Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் அதிகமாமே…!

Posted on May 21, 2013 by admin

ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் அதிகமாமே…!

ஆற்றல் யாருக்கு அதிகம் ஆணுக்கா? பெண்ணுக்கா? பலத்த யோசனைக்குப்பிறகு “வேறு என்னத்தை சொல்ல? பெண்களுக்குத்தான்!” 2013 இன் மகா சரண்டர்.

சரி இது எவ்வளவுதூரம் உண்மை என்று விஞ்ஞானப் பூர்வமாகவும், அனுபவப்பூரவமாகவும் அறிந்ததை அலசுவோமா?
அதுக்கு முன்னாடி இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!

1. உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. இது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது தங்கமணிகள்தான்.

2. அறிவை வளர்க்கும் புனித இடமான கல்வி ஸ்தலங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.

3. ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் எல்லாவற்றிலும் அதாவது குப்புறப்படுப்பது, சிரிப்பது, தவள்வது, நடப்பது, பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை. (எத்தனையோ வீடுகளில் “என் பிள்ளை பேசவே மாட்டேன்கிறான்” என்று ஒரு தாய் விசனப்படும் பொழுது “ஆண் பிள்ளை லேட்டாகத்தான் பேசும்” என்று சொல்லுவது வாடிக்கை.

4. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.

5. மற்றவர்கள் அறியக்கூடாது என்று குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்று உச்சஸ்தாயியில் பேசுவதில் இவர்களுக்கு நிகரில்லை.

6. மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை. ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை, கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

7. செவிப்புலனிலும் செம்மையானவர்கள். என்னதான் ரங்ஸ் எரிச்சல் தாங்காமல் லோ பிட்ச்சில் முணுமுணுத்தாலும் கரெக்டாக பாயிண்ட் அறிந்து பிலு பிலு வென்று பிடித்துக்கொள்வதில் கில்லாடிகள்.

8. பார்வைத்திறனைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும். கூடவே வரும் துணைவரிடம் சொன்னால் கூட “எங்கே..எங்கே..” என்று கண்களாலே தேடுவாரே ஒழிய துணைவரால் அந்த தெரிந்த தலையை கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாது.

9. செவிலியர்கள், மருத்துவர்கள், விமானப்பணிப்பெண்கள்… இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்

10. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவர்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை. போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

11. வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை இவர்களைத்தவிர வேறு யாருக்குண்டு?

12. எதைச் சொன்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக்கற கற்பூரப்புத்தி இவர்களுக்கே உண்டு என்பது கண்கூடான உண்மை.

13. அதிக தோழமை உணர்வு இவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சட்டென பழகி விடுதல் கைவந்த கலை. கணவரின் தோழர்களின் மனைவிகளை ஸ்நேகிதமாக்கிக்கொண்டு இருக்கும் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றும், மனைவிகளின் தோழிமார்களின் கணவர்களை ஸ்நேகிதமாக்கிக் கொண்டிருக்கும் ஆண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப்போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

14. பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

15. பிறந்தகத்து உறவினர்களையும், புக்ககத்து உறவினர்களையும் பேலன்ஸ் செய்து, சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.

16. கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப் பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது, மனசில் அது பற்றி படிக்கறது, பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி, எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள் என்பதும் உண்மை.

17. ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல், புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

18.. பதின்ம வயதில் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும், அதனை செயல் முறைப்படுத்துவதிலும் பிரயத்தனப்படுவதில் இவர்கள் தான் முன்னனியில் நிற்கின்றனர். பெண்கள், ஆண்களுக்கான ஜிம்களும் பியூட்டிபார்களிலும் சர்வே எடுத்தால் நிச்சயம் உண்மை புரியும். அவ்வளவு ஏன்? எத்தனை வீடுகளில் காய்வகையாறாக்களை கட் செய்து முகம் முழுக்க அப்பிகொண்டும், மூல்தானிமட்டியை பூசிக்கொண்டு முகத்தை காயவைத்துக்கொண்டும் பெண்கள் வலம் வருவதைப்பார்த்தாலே புரியும்.

இப்படியாக இயற்கையும் விஞ்ஞானமும், சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளுவார்கள்தானே?
.
source: http://shadiqah.blogspot.in/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

71 − = 65

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb