Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

Posted on May 31, 2013 by admin

Image result for children and cyber crime

உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு.

இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.
 
இந்தியா இரண்டாவது இடம்
 
உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.

பாதிப்பிற்கு காரணம்
 
இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
 
குழந்தைகளுடன் விவாதியுங்கள்
 
தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.
 
கண்காணிப்பு அவசியம்
 
சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை.
 
கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.
 
பெண் குழந்தையா கூடுதல் கவனம்
 
பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.
 
தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய “குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:
 
இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.
 
உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 24 = 33

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb