Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இருவரும் ஒருவரே!

Posted on February 21, 2013 by admin

இருவரும் ஒருவரே!             

இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்…

ஓரிறைக்கொள்கையின் ஒளிவெள்ளம் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்…

கி.பி 634 ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.

பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:

“மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.

மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது…

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்…

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.”என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல… அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர… குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்…

ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே! அவர்தான்…. உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று…

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சுமார் 22 ண லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர் ரளியல்லாஹு அன்ஹு.

முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்…

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

source:www.naanmuslim.com/2012/04/blog-post_28.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

38 + = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb