அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை மனிதன் அறிந்து கொள்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும்!
மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது. ஏனெனில் அதன் எல்லை வரையறைக்கு உட்பட்டது.
[ அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை மனிதன் அறிந்து கொள்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஏனெனில் அவன் (அல்லாஹு தஆலா) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் இருக்கிறான்.
மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது. ஏனெனில் அதன் எல்லை வரையறைக்கு உட்பட்டது. மனித அறிவின் வரையறைக்கு உட்பட்ட இந்த தன்மை ஈமானை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கிறதே தவிர ஈமானில் குறையையும் ஐயப்படையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மேலும் அல்லாஹு தஆலாவின் மீதுள்ள ஈமானை அறிவின் மூலமாக நாம் அடைந்து இருப்பதால் முழுமையாக நாம் அவனது (அல்லாஹு தஆலா) உள்ளமையை அறிந்தவர்களாக இருக்கிறோம்.
அல்லாஹு தஆலா உள்ளமை பற்றிய நமது புலன் அறிவு நமது பகுத்தறிவோடு இணைந்து இருப்பதால் அவன்(அல்லாஹு தஆலா) உள்ளமைப் பற்றிய நமது புலன் உணர்வு (Sensation) முற்றிலும் நிச்சயமான ஒன்றே.
உண்மையில் படைத்தவனைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. எனினும், இந்த உள்ளார்ந்த நம்பிக்கை உணர்ச்சிகளின் மூலமாகவே வெளிப்படுகிறது. இந்த உணர்ச்சி சரியான முறையில் வழி நடத்தப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டால், பிறகு அது நம்பகமான முடிவுகளையும் நிலையான உறுதிபாட்டையும் ஏற்படுத்தாது.
பெரும்பாலும் வெறும் உணர்ச்சிகள் (Emotion – Wijdaan) உண்மையான நம்பிக்கைகளுக்கு பதிலாக கட்டுக்கதைகளையும் ஆதாரமற்ற கற்பனை கருத்துக்களையும் மனிதனுக்குள் கொண்டு வந்துவிடும்.
இத்தகைய ஆதாரமற்ற விஷயங்கள் மீது மனிதன் வைக்கும் நம்பிக்கை அவனை சரியான நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்லாமல் வழிகேட்டில் ஆக்கிவிடும். மேலும் நிராகரிப்பின் பாலும் அவனை வீழ்த்திவிடும்.]
சூரா அர்ரூமில் அல்லாஹு தஆலா கூறுகின்றான்:
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதையும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அகிலத்தாருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன. (குர்ஆன் 30:22)
சூரா அல்காஷியாவில் அல்லாஹு தஆலா கூறுகின்றான்:
ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கபட்டிருக்கின்றது என்பதையும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பதையும், மலைகளை அது எவ்வாறு நாட்டப்பட்டிருக்கின்றது என்பதையும், பூமியை அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்களா? (குர்ஆன் 89: 17-20)
சூரா அத்தாரிக்கில் அல்லாஹு தஆலா கூறுகின்றான்:
ஆகவே, மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கபட்டான். அது முதுகந்தண்டிற்கும் நெஞ்செலும்புகளுக்கும் இடையில் வெளிப்படுகிறது. (குர்ஆன் 86:5-7)
சூரா அல்பக்ராவில் அல்லாஹு தஆலா கூறுகின்றான்:
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்கு பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து, அதன் மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்பிக்க வைப்பதிலும் ஒவ்வொரு விதமான பிராணியை அதில் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பி விட்டுக் கொண்டிருப்பதிலும் வானத்திற்கும், ப10மிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. (குர்ஆன் 2:164)
இன்னும் இதுபோன்ற அனேக இறைவனங்கள் மனிதர்கள் தங்களை சூழ இருப்பவைகளைப் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை பற்றியும் அவன்தான் அனைத்தையும் படைத்துள்ளான் என்பதைப் பற்றியும் அவன்தான் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும் நிர்வாகி என்பதைப் பற்றியும் உறுதியான முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றான். இவ்வாறாக, பகுத்தறிவு துணை கொண்டு சிந்தித்து தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாஹு தஆலா மீதுள்ள ஈமான் உறுதியான முறையில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
உண்மையில் படைத்தவனைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. எனினும், இந்த உள்ளார்ந்த நம்பிக்கை உணர்ச்சிகளின் மூலமாகவே வெளிப்படுகிறது. இந்த உணர்ச்சி சரியான முறையில் வழி நடத்தப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டால், பிறகு அது நம்பகமான முடிவுகளையும் நிலையான உறுதிபாட்டையும் ஏற்படுத்தாது. பெரும்பாலும் வெறும் உணர்ச்சிகள் (Emotion – Wijdaan) உண்மையான நம்பிக்கைகளுக்கு பதிலாக கட்டுக்கதைகளையும் ஆதாரமற்ற கற்பனை கருத்துக்களையும் மனிதனுக்குள் கொண்டு வந்துவிடும். இத்தகைய ஆதாரமற்ற விஷயங்கள் மீது மனிதன் வைக்கும் நம்பிக்கை அவனை சரியான நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்லாமல் வழிகேட்டில் ஆக்கிவிடும். மேலும் நிராகரிப்பின் பாலும் அவனை வீழ்த்திவிடும்.
நம்பிக்கையை உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துவதின் காரணத்தினால்தான் மனிதர்கள் சிலை வணக்கங்கள், மூட நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகிய தவறான வழிபாட்டு முறைகளின் பிணைக் கைதிகளாக காட்சியளிக்கிறார்கள். ஆகவே இத்தகைய உணர்ச்சிபூர்வமான குருட்டு நம்பிக்கை, கற்சிலைகளுக்கு தெய்வீக பண்புக் கூறுகளை கற்பிப்பது, அல்லாஹு தஆலா பூமியில் அவதரிக்கிறான் என்று நம்புவது, படைப்பினங்களுக்குள்ள பண்புக்கூறுகளை அல்லாஹு தஆலாவுக்கு கற்பிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை ஆராதனை செய்வது மற்றும் அவற்றை வணங்கி வழிபடுவதின் மூலம் அல்லாஹு தஆலாவை நெருங்கி விடுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நம்புவது போன்ற இறைநிராகரிப்பின் பக்கமும் இணை வைக்கும் கொடிய செயலின் பக்கமும் மனிதர்களை இட்டுச் சென்று விடும் என்பதால், நம்பிக்கை கொள்வதற்கு ஒரே வழியாக உணர்ச்சிகளை மட்டும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
இது போன்ற குருட்டு நம்பிக்கைகள், கற்பனை எண்ணங்கள் ஆகியவற்றை உண்மையான ஈமான் விட்டொழித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் ஈமான் கொள்வதற்கு உணர்ச்சியுடன் அறிவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் வற்புறுத்துகிறது. மேலும் முஸ்லிம்களை அல்லாஹு தஆலாவின் மீது நம்பிக்கை கொள்வதற்கு அறிவை பயன்படுத்தி சிந்தனை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறது. இன்னும் அகீதாவில் பின்பற்றுதலை (தக்லீது) மேற்கொள்வதற்கு தடை செய்துள்ளது. ஆகவே அல்லாஹ்(சுபு)வின் மீது ஈமான் கொள்வதை தீர்மானிக்கும் நீதிபதியாக இஸ்லாம் பகுத்தறிவை குறிப்பிடுகிறது. அகீதாவில் தக்லீதை தடை செய்கிறது.
அல்லாஹு தஆலா கூறுகின்றான் :
”வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருகதிலும் அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.” (குர்ஆன் 3:190)
இங்ஙனம், பகுத்தறிவை முழுமையான நீதிபதியாக்கி, ஆழமாக சிந்தனை மேற்கொண்டு, தீவிரமாக ஆய்வுசெய்து பிறகு அதன் அடிப்படையில் அல்லாஹு தஆலா மீது ஈமான் கொள்ள வேண்டியது முஸ்லிம்களுக்கு கடமையாக (வாஜிப்) ஆக்கபட்டிருக்கிறது. பல்வேறு திருமறை அத்தியாயங்களின் நூற்றுக்கணக்கான இறை வசனங்களில், பிரபஞ்சத்தை ஆழ்ந்து நோக்கி அதில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் விதிமுறைகளை ஆய்வு செய்யும்படி மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும் இந்த வசனங்கள் மனிதனின் அறிவாற்றல் திறனை பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கவும் தீவிரமான சிந்தனை மேற்கொள்ளவும் அவனுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக பகுத்தறிவும் தெளிவான ஆதாரங்களும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
மேலும் தம் சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்காமல், அதைப்பற்றி நுட்பமாக ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் தமது மூதாதையர்கள் செய்த செயல்களை மேற்கொள்வது குறித்து இந்த வசனங்கள் மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றன. இதுதான் இஸ்லாம் அழைப்பு விடுக்கும் ஈமான் என்கின்ற நம்பிக்கை கொள்ளும் வழிமுறையாகும். இது நிச்சயமாக முன்சென்ற அறியாமை காலத்து மக்களின் வழிகேடான மார்க்கம் அல்ல. இது ஞானமும் உறுதியாகவும் முழுமையாகவும் நம்பிக்கை கொண்டவர்களின் மார்க்கமாகும். இவர்கள் தீவிரமாக தேடுதல் மேற்கொண்டும், ஆழமாக சிந்தனை மேற்கொண்டும் அதன் அடிப்படையில் ஏற்பட்ட தெளிவான சிந்தனையின் மூலமாக அல்லாஹு தஆலாவின் உள்ளமை (Existence) மீது உறுதியான முறையில் ஈமான் கொண்டவர்கள்.பகுத்தறிவை பயன்படுத்தி சரியான நம்பிக்கைக்கு வருவதற்கு கட்டளையிடப்பட்டிருந்த போதிலும் தன் அறிவாற்றலின் எல்லைக்கும் புலன் அறிவின் எல்லைக்கும் அப்பாற்பட்டவைகளை மனிதனால் அறிந்து கொள்ள இயலாது.
இது ஏனெனில், மனிதனின் அறிவாற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு வளர்ச்சி அடைந்த போதிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட அதன் எல்லையைக் கடக்க ஒரு போதும் அதனால் இயலாது. ஆகவே அதன் அறிந்து கொள்ளும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகும். இதன் காரணமாக அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை (Essence of Allah) அறிந்து கொள்ளும் திறன் மனித அறிவுக்கு கிடையாது. ஏனெனில் அல்லாஹு தஆலா மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பால் இருக்கிறான். மேலும், தன் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றை அவனால் அறிந்து கொள்ள இயலாது. இவ்வாறாக, மனித அறிவுக்கு (Human Mind) அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் திறன் இல்லை என்பது இங்கு தெளிவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியாத மனிதனால் எவ்வாறு தனது அறிவை பயன்படுத்தி அவனை நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வி இங்கு முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் ஈமான் என்பது அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அல்லாஹு தஆலாவின் உள்ளமையை அவனுடைய படைப்புகளான மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றில் விரவிக் கிடக்கின்ற அத்தாட்சிகள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த படைப்புகளும் அதில் காணப்படுகின்ற அத்தாட்சிகளும் மனித அறிவு அறிந்து கொள்ளும் எல்லைக்குள் தான் இருக்கின்றன என்பதால் மனிதன் அவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹு தஆலா ஆகிய தனது படைப்பாளனை அறிந்து கொள்கிறான். ஆகவே அல்லாஹ்(சுபு)வின் (Existence) உள்ளமை பற்றிய நம்பிக்கை அறிவார்ந்ததும் மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கு உட்பட்டதுமாகும். அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை மனிதன் அறிந்து கொள்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஏனெனில் அவன் (அல்லாஹு தஆலா) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் இருக்கிறான். ஆகவே அல்லாஹு தஆலா மனிதனின் அறிவாற்றல் திறனுக்கு அப்பால் இருக்கிறான் என்பது இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது. ஏனெனில் அதன் எல்லை வரையறைக்கு உட்பட்டது. மனித அறிவின் வரையறைக்கு உட்பட்ட இந்த தன்மை ஈமானை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கிறதே தவிர ஈமானில் குறையையும் ஐயப்படையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மேலும் அல்லாஹு தஆலாவின் மீதுள்ள ஈமானை அறிவின் மூலமாக நாம் அடைந்து இருப்பதால் முழுமையாக நாம் அவனது (அல்லாஹு தஆலா) உள்ளமையை அறிந்தவர்களாக இருக்கிறோம். அல்லாஹு தஆலா உள்ளமை பற்றிய நமது புலன் அறிவு நமது பகுத்தறிவோடு இணைந்து இருப்பதால் அவன்(அல்லாஹு தஆலா) உள்ளமைப் பற்றிய நமது புலன் உணர்வு (Sensation) முற்றிலும் நிச்சயமான ஒன்றே.
எனவே மேற்குறிப்பிட்ட விஷயம் படைப்பாளனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளுதலையும் அவனுடைய (அல்லாஹு தஆலா) தெய்வீக பண்புகள் குறித்து உறுதியான நம்பிக்கையையும் நமக்குள் கொண்டு வருகிறது. இவை எல்லாம் அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் நமது அறிவுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளும்படி செய்கின்றன. அதே வேளையில், நாம் அவன் (அல்லாஹு தஆலா) மீது மிக உறுதியான ஈமான் கொண்டவர்களாக இருக்கிறோம். நமது அறிவின் வரையறைக்கு உட்பட்ட தன்மையையும் அல்லாஹு தஆலாவின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை என்று நமக்கு அவன் (அல்லாஹு தஆலா) அறிவித்து கொடுத்ததையும் நாம் முற்றிலும் ஏற்றுக் கொண்டு அதற்கு உடன்பட்டவர்களாக இருக்கின்றோம். இது இயல்பாகவே மனித அறிவின் பலவீனமான தன்மையாகும்.
ஒப்பு நோக்கி அறிந்து கொள்ளும் வரையறைக்கு உட்பட்ட பாங்கிலேயே அது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு எல்லையற்ற அறிவுத்திறன் தேவைபடுகிறது. இத்தகைய அறிவை மனிதன் பெற்றிருக்கவுமில்லை, பெற்றுக் கொள்ளவும் அவனால் முடியாது.
source: http://warmcall.blogspot.in/2009/11/01.html