கருப்பைச் சுதந்திரம் ஒரு விபச்சார அழைப்பே!
FREEDOM OF THE UTERUS
இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண், பெண் உடலுறவுக்கான உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக்) கொள்வார்.
இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின், ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான். அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான். இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
மூன்றாவது முறை பத்து அல்லது அதற்கு குறைவான ஆண்கள் கூட்டம், ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளுவார்கள். அவள் கருவுற்று பிள்ளை பெற்றபின் அந்த ஆண்களை அழைப்பாள்.
அந்த ஆண்களில் யாரும் அந்த அழைப்பை மறுக்கக் கூடாது. அவர்களிடம் அந்தப் பெண் பின் வருமாறு கூறுவாள்.
“நீங்கள், உங்கள் உறவால் விளைந்ததைக் கண்டீர்கள்! அது இந்தக் குழந்தைதான்” என்பாள் பின் அவர்களில் ஒருவனைக் காட்டி “இது உங்கள் குழந்தைதான்” என்று கூறுவாள் அதை அவன் மறுக்க முடியாது.
பெண் தன் வீட்டுக்கு முன்னாள் ஓர் கொடியை நாட்டி வைப்பாள். அதன் அர்த்தம் உடல் சுகம் வேண்டுபவர்கள் தாராளமாக வாருங்கள். என்ற பகிரங்க அழைப்பே ஆகும் .பலரும் வருவார்கள் கூடுவார்கள், செல்வார்கள். அவள் கருவுற்று குழந்தை பெற்ற பின் உறவு கொண்ட ஆண்கள் எல்லோரும் அழைக்கப்படுவர்.பின்னர் குழந்தையின் சாயலைக் கொண்டு தந்தையை அடையாளம் காணும் திறமை உள்ளவள் என கருதப்படும் ஒரு குறிசொல்லும் பெண் அழைத்து வரப்படுவாள். அவள் அந்த ஆண்களில் இருந்து ஒருவரை இனம் காட்டுவாள் அதுதான் அந்தக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும். அதை அவன் மறுக்க முடியாது. (ஆதாரம் : புகாரி)
மேலே கூறியது நாம் கண் காணாதது. இதில் முதல் முறையை தவிர மற்றைய அனைத்தும் அப்பட்டமான விபச்சாரம் என்பதில் சந்தேகமில்லை. இதில் ஆணாதிக்கத்திற்கான வாசலை ஒரு பெண் சாதாரணமாகவே திறக்கிறாள். அதே நேரம் அவமதிப்புக்கான மகுடத்தையும் அவளே சூடிக் கொள்கிறாள். ஆனால் துரதிஷ்ட வசமாக இன்றைய நிகழ்காலமும் பெண்ணுரிமை என்ற பெயரில் வேண்டுவது இத்தகு தவறான பாதையினைத்தான். பின்வரும் சம்பவத்தை படியுங்கள்.
நடந்தது 1990 களில், திருமணமான முதலிரவிலேயே தன் கணவனை வெளியே இருத்தி விட்டு, இன்னொரு ஆணோடு சல்லாபித்தாள் ஒரு பங்களாதேச பெண் . அவள் உலகு அறிந்த ‘செக்ஸ் ‘ எழுத்தாளர் . அவளது பெயர் ‘தஸ்லிமா நஸ்ரின்’. பெண்ணுரிமையின் கீழ் அவள் கேட்டது ‘ஒரு பெண் தனது கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவை செலுத்தும் உரிமை!’ (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரம்.
இந்த விபச்சார அழைப்புக்கு மேற்கின் பெண் விடுதலை வாதிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஒரு பெண்ணை ஆண் எப்படி ரசிக்க, அனுபவிக்க, பயன்படுத்த முடியுமோ அதற்கான வாயிலை அவளே திறக்கிறாள். இவர்களும் பரிசோடும், மாலையோடும் படையெடுத்தார்கள். புனிதமான் உறவை கழிவரையாக்கும் இந்த நா(ய்)கரீகத்தின் பார்வையில் எப்படி ஒரு பெண் பாதுகாப்பாய் வாழ முடியும் ? மேலே தந்த இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபிய ஆண், பெண் உடலுறவு முறையோடு இந்த ( FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் நிறைய உண்மைகள் புலப்படும்.