ஓரே பாத்திரத்தில் கணவனும்-மனைவியும் ஜனாபத்துக் குளியல் குளிப்பது பற்றி….
o குளிப்பதற்கு முன்பு ஜுனுபாளி தூங்குவது பற்றி…
o தன் மனைவியுடன் உடலுறவு கொண்ட கணவன் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் அவர் ஒளுசெய்து கொள்ளவும் என்பது பற்றி…
o தயம்மும் செய்வது, அதுபற்றி அல்லாஹ்வின் உத்தரவு வந்தது பற்றி…
o ஜுனுபாளி ‘தயம்மும்’ செய்வது பற்றி…
o ஸலாமிற்கு பதில் கூறுவதற்காக ‘தயம்மும்’ செய்து கொள்வது பற்றி…..
o விசுவாசி அசுத்தமாக மாட்டார் என்பது பற்றி…
o கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்வை எல்லா நேரத்திலும் நினைவு கூறுவது பற்றி…
o மலஜலம் கழித்தபின்பு ஒருவர் ஒளு செய்யாமல் (உணவு) உண்ணுவது பற்றி…
ஓரே பாத்திரத்தில் கணவனும்-மனைவியும் ஜனாபத்துக் குளியல் குளிப்பது பற்றி..
நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்-எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஒரு பாத்திரத்திலிருந்து குளிக்கக் கூடியவர்களாக இருந்தோம். ‘எனக்காக கொஞ்சம் தண்ணீரை விட்டு வையுங்கள் எனக்காக கொஞ்சம் விட்டு (தண்ணீரை) வையுங்கள்’ என நான் கூறுகின்ற வரை அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக மூஆதா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். அவ்விருவரும் ஜுனுபாளியாக இருந்தனர் எனவும் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் : மூஆதா ரளியல்லாஹு அன்ஹா, புகாரீ – ஹதீஸ் எண்: 161)
குறிப்பு: 1. ஆண்பெண் தாம்பத்ய உறவு (அல்லது) கனவில்-அம்மாதிரி ஏற்பட்டதாக காணும் நிலையில்-விந்து வெளிப்பட்டால், அந்நிலையை ஜனாபத்து என்று மார்க்கத்தில் கூறப்படுகிறது. அந்நிலையிலிருப்பவருக்கு ஜுனுபாளி எனவும் குறிப்பிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க.
ஜுனுபாளி உறங்கவோ, உண்ணவோ விரும்பினால் ஒளு செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய பாடம்.
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுனுபாளியாக இருக்க, அவர்கள் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் தொழுகைக்கு ஒளு செய்வது போன்று ஒளு செய்து கொள்வார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். (புகாரீ – ஹதீஸ் எண்: 162)
குளிப்பதற்கு முன்பு ஜுனுபாளி தூங்குவது பற்றி…
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ‘வித்ரு’ (தொழுகை) பற்றி, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். (என்ற ஹதீஸை அவர் கூறுகிறார். அந்த தொடரில்) ஜனாபத்தின் போது எவ்வாறு அவர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் உறங்குமுன் குளிக்கக்கூடியவர்களாக இருந்தார்களா? அல்லது குளிக்குமுன் உறங்குவார்களா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அவைகளை (இரண்டு விதமாக) செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது சில சமயம் குளித்துவிட்டு தூங்குவார்கள். சில சமயம் ஒளு செய்து விட்டு தூங்குவார்கள் எனக்கூறினார்கள். (இக்)காரியத்தில் விஸ்தீரணத்தை ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக! எனக்கூறினேன். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீகைஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ – ஹதீஸ் எண்: 163)
தன் மனைவியுடன் உடலுறவு கொண்ட கணவன் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் அவர் ஒளுசெய்து கொள்ளவும் என்பது பற்றி…
“உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் தாம்பத்ய உறவை (உடலுறவை) முடித்துக் கொண்டு மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் ஒளு செய்து கொள்ளவும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ – ஹதீஸ் எண் : 164)
தயம்மும் செய்வது, அதுபற்றி அல்லாஹ்வின் உத்தரவு வந்தது பற்றி….
சில பயணங்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் புறப்பட்டோம். ‘பைதாஉ’ அல்லது தாத்துல்ஜைஷ் (கைபருக்கும் மதீனாவிற்கும் இடையில் உள்ள இடம்) என்னும் இடத்தை நாங்கள் அடைகின்ற வரை அதாவது இதற்கிடையில் என்னுடைய கழுத்தில் கிடந்த மாலை ஒன்று அருந்து விழுந்து விட்டது. அதை தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே தங்கிவிட்டனர். கூட வந்த மக்களும் அவர்களுடன் தங்கிவிட்டனர். அவர்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் கிடையாது, அவர்கள் கைவசமும் தண்ணீர் இல்லை. அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள் வந்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் என்ன செய்து விட்டார்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களோடு இருக்கும் மக்களையும் அவர்களுக்கு தண்ணீர் இல்லாத இடத்தில், அவர்களிடமும் தண்ணீர் இல்லாத நிலையில் தங்க வைத்துவிட்டனர் என்றனர். இதைக்கேட்ட அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தொடையின் மீது தன் தலையை வைத்து நன்றாக உறங்கி கொண்டிருந்த சமயம் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், மக்களையும் தடுத்து நிறுத்தி விட்டாய், அவர்களுக்கு அங்கு தண்ணீர் கிடையாது, அவர்கள் வசமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். என்னை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிந்த்தித்துவிட்டு அவர்கள் எதைக்கூற வேண்டுமென அல்லாஹ் நாடினானே, அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பில் தங்களது கையைக் கொண்டு குத்தவும் ஆரம்பித்தனர். அச்சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸ்தானம் (அவர்கள் தலை) என் மடி மீது இருந்ததே தவிர என்னை அசைவதிலிருந்து தடுக்கவில்லை. தண்ணீர் இல்லாத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், காலைப் பொழுதை அடையும் வரை உறங்கி விட்டனர். அந்நேரத்தில் தான், அல்லாஹ் ‘தயம்மும்’ வசனத்தை இறக்கி வைத்தான். அதன்பிறகு அவர்கள் எல்லோரும் தயமும் செய்து கொண்டனர்.
அபூபக்கரின் குடும்பத்தவர்களே! உங்களுடைய பாத்திரத்தில் இச்சம்பவம் முதலாவதல்ல என உஸைது பின் அல்ஹுலைர் கூறுகிறார். (இவர், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு மார்கத்தைக் கற்று தரவும், அவர்கள் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுத்தரவும், அவர்களை நல்வழி நடத்திச் செல்லவும், ஒரு சிலரை ‘மினாவின்’ இரவில் தேர்ந்தெடுத்து நியமித்தார்களே! அவர்களில் இருவரும் ஒருவராவார்)
நான் எந்த ஒட்டகத்தின் மிது அமர்ந்து (சவாரி) செய்து இருந்தேனோ அதை கிளப்பினோம். அதற்கு கீழேயே தொலைந்து போன என் மாலையை பெற்றுக்கொண்டோம். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரீ – ஹதீஸ் எண்: 165)
ஜுனுபாளி ‘தயம்மும்’ செய்வது பற்றி….
(அறிவிப்பாளராகிய) நான் அப்துல்லா, அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு ஆகியவர்களுடன் அமர்ந்தவனாக இருந்தேன். (அப்போது அபூமூஸா அப்துல்லாஹ்விடம்) “அபூஅப்துர்ரஹ்மானே! ஓரு மனிதர் ஜுனுபாளியாகி விடுகிறார்; ஒரு மாதம் வரை தண்ணீர் அவருக்கு கிடைக்கவில்லை, தொழுகையை அவர் எவ்வாறு செய்(நிறைவேற்று)வார்? என அபூமூஸா கேட்டார்.
ஒரு மாதம் வரை தண்ணீரை அவர் பெற(அவருக்கு கிடைக்கா)விட்டாலும் தயம்மும் செய்யவே மாட்டார் என அப்துல்லாஹ் கூறினார். “நீங்கள் தண்ணீரைப் பெறாத (தண்ணீர் உங்களுக்கு கிடைக்காத) போது சுத்தமான மண்ணீல் தயம்மும் செய்து கொள்ளுங்கள்” என்ற அல்மாயிதா அத்தியாயத்திலுள்ள இந்த வசனத்தை என்ன செய்வீர் என அபூமூஸா கேட்டார். (அதற்கு) அப்துல்லாஹ், “இந்த வசனத்தில் உள்ளவாறு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் தண்ணீர் குளிர்ந்து விட்டால் (கூட) மண்ணை(க் கொண்டு தயம்மும் செய்ய) அவர்கள் ஆரம்பித்து விடுவர்” எனக்கூறினார்.
அபூமூஸர் “என்னை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியிருந்தார்கள். நான் ஜுனுபாளியாகிவிட்டேன். (தண்ணீர் என்னிடம் இல்லை தேடியும்) தண்ணீரை நான் பெறவில்லை. (எனக்கு கிடைக்கவில்லை அந்நிலையில்) கால்நடை மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். அதன்பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்து அச்சம்பவத்தை அவர்களுக்குக் கூறினேன். உன் கைகளால் இவ்வாறு செய்தாலே போதும் எனக்கூறினார்கள். (அதை செயல் ரூபத்தில் காட்டுவதற்காக) அவர்களின் இருகைகளையும் ஒருமுறை பூமியில் அடித்துவிட்டு, அதன்பின் இடதுகையை வலது கையிலும் தங்களது முன்கையையின் மேல் பகுதியின் மீதும், தங்களது முகத்தின் மீதும் தடவிக்கொண்டனர் என்ற அம்மாரின் கூற்றை நீர் செவியுறவில்லையா? என அப்துல்லாவிடம் கூறினார். அதற்கு அப்துல்லாஹ்; “உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மார் ரளியல்லாஹு அன்ஹு கூற்றை போதுமாக்கிக் கொள்ளவில்லை என்பதை நீர் பார்க்கவில்லையா?” எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷகீக் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ – ஹதீஸ் எண் : 166)
குறிப்பு : ஜுனுபாளியின் தயம்மும் செல்லாது என அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் கருதிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அம்மாரின் கூற்றை மாத்திரம் ஆதாரமாக ஏற்க உமர் ரளியல்லாஹு அன்ஹு தயாராக இல்லாதிருந்தார்கள். அதன் பிறகு மற்ற ஏனைய ஸஹாபாக்களும் அவர்களை பின்பற்றியவர்களுக்கும் மத்தியில் பல ஹதீஸ்களின் தெளிவில் ஜுனுபாளியின் ‘தயம்மும்’ செல்லுபடியாகும் என்பது தெளிவானவுடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் ஜுனுபாளிக்கு ‘தயம்மும்’ ஆகும் என்ற கூற்றிற்கு திரும்பி அதை அங்கீகரித்துக் கொள்கின்றனர்.
ஸலாமிற்கு பதில் கூறுவதற்காக ‘தயம்மும்’ செய்து கொள்வது பற்றி…..
நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் (மூலம்) உரிமை எழுதப்பட்ட அப்துர்ரஹ்மான் பின் யாசரும் அபூஜஹ்ம்பின் அல்ஹாரிஸ் அவர்களை முன்னோக்கி வந்து முடிவாக அவரிடத்தில் நுழைந்தோம். அப்போது அபூஜஹ்ம் ரளியல்லாஹு அன்ஹு “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகக் கிணற்றுப்பகுதியிலிருந்து முன்னோக்கி வந்தார்கள் (அப்போது) ஒரு ஆடவர் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவற்றின் பால் வந்தடைந்து, தங்களது முகத்தையும். தங்களது இருகைகளையும், தடவிக்கொண்டு அதன் பிறகு (ஸலாம் கூறியவருக்கு) பதில் ஸலாம் கூறினார்கள் எனக் கூறினார். (அறிவிப்பவர்: உமைர் மௌலா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா புகாரீ – ஹதீஸ் எண்: 167)
விசுவாசி அசுத்தமாக மாட்டார் என்பது பற்றி….
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக – மதினாவின் தெருக்களில் ஒரு தெருவில் ஜுனுபாளியாக இருந்தநிலையில் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்துவிட்டு ஒளிந்து அங்கிருந்து சென்று குளித்துவிட்டனர். (இதற்கிடையில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரைத் தேடினார்கள். அவர் (திரும்ப) வந்த பொழுது “அபூஹுரைராவே எங்கிருந்தீர்?” எனக்கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் ஜுனுபாளியாக இருக்க என்னை நீங்கள் சந்தித்தீர்கள். ஆகவே நான் குளித்து முடிக்கும் வரை உங்களோடு உட்காருவதை வெறுத்தேன்” என்றார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். “ஸுப்ஹானல்லாஹ் நிச்சயமாக விசுவாசி1 அசுத்தமாக மாட்டான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ – ஹதீஸ் எண்: 168)
குறிப்பு : 1. ஜுனுபாளி, பிறரைத் தொடுவதும், பிறரோடு பேசுவதும் மார்க்கரீதியாக கூடும். அந்நிலையில் யாரோடும் கைகொடுக்கக்கூடாது, தீண்டக்கூடாது என்றோ, அல்லது பேசக்கூடாது என்றோ, அல்லது அந்நிலையுடையோர் அசுத்தப்பட்டவர் என்று கருதுவதோ இஸ்லாத்தில் இல்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முஃமீனானவர் உயிரோடிருக்கும் போதும், உயிர்பிரிந்த பின்பும், அசுத்தமாகி விடமாட்டார் என்ற ஹதீஸ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்க புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஸஹீஹில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்வை எல்லா நேரத்திலும் நினைவு கூறுவது பற்றி….
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை, அவர்களது எல்லா நேரங்களிலும் நினைவு கூறக்கூடியவர்களாக இருந்தனர்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். புகாரீ – ஹதீஸ் எண்: 169)
மலஜலம் கழித்தபின்பு ஒருவர் ஒளு செய்யாமல் (உணவு) உண்ணுவது பற்றி….
மலஜலம் கழித்துவிட்டு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. (அப்பொழுது) ஒளுவைப்பற்றி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அருகில் இருந்தவர்கள்) நினைவூட்டினார்கள். “நான் தொழுது கொள்ளவா விரும்புகிறேன்? ஒளுச் செய்து கொள்ள…” எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா, புகாரீ – ஹதீஸ் எண்: 170)
source: http://islam-bdmhaja.blogspot.in/2013/05/blog-post_16.html