை பாதிக்கும் பல வைரஸ் கிருமிகள், மனிதனையும் சென்றடைந்தன, அடைகின்றன.

கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, 1994ல் மக்கள் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகள் அமெரிக்க மக்கள் மீது நடத்தப்பட்டதை விசாரிப்பதற்காக ‘அறிவுரைக் குழு’ ஒன்றை ஏற்படுத்தினார். 95ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 1960 வரை நோயாளிகளின் அனுமதி இல்லாமலேயே மருத்துவர்கள் அவர்கள் மீது சோதனை நடத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அதிர்ந்துபோன அமெரிக்க மக்கள், எதிர்ப்பு தெரிவித்தப் பின்னர், இந்த ‘சோதனை முயற்சிகள்’ மூன்றாம் உலக நாடுகளின் மீது, மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ஒவ்வொரு மூன்றாம் உலக குடிமகனும் தன்னையும் அறியாமல் பரிசோதனைக் கூடத்து விலங்காகத்தான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்.

உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கு காரணமான Human Immuno Deficiency Virus கூடவே Herpes virus பாதிப்பு ஏற்படுத்தி வருவதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். இந்த Herpes Virus, இப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் Kaposis Sacoma க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. மனிதர்களின் உடலமைப்பை பெருமளவில் கொண்டுள்ள விலங்கினங்களுக்கு, குறிப்பாக குரங்குகளுக்கு, நோய் உண்டாக்கக் கூடிய இந்த Kaposis Sacoma எப்படி மனிதர்களின் உடலுக்கு வந்தது? சோதனை மூலம் போடப்பட்ட தடுப்பூசிகளால்தானே?

AIDS கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஹெச். ஐ. வி வைரஸ் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கிருமியே. இதை எய்ட்ஸ் நோய் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ராபர்ட் காலோ, ”எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாக வரும் ஒருவித புற்று நோயே” என்று கூறியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதே ராபர்ட் காலோ இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.

”எனக்கு தெரிந்து அமெரிக்காவில் ஆண், பெண் புணர்ச்சிக்கு பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை. அமெரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் நோய் என்றுமே ஒரு பிரச்னையாக வராது” என்று அடித்து கூறியிருக்கிறார்.

இந்த ராபர்ட் காலோ, மருத்துவத்தை முறையாக பயின்ற மருத்துவரல்ல. அவருடைய பயிற்சி உடல் வேதியியல் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. வைரஸ் கிருமி குறித்த போதிய அனுபவம் இல்லாததால் சோதனைச் சாலையில் நிகழ்ந்த பல கலப்படங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார்… என்று வரும் செய்திகள் அதிர வைக்கின்றன.

ரத்தம் மூலமும், உபயோகிக்கப்பட்ட சிரிஞ் மூலமும், பாலியல் தொழிலாளர்களுடன் இணைவதாலும் எய்ட்ஸ் வரும்… என எல்லோருமே நம்புகிறோம். இப்படி நம்பவைத்தே ஆணுறைகளின் விற்பனையையும் அதிகரித்திருக்கிறோம். ஆனால் மேற்சொன்ன காரணங்களால் எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

வயிற்றில் புண் இருக்கிறதா என அறிய உதவும் என்டோஸ்கோபி மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றியோ, அறுவை சிகிச்சையினாலும், குழந்தை பிறப்பு & பெண்களின் உடல் சார்ந்த பிரத்யேக பிரச்னையினாலும், ரத்தக் குழாய் வழியாக பரிசோதனை மேற்கொள்வதில் பயன்படுத்தப்படும் உபகரணங்களால் பரவும் எய்ட்ஸ் பற்றியோ எத்தனை பேருக்கு தெரியும்? பெருமளவு எய்ட்ஸ் நோய் இவைகளால்தான் வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

1970களில் அமெரிக்க ஒரின காதலர்களிடையே மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியில் இருந்த வைரஸ் கிருமியால்தான் அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்தவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்தது, பரவியது என்பது கண் கூடான உண்மை.

அதேபோல பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், ஆப்பிரிக்காவிலுள்ள பல கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவ ஆரம்பித்ததையும் கருத்தில் கொள்வது நல்லது. 1970களுக்கு முன் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் எய்ட்ஸ் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதை கருத்தில் கொண்டால் உண்மை புரியும்.

ஒருவேளை சோதனைச் சாலையில் வெற்றிகரமாக எய்ட்ஸீக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அடுத்ததாக வேறு ஏதேனும் ஒரு புதிய உயிர் கொல்லி நோய் உற்பத்தியாகி பரவ ஆரம்பிக்கும். இந்த புதிய நோயும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே மையம் கொள்ளும்.

ஆறறிவுள்ள விலங்குகள் மலிவாக வேறெங்கே கிடைக்கும்?

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + = 12

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb