Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தைகளும் ஆடையும்

Posted on May 23, 2013 by admin

குழந்தைகளும் ஆடையும்

குழந்தைகளுக்கு தமது ஆடைகள் குறித்து அக்கறை கிடையாது.

மற்றவர்களுக்கு முன்னால் உங்களைப் பற்றிய மதிப்பீடு உயர வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான ஆடைகளை தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு எது சௌகரியமாக இருக்குமோ அதையே தெரிவு செய்யுங்கள்.

வழிபாட்டுகளுக்கோ, விழாக்களுக்கோ குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது அணிந்திருக்கும் ஆடை நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக இருக்குமா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

போகிற இடத்தில் சினிங்கி எறிச்சல் பட்டு குழந்தைகள் அழுவதற்கு பிரதான காரணம் அவர்களைச் சிரமப்படுத்தும் ஆடைகளும் அணிகலன்களும் தான். இறுக்கமான சப்பாத்து. கழுத்தை உறுத்தும் சங்கிலிகள், மாலைகள், உதட்டுச் சாயம் என்று குழந்தைகளை இம்சைப்படுத்தாதீர்கள்.

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக கூட்டிச் செல்லும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளாத இத்தகைய ஆடம்பரங்களைத் தவிர்த்துக் கொண்டால் குழந்தைகளும் நீங்களும் வெளியில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு வீடுவந்து சேரலாம்.

டொக்டர் ஹெய்ம் ஜீ இனோட் குழந்தைகளின் உடைகள் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறார். “குழந்தைகளுக்கு உடைகளைவாங்கும் போது அவர்களுக்கு தேவையானது என்ன? எமது பொருளாதார வசதிக்கு ஏற்றது என்ன என்பதை முடிவு செய்வது பெற்றோராகிய எமது பொறுப்பாகும். ஒரு புடைவைக் கடையில் எமது பொருளாதார நிலைக்கும் குழந்தையின் தேவைக்குமேற்ப சில மாதிரிகளை தெரிவு செய்து அவற்றில் தான் விரும்பும் ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமையை குழந்தைக்கு வழங்க வேண்டும்.

ஆறு வயதுக் குழந்தையாக இருந்தால் கூட எம்மால் தெரிவு செய்யப்பட்டவற்றில் தனக்கு விருப்பமான ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனக்கு பிடித்த சட்டை, களிசன் (காட்சட்டை), கால்மேஸ் என எதுவாக இருந்தாலும் சரிதான். பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் இவ்வாறான விடயங்களில் எந்த அனுபவத்தையும் பெறுவதில்லை” என்று கூறுகிறார்.

ஏன் சில பெரியவர்கள் கூட தமக்குரிய தெரிவை தந்தையோ தாயோ அல்லது மனைவியோ கணவனோ மூலமாக அன்றி சுயமாக தெரிவு செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஆடையை விடுங்கள். திருமனத்தின் போது சில ஆண்களுக்கு பெண் பார்ப்பது கூட சாச்சியோ மாமியோ போய்த்தான் பார்க்கவேண்டி இருக்கின்றது. இதனால் தனக்கேற்ற வாழ்க்கைத்துனையை தெரிவு செய்யத் தெரியாமல் தின்டாடுகின்றனர். இது வளர்ந்து நாட்டுக்கு பொருத்தமான அரசியல்வாதியை தெரிவு செய்ய கஸ்டப்படுவதும் இதனால்தான்.

நம்மிடம் இருநூறு ரூபாய் பணம் தான் இருக்கிறது என்றால் அதற்கேற்ற உடையை நான்கு நிறங்களில் தெரிவு செய்து அவற்றில் பிடித்த ஒன்றை எடுக்குமாறு குழந்தைக்கு கூறலாம். குழந்தை அவற்றில் கறுப்பை தெரிவு செய்யும் போது அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இது வெப்பத்தை உறிஞ்சக் கூடியது, உங்களுக்கு வியர்க்கும் என்று குழந்தையிடம் கூறலாம். குழந்தை அக்கருத்தை ஏற்று பொருத்தமானதை தெரிவு செய்ய முற்படும்.

ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு தமது நன்பர்களின் உடைகளை விட அதிகளவில் தரத்தில் வேறுபடாத உடைகளை அணிய அனுமதி வழங்க வேண்டும். வகுப்பிலுள்ள குழந்தைகள் எல்லோரும் நீல நிற சப்பாத்து அணிந்திருக்கும் போது ஒரு குழந்தை மட்டும் சிவப்பு சப்பாத்து அணிந்து வந்தால் அவன் மற்ற குழந்தைகளால் கேலி செய்யப்படுவான் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகள் மத்தியிலுள்ள அபிப்பிராயங்களில் அவர்கள் எதை சரியானது என்று கருதுகிறார்கள், எதை கூடாது என்று, எது அசிங்கம் என்று கருதுகிறார்கள் என்பதையெல்லாம் நாம் தெரிந்திருக்க வேண்டும். உடைகள் தொடர்பான எமது பொறுப்பெல்லாம் இதுதான். நாம் நமது வசதிக்கேற்ப தெரிவு செய்பவற்றுள் அவர்கள் தமக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வளவுதான்.

சில பெற்றோர் ஆயிரம் இரண்டாயிரம் பெறுமதியான ஆடைகளை தெரிவு செய்து தமது பிள்ளைகளுக்கு அணிவிக்கின்றனர். அக்குழந்தை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் பொது அதை ஊத்தையாக்கிக்கொண்டு அல்லது கிழித்துக்கொண்டு வந்தால் கடுமையாக திட்டுகிறார்கள் அல்லது அடிக்கவும் செய்கிறார்கள்.

குழந்தைப் பருவம் என்பது குதூகலமாக ஓடுதல், பாய்தல், ஏறுதல் என பல அசைவுகள் கொண்ட பருவமாகும்.

நாய்க்கு பட்டி கட்டுவது போன்று கழுத்து பட்டியையும் இறுக்கி கட்டி கிலோ கணக்கு எடையுள்ள புத்தகப் பையையும் தோளில் தொங்கப்போட்டு அனுப்பினால் குழந்தை எப்படி சந்தோசமாக ஒடி விளையாட முடியும்?!

எனவே இரண்டாயிரம் ரூபாவிற்குள் குறைந்த விலையுள்ள ஐந்து ஆடைகளை வாங்குங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடையை அணிவியுங்கள்.

கிழிந்து போனாலும் அழுக்கானாலும் பெரிய நஷ்டம் வரப்போவதில்லை. கவலையும் வராது. குழந்தையுடன் சண்டையும் வராது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.

source: http://idrees.lk/?p=215

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = 36

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb