“சோழியன் குட்மி சும்மா ஆடாது”
[ விஷயம் பழையது, ஆனால் இன்றைக்கும்
இதை மீள்பதிவு செய்ய அவசியம் உள்ளது ]
விஸ்வரூபம் கமலஹாசனின் சுயரூப பரிணாம வளர்ச்சி!!
இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக கக்கப்பட்டுள்ள விஷம்
தலை சிறந்த நடிகராக கமலஹாசன் தனது நடிப்பு திறமையை பல்வேறு படங்களில் வெளிப்படுத்தியவர் தனது வாழ்க்கையிலும் நடித்தே வந்திருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. தன்னை பெரியாரின் சீடாரகாக் காண்பித்து மக்களை ஏமாற்றி வேஷமிட்ட அவரின் சுயரூபம் வெளிப்பதை ஜீரணிக்க முடியாமல் பிதற்ற ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். தனது சூழ்ச்சிக்கு பலியாகாத மற்ற திரைப்படத்துரையினரையும் தனக்கு ஆதரவாக தூண்டிவிடுகிறார்.
ஆம்! கமல ஹாஸனின் பிதற்றலைப்பாருங்கள்…
எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக(!!!!) எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. (இதுதான் அப்பட்டமான பார்பணிய நயவஞ்சகத்தனம் என்பது!)
அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும்(!!!!) ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன்.
ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். -கமல்ஹாசன்.
“சோழியன் குட்மி சும்மா ஆடாது” என்பார்கள்… இந்த பார்ப்பண நடிகனின் பார்ப்பண வெறி கூட்டிலிருந்து வெளிப்பட்டு மாட்டிக்கொண்டு தற்போது விழிபிதுங்கி நிற்கிறது என்று சொல்லலாம்.
சக திரைப்படத்துரையினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்று அங்கலாய்ப்பு வேறு! சமூகத்தை சீர்கெடுத்தது போதாதென்று அமைதியாக இருக்கும் தமிழகத்தை சுடுகாடாக்க முயலும் இந்த மனிதனுக்கு உதவக்கூடியவர்கள் தேசத்துரோகிகளாகத்தான் இருக்க முடியும்.
”(சமூக ஒற்றுமையை சீர்குலைக்க எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை) தடைசெய்ய போராடிய முஸ்லிம்கள் கலாச்சார தீவிரவாதிகள்” – விஷக்கிருமி கமலஹாசன்.
யார் கலாச்சார தீவிரவாதி?. பார்வைகளை கூட தாழ்த்திக் கொள்ள சொல்லும், ஒழுக்கத்தை உயிரிலும் மேலாக மதிக்கும் நாங்கள் கலாச்சார தீவிரவாதிகளா?
அல்லது
LIVING TOGETHER என்ற கேடு கெட்ட யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் பிடித்தபோது படுத்து விட்டு பிடிக்காத போது எழுந்து போய் விடலாம் என்கிற எய்ட் ஸை பரப்பக்கூடிய, மனித இனத்தை அழிக்கக்கூடிய மிக மோசமான நச்சுக்கொள்கையை பரப்பக் கூடிய கமலஹாசன் கலாச்சார தீவிரவாதியா?
சமூகத்தில் இவர் போட்ட வேஷத்தை சற்று ஆராய்வோம்…
விஸ்வரூபம் கமலஹாசனின் சுயரூப பரிணாம வளர்ச்சி!!
உயர் ஜாதியை சேர்ந்த இவர், தன்னை கடவுள் மறுப்பாளராகவும், நடுநிலையாளராகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் காட்டி கொண்டதன் மூலம், தமிழக மக்கள் பெரும்பான்மையினரின் நன்மதிப்பை பெற்ற நடிகர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தவர். மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து கண்ணீர் விட்டு, அதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து பேசியவர் என்று சிறுபான்மை மக்களின் நண்பனாக தன்னை காட்டி கொண்ட கமலிடம் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.
மாறுதல் (1) : ஹேரம் திரைப்படம் : இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம் இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
மாறுதல் (2) : உன்னைப்போல் ஒருவன் : கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.
மாறுதல் (3) : விஸ்வரூபம் : இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார். அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.
இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் அல்குர்ஆனை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம்!! இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கக்கப்பட்டுள்ள விஷம்
o தொழுது விட்டு கொலை தொழுது விட்டு கொலை
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் தொழுவது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்.
o தீவிரவாதிகளின் கையேடா திருக்குர்ஆன்..?
தீவிரவாதிகளின் கையேடா திருக்குர்ஆன்..? இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.
o கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்
கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள். தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.
o மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?
மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா? பள்ளிவாசல்களை தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்.
o அமைதிப் புறாக்களையும் விடவில்லை
கமல் அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல் அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.
o தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்
தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார். முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார். மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.
எனவே இப்படம் முழுமையாக உலகெங்கும் தடை செய்யப்பட வேண்டும்