Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குடும்ப உளவளம் – பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்

Posted on March 30, 2013 by admin

குடும்ப உளவளம் – பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்

”எனது கணவர் ஆண்மைத் தன்மை குறைந்தவர் போன்றே தோன்றுகிறது.

திருமணம் செய்து மூன்று மாதங்களாகியும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்வை அனுபவிக்க முடியவில்லை.

அவருக்கு இயல்பிலேயே இதில் ஆர்வம் இருப்பது போன்று தெரியவில்லை. இதை நினைக்கும்போது எனக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது.

எமது திருமணம் முறிந்துவிடுமோ என்ற அச்சமும் உருவாகின்றது.” –இது 26 வயது நிரம்பிய புதிதாக மணமுடித்த ஒரு யுவதியின் கேள்வி.

இப்பிரச்சினையை அவர் முன்வைத்தபோது கவலையின் ரேகைகள் அவரது முகத்தில் அகலப் பதிந்திருந்தன. மிகுந்த மன இறுக்கத்திற்கு உட்பட்டவர் போன்றே அவரது தோற்றமும் மாறியிருந்தது. அவர் இப்பிரச்சினையை இன்னும் சற்று விரிவாக பார்போப்ம் .

எனது கணவர் வெளியூரைச் சேர்ந்தவர். வார நாட்களில் தொழில் நிமித்தம் அவரது சொந்த ஊரிலேயே தங்கியிருப்பார். வார இறுதி நாட்களிலேயே வீட்டுக்கு வருகிறார். ஆயினும், எனது உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் நிலையில் அவர் இல்லை. சலிப்புக்காக எதையேனும் நாம் பேசிக் கொள்கின்றோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசுவதில்லை. பெரும்பாலும் அவருக்கு இவ்விடயத்தில் ஆர்வமில்லை என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகின்றது.

திருமண வாழ்வின் இலக்குகள் பல. பெண் பாதுகாப்பு, சமூக சீர்கேடுகளிலிருந்து விலகியிருத்தல், சந்ததிப் பெருக்கம், பாலின்பம், முதுமையில் பாதுகாப்பு என அதன் நோக்கங்கள் விரிந்து செல்கின்றன. இதில், தாம்பத்தியமும் முக்கியமான நோக்கமாகும். தம்பதியினர் தமக்குள் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவது போன்று, இந்த விடயமும் கலந்துரையாடப்பட வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக கணவனின் உழைப்பும் ஓட்டமும் இதற்குப் பெரும் தடையாக உள்ளது.

இக்கேள்வியை முன்வைத்த யுவதி மட்டு மன்றி, இதுபோன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். பெண்களின் இயல்பான வெட்க உணர்வும், வெளியில் சொல்வதிலுள்ள சங்கடமும் அவர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகின்றது. ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. விருப்பங்கள், ஆசைகள் உள்ளன. உயிரியல் அடிப்படையிலான இத்தேவையை ஆணோ பெண்ணோ நீண்ட நாட்களுக்குப் புறக்கணிக்க முடியாது. இது மனிதனின் இயல்பான தேவைகளில் ஒன்று. எனவே, அதற்கெதிராக மனிதனால் போராடவும் முடியாது.

தம்பதியினருக்கு இடையிலான உள நெருக்கம் அதிகரிக்கும் அளவுக்கு உடல் நெருக்கமும் அதிகரிக்கும். எல்லாவற்றுக்குமான அடிப்படை நிபந்தனை இருவரும் மனம் விட்டுப் பேசுவதாகும். திருமணம் முடித்து ஆரம்ப காலங்களில் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவது சங்கடமானதே. எனினும், சூட்சுமமாக இக்குறைபாட்டை மனைவி என்ற வகையில் உணர்த்த வேண்டும்.

ஒருவரது உடல் ஆரோக்கியம், ஹோர்மோன்களின் செயற்பாடு, பிறந்து வளர்ந்த கலாச்சார சூழல் ஆகிய பல்வேறு காரணிகள் ஒருவரது தாம்பத்திய வாழ்வில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது தவிர, இப்பிரச்சினையில் முக்கிய பங்கு வகிப்பது ஒருவர் எதிர்கொண்டுள்ள உளவியல் காரணிகளே. தாம்பத்தியம் குறித்து ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், அச்சங்கள் என்பன இந்த உளவியல் காரணிகளில் உள்ளடங்குகின்றன.

