Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்?!

Posted on February 15, 2013 by admin

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்?!

மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க. ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க.

அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க.

கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்…., இப்படி எத்தனை எத்தனையோ…, ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, சக ஆண்பதிவர்களுக்கு இந்த டிப்ஸ்.

இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க.

* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.

* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை,முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.

* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.

* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்,நூல் தெரிந்தால் ஓ.கே!

* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்றுநினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இன்னொரு பகுதி தண்இணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.

*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்

*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும் அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

  அசைவ பிரியர்களுக்கு: 

*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும். மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்

*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.

*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.

ஆட்டுகறி வாங்கும்போது கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

70 − 64 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb