இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!
சென்ற வார சர்ச்சையாளன் அமெரிக்க கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் (Terry Jones), இந்த வாரம் ஃபிரெஞ்சு பத்திரிக்கையாளன் Charb என்று அழைக்கப்படும் Stophane Charbonnier!
இவன் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் எனச்சொல்லி நிர்வாணப் படமாக தனது பத்திரிக்கையில் 19.09.12 அன்று வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக உலகெங்கிலும் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகங்களில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட தூதரகங்களுக்கும், ஃப்ரெஞ்ச் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டது.
ஒவ்வொருமுறை இஸ்லாம் விமர்சிக்கப்படும்போதும் அது அபரிமிதமான வளர்ச்சியே கண்டுள்ளது! அந்த வளர்ச்சிவேகம் மேலும் கூடவேண்டும் என இறைவன் நாடியுள்ளானோ, என்னவோ… மதவெறி பாதிரியைத் தொடர்ந்து, அந்த சூடு அடங்குவதற்குள் அடுத்த வாரமே மீண்டும் எதிரிகளின் கயமைத்தனங்கள்!
இஸ்லாத்தை ஆயுதமாக வைத்து தங்களுக்கு உலக அளவில் விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட ஜென்மங்களே..! அந்நியப் பெண்ணை ஆசையாய் பார்ப்பதுகூட கண் செய்யும் விபச்சாரம் என எச்சரித்தார்களே அந்த அண்ணல் நபி முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…!! அந்த பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்க்கிறீர்களா..? இறைவன் நாடினால் நீங்களும் உணர்வீர்கள் ஒருநாள் அந்த ‘முஹம்மத்’ யாரென்று!
உலகெங்கிலும் இஸ்லாம் மார்க்கம் மளமளவென வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாருக்கும் நாம் சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இத்தகைய வளர்ச்சி இவ்வுலகுக்கு ஒன்றும் புதிதல்ல! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு தனிமனிதனும் உரிமைக் கொண்டாட முடியாத அளவுக்கு நாம் நினையாத புறத்திலிருந்து அதன் வளர்ச்சி தொடர்ந்துக் கொண்டேயுள்ளது. அது ஏன்…? இப்படியொரு வளர்ச்சி எப்படி…?
அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒருசில முக்கிய/அடிப்படைக் காரணங்களை இஸ்லாமியர்கள் அனைவரும் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்! அவையென்ன அந்த முக்கிய காரணங்கள்…?
1) ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அணுவளவுகூட மாறிவிடாத, மனிதக் கரங்களால் மாசுபடுத்த முடியாத, முக்காலமும் பேசக்கூடிய, வாழும் அற்புதமாக விளங்கும் ஒரே வேதமான அல்குர்ஆன்!!
2) அகிலமே அண்ணார்ந்து பார்க்கும் உன்னத நபியான, மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையான, உயரிய வாழ்க்கை நெறி!!
உலக மக்கள் தொகை எந்தளவுக்கு அதிகமாகிக் கொண்டே வந்துள்ளதோ, அதைவிட அதிவேகமாக இஸ்லாம் வளர்ந்துக் கொண்டிருப்பதற்கு மேலே சொன்ன அந்த இரண்டு காரணங்கள்தான் அடிப்படையானவை என்பதை ‘இஸ்லாமோஃபோபியா’வில் ஊறித் திளைத்த எதிரிகளும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இப்போது உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை!
அதாவது இறைவனின் அற்புத வேதமான அல்குர்ஆனும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை முறையும் இவ்வுலக மாந்தர்களை இஸ்லாமிய வழியில் நாள்தோறும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன!
அதன் அருமை, பெருமைகளை சிந்தித்துணர்ந்த மக்கள் மனமுவந்து குடும்பத்துடனும், குடும்பத்தைவிட்டு தனியொரு ஆளாகவும் இஸ்லாத்தின் பக்கம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்துவக் கொள்கைப் பரப்பாளர்களைப்போல் பணத்தையும், பதவியையும் காட்டி யாரும் இஸ்லாத்திற்கு அழைக்கவில்லை. மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள எந்தவித கட்டாயங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இஸ்லாத்தில் இடமில்லை. இவ்வுலக-மறு உலகுக்கான உண்மை வழியை உணர்ந்த மக்கள்தான் தத்தமது வாழ்வின் நற்பலன்களை அடைய விரும்பி அணி அணியாய் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள்!!
அதேசமயம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஒவ்வொரு படிநிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு சொல்வதாக இருக்கும் அல்குர்ஆனுக்கு ஈடான எந்தவொரு வேதத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளால் காட்ட இயலவில்லை! அதனால்தான் சில வல்லரசுகள் அதைத் தடை செய்யவும், அழிக்கவும் துடிக்கின்றன. கையில் கிடைக்கும் குர்ஆனையெல்லாம் தீயிட்டு கொளுத்தி தன் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர். தீக்கிரையாக்கினாலும், கடல் நீரோடு கரைத்துவிட்டாலும், மண்ணில் புதைத்து மக்க வைத்தாலும் அல்குர்ஆன் இவ்வுலகை விட்டு அழிந்துவிடுமா? என்னவொரு அறியாமை!!
அயோக்கியப் பாதிரி அதன் மீது சிறுநீர் கழித்து அவர்களின் மதவெறியைத் தணித்துக் கொண்டால், அல்குர்ஆன் சிறுமைப்பட்டு விடுமா? அல்லது அதன் அற்புதத் தன்மைகள்தான் குன்றிவிடுமா? அவர்களின் இச்செயல்கள் மடத்தனத்தின் உச்சக் கட்டமல்லவா? அதேபோல் மாமனிதர் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி படமெடுத்தால், நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தால் இஸ்லாமிய சமூகத்தை வேண்டுமானால் மனதால் காயப்படுத்தலாம். ஆனால் அத்தகைய ஈனச்செயல்கள் மூலம் அந்த மனிதப் புனிதரை, அந்த உத்தம நபியை அவருடைய அந்தஸ்திலிருந்து அணுவளவும் இறக்கிவிட முடியாது என்பதுகூட தெரியாத இவர்கள்.. கடைந்தெடுத்த மடையர்களல்லவா?
பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவத்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், ‘இஸ்லாம்’ என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுபவர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன.
அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!
2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்…. அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால்,
“அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்” என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூலம், அவர்கள் “இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது” என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.
இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தகக் கடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே நூல், இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்ற செய்தி வெளிவந்தமை கவனிக்கப்பட வேண்டியதாகும்.
கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். (நன்றி: tntj.net)
இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சென்றுக் கொண்டிருப்பதாகவும், இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியும் டென்மார்க் நாட்டில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமிய எதிரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.
வல்ல இறைவனின் இம்மார்க்கம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துக் கொண்டு செல்கின்றது என்பதற்கு இதுவும் மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது! இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட எண்ணி இவர்கள் நடத்தும் இத்தகைய போராட்டங்களினால்கூட சத்திய மார்க்கத்தை நோக்கி மக்களை திருப்பக்கூடிய எதிர்வினைகளே நடந்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் ‘இஸ்லாம்’ என்பது அனைவரையும், அனைத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம்!
ஆக விரும்பியோ, விரும்பாலோ இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள், அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி குறைக்கூறி வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துதான் இஸ்லாமியர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விஷமத்தனங்கள், பொய்ப் பிரச்சாரங்கள், புண்படுத்தும் வரம்பு மீறல்கள், வன்முறையாட்டங்கள், கொலைவெறித் தாக்குதல்களின் மூலமாக காய் நகர்த்துவதெல்லாம் இஸ்லாம் இன்னும் வளர்ந்துவிடுமோ, இஸ்லாமியர்கள் மேலும் பெருகிவிடுவார்களோ என்ற வெறித்தனமானதொரு அச்சத்தின் விளைவுகளே!
யார் எதன்மீது பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவை எப்போதுமே அதற்கு எதிர்மாறான விளைவுகளையே கொடுக்கும். இஸ்லாத்தின் மீதான இன்றைய திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றை அநாயசமாக எதிர்க்கொண்டு தன்மீது பொய்யாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு கண்கூடான சாட்சிகள்!!!
கார்ட்டூன் கயவன்
எனவேதான் நாகரீகம் தெரியாத கற்றறிந்த மூடர்களாலும், மனிதத்தைப் புரிந்துக் கொள்ள இயலாத மனித நேயமற்ற கயவர்களாலும், அடுத்தவர்களை அடக்கியாளத் துடிக்கும் அநியாயக்காரர்களாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எதைச் சொன்னால் இஸ்லாமியர்கள் பொங்கி எழுவார்கள் எனத் தெரிந்துக் கொண்டு, தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும், மாசற்ற வாழ்வை வாழ்ந்துக் காட்டி உலக மாந்தர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்த அண்ணல் நபியவர்களின் மீது களங்கம் கற்பிக்கத் துணிந்திருக்கிறார்கள். எட்டாத உயரத்தில் உள்ள வெந்நிலவை நோக்கி சேற்றை அள்ளியெறிந்தால் எறிந்தவன் முகத்தையே அது நாசப்படுத்தும் என்பது இன்னும் அவர்களுக்கு ஏனோ புரியவில்லை!
வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே! உங்களிடம் சில கேள்விகள்:
* வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மானங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ்ந்துக் காட்டிய முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
* ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக தோன்றவில்லையா?
* பெண்ணுரிமை இயக்கங்களைச் சார்ந்த பெண்கள் எனக் கூறிக்கொண்டு, இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வீதியில் போராட்டம் பண்ணும் விபச்சாரிகளை காரித் துப்பாமல், கண் கொட்டாமல் பார்த்து அதை செய்திகளாகவும் வெளியிட உங்களுக்கு வெட்க உணர்வே கொஞ்சமும் இல்லையா?
* ஓரினச் சேர்க்கைக்காக திருமணம் செய்வதை வீடியோக்களாக உலகமே பார்க்கும் வண்ணம் பெருமிதத்தோடு வெளியிடும் உங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தினை முற்போக்குத்தனம் என்பீர்களா?
* ஜெபம் பண்ண வந்த பெண்களையும், சிறுமிகளையும் உங்கள் பாதிரியார்கள் நாசம் பண்ணியதை மத போதகம் என மார்தட்டிக் கொள்வீர்களா?
* நைட் க்ளப்களில்தான் உங்கள் காமவெறியினைத் தணித்துக் கொள்கிறீர்கள் என்றால், சில பொது நிகழ்ச்சிகளிலும் அந்நிய ஆண்களும் பெண்களுமாக கைக் கோர்த்து, ஒட்டி உரசி, உதடோடு உதடுகள் முத்தமிட்டு… (ச்சீ… த்தூ…) உங்களின் நாறிப்போன அந்த கலாச்சாரத்தை நாகரிகம் என்பீர்களா?
* சன்பாத் எடுக்கிறோம் என்று உங்கள் பெண்கள் டூ பீஸிலும், முழு நிர்வாணமாகவும் கடற்கரை மணல்களில் புரண்டு சூரிய குளியல் எடுப்பதையும், தங்கள் கண்முன்னால் அதை அடுத்தவன் படம் எடுப்பதையும் அனுமதிக்கும் கலாச்சாரத்தினை சூடு, சொரணை இல்லாத சுதந்திரம் என்பீர்களா?
அந்த அயோக்கியர்கள் அதே கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான் இவ்வளவு சுலபமாக அண்ணல் நபி கண்மணி நாயகத்தின் பெயரில் நிர்வாணக் கார்ட்டூனை கைக்கூசாமல் வரையவும், உண்மைக்கு புறம்பான ஆபாசப் படமெடுக்கவும் முடிகிறது!
மதுவில் சுகம் காணலாம் என அதை வெறுக்க மனமின்றி வாழும் மக்கள் மத்தியில் மதுவை விஷமாகப் பார்க்கும் ஒரு சமுதாயம்.. வட்டிக்கும், மோசடியான வியாபாரங்களுக்கும் எதிராக போராடும் ஒரு சமுதாயம்..
அந்நிய ஆண் – பெண் சகவாசத்தை அடியோடு வெறுக்கும் ஒரு சமுதாயம்.. காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அந்த ‘முஹம்மத்’ என்ற இறைத்தூதர் வழியிலும், அவர் மூலம் கிடைக்கப்பெற்ற திருக்குர்ஆனின் வழியிலும் வாழத்துடிக்கும் ஒரு சமுதாயம்.. இத்தகைய நேர்வழிக்கு வழிவகுத்துச் சென்ற கண்ணியமிகு ஒரு உத்தமரை இழிவுபடுத்துவதை எவ்வாறு தாங்கிக் கொள்ளும்? ஆனாலும் அதற்காக சில நாடுகளில் குற்றத்தில் சம்பந்தமில்லாத அப்பாவிகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தக்கூடிய வன்முறையையும் கலவரங்களையும் இஸ்லாமியர்கள் யாரும் ஆதரிக்க முடியாது.
உண்மை இஸ்லாத்தினை சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துக் கொள்ளாத ஒருசில முஸ்லிம்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். தவறுக்கேற்ற தண்டனையை தகுந்தவர்களுக்கு கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், அப்பாவிகளின்மீது நடத்தும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை.
ஏனெனில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்! ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாத நிர்பந்தமாக நடந்த போர்களையும், போர் தர்மத்தையும் அழகிய கட்டுப்பாடுகளோடு வரையறுத்து, அதை வலுயுறுத்திய முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை! இதுபோலவே மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மனிதன் சகமனிதனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகளைக் கட்டளையாகப் பிறப்பித்து, மனித உரிமை மீறல்களிலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியது இஸ்லாம்!
அப்படிப்பட்ட இஸ்லாத்தினைக் கொண்டுவந்து மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த தன்னையே அர்ப்பணித்த மாமனிதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தத் துடிக்கும் அயோக்கியர்களே! நீங்கள் உண்மையிலேயே அறிவுடைய மக்களாக இருந்தால்…,
‘முஹம்மத்’ என்ற அந்த இறைத் தூதரை இஸ்லாமிய மக்கள் எதற்காக தன் உயிரைவிட மேலாக மதித்து நேசம் கொள்கிறார்கள் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘புகழுக்குரியவர்’ என்ற தன் பெயருக்கேற்ப வாழ்ந்துக் காட்டிய உண்மை சரித்திரங்களை புரட்டிப் பாருங்கள்! திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வினைம் வாக்கினையும் நடுநிலையோடு உற்று கவனியுங்கள்!
கால சூழ்நிலைக்கேற்றவாறு எத்தனையோ தலைவர்களை இவ்வுலகம் கொண்டாடும், புகழ்பாடும்! ஆனால் எந்த தலைவர்களையாவது தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவிலும், மூச்சிலும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சமுதாயமே தன் முழு வாழ்வின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதுண்டா?
எங்கோ ஒரு மூலையில், யாரையாவது கைக் காட்டலாம்.. இதோ இவர், இன்னவருடைய வழியைப் பின்பற்றுகிறவர் என! ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அப்படியே அடிக்கு அடி பின்பற்றுபவர்களும், அவர்களின் உத்தம வாழ்க்கையை நடுநிலையோடு ஆராய்ந்து, வியந்து, பாராட்டி, தானும் அதுபோன்றதொரு அழகிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட (முன்னாள்) மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இன்றைய வரலாற்றில் ஏராளம்! இதற்கு எந்த நாட்டவர்களும், எந்த மொழியினரும் விதிவிலக்கில்லையே? ஏனென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
மேலும் உங்கள் நலம் விரும்பி சில எச்சரிக்கைகள்!
உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!
இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம் மார்க்கம் மிக மிக வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்குர்ஆன் 3:54)
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61 : 7,8,9)
(குறிப்பு: உண்மைக்கு புறம்பாக ஆபாச படம் எடுத்தவனையும், அதனை பரப்பிக் கொண்டிருப்பவனையும், தன் மதவெறியைத் தணித்துக் கொள்ள நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தவனையும், அதையெல்லாம் ஆதரிக்கும் சிலரையும் கண்டிக்கவே இந்த கட்டுரையே தவிர, நடுநிலையான எண்ணம் கொண்ட மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.)
இஸ்லாமோஃபோபியாவினால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு இறைவா நேர்வழிக் காட்டுவாயாக!
source: http://payanikkumpaathai.blogspot.com/.