உடலியல் சார்ந்த காரணங்களே கணவன் தரப்பிலுள்ள பிரச்சினை என ஊகித்தால், இத்துறை சார்ந்த வைத்தியர்களை அணுகுவதன் மூலம் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். தற்போது இது குறித்து மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு கணவன் தனது மனைவிக்கு வழங்கும் அடிப்படையான உரிமைகளில் இதுவும் ஒன்று என்ற வகையில் இத்தகைய கணவன்மார்கள் மருத்துவ உதவிகளை நாடுவது அவசியமாகும். அதன் மூலம் தனது துணைவியின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றுவதோடு, மணவாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. இன்று பத்திரிகைகளில் இப்பிரச்சினைக்கான தீர்வாக சில வகை மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஏராளமான விளம்பரங்கள் வெளிவருகின்றன. இவை குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஏனெனில், இத்துறை சார்ந்த விஷேட மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. தொழின்மை ரீதியான அத்தகைய மருத்துவர்களை அணுகி, ஆலோசனை பெறுவதே உகந்தது.

தவறும்போது இத்தகைய போலிகளுக்கு ஏமாந்து, தான் இத்தகைய பலவீனமுள்ளவன் என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

கலாச்சார காரணிகளும் இப்பிரச்சினைக்குக் காரணமாகலாம். எனவே, இதற்குப் போதியளவு உளவள ஆலோசனை பெறப்பட வேண்டும். சமய அறநெறிகளுடன் கூடிய உளவள ஆலோசனைகள் இதற்குப் பெரிதும் பயன்படும்.

உள ரீதியில் ஒருவர் கொண்டுள்ள பிழையான நம்பிக்கைகள் மற்றும் அப்பிராயங்களே இதற்குரிய காரணம் எனில், அதற்கும் போதியளவு உளவள ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

உண்மையில் ஒருவர் நீண்டகாலமாக ஏற்றுப் பின்பற்றி வரும் விழுமியங்களையும் பெறுமானங்களையும் ஒரேமுறையில் மாற்றியமைப்பது மிகவும் கடினமானது. நடைமுறையில் சிரம சாத்தியமானதும் கூட. ஆயினும், தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஒருவரது மனப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

வாழ்வின் யதார்த்தங்களை சிறுபிள்ளைகளிலிருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வயது வந்ததும் இந்த உணர்வுகளையும் மதித்துச் செயற்படுவர். இல்லாதபோது ஒரு இயல்பான பலவீனமாகக் கருதி, தாழ்வுச் சிக்கலை உருவாக்கிக் கொள்வர். ஒவ்வொரு கணவரும் தனது புறத்திலுள்ள பலவீனங்களைப் படிப்படியாகக் களைவதில் கவனம் செலுத்த வேண்டும். அது போன்றே மனைவியும் தன்னிடமுள்ள குறைபாடுகளை அகற்ற முயற்சிக்க வேண்டும்.

உண்மையில், இதுபோன்ற உள நெருக்கடிகளை வெளியில் பகிர்ந்து கொள்வது மிகவும் சிக்கலானது. சங்கடங்கள் நிறைந்தது. ஒவ்வொரு குடும்பமும் குடும்ப மருத்துவர் ஒருவரை வைத்திருப்பது போன்று உளவள ஆலோசகரையும் அணுக வேண்டியுள்ளது. மணவாழ்வில் பலர் தோல்வியடைவதற்கும் மணமுறிவு ஏற்படுவதற்கும் இப் பிரச்சினை காரணமாகி விடக் கூடாது. மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அனேக மான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கின்றன.

எனவே, முதலில் செய்யவேண்டியது தனது கணவரோடு இவ்விடயம் குறித்து மனம் விட்டுப் பேசுவதோடு, அதை நிவர்த்திக்கத் தேவையான வழிமுறைகளில் கவனம் செலுத்துவதே. ஏனெனில், மணம் முடித்த ஆரம்ப காலங்களிலேயே இதுபோன்ற உளைச்சல்கள் ஏற்படுவது ஆரோக்கியமல்ல. அதன் தொடர்ச்சி விவாகரத்து வரை நீட்சியடையலாம் என்பதை இத்தகைய குறைபாடுள்ள தம்பதியினர் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியம்.

-jabir hashim

source: http://ipcblogger.net/mjabir/?p=1245

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb