மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்
அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
”எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்:
‘அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்.
மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும்.
இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்!” (அல்குர்ஆன் 41 : 30-32)
”திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.” (அல்குர்ஆன் 46 : 13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1. அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோஸ அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோஸஎன்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3. மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.
4. அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்” என்று அவ்வானவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 40 : 30)
5. இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். “இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்”. (அல்குர்ஆன்)
6. உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். “உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்””. (அல்குர்ஆன்)
7. இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
தற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.
அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல் ஆகி விடுவார். (நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன . இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உத வக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள்.
அல்லாஹ் தன்னுடைய வேதத்திலும் தன்னுடைய நபியின் நாவின் மூலமாகவும் அவர்களுடைய வரலாற்றின் மூலமாகவும் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான அநேக வழிமுறையை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றான். இது அல்லாஹ் நமக்களித்த அருட்கொடையாகும். அவற்றில் சில:
1. திருக்குர்ஆனின் பக்கம் திரும்புதல்
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகளில் திருக்குர்ஆன் தான் முதலாவதாக உள்ள து. எவர்கள் திருக்குர்ஆனை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் (குழப்பங்களிலிருந்து) பாதுகாப்பான். அதன்வழி நடப்பவர்களை (தீமைகளைவிட்டும்) காப்பாற்றுவான். அதன் பக்கம் அழைப்பவர்கள் நேரான வழியில் நிலைத்திருப்பார்கள்.
இந்தத் திருக்குர்ஆன் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளப்பட்டதின் நோக்கமே உறுதியாக இருப்பதற்குத்தான் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். இறைநிராகரிப்பாளர்களின் ஆட்சேபனைக்குப் பதிலளிக்கும் விதத்தில் பின்வருமாறு கூறுகின்றான்: இவருக்கு இந்தக் குர்ஆன் முழவதும் ஒரேநேரத்தில் மொத்தமாக ஏன் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள் இதன் மூலம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நாம் இப்படி படிப்படியாக இறக்கியிருக்கிறோம். அவர்கள் உம்மிட ம் எந்த விஷயத்தையும் கேட்டு வந்தபோதெல்லாம் அதற்குரிய சரியான விடையையும் அழகான விளக்கத்தையும் நாம் உமக்கு அளித்தோம். (அல்குர்ஆன் 25:32,33)
திருக்குர்ஆன் மனித உள்ளங்களில் ஈமானை விதைக்கின்றது. அல்லாஹ்வுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துகின்றது. மட்டுமல்லாமல் காஃபிர்கள் நயவஞ்சகர்கள் போன்ற இஸ்லாத்தின் விரோதிகள் எழுப்புகின்ற சந்தேகங்களுக்கு மறுப்புக் கொடுக்கின்றது. இதனால் தான் திருக்குர்ஆன் உறுதிப்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குகின்றது.
2. மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பதோடு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களுக்கு அல்லாஹ் ஒர் வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால் அக்கிரமக்காரர்களை வழிதவறச் செய்கின்றான். அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (அல்குர்ஆன் 14 : 27)
அதாவது அல்லாஹ் முஃமின்களுக்கு நன்மையைக்கொண்டும் நற்காரியங்களைக் கொண்டும் இவ்வுலகிலும் கப்ரிலும் உறுதிப்பாட்டை வழங்குவான் என்று கதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்ற அநேக நபித்தோழர்கள் தாபியீன்கள் தபவுத்தாபியீன்களும் இவ்வசன த்திற்கு விளக்கமளித்துள்ளனர்.
மற்றொரு வசனத்தில் ”அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால் அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் சத்தியத்தில் அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும்.” என்றும் கூறுகிறான். (அல்குர்ஆன் 4 : 66)
ஆம்! உண்மைதான்! இல்லையென்றால் குழப்பங்கள் தலைதூக்கி துன்பங்கள் தொடரும்போது நற்காரியங்கள் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களிடமிருந்து உறுதிப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?!
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் அவர்களின் ஈமான் காரணமாக நேரான வழியில் நிலைத்திருக்கச் செய்கிறான். இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்காரியங்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தார்கள். நற்காரியங்கள் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதுதான் அவர்களுக்கு மிகப் பிரியமாக இருந்தது.
3. நபிமார்களின் வரலாறுகளிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால் அவற்றின் மூலம் நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும் இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 : 120)
இப்படிப்பட்ட வரலாறுகளைக் கூறும் வசனங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் விளையாட்டுக்காகவோ ரசனைக்காகவோ இறக்கியருளப்படவில்லை. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளத்தையும் முஃமின்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்திற்காகத்தான்.
4. பிரார்த்தனை செய்வது :
உறுதிப்பாட்டை வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவது அவனுடைய அடியார்களான முஃமின்களின் பண்பாகும்.
இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்துவிடாதே!. இறைவா! நீ எங்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! என்று அவர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு அதிகமதிகம் பிரார் த்தனை செய்வார்கள்: உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக. (நூல்: திர்மிதி)
அதுபோல பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சுடுமணலில் கிடத்தி அவர்கள்மீது பெருங்கல்லைத் தூக்கி வைத்தார்கள். சுமையா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டார்கள். நாம் காணும் இந்தப் பயிற்சி இல்லாதிருந்தால் இத்தோழர்கள் உறுதியாக இருந்திருக்க முடியுமா? எண்ணிப்பார்க்க வேண்டும்.
சோதனை ஏற்படும் போது :
உள்ளத்தில் ஏற்படுகின்ற புரள்வுகளுக்கு சோதனைகள் காரணமாகின்றன. இன்பம் துன்பம் போன்ற சோதனைகளை உள்ளம் சந்திக்கின்றபோது எவர்களுடைய உள்ளங்களில் ஈமான் நிரம்பியிருக்கின்றதோ அப்படிப்பட்ட பொறுமையாளர்கள்தான் உறுதியோடு இருக்க முடியும்.
சோதனைகள் பல வகைகளாகும்
செல்வம், பதவி :
”செல்வம் பதவி ஆகிய இவ்விரண்டு சோதனையின் அபாயத்தைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பதவிக்கும் காசுக்கும் பேராசைப்படுவது ஆடுகளுடன் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்களை விடவும் தன் மார்க்கத்திற்கு மிகவும் கெடுதி இழைக்கக் கூடியது.” (நூல்: அஹ்மத்)
source: http://kkyyouth.wordpress.com/