Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நாட்டின் சுதந்தரத்திற்காக தங்களை தந்த மக்களை கண்ணியப்படுத்தாவிட்டாலும் கேவலப்படுத்தாதீர்கள்!

Posted on February 1, 2013 by admin

நாட்டின் சுதந்தரத்திற்காக தங்களை தந்த மக்களை கண்ணியப்படுத்தாவிட்டாலும் கேவலப்படுத்தாதீர்கள்!

o ”அணைத்து சமூகங்களும் முன்னேறும்போது, சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரோடு சண்டை அடித்துக்கொண்டு கிட்டத்தட்ட 100 வருடங்கள் முஸ்லிம்கள் பின்தங்கிவிட்டார்கள்” என்று அப்பேத்கர் கூறியதை கமல் இன்று நினைவு படுத்துகிறார்.

பிறகு ஏன் சார் மேலும் மேலும் எங்களை பிற்படுத்த முற்படுகிறீர்?

உங்கள் படம் வெளிவரும் முன்னே, நாங்கள் போதிய விளக்கம் கொடுத்தும், பார்த்தியா தாலிபான் பற்றி படம் எடுத்தால் முஸ்லிம்கள் எதிர்கிறார்கள் என்று தினமணி போன்ற பத்திரிக்கைகள் முஸ்லிம் எதிர்பலையை உருவாக்க பார்க்கிறது. அப்போ வெகுஜனதுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்?!

படம் உள்ளேயும் அரசியல், வெளியேயும் அரசியல்.

படம் உள்ளேயும் நடிப்பு, வெளியேயும் நடிப்போ நடிப்பு!

o நூறு கோடி ருபாய் கமலுக்கு படம் மூலம் நஷ்டம்.முஸ்லிம்கள் சுதந்தரத்திற்கு பாடுப் பட்டதால் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தில் நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றனர் என்றால் எத்தனை கோடி நஷ்டம்.எவ்வளவு இழப்பு.

நாட்டின் சுதந்தரத்திற்கு தங்களை தந்த மக்களுக்கு சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முன்னேற்றத்தால் ஏற்ப்பட்ட வளங்கள் பகிர்வில் புறக்கணிப்பில் எவ்வளவு நஷ்டம்.

அப்போதும் முஸ்லிம்கள் யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதாக சொல்ல வில்லை.

 

o கமல் கடனில் இருந்த போது வராதவர்கள்…

தீ டி ஹச் பிரச்சனையின்போது வராதவர்கள் …

சண்டியர், தசாவதாரம் போன்ற படங்கள் பிரச்சனைக்கு ஆளானபோது வராதவர்கள்…

இன்று ஒரே குரலில் அவருக்காக குரல் கொடுகிறார்கள்.

அவரது துறையை சார்ந்தவர்கள் கொடுத்தால் கூட ஒத்துக்கொள்ளலாம்…

மீடியாவும், விவாதத்தில் கலந்து கொள்ளும் பல்வேறு ஊடகவியளரும் படத்தை பார்க்காமலேயே கண் மூடித்தனமாக நம்மை எதிர்கிறார்கள்.

காரணம், கமலை எதிர்ப்பது முஸ்லிம்கள்.

அனைவராலும் போற்றப்படும் தமிழக அரசையே இவர்கள் சாட ஆரம்பித்து உள்ளார்கள்.

 

o தற்போது கமலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ குரல் கொடுக்கலாம்.

ஆனால் அவர்களுக்கு சரியாக, சுருக்கமாக, ஒத்த கருத்தை நாம் பதியவைக்கவேண்டும்.

தமிழில் போதுமான அறிஞர்கள் இருந்தாலும்… ஆங்கிலத்தில் பேச்சாளர்களை இனம் கண்டு தயார் செய்ய வேண்டும்.

பேச்சில் ஆவேசம் வேண்டாம்

 

o சுயபரிசீலனை: பார்வைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். விஸ்வரூபம் படமும் அப்படிதான் இருக்க போகிறது. கமலுக்கு நியாமாகவும், முஸ்லிம்களுக்கு அநியாயமாகவும், பொது ஜனங்களுக்கு சினிமாவாகவும்.

நம்முடைய எதிர்ப்பு பொது மக்களுடைய பார்வையில் நியாயமற்றதாகவும், சகிப்புமின்மயாகவும், கமலுக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுதுபவயாகவும் பிரதிபளிதிருகிறது.

நாம் அமெரிக்க படத்திற்கு ஆர்பாட்டம் செய்தபோது, பேசி தீர்த்திருக்கலாமே என்று மேடியாகளும், வெகுஜன மக்களும் கூறினார்.

விஸ்வரூப படத்தை அவர்கள் சொன்னது போல் அணுகினால், ஏன் முஸ்லிம்கள் உங்கள் சக்தியை அரசிடத்தில் கான்பிகிரீர்கள், நேரடியாக தணிக்கை குழுவை அணுகி இருக்கலாமே என்று கூறுகிறார்கள்.

தணிக்கை குழுவை நாம் சந்திக்க இருக்கும் நிலையில், வேறு படத்திற்கு தணிக்கை குழு மூலம் பிரச்னை வந்தால், ஏன் சினிமாவில் தலை இடுகிறீர்கள் என்பார்கள். நாம் என்ன செய்தாலும் இவர்கள் குறை கூறிதான் திரிவார்கள்.

ஆயினும்… ஆயினும்….

1) நம்முடைய அணுகுமுறை இஸ்லாத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும். வன்முறையால் வன்முறையை ஒழிக்க முடியாது. இது இஸ்லாத்தின் நிலைபாடும் கிடையாது. இந்தியாவில் சமிபத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ஒவ்வொரு ஆர்பாட்டத்திலும் துப்பாக்கி சூடு நடந்தது. அதற்காக நங்கள் பயந்தவர்கள் அல்ல. ஆயினும் எந்த பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் செய்யபட்டதோ அது கைவிடபட்டது. மறக்கவும் பட்டது. இது இஸ்லாத்தின் வழிமுறையா?

2) நாம் எவ்வளவு ஆயிரத்தை கூட்டினாலும், மீடியாக்கள் குறைத்தே காண்பித்து வருகிறது. ஏன் நம்மிடம் ஒரு மீடியா இல்லை. இது போன்ற இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சனைகளில் ஏன் ஒற்றை கருத்து இல்லை?

3) நம்மை சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு சட்ட தீர்வு இருந்தும், சட்டத்தை போதிய அளவிற்கு ஏன் நம் பயன்படுத்துவதில்லை?

4) இதுவரை நாம் எதிர்த்தவர்கள் டெல்லி, இஸ்ரேல், அமெரிக்க அல்லது இந்திய அரசாக இருந்தது. அவர்களுக்கு நம்முடைய எதிர்ப்பு நேரடியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது. நம்ம புதிய கோணத்தில் பிரச்சனையை சந்தித்து இருகிறோம். இங்கே எதிரி அருகில் இருக்கிறார். பொருள் பலமும், ஆதிக்க பலமும் கொண்ட ஒரு துறையை சார்ந்து இருக்கிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அல்லாஹ்வின் உதவியை நோக்கியவர்களாக இருந்தார்களோ , அந்த அளவுக்கு மிக்க அறிவோடும், ஞானத்தோடும், பாதுகாப்பாக, நுணுக்கமாக பிரச்சனையை அணுகினார்கள். அந்த தவக்குல்(இறைவனிடம் பொறுப்பு சுமத்துதல்) மற்றும் ஆளுமையை நாம் வளர்த்து கொண்டோமா?

ஆயினும்… உலகில் எங்கும் இல்லாமல் முதல் முறையாக அல்லாஹ்வின் உதவிகொண்டு புதிய முயற்சியை எடுதிருகிறார்கள்.

ஒற்றுமை நம்முடைய மிக பெரிய பலம்.

அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் பணிகள் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + = 15

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb