தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?
ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5239)
தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?
“எவர் கஹ்ஃப் சூராவின் ஆரம்ப 10 ஆயத்துக்களை மனனமிட்டாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
“எவர் கஹ்ஃப் ஸூராவின் ஆரம்ப மூன்று ஆயத்துக்களை ஓதுவாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
“தஜ்ஜால், நான் உங்களிடையே இருக்கும்போது வெளியானால் நானே உங்கள் முன்னிலையில் அவனை வாதிட்டு வெல்வேன்.
நான் உங்களிடையே இல்லாத்போது அவன் வெளியானால் ஒவ்வொரு மனிதரும் அவனை வாதிட்டு வெல்பவராவார்.
அல்லாஹுதஆலா ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் என் சார்பாக பாதுகாவலனாக (கலீஃபாவாக) இருக்கிறான்.
நிச்சயமாக தஜ்ஜால் கடுமையான சுருட்டை முடியுள்ள வாலிபனாகும். அவனது கண் வெளியே பிதுங்கியதாக இருக்கும். நான் அவனை அப்துல் உஸ்ஸா இப்னு கத்ன் என்ற மனிதனுக்கு ஒப்பாக கருதுகிறேன்.
உங்களில் அவனை அடைந்து கொள்பவர் அவன் மீது “கஹ்ஃப்” ஸூராவின் ஆரம்ப வசனங்கலை ஓதட்டும். நிச்சயமாக அவ்வசனங்கள் அவனது குழப்பத்தை விட்டும் பாதுகாக்கக்கூடியதாகும். (நூல்: முஸ்லிம்)