Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு

Posted on January 28, 2013 by admin

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு

    ஷப்னா கலீல்     

ஆணாயினும், பெண்ணாயினும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு முறையான வாழ்கை வாழ்கின்றாரோ அவரே ஈருலகிலும் வெற்றியாளர். இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டதிட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும், இன்றைய பெண்கள் தனக்கும் மார்க்கத்திற்கும் அறவே தொடர்பில்லை என்றளவுக்கு வாழ்ந்து வருகின்றார்கள். அநேகமான பெண்கள் தமது குழந்தைகளையும், வீட்டையும் பராமரிப்பதனால் தம்மால் தொழக் கூட முடியவில்லை என மாயக் கவலையுடன் செய்யும் பாவத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றனர்.

கணவனின் குதிரைக்காக வெகு தொலைவில் இருந்து தன் தலையிலேயே தீனியை சுமந்து கொண்டு வந்த கொள்கைப் பெண் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், தானும் இஸ்லாத்தை தழுவி தன் மகனுக்கும் போதித்த தியாகத் தாய் உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் பெண் இனத்தை சார்ந்தவர்களே என்பதை நாம் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹாபியப் பெண்மணிகள் மார்கத்திற்காக பல்வேறுபட்ட யுத்தங்களில் தாமும் களமிறங்கி போராடியது மட்டமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையில் இறையச்சத்துடன் வாழ மேற்கொண்ட முயற்சிகள் பொடு போக்கான பெண்களின், சாக்குப் போக்கான வார்த்தைகளுக்கு முற்றுப் முற்றுப்புள்ளி வைக்கின்றன.

குர்ஆனைப் பற்றி கேள்வியெழுப்பிய உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா:

“ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா கேட்ட போது திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

குர்ஆனில் அதிகமான கட்டளைகள் ஆண்பாலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்களுக்கு எவ்வித கட்டளைகளையும் இறைவன் இடமாட்டானா? என்று அல்லாஹ்வின் தூதரிடம் ஆர்வமாக கேட்ட செய்தியை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அல்லாஹ் 33:35 வது வசனத்தையே இறக்கினான். தனக்கு குர்ஆன், சுன்னா தெரிய வந்தால் தானும் அது போல் வாழ வேண்டுமே என்பதற்காக மார்க்க பிரச்சாரங்களில் கூட கலந்து கொள்ளாத நம் பெண்மணிகளின் மத்தியில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கேள்வி வியப்பை ஏற்படுத்துகின்றது. மார்க்கத்தில் கேள்வி கேட்டு அறிந்து பின்பற்ற வேண்டும் என்று ஸஹாபியப் பெண்மணிகள் கொண்ட கொள்கை ஆச்சரியமளிக்கின்றது.

வஹி நின்றதற்காக அழுத உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்:

வாராந்தம் ஒரு முறை வீட்டில் யாசீன் சூராவை மாத்திரம் ஓதி, குர்ஆனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் கருதும் பெண்களுக்கு இதோ உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் படிப்பினையிருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்புக்குப் பின் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘நம்மை உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்’ என்று கூறினார்கள். அவ்வாரே உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நாம் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் ‘ஏன் அழுகின்றீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறந்ததாயிற்றே’ என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ‘ அல்லாஹ்விடம் இருப்பதே அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹி) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகின்றேன்)’ என்று கூறி அவர்கள் இருவரையும் அழச் செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4839)

அல்லாஹ்வின் தூதரின் தோழர்களையே அழ வைத்த சிறப்பு உம்மு அய்மன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களையே சாறுகின்றது. ஆகவே குர்ஆனைப் படித்து அதன்படி செயல்பட நாமும் முயற்சிப்போமாக!

நபியின் கட்டளையை மீறாத ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் :

பிரிவு எனும் துன்பத்தை மனிதனால் தாங்கிக் கொள்வது கடினம். அதிலும் குறிப்பாக பெண்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு நெடுங்காலம் தேவை. மரண வீட்டில் கூட மூன்று நாள் பிந்தியும் ஒப்பாரி வைத்து அழுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். மையத்தின் உறவுக்கார ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் குறைந்தது பத்து நாட்களுக்காவது தாங்கள் புத்தாடை அணிவதையோ, நறுமணம் பூசுவதையோ அபத்தமாக கருதுகின்றார்கள்.

தமது சகோதரனை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் சென்றேன். அவர் நறுமணம் பூசிக் கொண்டு ‘இது எனக்குத் தேவையில்லை. ஆயினும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக் கூடிய பெண் தமது கணவரைத் தவிர வேறு எவரது மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. தனது கணவன் இழந்து விட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் கூற நான் கேட்டுள்ளேன்’. (அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி – 1282)

தன் சகோதரனை இழந்துவிட்ட கவலை தன் மனதை ஆக்ரோஷித்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் கணவனைத் தவிர எந்த உறவுக்கும் துக்கம் அனுஷ்டிக்கக் தகாது என்ற நபியின் கட்டளைக்கு தான் மாற்றமாக நடக்கக் கூடாது என்ற காரணத்திற்காக ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நறுமணம் பூசிக் கொள்கின்றார்கள். மார்க்கம் முக்கியம் என்ற காரணத்தினால் தன் உறவின் மரணத்தைக் கூட பொறுமையுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.

இது போன்ற தூய பொருமையை இன்றைய பெண்களிடம் நம்மால் பார்க்க முடியுமா?

கொள்கைக்காக நாடு துறந்த பெண்மணிகள்:

அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரும் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்கள். எனவே எதிரிகளின் பல்வேறு தொல்லைகளினால் அல்லாஹ்வை நிம்மதியாக திருப்தியோடு வணங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளத்பட்ட உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் அவருடைய கணவரும் இஸ்லாத்திற்காகவே சொந்த ஊர், உறவு, செல்வம் அனைத்தையும் விட்டுவிட்டு ஆரம்பத்தில் அபீசீனியாவுக்கும், பின்னர் மதினாவுக்கும் ஹிஜ்ரத் செய்தார்கள். (அல் இஸாபா – 12061)

அதே போல் அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன் கொள்கையை காப்பாற்றிக் கொள்ள இரண்டாவதாக அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற குழுவினருடன் அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். பிறந்து வளர்ந்த சொந்த பூமியை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்யக் காரணம் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மாத்திரம் முழுமையாக செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அடுத்தவர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற பேராசையினால் தன் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி சீரழிவுக்குள்ளாகும் பெண்களுக்கு இந்த நபித் தோழியர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.

நஃபிளான வணக்கங்களுக்கு ஆர்வம் காட்டிய பெண்மணிகள்:

அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை ஜானுக்கு ஜான் பின்பற்றக் கூடிய பெண்மணியாக அன்னை உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திகழ்ந்தார்கள்.

‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்துக்கள் (உபரியான தொழுகை) தொழுவாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து அதை நான் ஒரு போதும் விட்டதில்லை. (அறிவிப்பவர் : உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம் – 1319)

மேலும் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அதிக கரிசனை காட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கு இடையே நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. ‘இந்த கயிறு எதற்கு?’ எனறு நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இது ஸைனபுக்கு உரியதாகும். அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்த கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உட்சாகத்துடன் இருக்கும் பொது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு, அன்ஹு நூல் : புகாரி 1150)

சுன்னத்தான தொழுகைகளை மட்டுமல்லாது, சுன்னத்தான நோன்புகளையும் இப்பெண்கள் நோற்றுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்த போது நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நீ நோன்பு வைத்திருந்தாயா?’ என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். ‘நாளை நோன்பு நோற்க விரும்புகின்றாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு இல்லை என்றேன். இதை கேட்ட நபியவர்கள், ‘அப்படியானால் நோன்பை முறித்து விடு’ என்று சொன்னார்கள். நபியவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்துவிட்டேன். (அறிவிப்பவர் : ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 1986)

ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நோன்பை விட்ட நிலையில் இறக்கவில்லை. (அதாவது கடைசி காலத்திலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்). (அறிவிப்பவர் : நாபிவு., நூல் : தபகாத் இப்னு ஸஅத் : பாகம் 02 பக்கம் 86)

இபாதத்களைப் பேணுகின்ற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டி, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுவதில் கரிசனை காட்டிய ஸஹாபியப் பெண்மணிகளின் வாழ்க்கையில் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் அதிகமாகவே இருக்கின்றன.

அதிகம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்த அன்னை ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்:

ஆண்கள் உட்பட பெண்கள் பெரும்பாலானவர்கள் சுப்ஹ

{த் தொழுகையை அலட்சியம் செய்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். இரவெல்லாம் வீனாக நேரத்தைக் கழிப்பதினால் பெண்களுக்க விடியும் நேரம் காலை 10 மணியையும் தாண்டுகின்றது. காலை நேரத்தில் தன் உம்மத்திற்கு பரக்கத்தை ஏற்படுத்து என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட பிரார்த்தனை காலைப் பொழுதின் சிறப்பைப் காட்டுகின்றது. அந்த நேரத்தை பயனுள்ள விதமாக கழித்த ஒரு பெண்மணிதான் அன்னை ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.நான் தொழும் பாயில் இருந்த போது நபியவர்கள் வெளியே சென்றார்கள். திரும்ப வந்த போது நான் அங்கேயே இருந்தததைப் பார்த்த நபியவர்கள் ‘நான் வெளியேறியதில் இருந்து இங்கேயே இருக்கின்றாயா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘நான்கு வார்த்தைகளை மூன்று முறை கூறினால் அது அந்த நன்மையைப் பெற்றுத் தரும்’. அவை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத கல்க்கிஹி வரிழா நப்சிஹி வ ஸினத அர்ஷிஹி வ மிதாத கலிமாதிஹி (பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், அவனது படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவன் பொருந்திக் கொண்ட அளவு, அவனது அர்ஷின் தராசு அளவு, அவனது வார்த்தைகளின் அளவுக்கு அவனைப் புகழ்கின்றேன்). என்றார்கள். (அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரளியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹ் இப்னு ஹ

{ஸைமா. – 753)அன்னை ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வில் கிடைக்கும் இந்தப் படிப்பினையை நமது பெண்களும் கடைப்பிடிக்குமிடத்து அதில் அதிக நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

மார்க்கமுள்ள பெண்ணே தனது கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பாள். இதை நபியவர்களின் ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவேஇ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (புகாரி –5090)

மேற்கண்ட நபி மொழியில் திருமணம் முடிக்கத் தகுதியான பெண்ணைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது மார்க்கம் உள்ள பெண்ணை மணமுடிக்கும் படி ஏவுகின்றார்கள். காரணம் மார்க்கத்துடன் வாழும் ஒரு பெண்மணிதான் சுவர்க்க வாழ்வை நேசித்து அதற்காக தனது வாழ்வை அமைத்துக் கொள்வாள். அப்படிப் பட்ட பெண்களாக நாமும் வாழ்வதுடன், நமது பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். அவள் தான் ஆணின் உண்மை வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். ஆதலால் இஸ்லாத்தை தெளிவாகவும் பிடிப்பாகவும் பின்பற்றும் மக்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கிஅ ருள் புரிவானாக!

ஆக்கம் : ஷப்னா கலீல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb