Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாரதிராஜா பேசியதற்கு P.J யின் பதிலடி சரியானதே!

Posted on January 29, 2013 by admin

பாரதிராஜா பேசியதற்கு P.J யின் பதிலடி சரியானதே!

விஸ்வரூபம் படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்ன பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது

கேள்வி:  பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா? –அஸ்மா ஷர்ஃபுத்தீன், பிரான்ஸ்.

P.J. பதில்: அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம். அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்.ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்?விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம்.

அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார். இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்? எல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா? இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்? இது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதுதான் உலக நியதி. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.

பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன். இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன். ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.

பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம்

விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே? அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே? அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே? விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான். அவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன். அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும். தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் – (திருக்குர்ஆன் 4:148)

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை. மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் – குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் – முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான். நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள். சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை. மேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே? நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்? வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.

நானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

source: onlinepj

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 65 = 66

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb