Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தைகளும் பாசமொழியும்

Posted on May 7, 2013 by admin

குழந்தைகளும் பாசமொழியும்

குழந்தைகளுடன் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்துவதற்கு பல முறைகள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் எமது பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றோம்.

ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடு அடிப்படையில் வெவ்வேறு பாச மொழிகளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வருகிறோம். எமக்குப் புரியும் மொழியில் பாசம் காட்டப்படும் போது எமது மனம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது.

பல முறை முயன்றும் எமது மொழி துணைவிக்கோ பிள்ளைக்கோ விளங்காவிட்டால் எமது பாசம் அவர்களுக்குப் புரியாது. இன்னொரு மொழி தமக்குப் புரியாத போது ஏற்படும் ஏமாற்றம், கவலை, கோபம், இயலாமை போன்றன பாசத்தை காட்டுவதிலும் ஏற்படுகின்றது.

பிறருக்கு புரியக்கூடிய வகையில் பாசத்தை எவ்வாறு காட்டலாம், பாச மொழிகள் எத்தனை வகை என்ற கேள்விகள் இப்போது உங்களுக்கு எழக்கூடும்.

குழந்தை உளவியலாளர்கள் பாச மொழிகளை ஐந்தாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இவை குழந்தைகள் மீது பெற்றோர்கள் காட்டும் பாச மொழிகளை மட்டுமன்று குழந்தைகள் பிறர் தம் மேல் காட்டும் பாச மொழிகளையும் ஐந்தாகப் பிரித்தும் புரிந்தும் கொள்கிறார்கள்.

உற்சாக மூட்டும் சொல்லாடல்:

குழந்தைகளுக்கு எப்போதும் நாம் உற்சாக மூட்டும் சொல்லாடல்களையே கையாளவேண்டும். அழகான கைகள், குட்டிக்குட்டி விரல்கள், கெட்டிக்காரி/காரன் என்கிற மாதிரி கூறலாம். நமது பெற்றோர் இரண்டு மூன்று வயது வரைக்கும் தான் இப்படி ஆர்வமூட்டும் சொல்லாடல்களைப் பயன்படுத்துவார்கள். குழந்தைகள் சற்று வளர்ந்ததும் தொட்டது பட்டது எல்லாவற்றிற்கும் திட்டிக்கொண்டுதானிருப்பார்கள்.

“எத்தின தரம் சொல்றது, எரும மாட்டுக்கு மண்டக்குள்ள ஏறினாத்தானே, கிடாமாடு மாதிரி வளர்ந்திருக்க மண்டக்குள்ள ஒன்டுமில்ல” என்று திட்டித்தீர்ப்பதற்கே நாம் பிறந்துவிட்டோம். இந்தச் சொல்லாடல்கள் குழந்தைகளின் மனதை மிகவும் புண்படுத்துகின்றன. இந்தச் சொல்லாடல்களைக் கேட்கும் குழந்தைகள் கூனிக் குறுகிப் போய்விடுகின்றன. பரீட்சையில் குறைந்த புள்ளிகளுடன் வரும் பிள்ளையைப் பார்த்து “நீ கவலைப்படாதே அடுத்த முறை இதைவிடச் சிறப்பாகச் செய்யலாம்” என்று கூறுவது மனதிற்கு மிகுந்த ஆறுதலைத் தருவதோடு பாசத்தை வெளிப்படுத்தும் வழியாகவும் அமையும்.

தனியான நேரம் ஒதுக்குதல்:

பல குழந்தைகள் பெற்றோருடன் தனியாகக் கழிக்கும் நேரத்தை மிகவும் பெறுமதியாகக் கணிக்கின்றனர்.

இரண்டாவது குழந்தை பிறக்கும் போது மூத்த குழந்தை தனது சிம்மாசனத்தை இழந்த ஏக்கத்தில் இருக்கும்.

இதனால் சின்னத் தங்கை தூங்கியவுடன் தாய் தன்னை மடியில் வைத்து கொஞ்சும் நேரத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்.

இங்கு தாயும் குழந்தையும் தனியாகக் கழிக்கும் நேரம் மிகவும் பெறுமதியானதாகும்.

இந்த பெறுமதியான நேரம் பாசத்தை வெளிப்படுத்தும் நேரமாகும்.

எனவே பெற்றோர் தமது ஒவ்வொரு குழந்தையுடனும் சிறிது நேரத்தையாவது தனியாகக் கழிக்க வேண்டியது அவசியமாகும்.

வளர்ந்து பெரியவரான பின்பும் இவ்வாறு கழித்த நேரங்கள் தான் நீங்கா இடம்பிடிக்கின்றன.

பரிசுகள் வழங்குதல்:

அடிக்கடி பரிசுகளை வழங்குதலும் குழந்தையின் மேல் காட்டும் பாச மொழியாகும். பாச மொழி இல்லாவிட்டால் அந்தப் பரிசை குழந்தை ஏனோ தானோ என்று பெற்றுக் கொள்கிறது. பரிசுகள் பெறுவது குழந்தையின் பாச மொழியாக இருப்பின் அதற்கு வழங்கப்படும் ஒவ்வொரு பரிசும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும். எல்லாப் பரிசுகளையும் காசு கொடுத்து கடையில் வாங்கத் தேவையில்லை. எமது கைபடச் செய்யப்பட்ட சின்னச் சின்ன பரிசுகளும் பாசத்தை ஆழமாக வெளிப்படுத்துகின்றன.

ஸ்பரிசம்:

அதாவது தொடுகையும் ஒரு பாச மொழியாகும். இதில் பல பரிமாணங்கள் உள்ளன. முத்தம் கொடுத்தல், தலையைத் தடவுதல், மடியில் தூக்கி வைத்தல், அனைத்துப் பிடித்தல், மஸாஜ் செய்தல் தொடுகையின் வகைகளாகும். நபிகள் தமது குழந்தைகளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது அக்ரஃ பின் ஹாபிஸ் என்ற தோழர் அதை ஆச்சரியமாகப் பார்த்தார். எனக்குப் பத்துப் பிள்ளைகள் இருக்கின்றனர். ஒரு நாளும் நான் அவர்களை முத்தமிட்டது கிடையாது என்று கூறுகின்றார்.
அதற்கு நபிகள் “யார் பாசம் காட்டவில்லையோ அவர் பாசம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார். எனவே முத்தம், தொடுகை பாச மொழிகள் என்பது தெளிவாகிறது. குழந்தைப் பருவத்தினருக்கு உடல் அருகாமை முக்கியமாகும். அதனால் குழந்தைகள் தன்னம்பிக்கையுள்ளவர்களாக வளர்கிறார்கள். குழந்தையை மொழியைப் பயன்படுத்தி புரிந்து கொள்ள முன்னரே அனைத்தல், முத்தமிடல், வருடுதல் போன்ற ஸ்பரிசங்களின் மூலம் குழந்தை தான் நேசிக்கப்படுவதை உணருகின்றது. எனவே குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள், கொஞ்சுங்கள் அதன் மூலம் உங்கள் பாச மொழிகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சேவை செய்தல்:

குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர் குழந்தைக்கு சேவை செய்கிறார்கள். பால் கொடுத்தல், நனைந்த உடையை மாற்றுதல், குளிப்பாட்டல், எனப் பல பணிகளை ஆற்றுகின்றனர். வளர்ந்து பெரியவனாகி பாடசாலைக்குச் செல்லும் போது புத்தகப்பையை ஒழுங்குபடுத்தல், பிடித்த உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தல், விளையாட்டுப் பொருள்களை ஏற்பாடு செய்தல் என்ற செயற்பாடுகள் மூலம் தமது பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். உங்களது இச்சேவைகளை குழந்தைகள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவிப்பதோடு உங்களுக்கும் சிறு சிறு வீட்டு வேலைகளில் உதவினால் இது சேவை மூலமாக வரும் பாச மொழி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

source: http://idrees.lk/?p=1241

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

47 − = 45

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb