தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்!
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக கவனிக்காமல் டீலில் விட்டுவிடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசைமாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளிடையே பேலன்ஸ் செய்யவும், மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவதற்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
தேங்கிப் போகாதீர்கள்
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை தேக்கமடைய விடாதீர்கள் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தாம்பத்ய உறவு வெறும் சடங்காக மாறிவருதாக உணரத் தொடங்கினால் அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.
அழகாய் உணருங்கள்
சுயமரியாதையில்தான் தன்னம்பிக்கை தோன்றுகிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல், அதிக ஆர்வமில்லாமலும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள்.அழகு நிலையம் சென்று அழகுபடுத்திக்கொள்ளலாம். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.
உங்களை உணருங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். உடலில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலுணர்வு சிந்தனை பொங்கட்டும். உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை பெண்கள்
தாம்பத்ய உறவின் போது செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.
மகிழ்ச்சிப் படுத்துங்கள்
படுக்கையறையில் எதைப்பற்றியில் கவலைப்படாமல் அமைதியாக இருக்கவேண்டாம். எப்பொழுதுமே உங்களவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள்.
‘அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், தாம்பத்யத்திலும் வெளிப்படும்.