”காவல்தானே பாவையர்க்கு அழகு”!
பெண்களுக்குரிய காவலானது அகக்காவல், புறக்காவல் இருவகைப்படும். வீட்டை விட்டு வெளியேறும் பெண் தனது உடையை புறக் காவலில் முதன்மையாகக் கருதணும்.
வீதியில் செலலும் பாதசாரிகள், வாகன வாசிகள் விழிகளின் சுழற்சி முதல் வீச்சில் கூட தம் மீது பார்வை படியா வண்ணம் உடையணியனும். பகட்டு உடை, அங்க அவயவங்களை இறுக்கி அணிந்து சதைத் திரட்சியை ஆடைக்கு வெளித்தள்ளி திரட்டிக் காட்டும் உடைகள் அணிதலாகாது.
மத உடையும் இன்று ஆபாச உடைபோன்று தயாரிக்கப்படுகிறது. நுகர்வும் அதிகமிருக்கிறது. ஒரு சமூகத்தை தனிமைப்படுத்தி நகைச்சுவைக்குள்ளாக்கும் சதி வலைக்குள் சிக்கவைத்தலில் எதிரிகள் வாகை சூடியுள்ளனர். அது குறித்த வருத்தமில்லை. ஆய்வு மனப்பான்மையில்லை.
இயற்கையாகக் கிடைத்திருக்கும் வனப்பை செயற்கையாக அழகுபடுத்தி பார்வைக்குக் காட்டுதல். யாருமற்ற தனிமையில் யாருக்காகவோ காத்திருத்தல், பொது இடங்களில் நீண்ட நேரம் செல்பேசியில் உரையாடுதல். புறத்தில் சரி காணப்படவேண்டியவை.
அகக்காவல் ஒவ்வொரு பெண்ணும் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. அன்னிய ஆண்களிடம் சிரித்தல், பழகுதல், தனிமையில் பயணம் செய்தல், உதவி தேடுதல். எட்டாத ஒன்றின் மீது ஆசை கொள்ளுதல்.
மனத்தை தடுமாறவிடுதல், உலக மோகத்தில் ஆழ்ந்திருப்போருடன் தோழமை கொள்ளுதல், வரவு மீறி செலவு செய்தல்.
சுயக்கட்டுப்பாடு இல்லாமை. உள்ளதைக் கொண்டு திருப்தியடையாமை. இழிவுக்கு அழிவுக்கும் இழுத்துச் செல்லும். இறுதியில் இயலொழுக்கம் களையப்பட்டு களவொழுக்கத்தை உண்டாக்கும்.
ஒரு பெண்ணுக்கு மணவாழ்விற்கு முன்பு காவலர்களாக பெற்றோர், உடன் பிறந்தோர் தந்தை, தாயின் பெற்றோர் இருக்கின்றனர். பின்னர் கணவன் காவல் பொறுப்பேற்கிறான்.
இருப்பினும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் முழு நேரமும் காவலாகவிருக்க இயலாது. இருப்பதாகக் கருதினால் பேதமை.
ஒவ்வொரு பெண்ணும் அகத்திலும், புறத்திலும் தன்னைத்தானே காவல் கொள்ளனும். அதுவே சரியான காவல். அந்தக் காவலையே ஒளவை ”கொன்றை வேந்தனில்” ஒருவரியில் ”காவல்தானே பாவையர்க்கு அழகு.” என்று கூறியிருக்கிறார்.
-சதாம், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2013