Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவாக்குகள் (3:110, 9:71, 103:1-3) கூறும் பிரசாரப் பணி!

Posted on May 30, 2013 by admin

இறைவாக்குகள் (3:110, 9:71, 103:1-3) கூறும் பிரசாரப் பணி!

  பஷீர், புதுக்கோட்டை  

[ தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களின் பல சகோதரர்களை அடிக்கடி சந்தித்து பேசும் போது பலரும் பின்வருமாறு கூறுவதை அவதானிக்க முடிந்தது. அதாவது நான் JAQH பார்த்து விட்டேன். தமுமுகவையும் பழகிவிட்டேன்; TNTJ, INTJ எல்லாம் பார்த்துவிட்டேன். தப்லீக்காரர்கள் ஒரு ரூட்டில் போகிறார்கள். ஆக எல்லா அமைப்புகளும் தத்தமது அமைப்பைக் கட்டிக் காப்பதில் கவனமாக உள்ளார்கள். ஆகையால் இப்பவெல்லாம் நான் பாட்டுக்கு விளங்கியதை பின்பற்றி வாழ்ந்து வருகிறேன் என்று மனதளவில் வேதனைப்பட்டுப் புலம்புகிறார்கள்.

ஈமான், இஸ்லாம், இஹ்சானைப் பின்பற்றி வாழ முயலுங்கள். பிறருக்கும் இதனை எடுத்து வையுங்கள். பெரும் பாவங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இதனை உங்கள் குடும்பத்தில் செய்யுங்கள். பிறகு உங்கள் தெரு, ஊர் என்றளவில் சிறிய அளவிலாவது தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் ஊரில் உள்ள பழைய சகோதரர்களையும், பல்வேறு அமைப்புகளுக்குப் போய், மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சோர்ந்து மனம் வெறுத்து ஒதுங்கியுள்ளவர்களையும் சந்தித்து மாதம் ஒரு முறையாவது, சிறு அளவிலாவது கலந்துரையாடல்களை செய்யுங்கள். அதுதான் கற்போம் கற்பிப்போம் எனும் வழியில் ஒரு துவக்கமாக அமையலாம். இன்ஷா அல்லாஹ் மாற்று கருத்துக்களை மனம் விட்டுப் பேசுங்கள்.]

  இறைவாக்குகள் (3:110, 9:71, 103:1-3) கூறும் பிரசாரப் பணி!   

”மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத் தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் தடுக்கிறீர்கள். இன்னும், அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடை யோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண் டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 3:110)

”நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நன்மையை ஏவுகின்றனர். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்….” (அல்குர்ஆன் 9:71)

”காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசம் செய்து, மேலும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டத்தி லில்லை)” (அல்குர்ஆன் 103 : 1,2,3)

இஸ்லாமிய தாவா அல்லது பிரச்சாரம் என்பது இன்று பெரும்பாலும் பயான்கள் மூலம் நடத்தப்படுகிறது. உரைகள் நிகழ்த்தத் தனிப்பட்ட மேடைகள் உதவுகின்றன. பேசிய உரைகள், அந்தக் காலத்தில் ஆடியோ கேசட்டுகளிலும், பின்னர் படிப்படியாக, வீடியோ,

CD, இன்டர்நெட், தம் டிரைவ் என பல பரிமாணங்களில் கேட்க, பார்க்க முடிகிறது.இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, குரு-மாணவர் சிஸ்டம் கிடையாது மட்டுமல்ல; பிழையானதும் கூட. கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம்தான் சஹாபாக்கள் காலத்தில் இருந்தது. அதாவது ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயிற்றுவித்த சமூகம் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. கற்றுக் கொடுப்பவன் மட்டுமே, அதாவது நான் பயான் செய்வேன்… அதற்கான தகுதி எனக்கே உள்ளது. நான் நிறையப் படித்து உபதேசம் செய்யும் உயரிய அந்தஸ்தில் அல்லாஹ் என்னை வைத்துள்ளான்… மக்களாகிய நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும் என்று யார் சொன்னாலும் அது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயிற்றுவித்த முறை கிடையாது.

தமிழகத்தில் ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. அதாவது “”கேட்டுக் கேட்டு இஸ்லாம்” என்பார்கள். இதனை எல்லாம் ஆலிம் உலமாக்களும் பயானிலும் சொல்வார்கள். பேசும்போது தம்மைத் தாழ்த்திப் பணிவாகப் பேசுவார்கள். ஆனால் எந்த பள்ளியிலாவது சாதாரண ஆட்களை கொஞ்சம் பயிற்சி கொடுத்தாவது ஜுமுஆ பயான் செய்ய அனுமதிப்பார்களா?

ஆக ஒருவர் பேசி எப்பொழுதும் பேசி பேசி ஒரு சமூகம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருந்தால் அதற்குப் பெயர் மதம்; இஸ்லாம் அல்ல. இஸ்லாத்தை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதமாக ஆக்கவே இல்லை. ஆகவே குரு-மாணவர் சிஸ்டத்தை நீக்கி, கற்போம், கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் உருவாக வேண்டும். அப்படி உருவாக நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்த உலகிற்கே ரஹ்மத்துல் ஆலமீனாக வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் உபதேசத்தை ஒரு சமயத்தில் எவ்வளவு நேரம் நீட்டினார்கள்? சத்திய சஹாபாக்கள் பலரும் எப்படி பயான் செய்தார்கள்? பேச்சாளர்களைத் தயார் செய்தார்களா? பின்பற்றுபவர்களைத் தயார் செய்தார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும்போது “”கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும். இஸ்லாமியக் கல்வி வேண்டும் என எல்லா தரப்பு முஸ்லிம்களும் சொல்கிறார்கள். ஆனால் மறைமுகமாக “”குரு-மாணவர்” அதாவது “”உஸ்தாத் -பின்பற்றுபவர்” என்ற நிலைப்பாடுகள் தொடர எல்லாம் செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சில பல ஆண்டுகள் படித்துப் பட்டம் வாங்கிய பின்தான் இமாமாகப் பணி புரிய வேண்டும் என்ற விதி யாரால் எப்பொழுது உருவாக்கப் பட்டது?

சுபுஹையும், லுஹரையும் தொழ வைக்கும் ஒருவர் பிந்தைய நேரத்தில் முழுமையாக வியாபாரம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது? அதே போல அஸர், மஃரிப், இஷா தொழ வைப்பவர் ஏன் பகலில் வேறு வேலைக்குச் செல்ல ஏற்பாடு செய்யக் கூடாது? ஒவ்வொரு மஹல்லாவிலும், அந்தப் பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் பத்துப் பேருக்குத் தொழுகை நடத்தும் பயிற்சியினை சொல்லிக் கொடுக்கக் கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும் போது கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களின் பல சகோதரர்களை அடிக்கடி சந்தித்து பேசும் போது பலரும் பின்வருமாறு கூறுவதை அவதானிக்க முடிந்தது. அதாவது நான் JAQH பார்த்து விட்டேன். தமுமுகவையும் பழகிவிட்டேன்; TNTJ, INTJ எல்லாம் பார்த்துவிட்டேன். தப்லீக்காரர்கள் ஒரு ரூட்டில் போகிறார்கள். ஆக எல்லா அமைப்புகளும் தத்தமது அமைப்பைக் கட்டிக் காப்பதில் கவனமாக உள்ளார்கள். ஆகையால் இப்பவெல்லாம் நான் பாட்டுக்கு விளங்கியதை பின்பற்றி வாழ்ந்து வருகிறேன் என்று மனதளவில் வேதனைப்பட்டுப் புலம்புகிறார்கள்.அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் உங்களை எந்த சங்கமும் வைக்கச் சொல்லவில்லை. எந்த புது ஜமாஅத்திலும் சேரச் சொல்லவும் இல்லை. அதே சமயம் குர்ஆனையும், சுன்னாவையும் விளங்கிய பல்லாயிரம் பேர் இன்று சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டித் தம்மைத் தாமே தொலைத்து வாழ்கிறார்கள். இது பெரும் தவறு.

ஈமான், இஸ்லாம், இஹ்சானைப் பின்பற்றி வாழ முயலுங்கள். பிறருக்கும் இதனை எடுத்து வையுங்கள். பெரும் பாவங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இதனை உங்கள் குடும்பத்தில் செய்யுங்கள். பிறகு உங்கள் தெரு, ஊர் என்றளவில் சிறிய அளவிலாவது தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் ஊரில் உள்ள பழைய சகோதரர்களையும், பல்வேறு அமைப்புகளுக்குப் போய், மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சோர்ந்து மனம் வெறுத்து ஒதுங்கியுள்ளவர்களையும் சந்தித்து மாதம் ஒரு முறையாவது, சிறு அளவிலாவது கலந்துரையாடல்களை செய்யுங்கள். அதுதான் கற்போம் கற்பிப்போம் எனும் வழியில் ஒரு துவக்கமாக அமையலாம். இன்ஷா அல்லாஹ் மாற்று கருத்துக்களை மனம் விட்டுப் பேசுங்கள். நாம் எல்லோரும் கலிமா சொல்லியுள்ளோம். நாம் எல்லோரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நிரபராதிகளாய் நின்று வெற்றி பெற ஆசைப்படுவோமாக; ஆமீன்.

யாரையும் நான் வேறு நீ வேறு என்று கருதாமல், பரந்த எண்ணத்தை வல்ல நாயன் நம் அனைவருக்கும் நிரப்பமாய் தந்தருள்வானாக ஆமீன் எனும் வழியாகும். இனி வரும் இதழ்களில் இஸ்லாமிய கல்வியை எப்படிக் கற்க வேண்டும்? எப்படிக் கற்க கூடாது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை எப்படியெல்லாம் பயிற்றுவித்தார்கள்? இமாம்கள் எப்படி எல்லாம் சொல்லித் தந்தார்கள் என்று தொடர்ந்து நீங்கள் அந்நஜாத் பத்திரிகை மூலம் அறியலாம்.

source : http://annajaath.com/?p=6412#more-6412

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb