Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்?

Posted on May 6, 2013 by admin

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது, முஸ்லிம்களில் பலர் மிக மோசமானவர்களாக இருப்பது ஏன்?

     பதிலளிப்பவர்:  ஜாகிர் நாய்க்      

1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்: 

இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கையில் இருக்கிறது. இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அச்சிட்டும், ஒலி-ஒளி பரப்பியும் வருகின்றன். இந்த ஊடகங்கள் இஸலாத்தைப் பற்றிய தவறான தகவல்களை தருவதையும், இஸ்லாமிய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளன.

எப்போது, எங்கு வெடிகுண்டு வெடித்தாலும் – எந்தவித ஆதரமுமின்றி – முதன் முதலில் குற்றம் சாட்டப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று தெரியும் பட்சத்தில் – அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாத செய்தியாக மாறிவிடும்.

ஓரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர் 15 வயது பெண்ணை – அந்த பெண்ணிண் சம்மதத்தோடு – திருமணம் செய்து கொண்டால் அந்த செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதே சமயம் ஐம்பது வயது முஸ்லிம் அல்லாத ஒருவர் 6வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு விட்டால் அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாமல் – செய்திக் குறிப்புகள் போன்று பிரசுரிக்கப்படும்.

அமெரிக்காவில் தினமும் 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. அந்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஏனெனில் வல்லுறவு குற்றங்கள் செய்வது அமெரிக்கர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டது.

2. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் உண்டு.

இஸ்லாமியர்களில் சிலர் நம்பிக்கை, நாணயம் அற்றவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த ஊடகங்கள் இஸ்லாமியர்கள் மாத்திரம்தான் இவ்வாறு இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் சிலர் குடிகாரர்களாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் இஸ்லாம் அல்லாதவர்களில் பெரும்பான்மையோர் குடிகாரர்கள் என்பது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

3. மொத்த சமுதாயத்திலும் முஸ்லிம்களே சிறந்தவர்கள்:

இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு சில குற்றவாளிகள் இருந்தாலும் – உலகில் உள்ள மொத்த சமுதாயத்துடன் இஸ்லாமியர்களை ஒப்பிடும்போது – இஸ்லாமியர்கள்தான் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள். இஸ்லாமியர்கள் மது அருந்துவதை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்கள்தான் உலகத்திலேயே அதிகமாக தர்மம் வழங்குபவர்கள். நன்னடத்தை, பண்பாடு, மனித மாண்புகளைப் பொறுத்தவரை இஸ்லாமியார்களோடு வேறு எவரையும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

4. வாகனம் ஓட்டுபவரை வைத்து வாகனத்தை பற்றிய கணிப்புக்கு வர வேண்டாம்.

ஒரு புதிய மாடல் ‘மெர்ஸிடிஸ் கார்’ சிறந்ததா இல்லையா என்பது பற்றி அறிய வேண்டுமெனில் – அந்த காரை ஓட்டுபவரை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. காரை ஓட்டுபவர் திறமை சாலியாக இல்லாமல் இருப்பதால் ‘மெர்ஸிடிஸ் கார்’ சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு கார் சிறந்ததா இல்லையா என்று அறிய வேண்டுமெனில் காரை மோசமாக ஓட்டுபவரை வைத்து – கார் சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த காருடைய திறமை என்ன?. அந்த காருடைய மற்றுமுள்ள பயன்கள் என்ன?. அந்த கார் என்ன வேகத்தில் செல்லும் – அந்த காருடைய எரிபொருள் நுகர்வு என்னவாக இருக்கும் – அந்த காருடைய பாதுகாப்புத் தன்மை என்ன?.. எனபதையெல்லாம் வைத்துதான் மேற்படி கார் சிறந்ததா? இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு வாதத்திற்காக இஸ்லாமியர்கள் நல்லவர்கள் அல்ல என்று வைத்துக் கொண்டாலும், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களை வைத்து – இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. இஸ்லாம் எந்த அளவுக்கு சிறந்த மார்க்கம் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டுமெனில் – இஸ்லாத்தின் உண்மையான – தெளிவான ஆதாரங்களான – அருள்மறை குர்ஆனையும் – அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

5. இஸ்லாத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர, இஸ்லாமிய கடமைகளை சரிவர பின்பற்றியவர்களை பாருங்கள்.

இஸ்லாத்தை சரிவர பின்பற்றியவர்களில் முதன்மையானவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

ஒரு வாகனத்தைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டுமெனில் – அந்த வாகனத்தை இயக்கக் கூடிய ஒரு சிறந்த வாகன ஓட்டியை வைத்து – வாகனத்தை இயக்கினால்தான் வாகனத்தை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். அதுபோலவே – இஸ்லாத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர – இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றுவதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய – அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் அல்லாத – ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் – அல்லாஹ்வின்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் சிறந்த மாமனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மைக்கேல் எச். ஹார்ட் எழுதிய ‘தி ஹன்ட்ரட் மோஸ்ட் இன்ஃபுளுயன்சியல் மென் இன் ஹிஸ்டரி’ (The Hundred Most Influential Men in History) என்ற புத்தகத்தில் – மனித மனங்களை கவர்ந்த நூறு மனிதர்களில் முதலிடம் வகிப்பது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.இவ்வாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறந்த மரியாதை வழங்கிய வரலாற்று ஆசிரியர்களில் தாமஸ் கார்லில், (Thomas Carlyle) லா-மார்டின் (La – Martin) ஆகியோரும் அடங்குவர்.

sorce: http://riyasdotcom.blogspot.in/search?updated-max=2013-01-14T00:08:00%2B05:30&max-results=5

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

37 − = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb