தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!
ஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான்.
இடுப்புக்கு மேல் ஆண் தன்னை மறைக்க அக்கறை காட்டாத போது கூட, இடைக்கு மேலும் தன்னை மறைக்கப் பெண் அக்கறை காட்டினாள். இவை இயல்பாக நிகழ்ந்தவை.
பெண்ணுக்கே உரிய நாணம் அவளை அவ்வாறு மறைக்க வைத்தது. இன்னும் நாணம் கூடிய பெண் தன்னை மேலும் மறைத்தாள். இன்று கூட உத்தம பெண்கள் தங்களை ஆண்களின் விஷ விழிகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்கவே செய்கிறார்கள்.
என்னதான் தனி நபர் சுதந்திரம், மனித உரிமை என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆண் நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வீதியில் போவதையோ, வேலைக்குப் போவதையோ காண முடிவதில்லை. காரணம் வெட்க உணர்வு. இதே நிலைமைதான் பெண்களுக்கும்.
முகம் திறந்து- அங்கங்களின் பரிமாணங்களைக் காண்பிக்கும் எல்லாப் பெண்களும் ஆண்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதில்லை. ஆனால் அப் பெண்கள் ஆண்களினால் மனதளவில் சுய இன்பம் மற்றும் கரமைதுனம் போன்ற செயற்பாடுகளினால் புணரப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
இவ்வாறு, தனக்குத் தெரியாமலேயே தான் கற்பழிக்கப் படுவதை எந்த நல்ல குணம் கொண்ட பெண்தான் விரும்புவாள்?!
ஆக- முகம் தொடக்கம் தன் அங்கங்களின் பரிணாமம் தெரியாதவாறு ஆடை அணிவதிலிருந்தும் ஒரு பெண் தவிர்ந்து கொள்வாளாயின், அவள் தன்னை மனதளவில் கூட உறவு கொள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதவள் ஆகி விடுகிறாள்.
தனது மனைவி-தாய்-அக்கா, தங்கைகள், தனது பெண் பிள்ளைகள் – யாரோ பல ஆண்களினால் மனதளவில் புணரப்படுவதை எந்த ஆண்தான் விரும்பப் போகிறான்..?
இத்தகைய இழி நிலைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கவும்தான் இஸ்லாம்பெண்களுக்கு ஆடை விஷயத்தில் வரையறைகளை வகுத்திருக்கிறது என்பது எண்ணம்.
ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும் என்பது எனது நம்பிக்கை.
கட்டுரை -எஸ்.ஹமீத்