தியாகம் புரியாமல் உயர்பதவி கிடைக்காது
டாக்டர் மௌலானா முஹம்மது முஸ்தஃபா ஷரீப் நக்ஷபந்தி
ராணி ஜுலைகா, அடிமை யூசுஃப் நபி மீது வயப்பட்டது. மிஸ்ர் எகிப்து நகரம் முழுவதும் செய்தி பரவியது. கடுமையான ஆட்சேபம், விமர்சனம் எழுந்தது.
சூரா யூசுஃப் அத்தியாயம் 12, வசனம் 31 ”ஃபலம்மா சமிய்அத் பி மக்ரிஹின்ன.” ஜுலைகா அப்பெண்களின் பேச்சுக்களை கேட்டார்.
”அர்சலத் இலய்ஹின்ன” இழைப்பு இன்விடேசன் அனுப்பப்பட்டது. உயர்தர இருக்கை, தரமான விருந்தோம்பல் ஏற்பாடாகிறது.
”வ அஃததத் லஹ§ன்ன முத்தக அன்” ஐந்து நட்சத்திர விருந்து. கலந்து கொண்டோர் மேல் தட்டு, உயர்வர்க்க மங்கையர், பெரிய வீட்டு பெண்கள்.
வஆதத் குல்ல வாஹிதத்தின் மின்ஹ§ன்ன சிக்கீனன் ஒவ்வொருவருக்கும் கத்தி வழங்கப்பட்டது. துவக்க நிலையில், விருந்தின் ஆரம்பகட்டமாக பழம் கொடுக்கப்பட்டது. யூசுப் நபி அப்பெண்களை கடந்து செல்லுமாறு ஏவப்பட்டது.
”வ காலதிக்ருஜ் அலைஹின்ன ஃபலம்மா ரஅய்னஹு அக்பர்னஹு வகத்தஃன அய்திய ஹுன்ன” மெய்மறந்து தரிசித்தனர். கைகளை வெட்டிக் கொண்டனர். பழம் நழுவியதும் தெரியவில்லை. கை ஆழமாக வெட்டுண்டதும் தெரியவில்லை. …… அதிகபட்ச வெட்டு. சிறிய காயமல்ல. கடுமையான காயம்.
மனிதன் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும்போது அல்லாஹ் திரையின்றி நேரில் காட்சி தருவான். மரணத்தின் வலி வேதனையிராது. மகிழ்ச்சி ஆனந்தம் மிகைக்கும்.
ஷஹீத் தியாகி சுவனத்தை யடையும்போது மீண்டும் உலகில் பிறந்து ஷஹீதாகவே விரும்புவர். அல்லாஹ்வின் பாதையில் மீண்டும் மீண்டும் வெட்டுப்பட ஆசைப்படுவர். அதற்கு இணையான இன்பம் வேறு எதுவுமில்லை. துனியா விரும்பி, சுவனவாதி இருவரையும் விட அல்லாஹ்வை விரும்புவோர் மேன்மக்கள்.
சுவனத்தில் வெள்ளிக்கிழமை முக்கியதினம். சிலருக்கு வாரத்தில் ஒரு நாள். சிலருக்கு மாதத்தில் ஒரு நாள், வருடத்துக்கு ஒரு நாள், தீதார் கிடைக்கும். இன்னும் சிலருக்கு தினமும் கிடைக்கும் சில சுவனவாதிகளுக்கு எப்போதும் இறை காட்சி கிடைத்துக் கொண்டேயிருக்கும். முகம், பொலிவு, ஆழகு கூடும்.
மூசா நபிக்கு இறை காட்சி கிடைத்தது. கண்ணை, பார்வையை தாழ்த்தியே வைத்திருப்பார். கண்ணை நேரில் பார்த்தால் மரணம் நிகழ்ந்து விடும். பார்வையின் சக்தி அபாரம். இது மூசா நபியின் உயர்நிலை.
நபிகளார் நிலை கூடுதலான உயர்நிலை. சூரா நஜ்ம் அத்தியாயம் 53, வசனம் 9 ஃபகான காப கவ்சய்னி அவ்அத்னா வில்லின் இரு முனை போல. நெருக்கமானார். ”ஃப அவ்ஹா இலா அப்திஹி மா அவ்ஹா”
அனைத்தும் அடியாருக்கு தெரிவித்தான். பூரண தகவல் பரிமாற்றம்.
மூன்று வெகுமதிகள் வழங்கப்பட்டன. தொழுகை ஆமதியே ரசூல் வசனம், தவ்ஹீதுக்கு சுவனம்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அம்மையார் கூறுகிறார். யூசுப் நபியை பார்த்தவர்கள் கையை அறுத்துக் கொண்டனர். நபிகளாரை பாத்திருந்தால் தலையை வெட்டியெறிந்திருப்பர்.
ஷஹாதத் எளிய முறையில் கிடைத்துவிடாது. துஆ கேட்க வேண்டும்.
சிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் சூரா பாத்திஹா கூறுகிறது.
அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. சூரா நிசா அத்தியாயம் 4 வசனம் 69 விரிவு தருகிறது. நான்கு பேருக்கு, பிரிவினருக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்.
1. நபி 2. சித்தீக் 3. ஷுஹதா 4. சாலிஹீன்
அல்லதீன அன் அமல்லாஹு அலய்ஹிம் மினன் நபிய்யீன, வசித்திக்கீன வஷ§ஹதாயி வஸ்ஸாலிஹீன் பெரியவர்களுக்கு, வளர்ந்தவர்களுக்கு சாக்லெட் திண்பதில் ஆர்வமிருக்காது. ஷஹீதுகளுக்கு அல்லாஹ்வின் தீதார் பேரெழில் தரிசனத்தில் மட்டுமே இன்பம் உண்டு. மறுமையில் ஒரு கூட்டம் நரகம் செல்லும். இன்னொரு பிரிவு சுவனம் புகுவர். மூன்றாவது பிரிவினர் இறைகாட்சி வேண்டி வற்புறுத்துவர். அவர்களிடம் கூறப்படும் சுவனம் செல்வீர். அங்கு இறைதரிசனம் அருளப்படும்.
யூசுஃப் நபிக்கு இரண்டு அற்புதங்கள். பேரழகு, கனவு விளக்கம் தருபவர். நபிகளாரின் அற்புதங்களை விவரிக்க இயலாது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அம்மையார் கூறுகிறார், “ஊசி தொலைந்து போனால் நபிகளாரின் புன்னகை ஒளியில் ஊசியை தேடி கண்டுபிடித்து விடுவேன்”
நபிகளாரின் தீதார் எளிய செய்தியல்ல. காட்சியளித்தால் மனித உருவில் காட்சி தருவார். கியாமத்தில் முழு, அசல், நூர் வடிவில் வெளிப்படுவார். ஆஷிக்கீன்கள் கூறுகின்றனர். கியாமத் நோக்கம் நபிகளாரின் உயர்நிலையை புரிவதாகும். தரஜா தெரியவரும். மரணமடைந்தவுடன் மண்ணறையில் கேள்வி கணக்கு நடக்கும்.
சூரா பனீ இஸ்ராயில் அத்தியாயம் 17, வசனம் 79 ”அஸா அய்யப் அஷக ரப்புக மகாமன் மஹ்மூதா.”
உயர் பதவி, மகாமன் மஹ்மூதா, புகழப்படும் தலம். அறியாமையில் ஜுலைகா தவறிழைத்தார். ஆனால் பின் நாளில் ஈமான் ஏற்றார். வாரிசு மீது பிரியம், இல்லற பிரியம், பெற்றோர் பிரியம் இதெல்லாம் பயிற்சி. இவை உதவி புரியாது. அல்லாஹ், ரசூல் மீதான பிரியம் துணைபுரியும்.
