Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்திற்கெதிரான கலைத்துறை தீவிரவாதம்

Posted on January 30, 2013 by admin

  இஸ்லாத்திற்கெதிரான கலைத்துறை தீவிரவாதம் 

நவீன உலகில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமானப்படுத்துவதற்காக எதிரிகளால் உருவாக்கப்பட்ட சொற்றொடர் தான் ‘தீவிரவாதம்’ எனும் சொல்லாட்சியாகும்.

ஆனால் யதார்த்த நடப்பில் நமது இந்திய தேசம் உட்பட உலகின் எல்லா நாடுகளிலும் ‘முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதம்’ தான் தலைவிரித்தாடி வருகிறது.

அரசியல் தீவிரவாதம், காவல்துறை தீவிரவாதம், அரசு நிர்வாகவியல் தீவிரவாதம், நீதித்துறை தீவிரவாதம், ஊடக தீவிரவாதம், கலாச்சார தீவிரவாதம் என பல்வேறு தீவிரவாதங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நவீன உலகில் ‘கலைத்துறை தீவிரவாதம்’ என்ற தீவிரவாதம் ஒன்று இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கெதிராகவும் கிளம்பி உள்ளது.

இஸ்லாத்திற்கெதிரான கலைத்துறை தீவிரவாதம்

‘கலை’ என்ற பெயரில் நாவல், கதைகளில் தொடங்கிய இத்தீவிரவாதம் இப்பொழுது திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

முஸ்லிமல்லாதவர்களில் எல்லோரும் இத்தகைய நாலாந்தர செயல்களில் ஈடுபடுவதில்லை என்றாலும் அவர்களில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இழிவான இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

قال الله تعالي: لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آَمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا5:82

முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் தவறாக சித்தரிக்கும் படைப்பாளிகளை மேற்குலகம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதும், அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதும் இத்தகைய தீவிரவாதம் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

சல்மான் ருஷ்டிக்கு மேற்குலகம் விருது தந்தது இதற்காகத் தான்.

இங்கே நமது தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலைத்துறை தீவிரவாதத்தை தொடுத்துள்ள நடிகர் ஆலிவுட்டில் தமது படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதின் பின்னணியும் இதுவே.

முஸ்லிம்களுக்கெதிராக திரைப்படங்களின் பங்களிப்பு

திரைப்படத் துறையை பொருத்தவரை அது தோன்றிய காலம் முதலே முஸ்லிம்களை இழிவுபடுத்துவதில் தனக்குரிய பங்கினை அது செவ்வனே செய்து வந்துள்ளது.

சோவியத் யூனியன் சிதறுவதற்கு முன்பு முஸ்லிம்களை குறிப்பாக அரபுகளை ‘காம இச்சை’ அதிகம் கொண்டவர்களாக சித்தரித்து வந்த ‘ஹாலிவுட் திரைப்பட உலகம்’ சோவியன் யூனியன் உடைந்த பிறகு தனது பார்வையை முஸ்லிம்களின் பக்கம் முழுஅளவில் திருப்பியது.

அன்று முதல் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரிக்கத் தொடங்கிய ஹாலிவுட், ஒரு கட்டத்தில் எல்லை மீறி, முஸ்லிம்கள் உயிருக்கு உயிராக மதிக்கும் நபி ஸல்லல்லாஹு

அலைஹி வஸல்லம் அவர்களை தவறாக படமெடுத்து உலகளவில் எதிர்ப்பை சம்பாதித்தது.பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு தமிழ்நாடு திரைப்படத்துறை

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு திரைப்படங்களில் முஸ்லிம்கள் சாம்பிராணி போடுபவர்களாகவும், கொள்ளைக் காரர்களாகவும், கடத்தல் வியாபாரிகளாவும், தமிழ் சரியாக பேச தெரியாதவர்களாகவும் காட்டப்பட்டு வந்த நிலையில் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு நிலைமை மாறியது.

ஏற்கனவே கதைப் பஞ்சத்தால் ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடிக்க வேண்டிய பரிதாபத்தில் இருந்த ‘தமிழக திரைப்படத்துறை’ முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வு விவகாரத்திலும் ஹாலிவுட்டை பார்த்து காப்பியடிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான திரைப் படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட இவ்விவகாரம் ‘இன்னோசன்ஸ் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு உலக அளவில் முஸ்லிம்களின் கவனம் திரைப்படங்களை நோக்கி திரும்பியுள்ளது.

  முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?   

1. இத்தகைய போராட்டங்களில் நாம் ஒற்றுமையுடன் கட்டிடங்களைப் போன்று அணிவகுத்து நின்று போராட வேண்டும்.

ஒற்றுமையே நமக்கு வெற்றியை தரக்கூடியது.

قال الله تعالي: إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ 61:4

2. நமது போராட்டங்களை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்போதைய உலகில் தகவல் தொழில் நுட்ப வசதியால் நாடு கடந்த அளவில் மனிதர்களின் தொடர்புகள் விரிவடைந்துள்ளன. நமது போராட்டங்கள் உள்ளுர் அளவில் சுருங்கிப் போய் விடாமல் உலகளாவிய அளவில் அதனை எடுத்துச் செல்ல வேண்டும்.

‘இன்னோசன்ஸ் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் சர்வதேச எதிர்ப்பை பெற்றதற்கு காரணம் உலகளாவிய அளவில் அது எடுத்துச் செல்லப்பட்டதே.

திருக்குர்ஆன் இழிவுக்குள்ளாக்கபடுவதை உலகில் எந்தப் பகுதியில் வாழும் முஸ்லிமும், உலகில் எந்த இஸ்லாமிய நாடும் சம்மதிக்காது.

قال الله تعالي: إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ 49:10

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُسْلِمُونَ كَرَجُلٍ وَاحِدٍ إِنْ اشْتَكَى عَيْنُهُ اشْتَكَى كُلُّهُ وَإِنْ اشْتَكَى رَأْسُهُ اشْتَكَى كُلُّهُ رواه مسلم 4687

3. நேர்மறையான (positive) முறையில் நாம் நமது போராட்டத்தை நடத்த வேண்டும்.

நமது மார்க்கம் நேர்மறையான மார்க்கம். நேர்மையான, நேர்மறையான போராட்டங்களையே அது ஆதரிக்கும். நமது எதிரிகள் கண்ணியம் கெட்டவர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருப்பினும் நாம் நேர்மறையாகவும், கண்ணியமாகவும், வரம்புக்குட்பட்டும் நமது போராட்டத்தை நடத்த வேண்டும். அப்போது தான் நமக்கு அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்.

قال الله تعالي: وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ 2:190

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ رواه البخاري

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் வெறுப்புக்குரியவன் எதற்கெடுத்தாலும் கடுமையாக சண்டை பிடிப்பவனே.” (நூல்: புகாரி தமிழ் 4523)

திருக்குர்ஆன் கூட எதற்கெடுத்தாலும் வரம்பு மீறி வார்த்தை சண்டை பிடிப்பவனை சாடுகிறது.

قال الله تعالي:وهو الد الخصام 2:204

4. இத்தகைய போராட்டங்களில் பயமுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடாது.

முஸ்லிம்கள் ஒற்றுமையாக நின்று இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் பொழுது எதிரிகளுக்கும், அரசு தரப்பினருக்கும் நெருடல்கள் ஏற்படவே செய்யலாம்.

முஸ்லிம்களின் பலத்தை உடைப்பதற்காக மன ரீதியாக முஸ்லிம்களை பலகீனப்படுத்திடும் அச்சுறுத்தல்களை ஏவி விட வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி நமக்கு ஏன் வம்பு என்று முஸ்லிம் தலைவர்கள் ஒதுங்க முற்படக்கூடாது.

ஏனெனில், அஞ்சுவதற்கும்., பயப்படுவதற்கும் அல்லாஹ்வே மிகவும் தகுதியுள்ளவன்.

அச்சுறுத்தல்களுக்கு பயந்து ஒதுங்கினால் ஏன் போராடவில்லை? என்று மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்பான்.

மனிதர்கள், செல்வங்கள், பதவிகள் மற்றும் ஆயுங்களைக் காட்டி பயமுறுத்துவது எதிரிகளின் வழக்கமான நரித்தனங்களில் ஒன்று தான்.

திருக்குர்ஆனும் இதனை எடுத்துக் கூறவே செய்கிறது.

قال الله تعالي: أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ وَيُخَوِّفُونَكَ بِالَّذِينَ مِنْ دُونِهِ39:36

ஏனெனில், அசத்தியவாதிகளுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டங்கள் உலகம் அழியும் வரை நீடிக்கக் கூடிய ஒன்றே. இதில் நாம் அஞ்சி நடுங்குவது அர்த்தமற்றது.

20 ம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவரான அல்லாமா இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவார்கள்:

“முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுடர்விடும் பேரோளிக்கும் ‘நரக நாயகன்’ அபூ லஹபின் நெருப்பு ஜுவாலைக்கும் மத்தியில் நடக்கும் போராட்டம் நிரந்தரமானது. உலகம் உள்ளவரை அது நீடிக்கக் கூடியது.”

5. திரைப்படத் துறையை நாம் கைப்பற்ற வேண்டும்.

திரைப்படத் துறை இன்று தவறானவர்களின் கைகளில் இருப்பதால் தான் கண்ணியமானவர்கள் இழிவுபடுத்தப்படும் அவலம் நடக்கின்றது.

இன, மத துவேஷங்கள், ஒழுக்கக் கேடுகள் திரைப்படத்துறையில் தலைவிரித்தாடுவதற்கு காரணம் அது தவறானவர்களின் கரங்களில் சிக்கியுள்ளதே.

தவறானவர்கள் கரங்களில் எது கிடைத்தாலும் அதனை வைத்து கண்ணியமானவர்களை இழிவுபடுத்துவார்கள் என்பது திருக்குர்ஆன் நமக்கு சொல்லித் தரும் பாடம்

قال الله تعالي: إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّة ً27:34

சீர்திருத்த எண்ணத்திற்காக ஒன்றை அடைவதும், அடைய முற்படுவதும் தவறல்ல….

நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சீர்திருத்த எண்ணத்தில் அரசு நிர்வாகத்தில் நுழைந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

قال الله تعالي: اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ 12:55

நிச்சயமாக திரைப்படத்துறையின் மூலமாக இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் இஸ்லாமியர்களால் நன்மை தர முடியும். அதனையும் இஸ்லாத்திற்கு பயன்தரவல்லதாக ஆக்கிடும் திறமையும், அறிவையும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தந்துள்ளான்.

ஏனெனில், ஷைத்தானையும் நன்மை செய்வதற்கு வழிகாட்டுபவனாக நபித்தோழர்கள் ஆக்கினார்கள். அவனும் சில நிர்பந்தங்களால் அதற்கு ஆளாகுவான். அதுவே அல்லாஹ்வின் நாட்டமாகவும் இருந்திடும். 

நமக்கு ஆதாரம். 

حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ

وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ رواه البخاري

 தமிழ் புகாரி எண் 2311

தற்போது இஸ்லாம், இஸ்லாமிய ஆட்சி குறித்து தவறான புரிதல்களை களைந்து உண்மையை திரைப்படத்துறை வழியில் தெளிபடுத்திட ‘உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்’ குறித்த படம் ஒன்று தயாராகி வருகிறது. சர்வதேச இஸ்லாமியப் பேரறிஞர் ‘டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவீ ‘போன்ற மேதைகள் இதற்கு ஆதரவு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

6. சிந்திக்க வேண்டிய ஒன்று

மாற்றார்கள் நம்மிடம் பிரச்சினை செய்யும் பொழுது அவர்களிடம் சென்று நேரடியாக பேசக்கூடிய நிலையில் நமக்குள் தோன்றும் சின்ன சின்ன பிரச்சினைகளையும் நேரடியாக சென்று ஒன்றாக அமர்ந்து பேசும் சூழ்நிலைக்கு நமது சமுதாயமும், முஸ்லிம் இயக்கங்களும் தங்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

இது இன்னும் மகத்தான பல வெற்றிகளை இந்த சமுதாயம் அடைந்திட வழிகோலும்.. இன்ஷா அல்லாஹ்

BY VELLI MEDAI

source:http://vellimedainew.blogspot.in/2013/01/24012013.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb