மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு…!
அபூ யஹ்யா
தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி
சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது. எதுவாக இருக்கட்டும்!
எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது,
அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி,
விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம்; ‘நான் விமானம் எண் 546ல் சென்னை செல்லும் பயணி’ என்றேன்,
அதற்கு அந்த அதிகாரி : போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு என்றார், ப்ளீஸ் ப்ளீஸ்!! இன்று இரவு ஒரு நிகழ்ச்சியில் அவசியம் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் மன்றாடினேன்
அதற்கவர் : ரொம்ப பேசாதே! போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு, யாராலும் உன்னை அனுமதிக்க முடியாது என்றார்.
நான் : உன் விஷயத்தில் அல்லாஹ் போதுமானவன் என்றேன்
அதிகாரி: ஆச்சரியத்தோடு நான் என்ன செய்வது என்றார்.
எப்படியோ அங்கிருந்து நான் வெளியாயிட்டேன் வேறு ஏதாவது விமானம் கிடைக்குமா? என்று பார்த்தேன், அல்லாஹ்வுடைய வழியைத்தவிர வேறு எதற்கும் வழியில்லை, பிரயாணத்தை கேன்சல் பண்ணிருவோமா? என் காரிலேயே போயிருவோமா ? இல்ல.. தனி கார் புடிச்சு போயிருவோமா? ஏன்றெல்லாம் எனது தலையில் சிந்தனைகள் வேகமாக சுழல ஆரம்பித்தன,
என் சிந்தனைகள் ஒருவிதமா கன்ட்ரோல்-லெ வந்துடிச்சு, தனி கார் புடிச்சே போயிடுவோம்னு முடிவுக்கு வந்து அவசரமாக கார் பார்க்கிங்கு வந்தேன்
அங்கெ பார்த்தால்: பள பள என்று ஒரு புதிய இன்னோவா காரோட ஒருத்தர் நின்றிருந்தார், சென்னைக்கு போரதுக்கு எவ்வளவு என்று அவர்கிட்ட கேட்டேன்.
டிரைவர்: 5000 ரூபாய் என்று சொன்னார், ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனால் அதைவிட 500 ரூபாய்தான் குறைக்க முடிஞ்சுது!!!
எப்படியோ!! நான் தனியா ஏறி உட்கார்ந்துகொண்டு டிரைவரிடம் சொன்னேன் : வேகமா போவனும் ப்பா!! இன்னைக்கு ராத்திரிக்கே அங்கு இருக்கனும் ஆனால் சில மணிநேரங்களுக்கு பின்னர் என் கதை முடியப்போவுதுன்னு எனக்கு தெரியல!!
டிரைவர் : கவலைப்படாதீங்க! ஃப்ளைட்டு போரது மாதிரி போயிடுறேன் என்றார், சொன்னது போல கடுமையான வேகமாகத்தான் போனார் ஏனெனில், இஷாவுக்கு முன்னாடி போயிட்டால் 1000 ரூபாய் சேர்த்துத் தருவேன் என்று சொல்லியிருந்தேன்!!
நாங்கள் சுவாரஷ்யமாக பேசிப்பேசி ரொம்ப நெருங்கிட்டோம், என் வேலையைப்பற்றி, என் குடும்ப நிலையைப்பற்றி டிரைவர் என்கிட்ட விசாரிச்சாரு, நானும் அதே மாதிரி டைம் பாஸ் பண்ண விசாரிச்சுக்கிட்டே போனேன்.
திடீரென என் உம்மாவுக்கு டெலிபோன் பண்ணலாம் என்று என் மனசிலெ பட்டிச்சு, என் மொபைலை எடுத்து தொடர்பு கொண்டேன் என் உம்மா டெலிபோனை எடுத்து ”அபூசாரா எங்க இருக்க’ என்று கேட்டாங்க, நான் விமானத்தை மிஸ் பண்ணின எல்லாக் கதையையும் சொல்லி முடிச்சு.. நான் இப்ப வாடகைக்காரிலே வந்திக்கிட்டு இருக்கிறேன் என்பது வரை சொன்னேன்
திடீரென ஒரு நிமிடம் நிசப்தம் ஆயிட்டாங்க திரும்ப: மகனே!! கவனமா ப்பாத்து வா! அல்லாஹ் நமக்குத் தெரியாத கெடுதிகளை விட்டு காப்பாத்தட்டும்! என்று சொன்னாங்க.
நான் : வந்து சேர்ந்த உடனே இன்ஷா அல்லாஹ் டெலிபோன் பண்றேன் என்று சொல்லிவிட்டு வேற ஏதாவது சொல்ரீங்களா என்று கேட்டேன் உம்மா : நீ நல்ல படியா வந்து சேரனும் அதான் என்றார்கள்
அதோடு பேச்சு முடிந்தது
ஆனால் என் உள்ளத்திலே ஏதோ ஒரு கவலை சூழ்ந்து விட்டதாக உணர்ந்தேன், ஏதோ ஆச்சரியமான விஷயம் என்னை எதிர்பார்த்து இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன்
இதன் பின் என் சம்சாரத்திற்கு டெலிபோன் பண்ணினேன்
என் மனைவி : என் உயிரு!! எத்தனை கி.மீ போய்ட்டீங்க? எனக் கேட்டாள்
நான் : 150 கி.மி தாண்டிட்டோம் என்றேன்
என் மனைவி : அல்லாஹ் மேல் சத்தியமா! நீங்கள் இல்லாத வீடு வீடாவே இல்லை என்றாள்
நான் : அல்லாஹ் உனக்கு பரகத் செய்யட்டும், இன்ஷா அல்லாஹ் சீக்கிரமா வந்து..ட்ரேன், மத்தியானமே திரும்பி வந்துட்ரேன், பிள்ளைகளை முக்கியமா நல்லா பாத்துக்கே, எனக்காக புள்ளை சூசுவிற்கு முத்தம் கொடுத்துக்க அல்லாஹ் நல்ல புள்ளையா அவளை வளர்க்கனும் என்றேன்.
என் மனைவி : கவலைப்படாதீங்கள்!! நீங்கள் போனதிலிருந்து என் வாப்பா எங்க எங்க..ன்னு கேட்கிறா,
நான் : பிள்ளையிடம் கொஞ்சம் கொடு என்றேன்
சூசு (என் புள்ளை) : வாப்பா எங்க இருங்கீங்க! என்றாள்
நான்: கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன் இன்ஷா அல்லாஹ் என்று சொன்னது ஏதோ புரிந்தது
சூசு : வழக்கம்போல வாப்பா! சாக்லட் என்றாள்
நான்: சிரிச்சிக்கிட்டு உம்மாட்டே கொடு என்றேன்
உம்மா (என் மனைவி) டெலிபோனை வாங்கிpட்டாள்; ஏதாவது சொல்ல விரும்பிறியா என்று நான் அவளிடம் கேட்டேன் என் மனைவி: நீங்கள் நலமாத் திரும்பி வரணும் என்றாள்
கவலை ஏன் ரொம்ப கூடிக்கிட்டே போவுதுன்னு எனக்கு ஒன்றும் புரியலை, சிந்தனை வேகமாக சுழன்று கொண்டே போவுது, டிரைவர் கேட்ட கேள்விதான் என்னை திசை திருப்பியது டிரைவர்: என்னிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்றார்
நான் : இரண்டு ஆணும் இரண்டு பொண்ணும் ஆக நாளு என்று சொன்னேன்
டிரைவர் : அல்லாஹ் எல்லோரையும் நல்லவங்களாக ஆக்கட்டும்! என்றார்
நான் : ஆமீன் மேலும் உன் புள்ளைகளுக்கும் அவ்வாறே ஆகட்டும்! என்று சொன்னேன்
ரோட்டையும் பார்த்தேன் வானத்தையும் தலையை உயர்த்தி பார்த்தேன், சூரியனையும் பார்த்தேன் அது மறைய ஒரு மணிநேரம்தான் பாக்கி இருந்தது!!
நான் பெருமூச்சு விட்டுக்கிட்டே சொன்னேன் : யா அல்லாஹ் உன் கிருபை (ரொம்ப பெரிசு) யா ரஹ்மான் யா ரஹீம்!!
திடீர்னு டிரைவர் : ப்ளீஸ் நான் ஒரு சிகரெட் பத்திக்கிறவா? என்ற அமைதியான குரல்
நான் : தம்பி நீ ரொம்ப நல்ல ஆள், பாத்தால் நல்ல மனிசனாத் தெரியுது, உன்னையே எரிச்சுக்கிற விரும்புரியே அது எப்படி? இந்த சிகரட்..டினாலே உன் மார்க்கம் கம்மியாகிக் கிட்டே போவுது, இதிலே எந்த இலாபமும் இல்லை, உனக்கு கெடுதி-தானே? என்றேன்
டிரைவர் : இப்னுல் ஹலால் !! (நல்ல உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் பிறந்த மகனுக்கு அரபியர்கள் சொல்லும் வார்த்தை) எனக்காக துஆ செய்யுங்கள், சத்தியமா! போன ரம்ஜான் மற்றும் அதுக்கு முந்திய ரமஜான்லேயும் இதை விடுவதற்கு முயற்சி பன்னினேன் என்னாலே முடியலை!! என்றார் டிரைவர்
நான் : அல்லாஹ் உனக்கு சக்தியை கொடுத்திருக்கிறான், நீ ஒரு ஆண், ஒரு சிகரட்டை விடுகிற சக்தியில்லை!! என்றேன் அவரிடம், தொடர்ந்து அவரிடம் விவாதம் செய்துக்கிட்டே வந்தேன் அவர் வாய்பேசாமலே வந்தார் இறுதியாக தன் தப்பை ஏத்துக்கிட்டு இனிமேல் இன்ஷா அல்லாஹ் (சிகரெட்) குடிக்கவே மாட்டேன் என்று சொன்னார்
நான் : அவர்ட்ட லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லிக்கிட்டே : அல்லாஹ் எங்களையும் உங்களையும் மார்க்கத்தின் மேலே நிலைத்திருக்கச் செய்வானாக! என்று சொன்னேன்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது : காரின் கதவில் தலையை வைத்து ஏன் ஒரு விதமான பீதி என்னைப்பிடித்திருச்சு என சிந்தித்தவாரே இருந்தேன், காரணம் ஒன்றும் புரியலை ஆனால் இதற்கிடையிலே பயங்கரமான பயத்தை உணர்ந்தேன், திடீரென காரில் கடுமையான ஒரு அடி விழுந்த சப்தத்தைக் கேட்டேன், எனக்கும் டிரைவருக்கும் ஒரு வித மன உளைச்சல் ஏற்பட்டது
டயர் வெடிச்சிருச்சு என்று தெரிஞ்சுகிட்டேன்
நான் : வேகத்தைக் குறைச்சிக்கே! காரை பாத்து ஓட்டு! என்று டிரைவரிடம் சொன்னேன், அவர் (டிரைவர்) எதுவுமே பேசலை, ஸ்டேரிங்கை பிடிச்சமாதிரியே இருந்தார், அவர் மூஞ்சில் ஒரு பயம் தெரிந்தது.
அதன்பின்னர் : கார் வலது புறமாக வேகமாக புரண்டுகொண்டே போனது, அல்லாஹுதஆலா أشهد إن لا إله إلا الله وأن محمداً رسول الله (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்ஹ) என்ற கலிமாவைச் சொல்வதற்கு என் மனசில் போட்டான், சப்தத்தை நன்றாக உயர்த்தி சொல்கிறமாதிரி தெரியுது, அதன் பின் என் தலையில் நல்ல அடி விழுந்துள்ளதும்; அந்த இடம் நெருப்பு பட்டமாதிரி எரிவதும் தெரிந்தது. கார் பல தடவை பல்டிகள் அடிச்சு வெளியே ஒரு இடத்திலே போய் நின்றது, எழுந்திருக்கலாம் என்று முயற்சிப் பண்ணினேன் ஆனால் என் உடம்பிலிருந்து எந்த பகுதியையும் அசைக்க முடியவில்லை.
அது மாதிரி என் வாழ்க்கையிலே நடக்கவேயில்லை, பேச நினைக்கிறேன் ஆனால் பேச முடியலை, கண்கள்; திறந்து இருக்கு ஆனால் பார்க்க முடியலை, பார்வை மங்கி இருளாகிக் கொண்டே போவுது, ரொம்ப பேர் பக்கத்திலே வர்றது போறது காதிலே கேட்குது, அவர் தலையை அசைக்காதீங்க, ரத்தம் ஓடுது மேலும் அவருடைய இரண்டு காலும் உடைந்திருச்சு என்று அவங்க பேசுறதெல்லாம் கேட்குது, நான் கஸ்டப்பட்டு மூச்சு விட்ரது புரியுது, உடம்பில் ஒரு வித பயங்கரமான உஷ்ணம் என் கால்களிலிருந்து தலையை நோக்கி வர ஆரம்பமாயிடுச்சு.
டிரைவருக்கு என்ன ஆயிடுச்சு? என்று அவங்க பேசிக்கிறது என் காதிலே கேட்குது (தூரத்திலிருந்து ஒரு சப்தம்) மௌத்தாயிட்டார்-அசைவேயில்லை, அடுத்து என்ன செய்யனும் என்று சொல்லுங்கள் என்று ஒரு மனிதர் கேட்டார்
இரண்டாவது பகுதி :
உயிர் வாங்குமுன் ஷைத்தானோடு ஏற்படுகின்ற சந்திப்பு மற்றும் உயிர் வெளியேறுகிற அமைப்பு:
கடுமையான வலியை எனக்குள் உணர்ந்தேன் மேலும் ஏதோ ஒரு விதமான பயங்கரத்தையும் அறிந்தேன் ஏதோ நடக்கப்போகிறது என்பது எனக்கு பட்டது, இதுதான் எனது முடிவா? எனது மனதில் கூறியவாறு சிந்திக்க ஆரம்பித்தேன்.
சுப்ஹானல்லாஹ்!!
இதன் பின் கைசேதப்பட ஆரம்பித்தேன் என் வாழ்நாளில் வீனாகக் கழிந்த ஒவ்வொரு வினாடிகளும் என்மூலம் ஏற்பட்ட ஒவ்வொரு குறைபாடுகளும் என்னை வெட்கிக்க வைத்தது !!
இப்பொழுது தப்பிக்க முடியாத ஒரு உண்மையிற்கு முன்னிலையில் நான் இருக்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ள சப்தங்களெல்லாம் மறைய ஆரம்பித்தது, என் கண்களுக்கு முன்னிலையில் இருள் சூழ ஆரம்பித்து, கத்தியை வைத்து வெட்டுகிற மாதிரி உடம்பிலே வலி, ஏதோ ஒன்று கழுத்தை நெறிக்கிற மாதிரி உணர்வு, என் கிட்னிக்கு ஆக்ஸிஜன் போகவில்லை, தலையிலே ஒரு வலி குறிப்பாக அடி விழுந்த இடத்திலே நெருப்பு எரிகிற மாதிரி வேதனை,
எனக்கு முன் உள்ள இருளில் ஒரு வெண்ணிற தாடியுடைய மனிதர் தோன்றி என்னிடம் சொன்னார் : மகனே! இது உனது கடைசி வினாடிகள், உன் ரப்பை சந்திப்பதற்கு முன் உனக்கு உபதேசம் செய்ய வந்துள்ளேன், நீ நல்லதை விரும்புகின்ற புத்திசாலி என எனக்கு நன்கு தெரியும், அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான் எனவே உனக்கு ஒரு உபதேசம் செய்கிறேன்,
நான் : உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன் ?
அவர் : சிலுவை வாழ்க! என சொல், சத்தியமாக! அதுவே உனக்கு ஜெயம்!! என்றான், இதை நீ ஈமான் கொண்டால் உன்னை உனது குடும்பத்தினரிடமும் உன் குழந்தைகளிடமும் திருப்பி அனுப்பி, உன் உயிரையும் உனக்கே திருப்பி கொடுத்து விடுவேன். சீக்கிரம் சொல்லு! சந்தேகப்படுறதுக்கோ, தாமதப்படுத்துறதுக்கோ இது நேரமில்லை என்றான்.
நான் : அவன்தான் ஷைத்தான் என்று தெரிந்து கொண்டேன்.
நான் எவ்வளவுதான் வலி (வேதனையிலே) கஷ்டப்பட்டாலும் என் ரப்பு இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்; மீது ரொம்பவே நம்பிக்கை இருந்தது,
நான் : ச்சீ அல்லாஹ்வின் விரோதியே! நான் முஸ்லிமாகவே வாழ்ந்தேன், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதன் மீதே இறப்பேன் என்று அவனிடம் சொன்னேன்,
அவனது (ஷைத்தானது) முகம் மாறிவிட்டது அதோடு சொன்னான் : நல்லா கேட்டுக்கே! நீ கிரிஸ்தவனாகவோ யூதனாகவோ மரணித்தால்தான் உனக்கு நிச்சயம் ஜெயம், இல்லையெனில் வலி (வேதனை)யை கூட்டிடுவேன், உயிரையும் வாங்கிடுவேன் என்றான்,
நான் : மௌத்து, ஹயாத்து எல்லாம் அல்லாஹ் கையிலே இருக்கு, உன் கையிலே இல்லை, நான் முஸ்லிமாகவே மரணிப்பேன் என்றேன்,
அவன் மூஞ்சு (கோபத்திலே) சிவந்துடுச்சி,
அவன் : இதுக்கு முன்னாடி பல பேரை வழி கெடுத்து அவங்கலெல்லாம் வழி கெட்டுப்போவலையா? சரி.. எப்படியோ உன்னை அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைச்சு, அதுவும் தைரியமா அந்த பாவத்தை செய்ய வைக்க என்னாலே முடிஞ்சுது, அதுவே எனக்கு போதும் என்றான் திடீரென ஏதோ பயப்படுகிறமாதிரி ஒன்றை மேலே பார்த்தான், அதோடு வேகமா ஓடிட்டான், வேகமாக திரும்பி ஓடிப்போனது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, அவன் ஓடி விடுவதற்கு அப்படி என்ன வந்தது என்று விடை தெரியாமல் இருந்தேன், திடீரென அறிமுகமற்ற மற்றும் மிகப்பெரிய உடல்களைக் கொண்ட சில முகங்களை அங்கே கண்டேன்,
அவர்கள் இறங்கி: அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.
நான்: வஅலைக்குமுஸ்ஸலாம் என்றேன்
அவர்கள் : அமைதி காத்தனர், ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவர்களிடம் கஃபன் துணிகள் இருந்தன,
நான் : இறுதியாக: நிச்சயம் அவர்கள் மிகப்பெரிய மலக்குகள்தான் இறங்கியிருக்கிறார்கள் என நான் தெரிந்து கொண்டேன்
அவர்களில் ஒருவர் : அமைதியடைந்த ஆத்மாவே! இறைவனது மன்னிப்பு மற்றும் திருப்பொருத்தத்தை நோக்கி வெளியேறி வா என சொன்னார், இவ்வார்த்தைகளை செவியுற்றபின் வர்ணிக்க முடியாத நற்பாக்கியத்தை உணர்ந்தேன் மேலும் அவரிடம் : அல்லாஹ்வின் மலக்கே! மிக சிறந்த நற்செய்தி என்றேன்.
அவர் என் உயிரை உருவிக் கொண்டார்
தற்பொழுது நினைவிற்கும் கனவிற்கும் இடையில் இருப்பது போன்று உணர்ந்தேன், மேலும் என் உடலுடன் எழுந்திருப்பதுபோலும் கீழே திரும்பிப்பார்த்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வது போன்றும் எனக்குத் தெரிந்தது, இந்நிலையில் என் உடலைக்கண்டேன் பலர் (மனிதர்கள்) என் அருகில் கூடி என் உடலை முழுமையாக மூடி விட்டாhர்கள் அவர்களில் சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வதையும் செவியுற்றேன்.
இரு வானவர்களைக் கண்டேன், என் உடலை பெற்றுக்கொண்டு தான் கொண்டுவந்த கஃபனில் அவசரம் அவசரமாக வைத்து என்னை வான்(மேல்) நோக்கி கொண்டு செல்வதுபோல தெரிந்தது, அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன், மிகத் தொலைவில் உள்ள ஆகாயத்தைப் பார்த்தேன், என் உயரம் அதிகரித்துக் கொண்டே சென்றது, மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்கிறேன், நான் விமானத்தில் செல்வது போல எனக்கு கீழே உள்ளவை யாவும் மிகச் சிறியதாக தென்படுகிறது, இன்னும் உயரம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது, என் கீழே பூமியைப் பார்த்தேன் ஒரு சிறிய பந்து போன்று காட்சியளித்தது.
நான்: பின்னர் அவ்விரண்டு வானவர்களிடமும் : அல்லாஹ் என்னை சுவர்க்கத்தில் நுழையவிடுவானா? என்றேன்
வானவர்கள் : இதைப்பற்றி அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும், நாங்கள் உயிர்களை பெற்றுவருவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளோம், நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டவர்கள் என்றனர்.
என் பேச்சை நிறுத்திக்கொள்ள:
இந்நேரத்தில் சில வானவர்கள் எங்களை கடந்து மிக வேகமாக சென்றனர், அவர்களோடு ஆச்சரியமான ஓர் உயிர் இருந்தது அதன் நறுமணம் என்றுமே நுகர்ந்திராத ஒரு கஸ்தூரி போன்று கமழ்ந்தது,
நான் :ஆச்சரியப்பட்டு அந்த வானவர்களிடம் இது யார்? நபி முஹம்;மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்தான் இறுதி நபி என எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் இது எனது நபியவர்களின் உயிர் என சொல்லியிருப்பேன் என நான் அவர்களிடம் சொன்னேன்.
அவர்கள் : அதற்கு அவ்விருவரும் : இல்லை (மாறாக) இது பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஒரு தியாகி (ஷஹீத்) வுடைய உயிர், யூதன் ஒருவன் சற்று முன் கொன்று விட்டான், தன் நாட்டிற்காகவும் தன் மார்க்கத்திற்காகவும் எதிர்த்துப் போராடியவர், அவரது பெயர் அபுல் அப்த் எனப்படுகிறது, அல்லாஹ் அவரிடம் (ஜிஹாத்) தியாகப் போரையும் வணக்க வழிபாட்டையும் சேர்த்தே கொடுத்திருந்தான் என்றனர்,
நான் : நானும் ஒரு ஷஹீத் ஆக மரணித்திருக்கலாமே! என்றேன் பின்னர் அதே வேளையில் திடீரென மற்றும் சில வானவர்களைப் பார்த்தேன், அவர்களிடம் ஒரு உயிர் இருந்தது அதிலிருந்து கடுமையான துருவாடை வந்து கொண்டிருந்தது இது யார் என நான் கேட்டேன்?
அதற்கவர்கள் : இது மாடு வணங்கியின் உயிர், சற்று நேரத்திற்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட புயல் காரணமாக மரணித்தவர் என்றனர். உடனே அல்லாஹ் எனக்கு வழங்கிய இஸ்லாமிய அருட்கொடையின் மீது அல்ஹம்துலில்லாஹ் என சொன்னேன்
நான் : என்ன நடக்கும் என எவ்வளவுதான்; நிறையவே படித்திருந்தாலும்; இந்த அளவுக்கு நடக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
அவ்விருவர்: நற்செய்தி பெறு இருந்தாலும் உனக்கு முன் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள் என்றனர்.
நான்: ஆச்சரியத்தோடு அப்படி என்ன ? என கேட்டேன்
அவ்விருவர் : விரைவில் அந்த அனைத்தையும் பார்ப்பாய் ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அல்லாஹ் விஷயத்தில் நம்பு என்றனர் நாங்கள் மலக்குகளின் கூட்டத்தைக் கடந்து சென்றோம் அவர்களுக்கு சலாமும் சொன்னோம்
அவர்கள்: இது யார் என (என்னைப்பற்றி என்னைக்கொண்டு சென்ற வானவர்களிடம்) விசாரித்தனர்
அவ்விருவர்; : முஸ்லிமான மனிதர், சற்று முன் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது, அவரது உயிரை மலக்குல் மௌத்திடமிருந்து வாங்கி வருமாறு இறைவன் எங்களுக்கு ஆணை பிரப்பித்திருந்தான் என்றனர்
அவர்கள் : அவன் (அல்லாஹ்) முஸ்லிம்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் வழங்கியுள்ளான் அது அவர்களுக்கு நல்லது மற்றும் அவர்கள் என்றும் நல்லவற்றிலே இருப்பார்கள் என்றனர்.
நான்: இவ்விரு மலக்குகளிடம் இவர்கள் யார் என கேட்டேன்
அவ்விருவர் : இவர்கள் தான் வான்-காவலர்கள், ஷைத்தானின் மீது நெருப்புக் கங்குகளை வீசுகின்றனர் என்றனர்.
நான்: இவர்கள்தான் படைப்பால் மிகப் பெரியவர்களா!! என்றேன்
அவ்விருவர்;: இவர்களைவிட மிகப்பெரிய மலக்குகள் இருக்கிறார்கள் என்றனர்
நான் : யார் அது என்றேன்
அவ்விருவர்;: ஜிப்ரயீல் மற்றும் அர்ஷை சுமப்பவர்கள், அவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒருவர், அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யவே மாட்டார்கள், அவர்களுக்கு ஆனை பிறப்பிக்கப்பட்;டதை அப்படியே செய்வார்கள் என்றனர்
நான் : சுப்ஹானக் ரப்பே! எந்த அளவுக்கு வணங்கவேண்டுமோ அந்த அளவுக்கு உன்னை நான் வணங்கவில்லையே! என்றேன்.
பின்னர் : உலக வானம் வரை போய்ச் சேர்ந்தோம்
நான் : ஆச்சர்யம் மற்றும் ஆர்வத்துடன் எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ அதையும், எது இனிமேல் நடக்க இருக்கிறதோ அதைப்பற்றி எனக்குள்ள அச்சத்தையும் பீதியையும் உங்களிடம் நான் மறைக்கவில்லை. உலக வானத்தை மிகப்பெரியதாக பார்த்தேன், அதன் வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன, ஒவ்வொரு வாயலிலும்; மிகப்பெரிய வானவர்கள் நின்றிருந்தனர்.
இவ்விருவர் : இவ்விரு வானவர்களும் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர், நானும் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அந்த வானவர்கள் : வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு என்று சொல்லியவாறு, ரஹ்மத்தின் மலக்குகளே! வாருங்கள், என்றவாறு அவர்கள் சற்று கூர்ந்து பார்த்துவிட்டு இவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் ? என்றனர்
அவ்விருவர் : ஆம் என்றனர்
அந்த வானவர்கள் : வருக! வருக! ஏனெனில் இவ்வானம் முஸ்லிம்களுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன ஏனெனில் அல்லாஹ் : இறைநிராகரிப்பாளர்களின் விஷயத்தில் : لاَتُفْتَحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاءِ (லா-துஃப்தஹு லஹும் அப்வாபுஸ் ஸமாயி) அவர்களுக்காக வானின் கதவுகள் திறக்கப்பட மாட்டாது (அல் குர்ஆன் 7:40) என கூறியுள்ளான் என்றனர்.
நாங்கள் நுழைந்தோம்
அங்கு கண்ட பல ஆச்சரியங்களில் ஒன்று : கஃபா போன்று மிகப்பெரிய ஒன்றை பார்த்தேன் அதை ஏராளமான வானவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர், இது நிச்சயம் ”பைத்துல் மஃமூர்’ தான் என உடனே சொன்னேன்,
இருவானவர்கள் : இருவரும் புன்முறுவலிட்டனர் மேலும் சொன்னார்கள் : அல்ஹம்து லில்லாஹ், இங்கு நாங்கள் கொண்டுவருகின்ற முஸ்லிம்களில் பலர் இது பற்றி அறிந்திருக்கின்றனர், இது அல்லாஹ்வின் அருள் மற்றும் அந்த நல்ல மனிதர் உங்களது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களில் சிறப்பின் காரணமாகத்தான் ஏற்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் எதையும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் விடவில்லை என்றனர்.
நான் : அவர்களிடம் எத்தனை வானவர்கள் இதில் நாள்தோறும் நுழைகின்றனர் என்றேன்
அவ்விருவர்: 70 ஆயிரம் ஆனால் அவர்கள் வலமிட்டு வெளியேறிவிட்டால் வலமிட திரும்ப வரமாட்டார்கள் என்றனர்
பின்னர் வேகமாக உயர்ந்து இரண்டாவது வானத்தை சென்றடைந்தோம் இவ்வாறாக ஏழாவது வானத்தை சென்றடைந்தோம், அது மிகப்பெரிய வானமாக இருந்தது, அங்கே மிகப்பெரிய கடல் போன்று கண்டேன், வானவர்கள் அனைவரும் தன் சிரங்களைப் பணித்தனர் மேலும் அவ்விரு வானவர்களும் : اللّهُمَّ اَنْتَ السّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ وَ تَبَارَكْتَ ياَذاَ الْجَلاَلِ وَ الْاِكْرَامِ (அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வ மின்கஸ்ஸலாம் வ தபாரக்த்த யா-தல்ஜலாலி வல்இக்ராம்) இறைவா! நீயே அமைதி தருபவன் மேலும் உன்னிடமிருந்தே அமைதி உருவாகின்றது மேலும் கம்பீரமும் மகிமையும் உரியவனே! நீயே அபிவிருத்தி நிறைந்தவன் என்றனர்
நான் : ஒரு வித மரியாதை கலந்த பயத்தை உணர்ந்தேன் மேலும் நானும் என் சிரத்தை பணித்தேன் என் கண்கள் கண்ணீர் விட்டன
அல்லாஹு: (ரப்புல் இஜ்ஜத்- அல்-அஜீஜ் அல்-ஜப்பார்) சொன்னான் எனது அடியானுடைய பதிவேட்டை இல்லிய்யீனிலே எழுதுங்கள் மேலும் அவனை பூமியின் பக்கம் திரும்ப கொண்டு செல்லுங்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அவர்களை அதிலிருந்தே படைத்தேன் மேலும் அதிலேயே அவர்களை திருப்பி அனுப்புவேன் மேலும் அதிலிருந்தே அவர்களை அடுத்த முறையும் வெளியாக்குவேன் (அல் குர்ஆன் 20:55) என்றான்.
கடுமையான அச்சம் மற்றும் பயம் கலந்த மகிழ்ச்சியின் காரணமாக என்னால் பேச முடியவில்லை மாறாக : சுப்ஹானக (நீ பரிசுத்தமானவன்) எந்த அளவுக்கு வணங்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே! என நான் சொன்னேன்.
என்னை அவ்விரண்டு வானவர்களும் உடனே கீழே இறக்கினார்கள், பல வானவர்களைக் கடந்து வந்தோம், பார்க்கும் யாவருக்கும் சலாம் கூறியவாறு வந்து கொண்டிருந்தோம்
நான்: அவ்விரண்டு மலக்குகளிடமும் என் உடல் மற்றும் குடும்பத்தினர் பற்றி விசாரித்தேன்
அவ்விருவர்: இதோ நீ பார்ப்பது தான் உன் உடல், உன் குடும்பத்தினர்களில் உனக்காக செய்து அனுப்பி வைக்கக்கூடிய செயல்கள் வந்து சேரும் ஆனால் நிச்சயமாக அவர்களை நீ பார்க்க முடியாது என்றனர், என்னை தரையில் இறக்கி விட்டு அவ்விருவரும் சொன்னார்கள்:
உன் உடலுடன் நீ இருப்பாய், எங்களது பணி முடிந்து விட்டது, மற்ற வானவர்கள் கப்ரில் உன்னிடம் வருவார்கள்.
நான் : அவர்களிடம் بَارَكَ اللهُ بِكُمَا وَ جَزَاكُمَا خَيْرَ الْجَزَاءِ (பாரகல்லாஹு பி(க்)குமா வ ஜஸாக்குமா கைரல் ஜஸாயி); அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்யட்டும் மேலும் உங்கள் இருவருக்கும் நல்ல அழகிய கூலியை தரட்டும் என்றேன்
மேலும் அவர்களிடம் : திரும்ப உங்களை சந்திக்க முடியுமா? என்றேன்.
அதற்கவர்கள் : கியாம நாளில் கூடவே நாங்களும் நிற்போம், அது அனைத்தையும் கண் முன் கொண்டுவரும் நாள் என்றனர், கியாம நாள் என்றவுடன் அவர்கள் சப்தங்கள் பயத்தால் தடுமாறிவிட்டது
பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.
அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன்,
பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன், என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ”அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.
என் மனதில் சொல்லிக் கொண்டேன் : அல்லாஹ்வே! நான் என் உடலை அல்லாஹ்வின் பாதையில் சமர்ப்பித்து நான் ஒரு ஷஹீதாக இறந்திருக்கலாமே! என்றும், அல்லாஹ்வின் ஞாபகத்திலே அல்லது தொழுகையிலே அல்லது வணக்க வழிபாட்டிலேயே எல்லா நேரத்தையும் கழித்திருக்கலாமே என்றும், இரவு பகலாக நான் பல தருமங்கள் செய்திருக்கலாமே என்றும் பலவாராக எண்ண ஆரம்பித்துவிட்டேன், என் கவலையெல்லாம் கப்ரில் என்ன நடக்கப் போகிறதோ என்பதைபற்றித்தான்.
குளிப்பாட்டுபவர் : அஸருக்குப்பின் தொழ வைக்கப்போகிறீர்களா? என விசாரிப்பதை நான் செவியுறுகிறேன்
என் தந்தை : அழுது கொண்டே இன்ஷா அல்லாஹ் என சொன்னார்கள், என் உடலை குளிப்பாட்டிவிட்டு எடுத்து செல்கின்றனர், என் உடலைப் பார்க்கிறேன், ஒதுங்கி விடவோ அல்லது உள்ளே நுழைந்து விடவோ என்னால் முடியவில்லை, ஆச்சர்யமான திகைப்பில் ஆக்கக் கூடிய விஷயம், என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்தில் என்னை நுழைத்து விட்டனர் ஆனால் அது மய்யித்கள் வைக்கக்கூடிய ஐஸ் பெட்டி என்பதை உணர்ந்தேன், எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.
மிகப்பெரிய சப்தம், வந்து தூக்குங்கள் என சொல்வது என் சிந்தனையை முறித்து விட்டது, என்னை உயர்த்தித் தூக்கினார்கள்;, அவர்களின் அழும் சப்தத்தை செவியுற்றுக் கொண்டே இருக்கிறேன், என் தந்தையின் அழும் ஓசை என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆக்கியது,
என் தந்தையே! கவலைப்படாதீர்கள் அல்லாஹ்விடம் எதுவுள்ளதோ அதுவே மிக சிறந்தது, தந்தை அவர்களே! நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், எனக்காக அழாதீர்கள், சத்தியமாக இது என் மனதை புண்படுத்துகிறது, எனக்காக துஆ செய்யுங்கள், இதுவே எனக்குத் தேவை என சொல்லலாம் என நான் ஆசைப்பட்டேன், நான் பல ஓசைகளைக் கேட்கிறேன், என் சகோதரர்களின் ஓசையையும் அவர்கள் அழுவதையும், அதைப்போலவே என் சாச்சா பிள்ளைகளின் ஓசையையும் பிரித்துணர முடிந்தது,
என் நண்பர்களில் ஒருவர் : அல்லாஹ் அவரை மன்னிக்கட்டும், அல்லாஹ் அவர் மீது இரக்கப்படட்டும் என சொல்ல வேண்டுமென பிறருக்கும் அறிவூட்டியது தாகித்தவனுக்கு குளிர்ந்த நீர் கொடுத்தது போன்று இருந்தது.
பள்ளியில் தொழ என்னை இறக்கிவைத்துவிட்டு அவர்கள் தொழும் சப்தத்தை நான் செவியுறுகிறேன், நான் அவர்களோடு தொழ வேண்டும் என ஆசைப்பட்டேன், நீங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் உங்களின் நன்மைகள் அதிகரிக்கின்ற உலகில் இருக்கிறீர்கள், நானோ எல்லா அமல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன என நானே சொல்லிக்கொண்டேன்.
மக்கள் தொழ தயாரான பின்னர் முஅத்தின் (மோதினார்) ஒரு ஆண் மையித்திற்காக தொழவைக்கப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! என்றார், இமாம் தொழவைக்க நெருங்கி தொழுகையும் ஆரம்பித்து விட்டது, தொழுகையின் இடையில், மலக்குகளின் கூட்டம், தொழுகையாளிகளின் எண்ணிக்கையைப்பற்றியும், இதில் எத்தனை பேர் இணைவைக்காமல் ஒரே இறைவனை ஏற்றவர்கள் என்பது பற்றியும் ஒருவர் மற்றொருவருடன் விசாரித்துக் கொள்கின்றனர்,
மூன்றாவது தக்பீர், இதிலேதான் எனக்காக துஆ செய்யும் முறை வருகிறது, வானவர்கள் பல விஷயங்களை எழுதினார்கள் உடனே இவர்கள் மக்களின் துஆவை கணக்கிடுகிறார்கள் என தெரிந்து கொண்டேன், யா அல்லாஹ்! இமாம் இந்த தக்பீரை கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே! என ஆசைப்பட்டேன் ஏனெனில் ஒரு வித மன அமைதி, மகிழ்ச்சி, நற்பாக்கியம் மற்றும் ஒரு ஆச்சர்யத்தைப் பார்;த்தேன்,பின்னர் நான்காவது தக்பீர் சொல்லி சலாம் கொடுத்து விட்டார்.
என்னை கப்ரை நோக்கி தூக்கிச் சென்றார்கள், அங்கு பல ஆச்சரியங்களும் பல திகில்களும் இருந்தன.
மூன்றாவது பகுதி
கப்ரில் இரண்டு வானவர்களை சந்திப்பது மற்றும் தனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவது.
என்னை விரைவாக கப்ரை நோக்கி எடுத்துச் சென்றனர், சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என சொல்லி அழுதவாறே வருவதும் என் காதில் விழுகிறது,
இந்த தருணத்தில் நான் செய்த குறைபாடுகள், பாவங்கள், இறைவனை மறந்து கழித்த நேரங்கள் மற்றும் வேண்டுமென்றே செய்த பாவங்கள் யாவையும் நினைத்து நான் மிக மனஉளைச்சல் மற்றும் அச்சத்தின் நிலையில் ஆகிவிட்டேன் ஏனெனில் இத்தருணம் பயமுறுத்தக் கூடிய, பீதியை ஏற்படுத்தக்கூடியது ஆகும்,
கப்ருஸ்தானை அடைந்த போது பலரின் சப்தங்களும் காதில் விழுந்தது, இங்கே அடக்குங்கள், அங்கே அடக்குங்கள் என்பதோடு, இன்னும் ப்ளீஸ் சற்று கப்ரை விரிவு படுத்துங்கள் என்றெல்லாம் சப்தம் காதில் விழுந்தது, யா அல்லாஹ்! நான் உயிரோடு கேட்;காததெல்லாம் என் மரணத்திற்குப்பின் கேட்கிறேனே!! அவர்களுக்கே தெரியாமல் என்னை கப்ரிலே உடல் மற்றும் உயிருடனேயே நுழைத்து விட்டனர் ஆனால் அவர்கள் என் உடலை மாத்திரம்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
என்னை தூக்குபவர்கள்: பிஸ்மில்லாஹி வ அலா மில்ல(த்)தி ரசூலுல்லாஹி என உள்ளே வைத்து விட்டனர், கற்களை மண்ணோடு கலந்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர், வேகமாக சப்தமிட நினைத்தேன் : என்னை மட்டும் தனியாக விட்டுச் செல்லாதீர்கள், அல்லாஹ் என்னை என்ன செய்வான் என எனக்குத் தெரியாது, அதே வேலையில்: நிச்சயமாக என்னை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் என் மனதில் வந்தது.
அதன்பின்னர் என் மீது மண்ணைத் தள்ளினார்கள், இருள் சூழ்ந்து விட்டது, மக்களின் சப்தங்களெல்லாம் ஓய்ந்து விட்டது ஆனால் அவர்கள் நடக்கின்ற மற்றும் அவர்களின் காலணிகளின் ஓசைகள் தெளிவாக கேட்க ஆரம்பித்து விட்டது, சிலர்கள் எனக்காக துஆ செய்வதை செவியுற்றேன்,
அவர்களின் துஆ, அதில் சிலர் குறிப்பாக : இவருக்காக ஸ்திரத்தன்மையைக் கேளுங்கள் ஏனெனில் அவரிடம் இப்பொழுதுதான் கேள்வி கேட்கப்படும் என சொன்னது எனக்கு ஒரு பிரியத்தையும் என் உள்ளத்திற்கு ஒரு விஸ்தீரணத்தையும் கொடுத்தது, திடீரென கப்ர் என்னை நெருக்கியது, என் முழு உடலையும் அழுத்துவதாக உணர்ந்தேன், மிகவும் அச்சமடைந்தேன், வேகமான குரலால் அலறினேன், பின்னர் கப்ர் முன்பிருந்தது போல விரிந்து கொடுத்தது, நான் வலது இடது புறமாக இனிமேல் நடக்கப் போவதை எதிர்ப்பார்த்து அச்சத்துடன் அங்குமிங்கும் பார்த்தேன்,
திடீரென பயங்கரமான தோற்றங்களையுடைய கருநிற உடல்களைக் கொண்ட இரு வானவர்கள் தோன்றினார்கள், அவர்களின் கண்கள் நீல நிறமாக இருந்தன, அவை மின்னல் போன்று மின்ன ஆரம்பித்தன, அவர்களது கோரைப்பற்கள் பூமியின் அடிப்பாகம் வரை சென்றடையும், அவர்களிடம் ஒரு சுத்தியல் (சம்மட்டி) இருந்தது அதன் மூலம் ஒரு முழு நகரத்தைக்கூட அடித்தாலும் அந்நகரமே தூள்தூளாகிவிடும் போலிருந்தது,
இருவரில் ஒருவர் உடனே: எழுந்து உட்காருமாறு சொன்னார், உடனே நான் எழுந்து அமர்ந்தேன், உடனே அவர் : உனது ரப் யார்? எனக் கேட்டனர்,
நான் : என் ரப்பு அல்லாஹ் என பயந்து கொண்டே சொன்னேன், இது பதிலளிக்க முடியாமையின் காரணமாக இல்லை மாறாக அவ்வானவர்களின் தோற்றம் மற்றும் அவர்கள் வினாத்தொடுக்கும் விதம் என்னை பயமுறுத்தியது,
அவர்கள் : உனது நபி யார்? எனக் கேட்டனர்,
நான் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் என்றேன்,
அவர்கள் : உன் மார்க்கம் எது? என்றனர்
நான் : இஸ்லாம் என்றேன்
அவ்விருவரும் : இப்பொழுது நீ கப்ரின் வேதனையைவிட்டு காப்பாற்றப்பட்டு விட்டாய் என்றனர்;
நான் : நீங்கள் இருவரும் தான் ”முன்கர் இன்னும் நகீரா? என்றேன் அவ்விருவர்: ஆம், நீ சரிவர பதில் தராமல் இருந்திருந்தால் இந்த சுத்தியல் (சம்மட்டி) மூலம் அடிப்போம் அதன் சப்தத்தை மனிதன் மற்றும் ஜின் இனத்தைத்தவிர உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் செவியுறுவார்கள், நீ அந்த கடுமையான சப்தத்தை வெளிப்படுத்தியதன்காரணமாக மயங்கி விழுந்து விடுவாய் மேலும் 70 முழம் பூமியின் உள்ளே நுழைந்துவிடுவாய் என்றனர்
நான் : இதைவிட்டு காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் மேலும் இதுவும் அல்லாஹ்வின் அருளால் மட்டுமே என்றேன்,
பின்னர் இருவரும் திரும்பிச்சென்று விட்டனர், அவர்களோடு நான் ரொம்ப பேச விரும்பவில்லை, அவர்கள் திரும்பி சென்ற பிறகுதான் நான் நிம்மதியடைந்தேன்,
அவர்கள் திரும்பி சென்ற பிறகு ஒரு அபூர்வமான உஷ்ணத்தை உணர்ந்தேன், எனது உடல் உள்ளே எரிச்சல் ஏற்பட்டது, கடுமையான எரிச்சலின் காரணமாக நரகத்தின் ஜன்னலில் ஒன்று திறக்கப்பட்டுவிட்டதாக அச்சம் ஏற்பட்டுவிட்டது ஆனால் அது என் உடம்பிலிருந்து வெளிவரும் உஷ்ணம்தான் என்பதை உணர்ந்தேன்;.
அதன்பின் வேறு இரண்டு வானவர்கள் என்னிடம் வருகை தந்தார்கள் இருவரும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர்,
நான் : வ அலைக்குமுஸ்ஸஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றேன்,
அவ்விருவர்: நாங்கள் வானவர்கள்,; கப்ரில் உனது அமல்களை சமர்ப்பிப்பிப்பதற்காகவும், கியாம நாளுக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய நன்மைகளை கணக்கிட்டுச் சொல்வதற்காகவும் வந்திருக்கிறோம் என்றனர்,
நான் :; மரணித்ததிலிருந்து ஒரு வித அச்சுறுத்தக்கூடிய ஒன்றை பார்க்கிறேன், இவ்வளவு கஷ;டம் மற்றும் துன்பத்தை எதிர்பார்க்கவே இல்லை ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க என்னை அனுமதிப்பீர்களா? என அவ்விருவரிடம் கேட்டேன்,
அவ்விருவரும் : ஆம் என்றனர்,
நான் : நான் சுவர்க்கவாசிகளில் உள்ளவனா? இவ்வளவு நடந்த பிறகும் இங்கே நான் நரகத்திற்கு செல்லும் அளவுக்கு ஏதாவது அபாயம் இருக்கின்றனதா? என்றேன்
அவ்விருவரும் : நீ முஸ்லிம், உனக்கு கிடைக்கும் யாவும் முஸ்லிம் என்ற அடிப்படையிலேதான் ஏனெனில் நீ அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளாய், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொண்டும் ஈமான் கொண்டுள்ளாய் ஆனால் நீ சுவர்க்கத்தில் நுழைவதும் நரகில் நுழைவதும் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும், அல்லாஹ் உன்னை நரகில் நுழைய வைத்தாலும் அல்லாஹ் நாடினால் நீ நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டாய் என்பதை நம்பு ஏனெனில் நீ ஒரே இறைவனை நம்பியவன் என்றனர்,
நான் : அழுதேன் மேலும் எத்தனை காலங்கள் நரகில் நான் தங்கியிருப்பேனோ!! என்றேன்,
அவ்விருவரும் : உன் ரப்பை நம்பு மேலும் அவன் மிக சங்கையாளன் என்றனர்,
இப்பொழுது நாம் நீ பருவ வயதை அடைந்தது முதல் விபத்தில் மரணித்தது வரையுள்ள உன் அமல்களை சமர்ப்பிக்க துவங்குகிறோம், அவர்கள் துவக்கினார்கள் அவர்கள் சொன்ன வார்த்தைகள் மிக அபூர்வமாகவே இருந்தது, அவை:
நாங்கள் உன் தொழுகையைக் கொண்டே துவக்குவோம் ஏனெனில் முஸ்லிமிற்கும் முஸ்லிமல்லாதவனுக்குமிடையில் வேறுபாட்டைக் காண்பிக்கக்கூடிய உடன்பாடு இதுவே ஆனால் உனது நல்லமல்களில் ஒன்று கூட உயர்த்தப்படாது மேலும் எந்த நல்ல அமல்களும் இங்கிருந்து கடந்து மேலே போகாது ஏனெனில் உன்னால் கடந்த காலத்தில் செய்த எல்லா நல்லமல்களும் தொங்கிங் கொண்டிருக்கிறன என்றனர்.
நான்: நான் உயிரோடு இருக்கக்கூடிய காலத்தில் செய்த அமல்கள் நிறுத்தி வைக்கப்பட காரணம் என்ன? ஏன்? பூமியில் உள்ள உஷ்ணங்கள் யாவும்; வந்து சேர்ந்தது போல என் உடலில் ஒரு எரிச்சல் ஏற்படுவதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என ஆச்சரியத்தோடு கேட்டேன்
அவ்விருவர் : ஆம் இதற்குத் தொடர்பு உள்ளது, உன் கடன்களை செலுத்துவதில் பொடுபோக்காக இருந்தாய், உன் மரணத்திற்கு முன் அதை செலுத்தவில்லை, இப்பொழுது மிக அபாயமான கட்டத்தில் இருக்கிறாய் அல்லவா?
நான் : அழுதவாறே சொல்ல ஆரம்பித்தேன் ஏன்?
அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வளவு வேகமாக என் உடலில் எரிச்சலுக்கு காரணம் கடனா?
என் வினாத்தொடுத்தலை ஏதோ ஒன்று நிறுத்தியது, கப்ரின் இருளுக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு பிரகாசிக்கின்ற ஒளி ஆகாயத்திலிருந்து தென்பட்டது, அதற்கு ஒரு ஓசை இருந்தது, அதிலிருந்து சுத்தமான நறுமணம் வந்தது, அது போல உயிருடன் இருக்கும் போதோ அல்லது மரணத்திற்கு பிறகோ நுகர்ந்ததில்லை,
அவ்வொளி சொன்னது : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
நான் : வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றபின் நீங்கள் யார்? என்றேன்
அவ்வொளி : நான் தான் சூரா அல்-முல்க் (தபாரக்), நான் உனக்கு ஆதரவு தருவதற்கும், உனக்காக அல்லாஹ்விடம் வாதாடுவதற்கும் வந்துள்ளேன் ஏனெனில் நீ என்னை மனனம் செய்திருந்தாய், உங்களது
தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்; : என்னை மனனம் செய்த யாவரையும் அவர்களை காப்பாற்றுவதற்காக நான் வாதாடுவேன் (திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா) என உங்களுக்கு சொல்லித்தந்துள்ளார்கள்.
நான் : வருக! வருக! நான் சிறுபிராயத்திலிருந்து உன்னை மனனம் செய்து, தொழுகையிலும் எனது வீட்டிலும் ஓதி வந்தேன், இப்பொழுது நான் மிகத் தேவையுடையவனாக உள்ளேன் என்றேன்.
அவ்வொளி (சூரா அல் முல்க்): ஆம், இதோ உன்னுடன் இருக்கிறேன், அல்லாஹ்விடம் உன் பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுப்பேன் ஏனெனில் உனது உடலில் எரிச்சலுக்கும், உனது அமல்கள் நிறுத்தி வைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த கடன் விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டாய் என்றது (அவ்வொளி),
நான் : ஜெயம் பெறுவதற்கு வழி என்ன? என கேட்டேன்,
அவ்வொளி: மூன்று விஷயங்களில் ஒன்றைக் கொண்டு என்றது
நான் : வேகமாக அவை யாவை? என்றேன்
அவ்வொளி (சூரா அல் முல்க்) என்னிடம் : உனக்கு ஜெயம் பெறுவதற்கான வழியைக் கூறுவதற்கு முன், இக்கடனை செலுத்துவதற்காக உன் வாரிசு (சொத்தை பங்கிட்டுக் கொள்பவர்)களுக்கு இக்கடனைப்பற்றி எழுதி வைத்துள்ளாயா? என எனக்கு சொல்ல வேண்டும் என்றது,
வாரிசுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே இவ்வார்த்தை என் மனதிற்கு ரொம்ப கஷ;டத்தை ஏற்படுத்தியது, என் கண்கள் கண்ணீர் விட்டன, என் தாய்தந்தையர்கள், மனைவி மக்கள், சகோதரிகள் போன்ற அனைத்து குடும்பத்தினர்களின் ஞாபகம் வந்துவிட்டது,
என் மரணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எப்படி இருக்கின்றனர், என் மகள் சாரா, அவளது சகோதரர்கள் யாவரும் மனநிலை உடைந்து போயிருப்பார்களே அவர்களெல்லாம் அனாதைகளாகி இருப்பார்களே! எனக்குப்பின் அவர்களை, அவர்களின் விஷயத்தை கண்காணிப்பவர்கள் யார்? என் சிறிய மகள் : என்னிடம் சாக்லட் வாங்கி வர சொன்னாளே! என்னைப்பற்றி கேட்டிருப்பாளே? அவளுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள், அவளது மனநிலை என் மரணத்திற்குப் பின்னர் என்னவாகியிருக்கும்,
என் மனைவி எனக்குப்பின்னர் என்ன செய்திருப்பாள்! அவளை விதவை என்றல்லவா சொல்வார்கள், எனக்குப்பின் என் குழந்தைகளின் சுமையை எவ்வாறு சுமக்கப்போகிறாள், ஒவ்வொன்றாக ஞாபகம் வர ஆரம்பித்து என் கண்ணீர் வழிந்தோடியது, தேம்புதல் அதிகரித்துக் கொண்டே போனது,
சூரா அல்-முல்க் : எதையும் நினைத்து விட்டாயா? எனக் கேட்டது
நான்: ஆம்!! எனது குடும்பத்தினர், என் குழந்தைகளைப்பற்றி, எனக்குப்பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றித்தான் நினைத்தேன்,
சூரா அல்-முல்க் : அவர்களுக்கு அல்லாஹ் இருக்கிறான், அல்லாஹ் அவர்களை படைத்தான், அவர்களுக்கு உணவளிப்பான், அவர்களுக்கு அல்லாஹ் பொறுப்புதாரியாக இருக்கிறான் என சொன்னது.
இந்த வார்த்தைகள் எனக்கு தாகித்தவருக்கு குளிர்ந்த நீர் புகட்டியது போல இருந்தது, நான் மனதிலே : அவர்களுக்கு அல்லாஹ் இருக்கும்போது நான் ஏன் கவலைப்படவேண்டும் என சொல்லிக் கொண்டேன்.
என் கவலை சற்று கலைந்தது இருப்பினும் என் உடல் எரிச்சல் பற்றிய கவலை குறையவில்லை,
நான் : உடனே சூரா அல்-முல்கிடம் : நான் கொடுக்க வேண்டிய கடன் எவ்வளவு என நான் தெரிந்து கொள்ள முடியுமா என கேட்டேன்
சூரா அல்-முல்க் : ஆம், நான் வானவரிடம் இதுபற்றி விசாரித்தேன் அதற்கு அந்த மலக்கு : 17000 ரூபாய் என்றார், பத்தாயிரம் உனது தோழர் அபு ஹசனிடமிருந்து பெற்றது ஆகும் மற்ற 7000 என்பது கொஞ்சம் கொஞ்சமாக பெற்றது என்றது,
நான் : ஆச்சரியத்தோடு அது எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பெற்றது என கேட்டேன்!!
சூரா அல்-முல்க் : நீ பருவமடைந்தது முதல் கடனை செலுத்தும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்தாய் எனவே அது ஒன்று சேர்ந்து விட்டது என்றது
நான் : யாருக்கு கொடுக்க வேண்டும் என கேட்டேன்
சூரா அல்-முல்க் : நீ 15 வயதாக இருக்கும் போது, மளிகைக் கடைக்காரரிடம் 50 ரூபாய்க்கு உணவுப் பொருள் வாங்கினாய், பணம் உன்னிடம் இல்லை, நாளை வந்து தருகிறேன் என வந்துவிட்டாய் (அதை கொடுக்கவில்லை)
மற்றொன்று : லாண்டரி கடையில் உனது துணியை கழுவியபிறகு மேலே சொன்னது மாதிரியே சொல்லி விட்டு வந்தாய், அதையும் கவனிக்காமல் மறந்து விட்டாய், அதே மாதிரி இந்த கடை, இன்னும் ஒரு கடை அப்படியே கணக்கிட்டுக்கொண்டே ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி முடித்து : கடனை செலுத்தும் விஷயத்தில் பொடு போக்காகவும் அதை அலட்சியமாகவும் கருதுவதன் காரணமாக அது பலருக்கு அவர்களுடைய கப்ரில் மோசமான நிலையை ஏற்படுத்துகிறது என அந்த சூரா சொன்னது.
உங்களுக்கு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கடனின் விஷயத்தில் எச்சரிக்கவில்லையா? ஒரு ஷஹீதின் மதிப்பு எவ்வளவுதான் உயர்வாக இருந்தாலும் கடனின் காரணமாக அவரின் அமல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுவிடுகின்றன என்பதை உங்களுக்கு நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள், ஒரு நபித்தோழரின் சிறப்பு எவ்வளவு என உனக்குத் தெரியாதா? அவர்களுக்கு கூட அவர்களின் கடனை செலுத்தி முடிக்காமல் அவர்களுக்;காக நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளது என அந்த சூரா சொன்னது.
நான் : பயந்தவாறே இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் என சொல்லிக்கொண்டே, இதைவிட்டு விடுதலை பெற என்ன செய்ய வேண்டும், எனது உடல் எரிச்சல் மற்றும் வலியினால் துண்டுதுண்டாகிறது எனச் சொன்னேன்,
சூரா அல்-முல்க் : மூன்று விஷயங்களைக் கொண்டு என்றது நான் : அவசரமாக அவை யாவை? என்றேன்
சூரா அல்-முல்க் : கடன் கொடுத்தவர்கள் (உன் கடனை திரும்ப பெறுவதை விட்டு) உன்னை மன்னிக்க வேண்டும்
நான் : அதில் பலர் நான் மறந்தது போல அவர்களும் மறந்து விட்டார்கள், நான் இறந்தது கூட அவர்களுக்கு தெரியாது, அவர்களில் பலர் என்னைக்கூட அறிய மாட்டார்கள் மேலும் மறந்திருப்பார்கள் இருப்பினும் அடுத்தது என்ன? என்றேன்
சூரா அல்-முல்க் : உன் சார்பில் உனது வாரிசுகள் அதை செலுத்தி முடிக்க வேண்டும்,
நான் : மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய கடனைப்பற்றி நான் எழுதி வைக்கவில்லை, எனது பிரச்சினையையும் என் கடனைப்பற்றியும் எவ்வாறு அவர்கள் தெரிந்து கொள்வார்கள?; மரணம் திடீரென வந்துவிட்டது, நான் எதிர்பார்க்கவில்லை அல்லது எவ்வாறு அதை கணக்கிட்டுக் கொடுப்பது என கேட்டேன்
சூரா அல்-முல்க் : ஒரு விஷயம் மட்டும் எஞ்சி இருக்கிறது, நான் உனக்காக முயற்சிக்கிறேன் அதுவே உனது விடுதலைக்கான காரணமாகவும் இருக்கும், சிறிது நேரம் கழித்து வருகிறேன் இன்ஷா அல்லாஹ், இப்பொழுது நான் திரும்பி செல்கிறேன் என்றது,
நான் : ப்ளீஸ்!! போகவேண்டாம், கடுமையான தனிமையையும், அச்சத்தையும், இருளையும், என் உடலில் எரிச்சல் அதிகமாவதையும் உணர்கிறேன்,
சூரா அல்-முல்க் : நான் ரொம்ப விலகிப்போகவில்லை, உனக்காக வாதாடவும் ஒரு வழியைத் தேடவுமே செல்கிறேன், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உனக்கு விடுதலை கிடைக்கும் என சொல்லிவிட்டு போய்விட்டது.
நான்: இருளின் பயங்கரத்தோடும், நடந்த மற்றும் நடக்கவிருக்க விஷயங்களைப் பற்றி கவலை கொண்டவாறே தனிமையில் இருந்தேன், திடீரென என் மனதில் ஒரு துஆ தோன்றியது அது: ياَ مَنْ لاَ يَأْنَسْ بِشَئٍ أَبْقَاهُ ، ولاَ يَسْتَوْحِشْ مِنْ شئٍ أَفْنَاهُ ، وَيَا أَنِيْسَ كُلِّ غرِيْبً ، اِرْحَمْ فِيْ القَبْرِ غُرْبتيِ ، وَيَا ثَانِي كُلّ وَحِيْدٍ ، آنِسْ فِيْ القَبْرِ وَحْدَتِيْ
(யா மன் லா யாஃனஸ் பி-ஷையின் அப்(க்)காஹு, வ லா யஸ்தொவ்ஹிஷ் மின் ஷையின் அஃப்னாஹு, வ யா அனீஸ குல்லி ஙரீப், இர்ஹம் ஃபில் கப்ரி ங{ர்பத்தீ, வ யா ஸானிய குல்லு வஹீத், ஆனிஸ் ஃபில் கப்ரி வஹ்தத்தீ)
நிலையாக வைத்துள்ள அனைத்திலும் மனதிருப்தியைத் தராதவனே! தன்னால் அழிக்கப்படுகிற எல்லாவற்றிலும் பீதியை ஏற்படுத்தாதவனே! தனிமையில் இருக்கும் யாவரையும் அன்போடு அரவணைப்பவனே! கப்ரின் தனிமையில் என்மீது இரக்கப்படுவாயாக! தனிமையில் இருக்கும் ஒவ்வொருடனும் (கூட) இரண்டாவதாக இருப்பவனே! என் கப்ரின் தனிமையில் எனக்கு ஆதரவளிப்பாயாக!
என்பதை சொல்ல ஆரம்பித்தேன் இருப்பினும் கணக்குக் கேட்கப்படுகிற உலகத்தில்தான் இருக்கிறேன் இங்கே செயலுக்கு மதிப்பில்லை என்பது ஞாபகத்தில் வந்தது.
சில நொடிகளில் அறிமுகமான எனது அன்பிற்குரிய தந்தையின் குரலைக் கேட்டேன் மேலும் அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்வதையும் செவியுற்றேன்.
நான்: ஆர்வத்தோடு : வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஎன்றும் வருக! என் தந்தையே! நான் சொல்வதை நீங்கள் நிச்சயம் செவியுறமாட்டீர்கள் என்றும் மனதில சொல்லிக் கொண்டேன்
பின்னர் அவர்கள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக, இவரின் மீது இரக்கப்படுவாயாக! இவரது நுழைந்த இடத்தை விஸ்தீரணப்படுத்துவாயாக, அவரது தனிமையில் ஆதரவளிப்பாயாக! என தேமி அழ ஆரம்பித்தார்கள்,
அதன் பின் அவர்கள் சொல்ல செவியுற்றேன் : அவருக்காக எல்லாவற்றையும் நான் விட்டுக் கொடுக்கிறேன் (ஹலாலாக்குகிறேன்), நான் அவரைப் பொருந்திக் கொண்டேன், நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக! என சொல்லிவிட்டு என் தந்தை திரும்பி சென்று விட்டார்கள்.
என்னுடைய கப்ர் பிரகாசித்துக்கொண்டே இருந்தது, என்பக்கம் வானவர் திரும்பி : உனது தந்தையின் துஆ இறுதி வானம் வரை மிகவும் வல்லமைவாய்ந்த உயர்ந்தவனின் அனுமதியோடு கொண்டு செல்லப்படும் விரைவில் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான் ஏனெனில் தந்தையின் துஆ தன் மகனுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் (திர்மிதி-1905) என (அம் மலக்கு) சொன்னார்.
அல்லாஹ்வே! என் தந்தை இங்கு நின்று இன்னும்; சில நேரங்கள் துஆவை நீட்டியிருந்தால் நலமாக இருக்குமே! என சில வேலைகளில் ஆசித்தேன் ஏனெனில் அவரது துஆவின் பிரதிபலிப்பை நான் என்னுடைய கப்ரில் குறிப்பாக என்மீதே உணர்ந்தேன்.
நான் : ஒரு வினாத்தொடுக்கலாமா? என அந்த வானவரிடம் கேட்டேன்
அம்மலக்கு : அது என்ன ? என்றார்
நான் : நான் இறந்து எத்தனை தினங்கள் ஆகிவிட்டன, இப்பொழுது நேரம் என்ன? என்றேன்
அம்மலக்கு : நீ இறந்து 3 தினங்கள் ஆகிவிட்டன, இப்பொழுது லுஹர் தொழுகை நேரம்.
நான்: ஆச்சரியத்தோடு சுப்ஹானல்லாஹ்! இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இக்குறுகிய காலத்தில் நடந்துவிட்டதா? என கேட்டேன் நாம் மதிய நேரத்தில் இருந்தும் என் கப்ரில் இவ்வளவு இருளா!! ஏன்ற ஆச்சர்யம்.
வானவர்: இன்னும் நெடுந்தூரம் உனக்கு முன் இருக்கிறது அல்லாஹ் உனக்கு உதவுவானாக! என வானவர் சொன்னார்,
என்னால் தன்னைத்தானே அடக்க முடியவில்லை அழுதேன் அழுதேன் என்வாழ்விலே அவ்வாறு அழுததாக நினைவில்லை, சுப்ஹானல்லாஹ்! இதுபோன்ற விஷயத்தில் எவ்வாறு மறந்து இருந்துவிட்டேனே என
என் மனதிலேயே சொல்லிக்கொண்டேன்,
உன் தந்தையின் துஆவின் சிறப்பால் உனது கப்ர் இறைவன் நாடுகின்றவரை பிரகாசத்தோடு இருக்கும் என சொல்லியவாறு வானவர்; திரும்பிச் சென்றுவிட்டார்,
என் தந்தையின் சந்திப்பு எனக்கு மிக ஆதரவாக இருந்தது, என் உறவினார்களும், என் நன்பர்களும் இவ்வாறு எனது கப்ருக்கு (வந்து எனக்காக பிரார்த்தித்து) செல்வதை ஆசைப்பட்டேன்.
மேலும் ” என் தந்தையே என் பொறுப்பில் உள்ள என் கடனை செலுத்துவீர்களா! எனக்காக அந்த கடன் தொகையை தருமம் செய்து விடுவீர்களா! எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா! என நான் குமுருகின்ற குரலை என் தந்தை செவியுறமாட்டார்களா! என ஆசித்தேன்.
இருப்பினும் என் குரலை செவியுற எவ்வித வழியும் இல்லை என்பதைக் குறிக்கின்ற இறை வசனம் وَحِيْلَ بَيْنَهٌمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ அவர்களுக்கும் அவர்களால் விரும்பப்படுகின்றவைகளுக்கு மத்தியில் திரையிடப்படும் ( அல் குர்ஆன் 34:54) என்ற அல்லாஹ்வின் வசனம் நினைவிற்கு வந்து விட்டது.
என் உடல் உஷ்ணம் சற்று குறைவதாகவும் சற்று கூடுவதாகவும் உணர்ந்தேன் , இதற்கும் எனது தந்தையின் சந்திப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்று கூட எண்ணினேன் ஆனால் அதுவல்ல, விஷயம் வேறாக இருந்தது
அது : திடீரென அறிமுகமான வெளிச்சம் ஒன்று வந்தது அதுதான் சூரா அல் முல்க்
அது (சூரா அல் முல்க்) என்னிடம் உனக்காக இரு நற்செய்திகள் உள்ளன என்றது
நான் : அதுவென்ன ? சீக்கிரம்; சொல் என்றேன்
சூரா அல் முல்க் : முதலாவது : உனது 10000 ரூபாய்க்குரியவருக்கு நீ தரவேண்டிய கடன் ஞாபகம் வந்துவிட்டது இருப்பினும் அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தவராக நான் அவரிடமிருந்து பெற வேண்டிய கடனை விட்டுக் கொடுத்து விட்டேன், உன் குடும்பத்தினரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.
உடனே என் முகம் மலர்ந்தது மேலும்; இதன் காரணமாகத்தான் என் உஷ்ணம் சற்று குறைந்திருக்கலாம் அல்ஹம்து லில்லாஹ் என்றேன்
நான் : இரண்டாவது நற்செய்தி என்ன? என்றேன்
சூரா அல்-முல்க் : நான் அல்லாஹ்விடம் ரொம்பவும் கேட்டேன் ஆனால் மனித உரிமைகளின் விஷயம் மிகவும் சிரமமானது எனப்புரிந்து கொண்டேன், உனக்காக அல்லாஹ் கனவிற்காக நியமிக்கப்பட்ட மலக்கை அனுப்புவான் அவர் உனது உறவினர்களில் ஒருவரிடம் சென்று சில அடையாளங்களைக் காண்பிப்பார் அதன் மூலம் நீ செலுத்த வேண்டிய கடனைப் புரிந்து கொள்வார்கள் என சொன்னது.
இந்த செய்தியின் மூலம் நான் திடுக்கிட்டு ஆச்சர்யத்தோடு வாயடைத்துப்போனேன்
சூரா அல்-முல்க் : கனவில் யாருக்கு முன் அந்த மலக்கு செல்லவேண்டும் என எண்ணுகிறாய் என வினவியது
நான் : என் தாயை நினைததேன் ஆனால் அவர்கள் என்னை கனவில் கண்டால் அழ ஆரம்பித்து விடுவார்கள் அதோடு கனவையும் தெளிவு படுத்தாமல் விட்டுவிடுவார்கள், அதன் பின் எனக்கு நெருங்கியவர்களில் என் தந்தைக்குப்பின் என் கனவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களில் என் அன்பிற்குரிய நம்பிக்கைக்குரிய மனைவியை நினைத்தேன்
நான் : என் மனைவி என் மனைவி, அவள் என் இந்த கனவைப்பார்க்கட்டும் என்றேன்
சூரா அல்-முல்க்: நான் அந்த வானவரிடம் இதுபற்றி சொல்கிறேன் விரைவில் உன் சிரமம் நீங்கி உனக்கு மகிழ்ச்சி ஏற்பட அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன் என சொல்லி சென்றுவிட்டது.
என் தந்தை வந்து சென்றதன்காரணமாக எனது கப்ர் பிரகாசத்தோடு இருந்தது, நான் ஒரு சிறையில் இருப்பது போன்று எதிர்பார்த்திருந்தேன், ஒன்றும் அறியாதது போல் காலம் கடந்து கொண்டிருந்தது இது தவிர பல ஓசைகளையும் இன்னும் சில வேலைகளில் காலணிகளின் ஓசைகளையும் செவியுற்றேன், என் அருகில் ஜனாஸாக்கள் அடக்கப்படுவதும் தெரிந்தது மேலும் சில வேலைகளில் சிரிக்கும் ஓசையையும் செவியுற்றேன் ஆனால் நான் இங்கு அடைபட்டுக் கிடக்கும்போது இம்மக்களின் சிரிப்பைப்பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது,
இதன் பின்னர் நீண்ட நேரம் கழிந்தது
திடீரென என் உடலின் உஷ்ணம் அதிகரிக்க ஆரம்பித்தது, நான் அடுப்பில் நின்று கொண்டிருப்பது போன்று கதர ஆரம்பித்தேன் அதன் பின் கொஞ்சம் குறைந்தது பின்னர் சற்று குறைந்தது பின்னர் முழுமையாக உஷ்ணம் நின்றுவிட்டது வின்வெளியில் புறப்பட்டது போன்று உணர்ந்தேன், என்ன நடந்தது என்று என்னால் நம்ப முடியவேயில்லை!
அதன் பின்னர் சூரா அல்-முல்க் வுடைய ஒளி தென்பட்டது மேலும் உனக்கு மகிழ்ச்சியூட்டுவதைக்கொண்டு நற்செய்தி பெறு என்றது
நான் : நற்செய்தி சொல்பவர்களில் உள்ளவர் நீ, என்ன நடந்தது சொல் என நான் கேட்டேன்
சூரா அல்-முல்க் : கனவுகளை காட்டக்கூடிய வானவர் உனது மனைவியிடம் கனவில் சென்று ”நீ ஒரு ஏணியில் கவலையோடு நின்று கொண்டிருக்கிறாய் இன்னும் ஏழு படிகள் ஏறவேண்டியுள்ளது ஆனால் அதில் ஏற முடியவில்லை, உடனே உன் மனைவி ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் விழித்து எழுந்து உன்னை நினைத்து அழுதாள் பின்னர் கனவிற்கு விளக்கம் பார்க்கின்ற புத்தகத்தை எடுத்து பார்த்தாள் அதில் பல விஷயங்கள் இருந்தன இருந்தாலும் நீ (தன் கனவர்) ஏதோ ஒரு சிரமத்தில் இருப்பதாக உணர்ந்தாள், விடிந்த பின் கனவிற்கு விளக்கம் சொல்கின்ற வயது முதிர்ந்த பெண்ணோடு தொடர்பு கொண்டு இது பற்றி அப்பெண்ணிடம் அவள் விசாரித்தாள்
அப்பெண்: மகளே! உன் கணவனால் செலுத்த வேண்டிய கடன் உள்ளது அதன் காரணமாக அவர் தனது கப்ரில் அடைபட்டு இருக்கிறார், அக்கடன் 700 அல்லது 7000 ரூபாய் இதற்கு அதிகமாக விஷயங்களை அல்லாஹ்வே நன்கு அறிவான் என அவள் சொன்னாள்.
உன் மனைவி: அதை எவ்வாறு செலுத்துவது? மேலும் அதை யாருக்கு செலுத்த வேண்டும்? என கேட்டாள்
அப்பெண் : அல்லாஹ்தான் நன்கு அறிந்தவன் ஆனால் இஸ்லாமிய அறிஞர்களிடம் விசாரித்துப்பார் என்றாள்
அதன் பின்னர் உன்மனைவி மற்ற இஸ்லாமிய அறிஞரின் மனைவிக்கு தொடர்பு கொண்டு (உன் கனவர்) ஆலிம் அவர்களிடம் : இறந்துவிட்ட என் கணவரால் (பிறருக்கு செலுத்தவேண்டிய கடன் இருக்கிறது அதை) யார் யாருக்கெல்லாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது என எனக்குத்தெரியாது அதை எவ்வாறு செலுத்துவது என கேட்டுப்பார்? என்றாள்.
அறிஞரின் மனைவி: தன் கணவரிடம் விவரத்தை எடுத்துரைத்தாள் அதற்கவர் : அக்கடனின் அளவுக்கு தருமம் செய்து விடுங்கள் அப்பொழுது அல்லாஹ் அவரின் பொறுப்பிலிருந்து அதை அகற்றி விடுவான் என (அந்த அறிஞர்) பதிலுறைத்தார்.
உன் மனைவி : உன் மனைவியிடம் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பளவுக்கு தங்கம் இருந்தது, அதை எடுத்துக் கொண்டு விரைவாக உன் தந்தையிடம் சென்று நடந்ததை எடுத்துரைத்தாள் ஆனால் அவரோ
அதற்கு பகரமாக (விற்க) எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை மாறாக அக்கடனை நான் செலுத்தி விடுவதற்கு நான் பொறுப்பு என்றார் ஆனால் உன் மனைவி உன் தந்தையிடம் சத்தியமிட்டுச் சொன்னாள் : இந்த தங்கம் என் கணவனால் சம்பாதித்த ஒன்றுதான், அவரது மரணத்திற்கு பின் அவருக்காக ஏதாவது செய்யவேண்டும், என் காரணமாக அவருக்கு சுவர்க்கம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என அல்லாஹ்விடம் கேட்கிறேன் என்றாள்.
அவளது பிடிவாதத்தை கண்ட உன் தந்தை, அவளது நல்ல உள்ளத்தை புரிந்து கொண்டு அந்த தங்கத்தையும் வாங்கி இன்னும் கொஞ்சம் பணத்தையும் போட்டு 50ஆயிரம் வரை சேர்ந்தது, கடன் போக அதிகப்படியான தொகையை உனக்காக தர்மமாக நிய்யத் வைத்துக் கொண்டு ஒரு ஏழைக் குடும்பத்திற்கு கொடுத்து விட்டனர் எனவே அல்லாஹ் உன் சிரமத்தை அகற்றி விட்டான் உனக்கு ஆறுதல் கூறத்தான் உன்னிடன் நான் வந்தேன் என அந்த அல்-முல்க் சூரா சொல்லி முடித்தது.
நான் : அல்லாஹ்விற்கே புகழனைத்தும், நான் இப்பொழுது எந்த உஷ்ணத்தையும் என் உடலில் உணரவில்லை, நான் கட்டப்பட்டது போல் இருந்தேன் என் முடிச்சுகள் யாவும் அவிழ்க்கப்பட்டு விட்டன, இவையாவும் அல்லாஹ்வின் அருளுக்குப் பின்னர் உன் மகிமை மற்றும் எனது கடனை செலுத்துவதற்கான உன் வாதாடுதல் போன்றவை மூலமாக நடந்தது.
சூரா அல்-முல்க் : உன் கவலையை நீக்கிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும், இனி உன்னிடம் உன் செயல்களை சமர்ப்பிக்க வானவர்கள் வருவார்கள் என சொன்னது
நான் : இதன் பின்னரும் அபாயம் ஏதும் உள்ளதா என அந்த சூராவிடம் கேட்டேன்
சூரா அல்-முல்க் : பாதை நெடுந்தூரம், பல ஆண்டுகள் ஆகலாம், அதற்காக தயாராக இரு என்றது
நான் : பல வருடங்களா? என்றேன்
சூரா அல்-முல்க் : கப்ரில் நுழைகின்ற பலரில் தண்டிக்கப்படுபவர்கள் அவர்கள் சாதாரணமாக நினைத்த செயலின் காரணமாகவே ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக கருதப்படுகின்றது
நான் : எவை போன்றது என்றேன்
சூரா அல்-முல்க் : சிறுநீர் கழித்து விட்டு சரியாக சுத்தம் செய்யாமல் தொழ எழுந்து விடுவார்கள், தன் மீதோ அல்லது தன் ஆடைகள் மீதோ அசுத்தம் இருக்கும் நிலையில் அல்லாஹ்விற்கு முன்னிலையில் எழுந்து விடுவார்கள் இதன் காரணமாக பலர் தண்டிக்கப்படுவார்கள்.
நான் : இது போன்றவர்கள் அதிகமா? என்றேன்
சூரா அல்-முல்க்: பலர் இதன் காரணமாகவே தண்டிக்கப்படுவார்கள், இது போன்று : கோள் சொல்வது, அனாதைகளின் பொருளை உண்ணுவது, திருடுவது இன்னும் வட்டி போன்றவைகளால் பலரும் தண்டிக்கப்படுவார்கள் மேலும் இங்கு பலர் கியாமநாள் வருவதற்கு முன்னரே பரிசுத்தப்படுத்தப்படுவார்கள் ஏனெனில் நரக வேதனை என்பது மிகக்கடுமையானது, கொடூரமானது, அங்கு தண்டிக்கப்படுபவரும் உள்ளனர், அதன் வாக்களிக்கப்பட்ட நேரம் கியாமநாள் மற்றும் நரக நெருப்பு ஆகும்.
நான் : அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிப்பது எப்படி? அதிலிருந்து ஈடேற்றம் பெறுவது எவ்வாறு? என்றேன்
சூரா அல்-முல்க் : உன் செயல்கள் யாவும் துண்டிக்கப்பட்டுவிட்டன, உனக்கு முன் மூன்று வழிகள் உள்ளன 1) உன் பிள்ளைகள் மற்றும் உன் உறவினர்கள் உனது ரஹ்மத்திற்காக துஆ செய்வது 2) உனது சதக்கா ஜாரியா எனப்படுகின்ற உன் மரணத்தின் பின் தொடர்ந்து வருகிற தர்மம்
நான்: ஒரு இஸ்லாமிய நகரத்தில் ஒரு பள்ளியை நிர்மாணிப்பதற்காக என் நண்பர்களில் ஒருவர்; பொருளை சேகரித்தது எனக்கு ஞாபகம் வருகிறது என்றேன்
சூரா அல்-முல்க் : அல்லாஹ் உனக்கு கூலியை பன்மடங்காக்கி கொடுப்பானாக! ஏனெனில் அல்லாஹ்வின் பள்ளிகளில் ஒன்றை அமைப்பதற்கு நன்மைகள் அதிகம் உள்ளது என சொன்னது.
நான் : மூன்றாவது என்ன? என்றேன்
சூரா அல்-முல்க் : நீ கல்வியை பரப்புவதற்காக அல்லது இஸ்லாமிய சட்டங்களை அறியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக ஏதாவது செய்தாயா? என்றது
நான் : ஞாபகம் இல்லை மேலும் குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறுபட்ட மொழி நூல்களை பிரசுரம் செய்ய இருந்த திட்டங்களையெல்லாம் நான் நினைவு படுத்திப்பார்த்தேன்,
நான் என்மனதிலேயே சொல்லிக் கொண்டேன் : சுப்ஹானல்லாஹ்! என் வாழ்க்கையில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையெல்லாம் நான் வீணடித்துவிட்டேன் மேலும் ஓர் உரத்த குரலில் : உயிரோடு இருக்கின்ற கூட்டமே! உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள், உங்களுக்கு மரணத்திற்குப்பின் பெற இருப்பதற்காக தயார்செய்து கொள்ளுங்கள், நான் பார்ப்பதை நீங்கள் பார்த்து விட்டால் நீங்கள் பள்ளியை விட்டு வெளி வரவேமாட்டீர்கள், இருக்கின்ற செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்திருப்பீர்கள் என முழக்கமிடலாம் என ஆசிக்கிறேன் என்றேன்.
நான்: என் நன்மைகள் பண்மடங்காகுமா? என் கப்ருக்கு நன்மைகள் வருமா? என விசாரித்தேன்
சூரா அல்-முல்க் : மரணித்த ஒவ்வொருவருக்கும் இறந்த ஆரம்ப காலங்களில் நன்மைகள் அதிகம் வந்து கொண்டே இருக்கும், பின்னர் முற்றிலும் குறைந்து விடும்.
நான் : என் குடும்பத்தினர்கள், என் குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என்னை மறந்து விடுவார்களா? நிச்சயம் அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்பதை (என்னால்) நம்ப முடியவே இல்லை என்றேன்
சூரா அல்- முல்க் : அவர்கள் உன் கப்ருக்கு எவ்வாறு வந்து செல்கிறார்கள் என நீ பார்க்கத்தான் போகிறாய், அவர்களது வருகை குறைந்து கொண்டே செல்லும், முதலில் ஒவ்வொரு மாதமும் அதன் பின் வருடம் அதன் பின் பத்து வருடங்கள் அதன்பின் ஒருவர்கூட கப்ருக்கு வர மாட்டார்கள்!! என்றது.
அழுதேன், உணர்ச்சி வசப்பட்டேன், என் பாட்டனார் இறந்த பின் என்ன நடந்தது என்பது ஞாபகத்திற்கு வந்தது, அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வாரமும அவர்கள் கப்ருக்கு சென்றோம் பின்னர் ஒவ்வொரு மாதமும் சென்றோம் பின்னர் மறந்துவிட்டோம், நாம் உயிரோடு இருக்கும் போது மரணித்தவர்களை மறந்து விட்டோம் நாம் அவர்களின் இடத்தில்; இப்பொழுது இருக்கிறோம்,
சூரா அல்-முல்க் : மரணத்திற்குப்பிறகுள்ள வாழ்க்கைக்காக செயல்பட்டு தன் (மறுமை) இல்லத்தை தயார் செய்துகொண்டவர்கள்தான் புத்திசாலி ஆனால் உனக்கு ஒன்று சொல்கிறேன் என்றது
நான் : கவலையோடு அதுவென்ன? என்றேன்
சூரா அல்-முல்க் : உன் குடும்பத்தினர்கள் அல்லாத உனக்கு அறிமுகமில்லாதவர்களும் உனக்காக பிரார்த்தனை மற்றும் பாவமன்னிப்புத் தேடுவார்கள் என்றது.
நான் : அது எப்படி என்றேன்
சூரா அல்-முல்க் : சிறிது நேரத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரு நல்ல மனிதர் துஆ செய்தார் அவர்
اللّهُمَّ اغْفِرْ لِلْمُؤمِنِيْنَ وَالْمُؤمِنَاتِ وَ الْمُسْلِمِيْنَ وَ الْمُسْلِمَاتِ الاَحْياَءِ مِنْهُمْ وَ الاَمْوَاتِ (அல்லஹ்ஹும்மங்ஃபிர் லில்முஃமினீன வல்முஃக்மினாத்தி வல்முஸ்லிமீன வல்முஸ்லிமாத்தி அல்அஹ்யாயி மின்ஹும் வல்அம்வாத்தி)
அல்லாஹ்வே! உயிரோடிருக்கின்ற மற்றும் மரணித்து விட்ட இறை விசுவாசியான மற்றும் முஸ்லிமான அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! என சொன்னார் எனவே அல்லாஹ் அவரின் காரணமாக உயிரோடிருக்கிற மரணித்துவிட்ட ஒவ்வொருவருக்கும் நன்மையை எழுதுகிறான் இவரின் துஆவின் காரணமாக பல நன்மைகள் உனக்கும் வந்தது மேலும் துருக்கியிலிருந்து ஒருவர் ஒரு பள்ளிவாசலைக்கட்ட தருமம் செய்தபோது அவர் : அல்லாஹ்வே இதன் கூலியை நபி ஸல்லல்லாஹுஅலைஹிவசல்லம் அவர்களுடைய உயிராக இருக்கிற மற்றும் மரணித்து விட்ட அனைத்து உம்மத்தினருக்கும் செலுத்துவாயாக! என சொன்னார் மற்றொரு வயது முதிர்ந்த பெண் எகிப்திலிருந்து ஆடு ஒன்றை அறுத்து முஸ்லிமாக இறந்த யாவருக்கும் அதை எத்திவைத்தார் இன்னொரு துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்ற மராக்கோவைச்சார்ந்த மனிதர் உம்ரா செய்தார் அவர் தவாஃப் செய்யும்போது அனைத்து முஸ்லிம்களுக்காகவும் துஆ செய்தார், இவர்கள் அனைவரும் மற்றும் இது போன்ற மற்றவர்களின் நன்மைகளும் வந்து கொண்டே இருக்கும் மாறாக மலக்குமார்களும் உனக்காக துஆ மற்றும் பாவமன்னிப்புத்தேடுவார்கள் என அந்த சூரா சொல்லியது.
நான்: இந்த வார்த்தைகளையெல்லாம் செவியுற்ற பின் நற்செய்தி பெற்றேன் மேலும் மரணித்த பின் தபாரக் (அல்-முல்க்) சொன்ன நற்செய்திக்காக மகிழ்ச்சியடைந்தது போன்று வேறு எதற்கும் நான் இதுவரை மகிழ்ச்சியடைந்ததில்லை, பின்னர் அது செல்ல அனுமதி கேட்டது (பின்னர் சென்று விட்டது)
இதன் பின் மன அதிருப்தியை உணர்ந்தேன், சில வேலை மனம் திருப்தியோடு காணுகிறேன், சில வேளை பூமியில் உள்ள மலைகள் யாவும் தன் மேலே உள்ளது போல் மனவெறுப்போடு காணுகிறேன், இருப்பினும் அனைத்து இடங்களிலிருந்து வருகின்ற நன்மைகளை வைத்து என் மனம் திருப்தியடைகிறது என்றும் கப்ரின் வர்ணிக்க முடியாத தனிமையைக் கண்டு மன வெறுப்பையும் உணருகிறேன் என நானாக உறுதி செய்து கொண்டேன்.
நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் கடந்தன, எனக்கு ஆதரவளிக்க வந்து சேருகின்ற சில நற்செயல்கள் அல்லது என்தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் தோழர்களின் வருகையைத் தவிர வேறு ஏதும் எனக்கு ஆதரவைத் தரவில்லை, அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது, என் நண்பர்களில் ஒருவர் இரு முறைதான் வந்தார், மரணித்த ஆரம்ப காலத்தில் வந்த துஆக்கள் மற்றும் தருமங்களெல்லாம் நின்று விட்டன, கடைசி காலங்களில் அதிக வரக்கூடியவைகளில் குறிப்பாக ரமலானின் கடைசிப்பத்தில் என் தாயாரின் துஆதான் வந்து கொண்டே இருந்தது அது எனக்கு மிகச்சிறந்த ஆதரவைத் தந்தது,
எனக்கு வருகின்ற நன்மைகளெல்லாம் முற்றிலும் குறைய ஆரம்பித்து விட்டன, நான் ஒரு அபாயகட்டத்தில் இருப்பதாக உணர்ந்தேன் ஏனெனில் கியாம நாளின் தராசுத்தட்டின் கடுமையைப்பற்றியும் சிறிய பெரிய ஒவ்வொரு விஷயத்தைப்பற்றியும் கவலைப்பட ஆரம்பித்தேன், ரப்பே! உனது மன்னிப்பும் கிருபையும்தான் இருக்கிறது அதைவைத்தே உன்னிடம் துஆ செய்கிறேன் இதையே திரும்பத்திரும்ப சொன்னேன் இருப்பினும் இது வெகுதூரம் ஏனெனில் இது அமல்கள் இல்லாத (உலகம்) நாள்.
நாட்கள் கடந்து கொண்டே இருந்தன, சிலவேலை மிகக்கடுமையாக இருந்தது இருப்பினும் அல்லாஹ்வின் அருள் அதை இலேசாக்கும் என நினைவில் பட்டது, சூரா அல்-முல்க் வருவது நின்றுவிட்டது, காரணம் தெரியவில்லை, கப்ரில் இருள் சூழ்ந்திருப்பதால் இரவு பகல் ஏது என்றுகூடத் தெரியவில்லை, எனது சிறிய பெரிய பாவங்களை எண்ணிப்பார்த்தேன், என் வாழ்க்கையில் நடந்தவைகளை ஒப்பிட்டுப்பார்த்தேன்,
எவ்வித மறைவுமின்றி ஒவ்வொரு மணித்துளிகளும் ஒவ்வொரு நாட்களும் எனக்கு முன் வந்து நின்றது. என் பாவங்கள் மலைகள் போன்று இருந்தன இருப்பினும் அவற்றை அல்லாஹ் மன்னித்துவிட மாட்டானா என்ற ஆதரவும் இருந்தது, தன்னைத்தானே பழித்துக் கொண்டிருந்தேன், வீணாகக் கழிந்த நாட்களைப்பற்றி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன், என்னை மன்னித்து விட்டு விட மாட்டானா? என் குற்றங்களை மறைத்து விடமாட்டானா? என்னை பாக்கியவான்களோடு ஆக்கிவிட மாட்டானா? (என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்);.
எத்தனை பாவங்களை துணிந்து செய்துள்ளேன், எத்தனை தொழுகைகளை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தியிருக்கிறேன், எத்தனை முறை பஜ்ர் தொழாமல் தூங்கியிருக்கிறேன், எத்தனை அமல்களை செய்வதில் சோம்பல் காட்டியிருக்கிறேன்.
இவையெல்லாம் நினைவுபடுத்தியபோது அழுதேன், தொடர்ந்து புலம்பினேன், என் அழுகை பல நாட்களாக நிற்கவேயில்லை மாறாக நான் அழுத காலங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, பல மாதங்கள் அழுதேன் என்று சொன்னாலும் மிகையாகாது
இவ்வாறாக சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நேரத்தில் திடீரென மகாச்சுடர் ஒன்று ஜொலித்தது அதன் சுடர் ஒரு சூரியனை அங்கு வைத்தது போல இருந்தது, வானவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் ரஹ்மத்தின் நன்மாராயங்களையும் சொல்லிக் கொள்வதை நான் செவியுற்றேன்.
அச்சத்திற்கும் மகிழ்ச்சிக்கு மத்தியில் என்ன நடந்தது என வானவர் வந்து சொல்வதற்கு முன்னரே நான் தெரிந்துகொள்ள அவசரத்தில் இருந்தேன்; இதன் பின்னர் கப்ர் முழுவதும் மிகப்பெரிய ஒளி பரவியது, ஏதோ நற்செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன் உடனே ஒரு வானவர் வந்து முஸ்லிமான மனிதனே! ரஹ்மத் இறங்குவதைக் கொண்டு நற்செய்தி பெறு என்றார்.
நான்: ஜஸாகல்லாஹு கைரன் என சொல்லிவிட்டு காரணத்தை விசாரித்தேன்
வானவர்: ரமலான் மாதத்தின் நேரம் துவங்கி விட்டது, இம்மாதத்தில் தான் ரஹ்மத், பாவமன்னிப்பு மற்றும் நரக விடுதலை ஏற்படுகிறது, இதிலே பூமியில் உள்ள வானவர்கள் வானத்தில் உள்ள வானவர்களை சந்திக்கிறார்கள், இதில் முஸ்லிம்களின் துஆவின் காரணமாக பலர் விடுதலை பெறுவார்கள், உங்களின் நன்மைகளின் தராசுத்தட்டு இதன் காரணமாக கணத்து காணப்படும்.
நான்: அல்லாஹ் எவ்வளவு மிகப்பெரியவன், அவனது அந்தஸ்த்து எவ்வளவு சிறந்தது, அவனது கொடை எவ்வளவு பெரியது, தரைமேல் உள்ளவர்களுக்கும் தரையின் கீழே உள்ளவர்களுக்கும் எத்தனை வாய்ப்புகளை வழங்குகிறான் என சொன்னேன்
வானவர் : அல்லாஹ் ஜல்ல ஷான{ஹு எவரையும் நரகத்தில் நுழைவிக்க விரும்புவதில்லை மேலும் யாரையும் தண்டிக்கவும் விரும்புவதில்லை ஆனால் உங்களுடைய குறைபாடுகள் மற்றும் பாவத்தின் மீது பிடிவாதமாக இருப்பதின் காரணத்தினாலும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் எவ்வளவோபெற்றிருந்தும் நீங்கள் பாவங்கள் செய்வதன் காரணத்தினாலும் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறீர்;கள் என்றார்
மேலும் வானவர் : இப்பொழுது முஸ்லீம்கள் தொழுகிறார்கள், வானவர்கள் அதைக் கணக்கிடுகிறார்கள் மேலும் அவர்களின் துஆக்கள் அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகின்றன, அல்லாஹ் தன் அருளால் உங்களை அணைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டு அவர் திரும்பி சென்று விட்டார்.
கப்ரில் ஒளி தொடர்ந்திருந்தது, கப்ரின் உள்ளே முதன்முதலாக பள்ளிகளில் (தொழவைக்கப்படுகிற); ஓசைகளையும் செவியுற்றேன் மேலும் என் உலக வாழ்க்கையை எண்ணிப்பார்த்தேன், தராவீஹ் தொழுகையும் ஞாபகத்திற்கு வந்தது உடனே அழ ஆரம்பித்தேன், மனிதர்கள் தொழும் சப்தத்தையும் அதில் துஆ செய்கின்ற சப்தத்தையும் செவியுற்றேன் மேலும் இமாமின் சப்தம் : اللّهُمَّ لاَتَدَعْ لَناَ فِى مَقامِناَ هَذاَ ذَنْباً اِلاّ غَفَرْتَهُ وَلاَهَماًّ اِلاَّ فَرَّجْتَهُ وَ لاَمَيْتاً اِلَّا رَحِمْتَهُ (அல்லாஹும்ம (வாயனாயய) லா-த-தஃ லனா ஃபீ ம(க்)காமினா ஹாதா தன்பன் இல்லா ஙபஃர்த்தஹு, வ-லா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு, வ-லா மைத்தன் இல்லா ரஹிம்தஹு,)
அல்லாஹ்வே! இங்கு யாருடைய எந்த குற்றத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே! யாருடைய கவலைகளையும் அகற்றாமல் விட்டுவிடாதே! எந்த மரணித்த மனிதர்களையும் கிருபை காட்டாமல் விட்டுவிடாதே! என்ற வார்த்தைகளை செவியுற்றவுடனேயே இந்த துஆவைக் கொண்டு என் உடல் மகிழ்ச்சியால் பூரித்துப்போனது, இதே துஆவை இன்னும் சற்று அதிகரிக்கமாட்டார்களா? என ஆசைப்பட்டேன், இயற்கையிலேலே அவர்கள் மரணித்தவர்களை நினைத்துப்பார்த்துள்ளார்கள் மேலும் மற்றோர் முறை சொன்னார் : اللّهُمَّ ارْحَم ْمَوْتاَناَ وَاَنْزِلْ عَلى قُبُوْرِهِم ْالفُسْحَةَ وَ السُّرُوْرَ اللَّهُم َّمَنْ كاَنَ مِنْهُمْ مَسْرُوْرًا فَزِدْهُ سُرُوْرًا وَمَنْ كَانَ مِنْهُمْ مُعَذِّباً مَلْهُوْفاً فَأبْدِلْهُ حُزْنَه ُفَرْحًا وَ سُرُوْرًا
(அல்லாஹும்மர்ஹம் மவ்த்தானா, வஅன்ஜில் அலாகுபூரிஹிம் அல்ஃபுஸ்ஹத்த வஸ்ஸுரூர, அல்லாஹும்ம மன்-கான மின்ஹும் மஸ்ரூரன் ஃப-ஜித்ஹுசுரூரா, வ மன்-கான மின்ஹும் முஅத்திபன் மல்ஹூஃபன் ஃப-அப்தில்ஹுஹுஜ்னஹூஃபர்ஹன் வ சுரூரா,) எங்களில் இறந்தவர்கள் மீது கிருபைகாட்டுவாயாக! அவர்களின் கப்ருகளில் விசாலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கிடுவாயாக! யார் அவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிப்பாயாக! யார் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களின் கவலையை மகிழ்ச்சியாக மாற்றி வைப்பாயாக!
என துஆ செய்தார் இதை நானும் திரும்பத்திரும்ப சொல்ல ஆரம்பித்தேன் நானும் ஆமீன் ஆமீன் என சொல்லிக்கொண்டே கடுமையாக அழ ஆரம்பித்தேன்.
இதன் பின் என் உள்ளம் திருப்தியடைந்தது மேலும் என் ஆத்மா அமைதியடைந்தது, ஒவ்வொரு நேரத்திலும் என் ஒளி புதிதாதிக் கொண்டே இருந்தது பின்னர் உலகில் நுகர்வதைப்போல மாறாக அதைவிட சற்று அதிகமாக கஸ்தூரியின் நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன், என்னை நோக்கி ஒருவர் வெகுதூரத்திலிருந்து வருவது தெரிந்தது, ஆரம்பத்தில் மிக ஆச்சர்யப்பட்டேன், என் கப்ரில் ஒரு மனித உருவத்தில் ஒரு படைப்பைப் பார்க்கிறேன் அவரையே நானும் பார்க்க ஆரம்பித்தேன்
அவர் என்னிடமே வந்து கொண்டிருக்கிறார் இன்னும் ஆச்சர்யப்பட்டுப்போனேன் திரும்பவும் என்னிடமே அவர் முன்னோக்கி வருகிறார், அழகிய முகம் கொண்டவர், அவர்மீது வெண்ணிற ஆடை உள்ளது, கஸ்தூரியின் வாடை இவர்தான் என் புரிந்து கொண்டேன் பின்னர் தன்னிடம் வந்து : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றார்
நானும் உடனே : வ அலைக்குமுஸ்ஸலாம் என பதில் சொன்னேன் அவரிடம் நீங்கள் யார் என கேட்பது போல ஆச்சர்யத்தோடு அவரைப்பார்த்தேன்
அவரும் என் முகத்தில் ஒரு ஆச்சர்யத்தைப் பார்த்தார், புன் முறுவலிட்டார் மேலும் அவர் : உனக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்தைக் கொண்டும் உன் பாவமன்னிப்புப்பற்றியும் நன்மாராயம் கூற நான் வந்துள்ளேன் என்றார்.
நான்: அவரிடம் : உங்களுக்கு அல்லாஹ் மகிழ்ச்சியான ஒன்றைக் கொண்டு நற்செய்தி சொல்லட்டும்! நீங்கள் யார் மற்றும் இங்கு எவ்வாறு? முதன்முதலாக கப்ரின் உள்ளே ஒரு ஆதமின் மகனைப்பார்க்கிறேன் என்றேன்
அவர் : நான் ஆதமின் மகனா? இல்லை என்றார்
நான் : அவ்வாறென்றால் நீங்கள் மனித உருவத்தில் உள்ள மலக்கா என்றேன்
அவர் : நான் மலக்கும் இல்லை என்றார்
நான் : ஆச்சர்யத்தோடு அவ்வாரென்றால் நீங்கள் யார்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களைப் பார்த்ததால் என் உணர்வுகள் மகிழ்ச்சியைக்கொண்டும் ஆச்சர்யத்தைக் கொண்டும் கலந்துவிட்டன எனக்கேட்டேன
அவர்: உனக்கு நினைவில்லாமல் இருக்கலாம் இருப்பினும் உலகில் செய்த உனது நற்செயல்களுக்கு அல்லாஹ் ஓர் உருவத்தைக் கொடுத்துள்ளான் நான்தான் உன் நற்செயல்கள்.
உனது தொழுகை, உனது நோன்பு, உனது ஹஜ், உனது தருமம், உனது துஆ மற்றும் உனது பெற்றோர்களுக்கு நீ செய்த நல்லகாரியங்கள் போன்றவையாகும், உனது மன்னிப்பின் நற்செய்தி கூற இது போன்ற உருவத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான் என்றார்.
அல்லாஹ்வே! அல்லாஹ்வே! அல்லாஹ்வே! நீ திருப்தியடைகின்றவரை உனக்கே புகழனைத்தும், மகிழ்ச்சியின் காரணமாக எவ்வித உணர்வுமின்றி நான் இதை சொல்கிறேன்.
பின்னர் நான் உடனே: ஏன் தாமதமாக வந்தீர், நான் இறந்தவுடனேயே வரவில்லை, இவ்வளவு தாமதம் ஏன் என விசாரித்தேன்
அவர்: நீ செலுத்தவேண்டிய கடனும் உனது பாவங்களும் உன்னிடம் நான் வருவதை தடுத்துவிட்டன மேலும் எப்பொழுது உன் மீது ரஹ்மத் இறங்கியதோ மேலும் உனக்;கும் உன் போன்ற இறந்தவர்களில் அதிகமானோருக்கு பாவமன்னிப்புக் கிடைத்துவிட்டதோ (உடனே) இதோ உன்னிடம் வந்து விட்டேன் என்றார்.
நான்: இவ்வாறெனில் நான் சுவர்க்கவாசியாகி விட்டேனா? என்னை இறைவன் தண்டிக்க மாட்டானா? எனக் கேட்டேன்.
அவர்: இது இறைவனின் விஷயம், இதுபற்றி அவனே அறிவான் என்றார் கியாமநாளன்று அங்கு தராசுத்தட்டு இருக்கும், அதில் உன் முடிவை நிர்ணயம் செய்யப்படும், அதிலே மக்களின் உரிமைகளும் வேறுபல விஷயங்களும் அதில் எடைபோடப்படும் அது கியாம நாளன்று மட்டும்தான் தெரியும் என்றது.
நான்: உதாரணமாக ஒன்றை எடுத்துச் சொல்லுங்கள் என்றேன்
அவர் : மனிதர்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைத்து இருப்பார்கள் பின்னர் அநீதியிழைக்கப்பட்டவன் அநீதியிழைத்தவனைப்பார்த்து : அல்லாஹ்வின் மீது ஆனையாக! நான் கியாம நாளன்று உன்னை அவசியம் விடமாட்டேன் என பலர் அங்கு அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார்கள் அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்
நான்: அவரின் வார்த்தையிலிருந்து ரொம்பவும் பிரதிபலித்துப்போனேன்
பின்னர் அவர்: உன் வயதின் கடைசிநேரத்தில் செய்த செயல் உனக்கு பயனளிக்கும் என்றார்
நான் : அதுவென்ன? என்றேன்
அவர் : உன் கடைசி நேரத்தை சற்று ஞாபகப்படுத்திப்பார்க்கலாமே! உன் விபத்து நேரத்தில் : அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என சொல்ல அல்லாஹ் உதவி செய்தான்
இச்சாட்சியக்கலிமாவை நீ மொழிந்ததால் வானவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள் தெரியுமா! ஏனெனில் ஏகத்துவத்தைக் கொண்டு உன் வாழ்க்கையை முடித்துவைத்தாய் மேலும் யூத கிறிஸ்தவ போதனைகளையெல்லாம் சாத்தான் ஞாபகமூட்டியபோதும் கூட நீ இஸ்லாத்தின் மீது நிலைத்திருந்தாய்
உன் வலப்புறத்தில்; முஸ்லிம்களின் உயிரை வாங்குகின்ற சில வானவர்களும், உன் இடப்புறத்தில் காபிர்களின் உயிரை வாங்குகின்ற சில வானவர்களும் இருந்தனர் மேலும் நீ இஸ்லாத்தின் மீது நிலைத்திருந்தது உறுதியான பிறகு காபிர்களின் உயிரை வாங்கும் வானவர்கள் மறைந்து விட்டனர் முஸ்லிம்களின் உயிரை வாங்கும் வானவர்கள் மட்டும் உன்னிடமிருந்து உன் உயிரை வாங்கிச்சென்றனர் என்றார்
நான் : இதுவல்லாமல் வேறு ஏதாவது செயல் பலனளித்ததா? என்றேன்
அவர்: புகை பிடிப்பதை விடவேண்டும் என நீ கார் ஓட்டுனருக்கு உபதேசம் செய்தாய் அதன் காரணமாகத்தான் இப்பொழுது உனக்கு கஸ்தூரி வாடையை அதற்குப்பகரமாக அல்லாஹ் கொடுத்தான் என்றார் அதைப்போல உன் தாயாருடன் தொடர்பு கொண்டு பேசிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நன்மைகள் எழுதப்பட்டன.
நான்: என் தாயாருடன் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே! என ஆசைப்பட்டேன்
பின்னர் அவர்: நீ உன் மனைவியிடமும் இன்னும் அவளிடம் உன் பிள்ளைகளைப்பற்றி விசாரித்தது மற்றும் உன் சிறிய மகளிடம் சந்தோஷத்தை ஏற்படுத்தியது போன்றவைகளுக்காகவும் நன்மைகள் எழுதப்பட்டன என்றார்
ஆனால் உன் மகளிடம் பெரிய தவறு செய்து விட்டாய் அதற்காக ஒரு பெரிய பாவம் எழுதப்பட்டது
நான் : அதுவென்ன? என் மகளோடு பெரிய தவறா? என ஆச்சர்யத்தோடு விசாரித்தேன்
அவர்: அவளிடம் சிறிது நேரத்தில் வருவதாக சொன்னாய், அதற்காக உன்மீது ஒரு பொய் எழுதப்பட்டது, நீ உன் விபத்துற்கு முன் அதற்காக பாவ மன்னிப்பு தேடியிருக்கலாம் என்றார்
நான் : அழுதேன் மற்றும் அல்லாஹ்வின் ஆணையாக! நான் பொய் சொல்ல நினைக்கவில்லை மாறாக என்னைவிட்டு பிரிந்திருப்பதன் மீது பொறுமையாக இருக்கவேண்டும் என எண்ணினேன்.
அவர்: எவ்வாறு இருந்திருந்தாலும் முதலில் உண்மை மட்டுமே சொல்லியிருக்க வேண்டும் ஏனெனில் அல்லாஹ் உண்மையாளர்களையே விரும்புகிறான் மேலும் பொய்யையும் பொய்யர்களையும் வெறுக்கிறான் ஆனால் நீங்கள் இதில் மிகவும் பொடுபோக்காக இருக்கிறீர்;கள் என்றார் அவர்.
பின்னர் அவர் : நீ விமானநிலைய அதிகாரியை ஏசினாய் அதற்கும் ஒரு பாவம் எழுதப்பட்டுள்ளது ஏனெனில் உனக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு முஸ்லிமிற்கு கேடு செய்து விட்டாய் என்றார்.
அல்லாஹ்வே! சிறிய பெரிய அனைத்தும் என் மீது எழுதப்பட்டுவிட்டதா!! என்றேன்
அவர் : நான் பொறுமையாக இருக்கவேண்டும் என்பது போன்று அவர் தொடர்ந்து சொன்னார் : நீ ஹஜ் என்ற கடமையெல்லாம் எவ்வளவு நல்ல முறையில் செய்தாய் அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்துள்ள நன்மைக்கணக்கில் மிகப்பெரியதாகும் அதைப்போன்றே நீ செய்த உம்ராவிற்கும் நன்மைகள் கிடைத்துள்ளன என்றார்.
நான் : எனக்கு ஆதரவுக்காக அவரிடம் கேட்டேன்: நான் நிச்சயம் கியாமநாளில் தராசுத்தட்டின் அச்சத்தை உணர்கிறேன் எனவே அல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் கணக்கிடப்பட்ட செயல்களில் சிறந்தது எதுவென விசாரித்தேன்.
அவர்: நீங்கள் ஒரு நற்செயலைச் செய்தால் இறையருளால் அல்லாஹ்விடம் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன, அது எழுநூறிலிருந்து அதைவிட பன்மடங்காகிறது, அல்லாஹ்விடம் மிகவும் விருப்பமுள்ள செயல்களில் உள்ளது பர்லான தொழுகைகளாகும்
நான்: ஐவேளைத்தொழுகைகளா ? என்றேன்
அவர் : ஆம் இது மிகச்சிறந்தது ஆகும் அதைப்போன்றே ரமலான் மாத நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்றவைகள் அல்லாஹ்விடம் மிக விருப்பமானவவை அவை அடியான் அல்லாஹ்விடம் நெருங்குவதற்கு மிக விருப்பமான செயல் ஆகும் மேலும்; நஃபில்களைவிட வாஜிபானவை அல்லாஹ்விடம் விருப்பமானவை.
அவர்: பர்லுகள் அல்லாத மற்ற சில செயல்களுக்கும் பெரிய அளவுக்கு நன்மைகள் எழுதப்பட்டதை ஞாபகப்படுத்துகிறேன் என்றார்
நான்: அதுவென்ன? என ஆர்வத்தோடு கேட்டேன்
அவர் : நீ 20 வயதாக இருக்கும்போது உம்ராவிற்கு சென்றிருந்தாய், இறையில்லம் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெளியே வந்தாய் ஒருவர் நோன்பு திறப்பதற்காக உணவு விற்றுக்கொண்டிருந்தார் அதை 100 ரியாலுக்கு வாங்கி விநியோகித்தது ஞாபகம் இருக்கிறதா? என்றார்
நான்; : ஆம் நேற்று நடந்தது போன்று ஞாபகம் இருக்கிறது ஆனால் அது என் உம்ராவைவிடப் பெரியதா? என்றேன்
அவர் : வயது முதிர்ந்த பெண்ணொருத்தி கூட்ட நெரிசலின் காரணமாக உன்னிடம் வந்து அப்பொட்டளத்தை வாங்க முடியாத போது நீ அருகில் சென்று இரு பொட்டலத்தை அவளிடம் கொடுத்தாய் என்பது ஞாபகம் இருக்கிறதா?
நான் : ஆம் அவளது முதுமை மற்றும் இயலாமையின் மீது இரக்கப்பட்டேன் என்றேன்
அவர்: இப்பெண் எமன் நாட்டைச்சார்ந்தவள், அவள் துஆ ஏற்றுக்கொள்ளப்படுபவள், பூமியில் மிக நல்ல பெண்மணிகளில் உள்ளவள், இரவு நேரங்களில் நின்று வணங்குபவள் மேலும் அவள் ஏதாவதொன்றை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொன்னால் அதை நடத்தி முடிப்பாள், நீ அதை அவளுக்காக வழங்கியபோது அவள் உனக்காக பிரார்த்தித்தாள். மேலும் அவள் உனக்காக நோன்பு திறக்கும்போதும் துஆ செய்தாள், மறுநாள் இருள் சூழ்கிறவரை உனக்காக துஆ செய்து கொண்டே இருந்தாள்; ஏனெனில் அவள் ஒரு ஏழை என்பதால் மக்கள் கண்டு கொள்ளவில்லை, அவளுடன் சில வானவர்கள் காத்திருந்தனர், அவள் எந்த பிரார்த்தனை செய்தாலும் அதை அல்லாஹ்விடம் கொண்டு செல்கின்றனர், உனக்காக செய்த துஆவையும் உடனே அல்லாஹ்விடம் கொண்டு சென்றனர் எனவே அதற்காக மிகப்பெரிய நன்மை எழுதப்பட்டது. ரமலானில் உனது உம்ரா செய்த நன்மை மற்றும் அதை நோன்பாளிகளுக்கு விநியோகித்தது போன்றவற்றின் நன்மைகளோடு இவ்வணக்கமுள்ள மூதாட்டியிற்கு வழங்கியதின் கூலியும் உடனே ஏழாவது வானம் வரை கொண்டு செல்லப்பட்டு விட்டது
இவ்வார்த்;தைகளை இவர் சொல்லச்சொல்ல என் கண்ணீர் வழிந்தது மற்றும் தேம்பும் சப்தம் உயர்ந்தது, இறைவனின் மீது ஆணையாக! அப்பெண்ணின் துஆ பற்றியோ அவளது இத்தகுதி பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன்
அவர்: உன் பதவிகள் உயரக் காரணமாயிருக்கிற மற்றொரு நிலையும் உனக்கு இருக்கிறது என்றார்
நான் : இந்நற்செய்திகளையெல்லாம் செவியுற்றுக் கொண்டிருக்கிற என் முகம் மலர்ந்து இருக்கும்போது அதுவென்ன? என்றேன்
அவர்: ஒரு முறை நீ மதீனாவிற்கு சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒருவரின் கார் வழியில் உஷ்ணத்தின்காரணமாக பழுதடைந்து நின்று கொண்டிருந்தது, அவருக்கு உதவ நீ தன் காரை நிறுத்தினாய் இது ஞாபகம் இருக்கிறதா? என்றார்
நான்: ஆம்! அவரை எனக்கு ஞாபகம் இருக்கிறது, கடுமையான வெயிலில் நின்று கொண்டிருக்கிறார் என இறக்கப்பட்டு என் வாகனத்தை நிறுத்தினேன் ஆனால் அவரின் கையில் பற்றவைத்த சிகரட் இருந்தது மேலும் அவரிடம் நல்லவர் என்பதற்கு எந்த அடையாளத்தையும் காணவில்லையே என்றேன்
அவர்: ஆம் ஆனால் அவர் முஸ்லிம், எவர்ஒருவர் ஒரு முஸ்லிமின் உலகக்கஷ;டத்திலிருந்து ஒரு கஷ;டத்தை அகற்றுகிறாரோ அல்லாஹ் அவரின் மறுமையின் கஷ;டத்திலிருந்து ஒன்றை அகற்றுகிறான் (நூல்-அஹ்மத்- அறிவிப்பவர் அபுஹுரைரா (ரலி) என உங்களது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் உங்களுக்கு சொல்லித்தந்ததை நீர் அறிவீரே!
எனவே உனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லாமல் இருந்தும், அவர் ஒரு அறிமுகமில்லாதவராக இருந்தும் நீ அவருக்கு உதவி செய்தது, அவரது கஸ்டத்தை அகற்றியதன் காரணத்தால் உன் நன்மைகளை கணக்கிடும் வானவர்களிடம் நீ மதிக்கத்தகுதியானவனாகிவிட்டாய், இதற்காக அவர்கள் உன் நன்மைகளை எழுதுவதில் அல்லாஹ்விடம் போட்டி போட்டனர்
இதுபோன்ற காரணங்களால்தான் கப்ர் மென்மேலும் விசாலமடைந்தது, பெரும் ஒளியிலால் பிரகாசித்தது, வானவர்களின் கூட்டம் என் நோக்கி இறந்தவரை பார்க்க வருவது போன்று வந்து கொண்டே இருந்தனர் அவ்வானவர்கள் இறைவனை துதிப்பதிலும் இறை ஏகத்துவத்தை சொல்வதிலும் என்றுமே சளைத்துப் போனது இல்லை என்றார் அவர்
இதன்பின் (நல்லமல்களுக்கு மாற்று உருவம் கொடுக்கப்பட்ட) அம்மனிதர்: லைலத்துல் கத்ர் இரவு இன்று துவங்கி விட்டது, தன் செயல்களால் நரகப்படுகுழியில் விழுந்த பலர் இன்று சுவர்க்கவாசிகளில் எழுதப்படுவார்கள் என்றது.
முடிவுரை
அனைத்து முஸ்லிமான மையித்துகளுக்கும், இதைக்கொண்டு படிப்பினைப் பெறவேண்டும் என இதை எழுதியவருக்கும் இதை பரப்பிய வளைதளத்தினருக்கும் இதை தமிழில் மொழிபெயர்த்தவருக்கும் இதை சரிபார்த்த மற்றும் பிரசுரிக்க உடலாலும் பொருளாலும் உதவியவர்களுக்கும் துஆ செய்வீர்களென்றும் எதிர்பார்கிறோம்
படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில சரியான நபிமொழிகளை வைத்து, நடந்த நிகழ்ச்சி போன்று தொகுப்பட்ட தொகுப்பு (அரபி மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது, நகரம் மற்றும் நாணயங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது)
– அபூ யஹ்யா
தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி.
Source: http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?aid=120