Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எது கருத்து சுதந்திரம்?

Posted on February 1, 2013 by admin

எது கருத்து சுதந்திரம்?

நாட்டின் ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் கட்டிக்காக்கப்படுவதில் பெரும் பங்கை நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயலாக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆளும் வர்க்கமும் வகிக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக இதை உறுதி செய்வது நாட்டின் ஊடகத்துறை என்று சொன்னால் அது மிகையல்ல. வெகுஜன மக்களை எளிதில் சென்றடையவல்ல சக்தி, ஊடகங்களுக்கு உண்டு என்பதை பலரும் உணர்ந்துள்ளதன் பயனாய், அவை பல்வேறு சமூக நல்லிணக்கங்கள், கலாசார நெறிமுறைகள், மத ஒற்றுமைகள், அரசியல் ரீதியிலான பிரச்சாரங்கள் என நாட்டு ஒற்றுமைக்கு இந்த ஊடகங்கள் பல வகைகளில் பயன்பட்டு வருகின்றன.

மதத்தின் பெயரால் தீவிரவாதிகளாக உலா வரும மக்கள் எல்லா மதங்களிலும் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் தாண்டிய பெரும்பான்மை நடுநிலை சமூகம் என்றைக்கும் மத நல்லிணக்கத்தையும் அமைதியையுமே விரும்புகின்றது. அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக தான் நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயல்படுத்தவல்ல ஆளும் வர்க்கமும் ஊடகமும் செயல்பட வேண்டும். இத்தகைய கூட்டு ஒத்துழைப்பு (collective responsibility) இருந்தால் மட்டுமே இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட இயலும்.

இதை குறிக்கோளை முன்னிறுத்தி இந்திய நாட்டு மக்கள் பயணப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், எந்த ஆயுதத்தை பயன்படுத்தி இந்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் முயற்சி செய்கிறோமோ, அதே ஆயுததை பயன்படுத்தி இந்த நோக்கத்தை சிதைத்து, ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

இன்றைக்கு பெருவாரியான ஊடகங்களும் அரசியல் வர்க்கமும் தங்களது முழு பலத்தையும் சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்தை அடித்து ஒடுக்கவே பயன்படுத்தி வருகிறது. மதக்கலவரங்களையும் ஹிந்து – முஸ்லிம் துவேஷங்களையும் தூண்டி விட்டு அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை வஞ்சித்து பழி தீர்ப்பதை இவர்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

பாபர் மஸ்ஜித் உடைப்பு சம்பவமானாலும், அதனையொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட கலவரங்களானாலும் மும்பை வெடிகுண்டு சம்பவங்களானாலும், இறுதியாக இன்றைக்கு சமீபத்தில் நடந்த புனே, மாலேகான் வெடிகுண்டு சம்பவங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை எல்லாமே இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்கிற ஒன்றை குறிக்கோளுடனேயே நடத்தப்பட்டன.

இந்த முயற்சியின் நவீன கட்டமாக தான் ஊடகத்துறையையும் குறிப்பாக சினிமா துறையையும் இந்த சங்க பரிவார கும்பல்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் கையில் எடுத்துள்ளன.

வெகு ஜன மக்களை எளிதில் கவர்ந்திழுக்கும் இன்றைய சினிமா துறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்து விட்டால் அவை அவர்களின் பாமர மூளைக்கு எளிதில் சென்றடையும் என்கிற உண்மையை அறிந்து வைத்துள்ள இந்த கும்பல், இதற்காக மிக தீவிரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் முதல் இன்று மத வெறியன் கமல்ஹாசன் தயாரித்துள்ள விஸ்வரூபம் வரை அந்த நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக்கொள்ளும் சில அறிவு ஜீவிகள், இது போன்ற மத துவேஷத்திற்கு இடமளிக்காமல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும் என்கிற நோக்கமில்லாமல், இது போன்ற சதி திட்டங்களின் மூலம் முஸ்லிம்கள் உணர்வாலும் உடலாலும் பாதிக்கப்படுவதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இதற்கு இவர்கள் சொல்லும் ஒரே சால்ஜாப்பு அவை எல்லாம் அவர்களது கருத்து சுதந்திரம், அதை நாம் தடுக்க முடியாது என்பதாகும்.

எது கருத்து சுதந்திரம்?

மாலேகான் குண்டு வெடிப்புக்கும் நாட்டில் நடந்த இன்னும் ஏராளமான குண்டு வெடிப்புகளுக்கும் பாஜக மற்றும் சங் பரிவார கும்பல் தான் காரணம் என்று மத்திய அரசாங்கம் கூறுவதை அடிப்படையாக வைத்து ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா? இந்த அறிவு ஜீவி கும்பல் ஒத்துக் கொள்ளுமா?

மும்பை கலவரத்தின் எதார்த்த முகத்தை காட்டாமல் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வைத்து சினிமா எடுத்தானே மணிரத்தினம், அதற்கு பதிலடியாக, உண்மையில் அங்கே என்ன நடந்தது, முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார்கள்,

RSS, சங்க பரிவார, விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பல் அங்கே நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் என்னன்ன என்பதை விளக்கி ஒரு கதையை திரைப்படமாக எடுத்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? அதையும் கருத்து சுதந்திரம் என்று கூறி அனுமதிக்கும்மா இந்த கும்பல்??கோவை கலவரத்திற்கு தமிழக காவல்துறை தான் காரணம் என்று ஒருவன் சினிமா எடுத்தால் தமிழக அரசாங்கம் அத்திரைப்படத்தை அனுமதிக்குமா?

பாபர் மஸ்ஜிதை இடித்தது அப்போதைய காங்கிரஸ் மற்றும் அத்வானி தலைமையிலான பாஜக கும்பல் தான் என்பதை விளக்கி ஒருவன் படம் எடுத்தால் அதை ஒப்புக்கொள்வார்களா?

இலங்கையில் நடக்கும் போர்களுக்கும் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கும் விடுதலைபுலிகள் தான் காரணம் என்றும் அதை தடுத்து அங்குள்ள மக்களை பாதுகாக்கும் வேலையை தான் இலங்கை அரசு செய்து வருகிறது என்றும் ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா?

சர்ச்சைக்குரியதாக அறியப்படும் இது போன்ற விஷயங்களை திரைப்படமாக எடுத்தால் அதை கூட தடுப்பதற்கு கங்கணம் கட்டும் இந்த அரசு, ஒட்டு மொத்த ஒரு சமூகத்தையும் இழுவுப்படுதும் நோக்கில் திரைப்படம் எடுப்பதை மட்டும் கருத்து சுதந்திரம் என்கிற போர்வையில் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய விஷமிகள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ள உரிமை என்பது உண்மையாக இருக்குமானால் முல்லை பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் துரோகத்தின் காரணமாக உடைந்து அதனால் பல்லாயிரக்கணக்கான கேரளா உயிர்கள் பலியாயின என்று விளக்கி எடுக்கப்பட்ட திரைப்படதையும் அதே உரிமை கொண்டல்லவா தமிழக அரசு பார்த்திருக்க வேண்டும்?

அதை ஏன் தடுத்தார்கள் ?

கருத்து சுதந்திரம் என்கிற பெயரை சூட்டிக்கொண்டு எதை வேண்டுமானாலும் சமூகத்தில் விதிக்கலாம் என்கிற வாசலை இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்குகிரார்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழுவுபடுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா?

கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுத்த இந்த கமலஹாசன் இதே சுதந்திரத்தை பயன்படுத்தி மாலேகான் தீவிரவாதத்தை பற்றி படம் எடுப்பாரா? நாட்டின் பெருவாரியான குண்டு வெடிப்புகளுக்கு சங்க பரிவாரத்தின் அந்த பெண் சாமியாரும் அவளுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கும் பாஜகவும் தான் காரணம் என்ன்பதை விளக்கி படம் எடுப்பாரா?

இதே உரிமையை பயன்படுத்தி குஜராத் கலவரத்தை பற்றியும் அதற்கு முழு முதற் காரணமான நரேந்திர மோடியை விமர்சனம் செய்தும் படம் எடுப்பாரா? அந்த திராணி இருக்கிறதா இவருக்கு?

முஸ்லிம்களை பிடித்து எங்கள் காளிக்கு பலி கொடுப்போம் என்று பச்சையாக தீவிரவாத விதையை இட்டுள்ள இந்து முன்னணி, இவர்களின் தீவிரவாதத்தை படம் எடுத்து மக்கள் முன் வெளிச்சம் போட்டு கட்டும் திராணி இவருக்கு இருக்கிறதா?

எந்த பாமரனானாலும் அவனை மூளை சலவை செய்து, தங்களது தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் RSS இன் உண்மை முகத்தை எந்த ஊடகமாவது வெளிக்காட்டியதா?முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே போன்றவர்களின் உண்மை கூற்றுக்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுக்க துப்பு கெட்டவர்கள், அமைதியையும் சாந்தியையும் விரும்பக்கூடிய முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டும் பச்சை துரோகத்தை செய்கிறார்கள் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் தான் என்பதை அடையாளம் கண்டு கொள்ள இதை விட வேறு ஆதாரம் அவசியமில்லை.

ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி சொல்வார்கள். Call the dog mad and then kill it ! அதாவது, தெருவில் அமைதியாக சென்றிருக்கக்கூடிய நாயை அடித்துக்கொன்று விட்டால் ஏண்டா அப்பாவி, வாயில்லா ஜீவனை கொலை செய்தாய் என்று பலரும் கேட்டு விடுவார்கள் என்பதால் முதலில் அந்த நாய்க்கு வெறிநாய் பட்டம் சூட்டி விட்டு அதன் பிறகு கொலை செய்து விடுவது. பிறகு யாரும் நியாயம் கேட்க வர மாட்டார்கள். அதை போல இஸ்லாம் என்கிற ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் அந்த இனத்தின் உண்மை முகத்தை மறைத்து, உண்மைகளை திரித்து, இஸ்லாமும் புனித குர் ஆனும் கற்பிக்கக்கூடிய சட்டங்களில் சேற்றை வாரி பூசி, இது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஒரு இனம் தான் என்கிற செய்தியை மக்கள் மனதில் விதைத்து அதன் பிறகு சிறிது சிறிதாக அழிக்க நினைக்கின்றனர்.

அந்த நோக்கத்தை அடைவதற்கான அடுத்தடுத்த படிகள் தான் இந்த அயோக்கியன் கமல்ஹாசனும் அவனுக்கு உறுதுணையாய் நின்று அவற்றுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு வரும் சங்க பரிவாரங்களும் செய்து வரும் சூழ்ச்சிகள்.

”அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.” (திருக்குர் ஆன் 9:32)

source:http://nashidahmed.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb