1500 ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் பரனபாஸ் எழுதிய பைபிளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!
லன்டன்: சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.
போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் – DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.
2100ஆம் ஆண்டுவரை காவலர்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் அதற்குப்பிறகு அங்காராவிலுள்ள (ethnographic museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கையால் எழுதப்பட்ட அந்த நூலின் ஒருபக்கத்தின் ”ஜெராக்ஸ் காப்பி”யின் மதிப்பு 1.5 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.
கோஸ்பல் எழுதிய இந்த பைபிள் இஸ்லாமுடன் தொடர்புடையதாக இருப்பதால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அதனை அடக்கி வைத்தன என்கிறார் துருக்கியின் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் எர்த்துக்ருல் குனே.
மேலதிக விபரங்களுக்கு இங்கு இடம்பெற்றுள்ள ஆங்கில தகவல்களை பார்வையிடவும்.