ஜுலைகா குறித்து இரண்டு வித அபிப்பிராயங்கள் மார்க்க அறிஞர்களிடையே நிலவுகின்றன. சுலைகா யூசுஃப் திருமணம் நடைபெறவில்லை. வாதம் எழுப்புவோரும் உள்ளனர்.
எறும்பு பேசியதை மூன்று மைல் தொலைவில் சுலைமான் நபி கேட்டார். கருப்பு எறும்பா சிவப்பு எறும்பா விவாதம் தேவையில்லை. குர்ஆனுடைய மையக் கருத்து மட்டுமே இங்கு முக்கியம்.
திராட்சை, சப்பேட்டா, அன்னாசிபழம் கரத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஆப்பிள் பழம் மகளிர் கரத்தில் கொடுக்கப்பட்டது. பழம் குறித்த கருத்து மோதல் வேண்டாம்.
வசனம் தொடர்கிறது. வசனம் 31. வகுல்ன ஹாஷ லில்லாஹி மாஹாஜா பஷரன்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக யூசுப் மனிதரல்ல. இன்ஹாஜா இல்லா மலக்குன் கரீம். இவர் நிச்சயமாக பெரியவானவர்.
”வல இன்லம் யஃப்அல் மாஆமுருஹ§ லயுஸ்ஜனன்ன வலயகூனன் மினஸ் ஸாகிரீன்.”
கட்டளை
நான் இடும் கட்டளைக்கு இணங்க மறுத்தால் சிறையில் தள்ளப்படுவார். சிறுமைப்படுத்தப்படுவார். ஆனால் யூசுஃப் நபி தன்னை தற்காத்துக் கொண்டார்.
இணங்க மறுத்த யூசுஃப் நபி சிறைவாசத்தை தேர்வு செய்தார். வசனம் 33.
கால ரப்பி சிஇஜ்னு அஹப்பு இலைய்ய மிம்மா யதுவூனனி இலய்ஹி யூசுப் நபி தம்மை கட்டுப்படுத்திக் கொண்டதால் சுலைகா கிடைத்தார். ஆட்சி கிடைத்தது. குடும்பத்தார் இணைந்தனர். மரியாதை கிடைத்தது.
நீங்களும் கெட்ட பழக்கத்திலிருந்து விலகினால் நல்ல குடும்பம் வாய்க்கும். செல்வம் வழங்குவான். மறுமையில் மதிப்பு தருவான். இன்றைய காலத்தில் மிகப்பெரிய நோய் கெட்ட தவறான பார்வை. அமல்களனைத்தும் வீணாகும். பகிரங்கமான இறை கட்டளை மீறல். சிறியவர், இளைஞர், பெரியவர் அனைவரும் நேரடியாக ஈடுபடுகின்றனர். டிவி பார்க்கிறோம். மனம் குருடாகும். கண் பார்வை மங்கும். மற்றவர்களின் மரியாதை மீது நாம் கை வைக்கிறோம். இறை கோபம் அதிகமாகும். கண், காது, வாய் மூலம் இதயத்தில் நுழைபவை மனதை கெடுக்கும். மாசு தரும் உணர்வுகளை அடைக்கவேண்டும். கண், காது, வாய், மனம் பாதுகாக்க வேண்டும்.
சூரா பனீ இஸ்ராயில் அத்தியாயம் 17, வசனம் 36 இன்ன சம்அ வல் பசர வல்ஃபுவாத குல்லு உலாயிக கான அன்ஹ§ மஸ்வூலா செவிப்புலன், பார்வை, இதயம் கேள்விகேட்கப்படும். இறைவனுக்கு அஞ்சுவதே நுண்ணறிவு.
சிறையில் கொலையாளி, திருடர், முரடர்கள் வாசம். பணியாட்கள் இல்லை. வசதியில்லை. யூசுஃப் நபி ஒப்புக் கொண்டார். தியாகம் செய்யாமல் உயர்வு கிடைக்காது. ஃபஸ்தஜாபலஹு ரப்புஹு இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.
தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2013