ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் (2)
41. வாழ்வுப் புத்தகத்தின் அழகிய பலவண்ண முகப்பு அட்டை மனைவி, தொகுப்பாசிரியரான கணவனே அந்த அட்டையை ஆத்திரத்தில் கிழிந்து எறிந்திடக் கூடாது.
42. கல்வித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களும் கலவித் தேர்வில் சிறந்த மதிப்பெண்ணும் பெறுகின்றவன் வாழ்வுத் தேர்வில் முதல் வகுப்பில் வென்றவனாவான்.
43. கணவன் கட்டுக்கு அடங்காத பிடாரியும், மனைவியை கொடுமை செய்யும் அடங்காப் பிடாரனும் இல்லத்தை அறுக்கும் கோடாரிக் கம்புகளாகும்; வம்புகளாகும்; அம்புகளாகும்.
44. உண்மையான கணவன் – மனைவியர் இடையேயான அன்பு, உடல் கூனிக் குறுகினாலும் கூனிப்போகாது; குறுகிப்போகாது. வயது ஆக ஆக ஆவர்த்தனமாகி அதிகரிக்கும்.
45. கத்தியும், குத்தியும் பேசுகிற கணவன் வாழ்வைக் கத்தரிப்பவனாவான். வெட்டியும் தட்டியும் பேசுகின்ற மனைவி வாழா வெட்டியாக வாழ நேரிடும்.
46. குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் கீர்த்திமிகு பாவைகளை பொம்மைகளாகக் கருதி ஆட்டிப் படைத்தல் ஆடவர்களுக்கு அவமானகரமாகும்.
47. அடிக்கிற கைதான் அணைக்கும்; அடியேய் என விளிக்கிற வாய் தான் அன்பே எனக் கூறிக் களிக்கும்.
48. கணவனோ, மனைவியோ அன்புக் கணைகளுக்கும் பதிலாக வம்புக்கணைகளை ஏவிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்வே துன்பக்களமாகி விடும்.
49. உள்ளதைக் கொண்டு உள்ளத்தால் திருப்தியுற்று வாழ்பவர்கள் உலகத்தார் உள்ளத்திலும் இடம் பிடிப்பார்கள்.
50. தகுதிக்கு மீறி குதிகுதி என குதிக்கிற ஆண் பெண்கள் தடம்மாறி குதிக்காமலே தானே படுகுழியில் வீழநேரிடும்.
51. இல்லறக்கடலில் நேர்மையுடன் முயற்சியுடன் மூழ்கினால் புகழ், பெருமை எனும் முத்துக்களை அள்ளி வரலாம்.
52. பண்பாடும் அறிவும் உடைய ஆண் – பெண்களே சமூகத்தில் உண்மையான மதிப்பும் மரியாதையும் பெற்றுத்திகழ்பவராவர்.
53. பூவைகள் பூ போன்றவர்கள் பூ ! இவ்வளவு தானா என்று உதாசீனத்துடன் அவர்களைக் கையாண்டுவிடக்கூடாது.
54. கல்வியில்லாத ஆண்-பெண்கள் கட்டாந்தரை, துணை நினைத்தால் களர் நிலத்தையும் பண் படுத்தி எடுக்கலாம்.
55. வாயாடிப் பெண் பேயாடிப் போவாள். வாயாடி ஆண் நாயாடிப் போவான்.
56. தேன் குடத்தில் வீழும் வண்டிற்கு அக்குடமே சமாதி. காமத்தீயில் வீழ்பவர்களை தீய அத்தீயே சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி சமாதி கட்டி விடும்.
57. துணியை துணிவுடன் களைவதும் கலைப்பதும் கலையல்ல; களங்கமான களை.
58. குதிகால் செருப்பணிந்து அரை குறை ஆடையுடன் தளுக்கி குலுக்கி குதித்து செயற்கையாக ஆடி நடப்பவர்களால் பண்பாடே பெரும் பாடுபடுகிறது; ஆட்டம் கண்டு விடுகிறது.
59. காசுக்காக மனைவியைக் கைவிடுகின்ற கணவனும், கணவனைக் கைவிடுகின்ற மனைவியும் மகாபாவ மனோபாவமுடையவராவர்.
60. தம் மனைவி – மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றவனே சிறந்த கணவனாக சிறந்த தந்தையாக மட்டுமின்றி சிறந்த மனிதனாகவும் கருதப்படுவான்.
61. அளவோடும் நிதானத்தோடும் வாழ்கின்ற குடும்பப்பாங்கான பங்கமில்லாத் தங்கக் குணவதிகளே உயர்குலத் தகுதியும் பெருமையும் உடையவர்களாவர்.
62. கற்பைப் பேணுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படைக் கடமையும் இலக்கணமும் மட்டுமின்றி பொற்பைத் தருவதும் ஆகும்.
63. அழகு, அறிவு, ஒழுக்கம், மதப்பற்று ஆகியவைகளே ஆண் பெண்களுக்கு சீரிய சொத்து; ஏனையவைகள் எவையும் சொத்தைகளே.
64. பெண்களின் அழகு வீட்டுக்குரியது; அலங்காரம் வீட்டுக்காரனுக்குரியது. அறிவு நாட்டுக்குரியது. ஒழுக்கம் எல்லோருக்கும் உரியது.
65. மூக்கணாங்கயிறில்லாத மாடும் கட்டுப்பாடில்லாத ஆண் – பெண்ணும் சந்திக்கு வரவேண்டி வரும்.
66. வருவாய்க்கு ஏற்ற வரம்பு வாழ்க்கையை மேற்கொள்கின்றவர்கள் ஒரு போதும் தோல்வியைத் தழுவுவதில்லை.
67. காசுக்கு கற்பை விற்பவள் விலைமகள். அதனை வாங்குபவன் விலைமகன்.
68. ஆண் – பெண்களுக்கு ஏகபத்தினி விரதமும் ஏகபர்த்தா விரதமுமே போக வாழ்வில் உடல், உணர்வு, உறவுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும்.
69. அளவற்ற அலங்காரமும் ஆடம்பரமும் உடைய அகங்காரமானவள் இருமுனைக் கத்திக்கு ஒப்பாவாள். எந்நேரமும் அவளால் அவளுக்கும் பிறருக்கும் ஆபத்து நேரிடலாம்.
70. கபடதாரிகளான ஆண் – பெண்களின் வேடம் காலதாமதமின்றி கால மழையில் கலைக்கப்பட்டு காலாவதியாகி விடும். பொய்ச்சாயம் மெய் மழையில் வெளுத்துப் போய் விடும்.
71. ஒழுக்கமில்லாத ஆண்-பெண்கள் வாழ்வு வேலியில்லாத பயிரைப் போல் சீரழியும்.
72. சாதாரண கரி உறுதியுடன் மண்ணுக்குள் வைராக்கியம் கொண்டதால் வைரம் ஆனது. உதாரணமாக கணவன் – மனைவியர் வாழ்வில் மனவுறுதியுடன் நல்ல வைரக்யம் கொண்டு வாழ்ந்தால் வைரமாய் ஒளிவிடலாம்.
73. தம் மக்களுக்கு தகுந்த கல்வியளித்து தகுதியுள்ள பணியைப் பெறச்செய்து கண்காண உள்ளம் விழைய சிறந்தோர். இடத்தில் திருமணம் செய்து வைப்பவரே எல்லா வகையிலும் நிறைவு பெற்ற பெற்றோராவர்.
74. புதுச் செருப்பு காலைக் கடித்தாலும் நாள் போகப் போகச் சரியாகி விடும். புகுந்த வீட்டில் புதுமனைவியும் சரியாமல் நாளடைவில் சரியாகி விடுவாள்.
75. திருமணம் என்பது ஓர் நீண்ட கால வாழ்வு ஒப்பந்தம். கணவன் – மனைவியர் இடையே சுரக்கும் அன்பும் ஆதரவும் அதைப் படிப்படியாக இறுகச் செய்து உறுதிப்படுத்தும்.
76. ஒத்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் பந்தப் பாசம் பிணைப்பு தொடர்பான உடன்படிக்கையே திருமணம். இதில் இருமனமும் ஒருமனதாக உறுதிமொழியை இறுதி வரை நிறைவேற்றக் கடமைப் பட்டவராவர்.
77. பெண் படிப்பறிவு இல்லாதவளாயினும் பகுத்தறிவு உள்ளவளாக இருத்தல் வேண்டும். வேகம் இல்லாதவளாயினும் விவேகம் உடையவளாக அமைதல் வேண்டும்.
78. உடல், பொருள், உணர்வு, செயல் இவற்றை காப்பதே கற்பு. இது ஆண்- பெண் இருவர்க்கும் பொது.
79. சுய புத்தியில்லாத ஆண் – பெண்கள் பிறர் சொல் புத்தியையாவது தயங்காது ஏற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
80. மனைவியின் ஆடம்பர வாழ்வுக்கு சுற்றி சுற்றி வந்து பம்பரமாக உதவுபவனின் ஆட்டம் திடீரென்று நின்று போகலாம்.
தொகுப்பாசிரியர்:
பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை
இன்ஷா அல்லாஹ் அணிமொழிகள் தொடரும்
============================================