Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தீண்டாமைக்கு நிரந்தரத் தீர்வு இஸ்லாமே! (2)

Posted on February 20, 2013 by admin

  தீண்டாமைக்கு நிரந்தரத் தீர்வு இஸ்லாமே! (2) 

இனி இஸ்லாம் எவ்வாறு தீண்டாமையை ஒழித்தது என்று பார்ப்போம்

தீண்டாமை எனும் கொடிய விஷத்தைப் பொருத்த வரை அது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒன்றல்ல மனித வரலாறு தொடக்கம் முதலே தீண்டாமையும் இருந்துவந்துள்ளது. எனவே தான் இந்த நவீன காலத்தில் வந்து தீண்டாமைக்குத் தீர்வு சொல்கிறோம் என்பது உன்மையான தீர்வாகாது என்கிறோம்.

ஒரு பிரச்சினை உருவாகும்போதே அதற்க்குத் தீர்வும் சொல்லவேண்டும் அதேநேரம் அந்தத்தீர்வானது எக்காலத்திற்க்கும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் அது முக்காலும் அறிந்த படைத்த இறைவனால் மட்டுமே முடியும். அந்த வகையில் தீண்டாமை என்றைக்கு உருவானதோ அன்றைக்கே அதற்க்குரிய தீர்வையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

ஆம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் இஸ்லாம் எனும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக அல்லாஹ் வழங்கியதே அந்தத்தீர்வு.

தீண்டாமைக்கான காரணத்தை ஒழித்த இஸ்லாம்

ஒரேயொரு அடிப்படைக் காரணத்தை மனிதர்கள் நம்பியதால் தான் மனித சமுதாயத்தில் தீண்டாமை உருவாகியுள்ளது அது என்ன காரணம் என்றால் மனிதர்கள் படைக்கப்படும்போதே பல தரத்தினர்களாகத்தான் படைக்கப்ட்டுள்ளனர் என்றும் அல்லது பரிணமிக்கும்போதே பல பிரிவினர்களாக பல தரத்தில் தான் பரிணமித்தார்கள் என்றும் உன்னுடைய மனித மூலம் வேறு என்னுடைய மனித மூலம் வேறு என்று மனிதர்கள் நம்புவதுதான். எனவே இதை ஒரு மனிதனின் உள்ளத்தில் இருந்து அகற்றிவிட்டாலே போதும் சமுதாயத்திலிருந்து தீண்டாமை தானாகவே ஒழிந்து விடும்.

இப்படிப்பட்ட தீய என்னத்தை மனித உள்ளங்களில் இருந்து அகற்றி நீயும் நானும் ஆணும் பெண்ணும் மனிதர்கள் அனைவருமே ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள்தான் என்பதை இஸ்லாம் எவ்வாறு மனித உள்ளத்தில் விதைக்கிறது என்று பாருங்கள்

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங் களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49: 13)

இந்த ஒரு இறைமறை வசனமே போதும் தீண்டாமையை ஒழிக்க இந்த வசனம் கூறும் அடிப்படையை உன்மையாக நம்பக்கூடிய ஒரு மனிதன் உள்ளத்தில் கடுகளவேனும் தீண்டாமை எனும் மனநோய் இருக்கமுடியுமா என்று சிந்தித்துப்பாருங்கள்

பிற மனிதர்களைத் தாழ்வாகக்கருதினால் சொர்க்கம் இல்லை “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மக்களைக் கேவலமாக என்னுவதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லீம் 131)

மேற்காணும் நபிமொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிற மனிதர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதே எவ்வளவு பெரிய பாவம் நான் உயர்ந்தவன் பிற மனிதன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு ஒரு முஸ்லீமுடைய உள்ளத்தில் இருந்தாலே அவன் சொர்க்கம் செல்லமுடியாது என்று கூறியதிலிருந்தே இஸ்லாத்தில் தீண்டாமை எவ்வளவு பெரிய பாவச்செயலாக உள்ளததென்பதை அறியலாம்

தீண்டாமை என்பது அறியாமைக்காலச் செயல்

ஒருமுறை ஒரு ஸஹாபி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துதீண்டாமையின் ஓரங்கமாகக் கருதப்படும் நிற அடிப்படையிலான விஷயத்தைச் சொல்லி கருப்பியின் மகனே என்று கூறிவிட்டார்கள்

‘நான் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! (புகாரி 30)

இந்த ஹதீஸில் அபூ தர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கருப்பினத்தவரான(நீக்ரோ) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கருப்பியின் மகனே என்று கேவலமாகச் சொல்லிவிட்டார்கள் அதற்க்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அறியாமைக்காலப் பழக்கமுள்ளவராகவே(இஸ்லாத்திற்க்கு முந்திய காலம்) உள்ளீர் அதாவது முஸ்லீம் ஒருபோதும் செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டீர் என்று கடிந்து கொண்டார்கள் இதைக்கேட்ட அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே தான் இவ்வளவு பெரிய தவறைச்செய்துவிட்டோமே என்றென்னி பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் போய் எந்தளவுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முன்மாதிரி

மனிதர்கள் அனைவரும் ஒரேயொரு ஆண் பெண்ணிலிருந்து உருவானவர்கள்தான் என்ற இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையே தீண்டாமையை ஒழிக்க போதுமானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தவும் இறைத்தூதர்களுக்கு இறைவன் கட்டளையிட்டிருந்தான் அதன்படி இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய சமுதாயத்தில் நிலவி வந்த தீண்டாமையை எவ்வாறு ஒழித்தார்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது

‘மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?’ என்று அவர்கள் கூறினர்.’அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார். அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?’நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை’ ‘நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை’ (என்றும் கூறினார்.) ‘நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!’ என்று அவர்கள் கூறினர். ‘என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்’ என்று அவர் கூறினார். ‘எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!’ (என்றும் கூறினார்). (திருக்குர்ஆன் 26 111 118)

மேற்காணும் இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது நூஹ்அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து உம்மிடம் உள்ள தாழ்ந்தவர்களை விரட்டிவிட்டால் நாங்கள் உன்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்கா குரைஷிகள் சொன்னது போல்) அதற்க்குத்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை என்பதுடன் என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தும் உள்ளார்கள்

ஆக இப்படிப்பட்ட இஸ்லாமியக் கொள்கையெல்லாம் நம்பியுள்ள ஓர் உன்மையான முஸ்லீமிடம் தீண்டாமை எனும் தீயகுனம் நூறில் ஒரு பங்குகூட இருக்க முடியாது அப்படி இருந்தால் அவர் உன்மையான முஸ்லீமாக இருக்கமுடியாது என்பதிலிருந்தே தீண்டாமையை ஒழிக்க இஸ்லாம் தான் ஒரே வழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சகோதர சகோதரிகளே தீண்டாமை பற்றிய இஸ்லாமிய நிலைபாட்டை விளக்கும் இந்தப்பதிவு முழுமையானதல்ல ஏகத்துவம் மாத இதழ் இது பற்றிய ஒரு முழுமையான கட்டுரையை வெளியிட்டுள்ளது அதைப்படித்தால் இறைவன் நாடினால் கூடுதலான தெளிவைப் பெறலாம் அதைக்காண இங்கே க்ளிக் செய்யவும் ஏகத்துவம் நவம்பர் மாத முழுவதும் ஒரேதொகுப்பாக இருப்பதால் அதில் உள்ள இரண்டாம் தலைப்பான தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே என்பதுதான் அந்தக்கட்டுரை

அல்லாஹ் மிக அறிந்தவன்

source:http://neermarkkam.blogspot.in/2011/11/theendamai-theervu-islam-2.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb