முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியது ஏன்? – சிறு வரலாற்றுப் பார்வை
பல நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த முஸ்லிம்கள் தங்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட ஆங்கிலேயர்களிடம் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டிருந்தனர். அவர்களின் மொழியான ஆங்கிலத்தையும் ஆதிக்க மொழியாகவே கருதினர்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவை நிர்வகிக்க இராணுவத்துறை, காவல்துறை, வருவாய்துறை போன்ற துறைகளை உருவாக்கினர்.
இந்த துறைகளை நிர்வகிக்க பல ஊழியர்கள் தேவைப்பட்டனர் . அந்த ஊழியர்கள் தோற்றத்தில் இந்தியர்களாகவும் செயலில் (மொழியில்) ஆங்கிலேயர்களாகவும் இருக்கவேண்டும் என எண்ணினர். அதற்காக ஒரு கல்வி திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த திட்டம் தான் லார்டு மெக்காலே என்பவரால் 1835 ல் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்வி திட்டம்.
இந்த கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டபோது நாட்டில் செயல்பட்டு கொண்டிருந்த குருகுல கல்வி நிலையங்களும் தின்னைப் பள்ளிகூடங்களும் வழக்கொழிந்து போயின. கல்வி கற்பதற்காக நாடு முழுவதும் பள்ளிகூடங்கள் தொடங்கப்பட்டன.இந்த பள்ளிகூடங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது.
இந்த நிறுவன கல்விமுறையை இந்தியாவில் வசித்து வந்த உயர் சாதியினர் குறிப்பாக பார்பனர்கள் ஏற்றுக்கொண்டு படித்து முன்னேறி அந்த அடிமை அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகளையும் பெற்றனர்.
ஆனால் முஸ்லிம்களை பொருத்தமட்டில் இந்த லார்டு மெக்காலே கல்விமுறைக்கு எதிராகவே இருந்தனர் இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பாளிவாசல்களில் செயல் பட்டுக்கொண்டிருந்த மதரசாக்களிலே முஸ்லிம் மாணவர்கள் திருக்குர்ஆன் ஓத கற்றுகொண்டிருன்தனர். இந்த மதரசாக்களிலே தாய் மொழியும் கணிதமும் கூட கற்பிக்கப்பட்டது. ஆனால் மெக்காலே கல்விமுறை நடைமுறைக்கு வந்த போது மார்க்க கல்விக்கு இடம் இல்லாமல் போயிற்று .எனவே முஸ்லிம் பெற்றோர்கள் மார்க்க கல்வி இல்லாத அரசின் பள்ளிகூடங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தயக்கம் காட்டினர் .சமய போதனை இல்லாத பொது கல்வியை ஏற்க அவர்கள் தயாராக இல்லை .
சமையத்தை கற்காமல் வெறும் வேலைக்காக மட்டுமே கல்வி கற்பதை ஏற்க இயலாது என மார்க்க அறிஞர்கள் வாதிட்டனர்.அதுமட்டுமல்லாது தங்களை அடிமைபடுத்தி இருப்பவர்களின் கல்வியும் அவர்களின் மொழியும் ஆங்கிலேயர்கள் நம்மை இன்னும் அடிமை படுத்தத்தான் உதவுமென்று அவர்கள் சரியாகவே கருதினர். எனவே சில அறிஞர்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று பத்வா கொடுத்தனர். இந்த நாட்டு பற்றினால்தான் முஸ்லிம்கள் மெக்காலே கல்வி திட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்தனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சர் செய்து அகமது கான் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் நகரில் ஓர் ஓரியண்டல் பள்ளியை தொடங்க முயன்றபோது முஸ்லிம்கள் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரவித்தனர் .அவரை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கையால் என்று குற்றம் சாட்டினர் . இந்த பள்ளிகூடத்தை தொடங்குவதற்காக நிதி திரட்டும் முயற்ச்சியில் அவர் ஈடுப்பட்டபோது கல் எரிதாக்குதலுக்கு உள்ளானார் . பின்னர் அவர் தன் அயராத முயற்சியால் அலிகர் ஓரியண்டல் பள்ளியை நிறுவினார். ஆக முஸ்லிம்கள் நாட்டுபற்றினாலேயே அவர்கள் மெக்காலே கல்வி திட்டத்தினை எதிர்த்தனர் ஆங்கில மொழியையும் எதிர்த்தனர். இதனால் கல்வியில் பின்தங்கினர்.
ஆனால் அன்று சுயநலத்துடன் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்து அவர்களின் காலை கழுவி அதிகாரத்தில் பதவிகளை ருசித்த பார்ப்பனர்கள் இந்த நாட்டிற்காக கல்வியையும் உயிர்களையும் பொருள்களையும் இழந்த முஸ்லிம் சமுதாயத்தின் நாட்டுப்பற்றை சந்தேகித்து கேள்வி எழுப்புகிறார்கள். இதுதான் காலத்தின் கொடுமை என்பது.
Posted by Adirai Iqbal
source: http://samuthayaarangam.blogspot.in/2012/01/blog-post_22.html