நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்)துஆக்களும்!
”(முஃமீன்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் 7:55)
”(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணி வோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீ ராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.” (அல்குர்ஆன் 7:205)
துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாக கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத இந்த துஆ சிறந்த துஆ என்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
தனது கண்காணிப்பில் தூதர் இருந்தார் என்று அல்லாஹ் 52:48ல் கூறி இருந்தும் நபியை எச்சரித்து இவர்கள் ஓதும் இந்த துஆவை கற்றுக் கொடுக்கும்படி கட்டளையிடத் தவறிவிட்டான் என்று அல்லாஹ்வையும் குற்றப்படுத்துகிறார்கள்.
அல்குர்ஆன் 2:21, 49:16 இறைவாக்குகள் சொல்வது போல் இவர்களே அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி இவர்களாக இந்த துஆவை கற்பனை செய்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
எனவே இது தெளிவான பத்துஆ (கெட்ட பிரார்த்தனை) அல்லாமல் துஆ அல்ல. இதை நன்கு அறிந்த நிலையில் மவ்லவிகள்(?) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்த மிக சுருக்கமான மேலான துஆவை அனைவரும் எளிதாக ஓத முடியும் என்பதால், தங்களுக்குக் கை மடக்கு(கூலி) கிடைக்காது என்ற பயத்தினாலேயே மிக நீண்ட இந்த பித்அத் (கெட்ட) பத்துஆவை இறையச்சமின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.
இறை தியானத்திலும் அல்லாஹ்வின் (அல்குர்ஆன் 7:205) கட்டளையைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு (அல்குர்ஆன் 2:39) கூட்டாக கும்மாளமிட்டு, சப்த மிட்டுக் கூத்தடிப்பதை திக்ர், இருட்டு திக்ர் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் சாப்பிடுகிறார்கள்.
மக்கள் பணத்தை ஹராமான வழியில் கொள்ளை அடிக்கிறார்கள்.