தீண்டாமைக்கு நிரந்தரத் தீர்வு இஸ்லாமே! (1)
ஒரு மனிதன் தன்னைப் பேரன்ற சக மனிதன் ஒருவனை பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவதுதான் தீண்டாமை என்பதாகும் தீண்டாமையின் அளவுகோலைப் பொருத்தவரை நம் நாட்டில் காணப்படும் வெறும் இரட்டை குவளை முறைகள் அல்லது காலில் செருப்பணிந்து செல்வதற்கு விதிக்கப்டும் தடைகள் மற்றும் அல்ல வாழ்வின் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஒரு மனிதன் இன்னெரு மனிதனை தாழ்ந்தவனாகக் கருதுகின்றானோ அவையெல்லாமே தீண்டாமைதான்.
தீண்டாமைக்கானக் காரணங்களைப் பொருத்தவரை நாட்டுக்கு நாடு அவை வித்தியாசப்படும் மேலை நாடுகளைப் பொருத்தவரை நிறத்தின் அடிப்படையிலும் நம்முடைய இந்தியாவை பொருத்தவரை ஜாதியின் அடிப்படையிலும் அந்த காரணம் இருக்கின்றன தீண்டாமை இன்றோ நேற்றோ தோன்றிய ஒன்றல்ல மனித சமுதாயம் பல்கிப் பெருகி கூட்டம் கூட்டமாக மனிதர்கள் வாழத் தெரடங்கிய போதிருந்தே தீண்டாமை என்ற தீய குணமும் மனிதர்களுக்குள் வளரத்தெரடங்கியது.
இன்றைய நவீன அறிவியல் காலம் வரை மனித சமுதாயத்தில் வேறூன்றி இருப்பதைப் பார்க்கிறோம் உதாரணமாக மிகச்சமீபத்தில் நடந்து மக்கள் மறந்து விட்ட ஏழு பேரை பழிவாங்கிய பரமக்குடி துப்பாக்கிச் சூட்டையும் சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சி எஸ் கர்ணண் அவர்கள் தான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்க்காக சக நீதிபதிகள் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியப்படுத்திய நிகழ்ச்சியுமே தீன்டாமை எனும் விஷம் எப்படி அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவியுள்ளது என்பதறக்குச் சான்றாகும்.
எனவே மற்றுள்ள மதங்கள் எப்படி கடவுளின் பெயரால் தீண்டாமை எனும் தீமையை மனிதர்களின் மனங்களில் விதைக்கின்றன என்றும் இவைகள் கடவுளின் பெயரால் தீண்டாமையை நியாயப்படுத்தும் அதேவேளை கடவுள் மறுப்பு கொள்கையான நாத்திகக் கொள்கை தீண்டாமையை அழிக்க உதவியதா அல்லது தீண்டாமையை வளர்க்க உதவியதா என்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வான இஸ்லாம் தீண்டாமையை எவ்வாறு ஒழித்து கட்டியது என்பதையும் பார்ப்போம்
தீண்டாமையைத் தூண்டும் இந்து மதம்
உலகிலேயே மிக அதிகமாக தீண்டாமையைத் தூண்டுவதில் இந்து மதத்தினர்களுக்கு ஈடு இணை வேறொன்றுமில்லை என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனென்றால் கடவுளே மனிதனை ஏற்றத்தாழ்வுள்ளவனாகவும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற அடிப்படையில்தான் படைத்துள்ளார் என்று கூறி தீண்டாமை எனும் மிகப்பெரும் மனித அநீதியை வர்ணா சிரம தர்மம் எனும் பெயரில் இந்து மத வேதங்கள் கடுமையாகப் போதிக்கின்றன பல நூற்றாண்டுகளாக இந்து மத்தில் இருந்து வரும் தீண்டாமையை நாம் அனு தினம் கண்டுவருவதால் அதற்க்கு தனியாக ஆதாரம் சமர்பிக்கத்தேவையில்லை என்றாலும் இந்து மத வேதங்களே சொல்லும் தீண்டாமையை கீழே பார்ப்போம்
பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார். (மனு தர்மம் 2:35)
பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.
பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.
பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.
சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.
சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வதைத்தால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும். (மனு தர்மம் 9:263-267)
வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை. (மனு தர்மம் 10:276)
பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும். (மனுதர்மம் 10:277)
இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு. (மனு தர்மம் 11:33)
பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும். (மனு தர்மம் 3:23) ஆதாரங்கள் உதவி ஏகத்துவம் மாத இதழ்
இப்படியெல்லாம் பல்லாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை தீண்டத்தகாதவர்களாகவே வைத்திருந்தது இந்து மதம் ஆனால் இன்று இந்துத்துவவாதிகள் இந்துக்கள் எல்லோரும் சமம் என்று நாடகமாடுவதற்க்குக் காரணம் பாசிச சிந்தனையை இந்தியாவில் நிருவுவதற்க்காகவும் அடிமைச் சங்கிலியை உடைத்தெரிந்து கொண்டு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிவந்து கொண்டிருப்பதும்தான் முக்கிய காரணம் மற்றபடி இந்துமத வேதங்கள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு உன்மையான இந்துவாக இருந்து கொண்டு ஜாதிகள் இல்லையென்று ஒருவராலும் சொல்லமுடியாது
தீன்டாமை பற்றிய யூத மதத்தின் நிலைபாடு
குறிப்பு யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு பொதுவான வேதமாக இருப்பதால் கீழே நாம் ஆதாரமாகக் கூறியிருக்கும் தீன்டாமையைத் தூன்டும் பைபிளின் வசனங்கள் இருமதத்தவர்களுக்குமே பொருந்தும்
ஒரு மனிதன் தன்னைப்போலவே உள்ள இன்னொரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் இழிபிறவியாக கருதும் தீண்டாமை எனும் இந்த செயலை உலகிலேயே மிக அதிகமாக தூண்டி விடுவது இந்து மதமும் யூத மதமும்தான் யூத மதத்தை பொறுத்த வரை தங்கள் மதத்தவர்களைத் தவிர உள்ள அனைத்து மனிதர்களும் தாழ்ந்தவர்கள் என்பதுதான் யூதர்களின் நிலைபாடு.
எந்த அளவுக்கென்றால் மனிதர்களுக்குள்ளேயே யூத மதத்தினர் தனி இனம் என்று கூட யூதர்களால் சொல்லப்பட்டது யூதர்களின் இந்தப் பொய்கூற்றை அம்பலப்படுத்துவதற்க்காக பல நாடுகளில் வாழும் யூதர்களின் மரபனுவையும் (DNA) அந்த நாட்டை சேர்ந்த வேறு மதத்தவர்களின் மரபனுவையும் பரிசோதித்துப் பார்த்து ஒரு நாட்டில் வாழும் மாற்றுமதத்தவர்களின் மரபனு போல்தான்அந்த நாட்டில் வாழும் யூதர்களின் மரபனுவும் உள்ளது அதனால் மற்ற மனிதர்களுக்கும் யூதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அவர்களும் மற்ற மனிதர்களைப் போன்றவர்கள்தான் என்று நிரூபிக்கப்பட்டது
கிருஸ்தவத்தில் தீன்டாமை
சாந்தி சமாதானம் என்று கூறி கிருஸ்தவப்பிரச்சாரத்தை முன்னெடுக்கும் கிருஸ்தவ மிஷினரிகள் கிருஸ்தவ மதத்திற்க்கு வந்தால் எல்லோரும் சமம் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம் உன்மையிலேயே கிருஸ்தவ மதத்தில் ஜாதிகள் இல்லையா என்பதை ஆராய்வதற்க்கு மிகப்பெரும் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்ல்லை தாழ்த்தப்பட்ட கிருஸ்தவர்கள் நாடார் கிருஸ்தவர்கள் என்று கிருஸ்தவத்தில் இருப்பதே கிருஸ்தவத்திலும் ஜாதிகள் உள்ளது என்பதற்க்குப் போதமான ஆதாரமாகும்.
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட கிருஸ்தவர்கள் சர்ச்சைப் பூட்டி போராட்டம் செய்த நிகழ்ச்சியை நாம் எல்லோரும் செய்திகளில் கண்டோம் அந்தப் பிரச்சினைக்கும் கிருஸ்தவத்தில் உள்ள ஜாதியே காரணம் இனி பைபிளில் உள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்போம்
அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:10)
ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:12)
ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.
அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அப்போது அவருடைய சீடர்கள் வந்து, “இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்” என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர் “காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.
அவள் வந்து, “ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அதற்கு அவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!” என்றாள். (மத்தேயு 15:22-27)
இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.
கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை. (செகண்ட் கிங் 5:15)
நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை. (கேல் 2:15)
-ஆதாரங்கள் உதவி ஏகத்துவம் மாத இதழ்
தீன்டாமைக்கு நாத்திகம் தீர்வாகுமா?
நாத்திகக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டால் ஜாதிகள் ஒழிந்து அதன் மூலம் தீன்டாமை ஒழியுமா என்றால் கண்டிப்பாகத் தீன்டாமை ஒழியாது என்பதுடன் இப்பொழுது உள்ளதை விட மிக அதிகமாக தீன்டாமைக் கோரத்தாண்டவமாடும் என்பதுதான் உன்மை ஏனென்றால் தீன்டாமையை நியாயப்படுத்த தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் சொல்லும் காரணம் கடவுள் சிலரை உயர்ந்தவனாகவும் வேறு சிலரை தாழ்ந்தவர்களாகவும் படைத்திருக்கிறார் என்பதுதான் இப்பொழுது நாத்திகம். அதாவது இறைமறுப்பு கொள்கைக்கு வருவோம் கடவுளே சிலரை உயர்ந்தவர்களாகவும் சிலரைத் தாழ்ந்தவர்களாகவும் தான் படைத்திருக்கிருக்கின்றான் என்றால் அப்படிப்பட்ட கடவுளே தேவையில்லை என்று சொல்லிய நாத்திகர்கள் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்தார்கள். அதாவது மனிதனைக் கடவுள் படைக்கவில்லை பரிணாம அடிப்படையில் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று சொன்னார்கள்.
இவர்களின் இந்த வாதப்படிப் பார்த்தால் இந்து மதத்தில் உள்ளதை விட பரிணாமவியல் கோட்பாடுதான் அதிகமாகத் தீன்டாமையைத் எப்படி என்றால் ஜாதி அடிப்படையில் தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் குறிப்பிட்ட அந்த மதத்திற்க்குள்தான் நிற்க்கும் மற்றுள்ள மதத்தவர்களை அது குறிக்காது அத்துடன் குறைந்த பட்சம் குறிப்பிட்ட அந்த ஜாதியினராவது தங்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் இருப்பார்கள்
ஆனால் பரிணாவியல் கோட்பாட்டின்படி அதற்க்குக் கூடச் சாத்தியமில்லை ஏனென்றால் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதால் என்னுடைய மூதாதையக் குரங்கு வேறு உன்னுடைய மூதாதையக் குரங்கு வேறு என்று சொல்லி மனிதன் நிறம் தோற்றம் பழக்கவழக்கம் கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையுமே உயர்வு தாழ்வு கற்பித்துக்கொள்ளக்கூடிய காரணியாக பயன்படுத்திக் கொள்வான், பயன்படுத்தியுமிருக்கிறான்.
உதாரணமாக ஹிட்லரைச் சொல்ல்லாம் நாஜிக்கள்(ஆரிய இனம்) தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் மற்றெல்லா மனிதர்களும் அவர்களை விடத் தாழ்ந்தவர்களே என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொடுரமாகக் கொன்றதற்க்கும் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று போர்வெறிபிடித்து அலைந்ததற்க்கும் ஹிட்லர் கொண்டிருந்த இந்தப் பரிணாவியல் கோட்பாடே காரணமாக அமைந்தத அதேபோல் கருப்பர்கள்(நீக்ரோ) ஒருபோதும் வெள்ளையர்களுக்குச் சமமாக ஆகமுடியாது என்று ஹிட்லர் சொன்னதும் இதே கோட்பாட்டை வைத்துத்தான்.
ஹிட்லர் மட்டுமல்ல அன்றைய அமெரிக்கா ஐரோப்பிய வெள்ளையர்கள் கருப்பின மக்களை மிருகத்தைவிடக் கேவலமாகக் கருதியதற்க்கும் இந்தப் பரிணாமவியல் கோட்பாடே காரணம் நாம் இதைச் சொல்லும்போது ஹிட்லர் செய்தால் அது ஆதாரமா மற்றுள்ள நாத்திகர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று நாத்திகர்கள் கேட்பார்கள் நாமும் எல்லா நாத்திக நன்பர்களையும் அப்படிச் சொல்லவில்லை.தீன்டாமையைத் தூன்டுவதற்க்குக் பரிணாமவியலில் உள்ள இதுபோன்ற கொள்கைகள் காரணமாக இருக்கின்றதா இல்லையா என்றுதான் கேட்கிறோம்.
எனவே பரிணாமவியல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால் ஐரோப்பிய வெள்ளையர்களும் ஆப்பிரிக்க்க் கருப்பின மக்களும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக வாழமுடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள் எனவே ஜாதி அடிப்படையிலான தீன்டாமையை விட நாத்திகக்கொள்கையின் அடிப்படையான பரிணாமவியல் கோட்பாடுதான் அதிகமாகத் தீன்டாமையைத் தூன்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதுவரை மற்றுள்ள மதங்களும் சித்தந்தங்களும் எப்படித் தீன்டாமையைத் தூன்டுகின்றன என்று பார்த்தோம் இனி இஸ்லாம் இந்தத் தீன்டாமை எனும் தீமையை எவ்வாறு ஒழித்துக்கட்டியதென்றும் தீன்டாமையை ஒழிக்க இஸ்லாம் என்னென்ன கொள்கைகளையெல்லாம் எல்லாம் முன்வைக்கிறது என்பதை இறைவன் நாடினால் அடுத்த தொடரில் பார்ப்போம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ கிளிக் செய்யவும்.