சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை
ஒரு முகப் படுத்திய …..கமலுக்கு நன்றி !
சமத்துவத்தை போதிக்கும் சன் மார்கத்தை
சாமானிய மக்களையும் – திரும்பி பார்க்க செய்த
கமலுக்கு நன்றி !
உறங்குகின்ற முஸ்லீமின்
உணர்வுககளை விஸ்வரூபம் – எடுக்க செய்த
கமலுக்கு நன்றி !
கமல்…நீ சிந்திக்க …. நீ சீர்பட… நீ செயல் பட
உம்மோடு ஒரு சில வரிகளாய் நான் !
இந்திய இறையாண்மையை
இரு கரமாக கொண்டவர்கள் நாங்கள்!
இந்திய ஜனநாயகத்தின்
மொத்த உருவம் நாங்கள்!
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக
எங்களின் எண்ணிக்கையை விட
மற்றவர்களின் தியாகத்தை விட
எங்களின் தியாகம் பெரிது !
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு
எங்களின் எண்ணிக்கையை விட
மற்றவர்களுக்கு ஏற்படும் அநீதியை விட
எங்களுக்கு ஏற்படும் அநீதம் பெரிது…!
மோடியின் கைகளை முகர்ந்தது பார்
முகமுடி கிழிய இரத்த வாடை வீசும்!
அத்வானியின் பதங்களை பார்
ரத யாத்திரையின் சுவடுகள் அல்ல…
ரத்த சுவடுகள் தெரியும்!
இரத்தத்தின் ஈரம் தோயாத மண்ணை
ஈராக் – ஈரானுக்கும் சென்று பார் !
ஒண்ட வந்த ஓநாய்
உடலை குதறி – உயிரை குடிக்கிற
படுபாதக செயலை பாலஸ்தீனில் பார் !
அன்பே கடவுளென்று போதிக்கும் பித்ரு (பிசாசு)க்கள்
ரத்த வடைக்காக…
பித்து பிடித்து அலைவதை பர்மாவில் பார்!
எங்கும் எம் உறவுகளின் கதறல்கள் !
உயிர்கள் – உடமைகள் பறிபோன பின்னும்
நீதிக்காக…வீதியிலே நாங்கள்!
நீதியின் கண்களை கட்டிய பின்னும்
நீதிக்காக மௌனத்தோடு காத்திருக்கும்
நாங்கள் ஒரு தீவிரவாதி தான்?
எங்கள் ரத்தத்தை குடித்து
எங்களையே குடிகாரன் என்ற போதும்!
எங்கள் பெண்களின் கற்ப்பைச் சூறையாடி
எங்களையே விபச்சாரி என்ற போதும்!
எங்களை கொன்று விட்டு
கொலைகாரன் செத்துவிட்டான் என்ற போதும்!
எங்கள் உடமைகளை கொள்ளை அடித்து
எங்களை கொள்ளையர்கள் என்ற போதும்!
இவ்வளவு நடந்தும் எண்களின் மௌனம்
உலகிற்கு பயம் என்றால்…
இறைவன் இருக்கிறான்…..
இறைவன் இருக்கிறான்….
பயந்து கொள்ளுங்கள்….
பயந்து கொள்ளுங்கள்…..
இறை நிராகரிப்போரை வெட்டுவதை விட
யுத்தத்தில் அவன் கையால் வெட்டபடுவது உயர்ந்தது – என்று
உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் நாங்கள்…
உங்களின் பாதுகாப்பிற்கும் சேர்ந்தே வாழ்கிறோம்.!
எம்மை அழிப்பது – உன்
அழிவிற்கு நீயே காரனமாகிறாய்…!
தென்னையோ —- நெல் கொள்ளையோ!
இடம் பெயர்ந்தால்தான் விளைச்சல்.
வா…கமல்….. வா
எழுதியவர்
பாவா பஃக்ருதீன்..