ஸலாம் தரும் மகத்துவம்
டாக்டர், முஹம்மது முஸ்தபாஷரீப் நக்ஷபந்தி
[ அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒன்று ஸலாம்.
ஸலாம் சொல்பவருக்கு முப்பது நன்மை. பதில் கூறினால் பத்து நன்மை.
துஆக்கள் நம்மை காப்பாற்றுகின்றன. ஸலாம் ஒரு துஆ. ஸலாம் ஒரு பேக்கேஜ்.
ஸலாம் கூறுபவர் மீது செவிமடுத்தவருக்கு பிரியம் வரும்.
ஸலாம் புரிந்தால் இஸ்லாம் புரியும்.
துனியா சிந்தனையை ஆகிரத் சிந்தனையாக மாற்ற வேண்டும்.]
ஸலாம் தரும் மகத்துவம்
சூரா ஹூது, அத்தியாயம் 11, வசனம் 69. ஸாலிஹ், நூஹ், ஹூது நபிகள் குறித்து சூராவில் குறிப்பி வந்துள்ளது. ஏழாவது ருக்கூவில் இபுராஹிம் அலைஹிஸ்ஸலாம், லூத் அலைஹிஸ்ஸலாம் செய்தி படிப்பினை இங்கு உண்டு. அல்லாஹ்வுக்கு வெறுப்பு, சமூகத்தை அழிக்கக் கூடிய செயல்கள் விளக்கப்படுகிறது.
”வலகத் ஜாஅத் ருசுலுனா ருசுல்” – மலக்குமார்களை குறிக்கும். ரசூல் பொருள், அனுப்பப்படுவது. இரண்டு அர்த்தம் கூறலாம். 1. நபிமார்கள். 2. மலக்குகள். இபுராஹீம பில்புஷ்ரா மலக்குகள் இபுராஹிமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். காலூ ஸலாமா. ஸலாம் கூறினர்.
இதன் வாயிலாக அல்லாஹ் அதபு ஒழுக்கம் கற்றுக் கொடுக்கிறான். பேசுவதற்கு முன் ஸலாம் கூறுவீர். ”அஸ்ஸலாமு கப்லல் கலாம்.” நபிகளார் வலியுறுத்துகிறார். அன்புமேலிடும்.
ஸலாம் கூறுபவர் மீது செவிமடுத்தவருக்கு பிரியம் வரும்.
ஹதீஸ்: “உங்களிடையே பிரியம் கொள்ளாதவரை நீங்கள் சுவனம் செல்லமுடியாது”.
ஸலாம் உங்களை சுவனத்திற்கு இட்டுச் செல்லும். புதியவரிடம் இரண்டு மூன்று தடவை ஸலாம் கூறி பாருங்கள். வேறு வழியின்றி அவரும் உங்களுக்கு பதில் ஸலாம் கூறத் தொடங்கிவிடுவார்.
நபிகளாரின் கருத்து. கஞ்சத்தனத்தில் பெரிய கஞ்சத்தனம் ஸலாம் கூறாதிருத்தல்.
அகந்தையின் அடையாளம். நபித்தோழர் ஒருவர் அஸர் நேரத்திலிருந்து மக்ரிபு தொழுகை வரை அங்காடியில் அனைவருக்கும் ஸலாம் கூறுவார். இது வழக்கம்.
தூரத்திலிருப்பவரிடம் உரத்த குரலில் ஸலாம் கூற அவசியமில்லை. வாகனத்தில் செல்பவர் அல்லது வேறு கவனத்தில் நடப்பவர் விபத்துக்குள்ளாகக் கூடும். நடைபாதையில் முழு கவனம் தேவை.
எதிரில் வந்து நின்று மரியாதையுடன் ஸலாம் கூறலாம். உயர மேடை, மாடியிலிருந்து அலட்சியமாக ஸலாம் கூற வேண்டாம்.
கை தூக்கி ஸலாம் கூறுதல் நம்முடைய ஸ்டைல். நமது மரபு. இல்லையேல் ஸலாத்தை புறக்கணித்து விடுவர். மூஃமின்களை மகிழ்வுறச் செய்யலாம். இபாதத். இதில் பித்அத், குபுர் ஷிர்க் எதுவுமில்லை. தவறில்லை.
ஸலாம் சொல்பவருக்கு முப்பது நன்மை. பதில் கூறினால் பத்து நன்மை.
கியாமத் நாளில் ஒரே ஒரு நன்மைக்கு திண்டாட வேண்டிவரும். யாரிடம் போனாலும் ஒரு நன்மை வாங்க முடியாது. பூமி முழுவதும் தங்கம் இருந்தாலும். ஒரு நன்மை சம்பாதிக்க முடியாது. முப்பது நன்மை கோட்டை விட வேண்டும். தாருல் அமல். உலகம் அமல் செய்யும் இடம். வங்கியில் கண்ணுக்கு தெரியாமல் பணம் நமது கணக்கில் வரவாகிறது. கிரடிட். மறுமை கணக்கில் ஸலாம் நன்மை வரவு வைக்கப்படுகிறது. கண்ணுக்கு தெரியாது.
அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒன்று ஸலாம்.
வாரிசுகளுக்கு அஸ்மாவுல் ஹுஸ்னா 99 பெயர்கள் கற்றுக் கொடுங்கள்.
சில பள்ளிக் கூடங்களில் கவிதை வடிவில் பாடலாக ஸலாம் கற்றுக் கொடுக்கின்றனர். வார, மாத இதழ், நாளிதழ் பெரும்பாலும் பொய் கூறுகின்றனர். இதனை வாசித்து நேரம் போக்க வேண்டாம். முகமூடி, விறுவிறுப்பு துப்பறியும் நாவல் வாசித்து பொழுது போக்காதீர்.
நீங்கள் எந்த புத்தகம் வாசித்தாலும், அவருடைய அக்லாக், ஆதாபு, பழக்க வழக்கம், குண ஒழுங்கு உம்மையும் பாதிக்கும். குர்ஆன் படித்தால் நீங்கள் நூர் ஒளியில் மூழ்குவீர்.
சிந்தனைகளை செம்மைப்படுத்துங்கள். சீராக்குவீர். அமல்களுடைய அஸ்திவாரம் அடிப்படை கட்டுமானம். சிந்தனை சரியானால் உரைகல் தெளிவாகும்.
கம்ப்யூட்டரில் எந்த டேட்டா உள்ளே போடுகிறீர்களோ அதுதான் வெளியே வரும். அவுலியா சரிதை வாசித்தால், தொழுகை மீது மதிப்பு வரும். மனம் யோசித்துக் கொண்டேயிருக்கும். தர்ஸ் குர்ஆன் விரிவுரை கேட்டால் தனியே அமரும்போது மனம் அசைபோடும். அதனையே சிந்திக்கும்.
சிந்தனையை செம்மையாக்குவதே தஸவ்வுஃப்.
நபிகளாரின் பண்பு. ஆளுமை குறித்து சிந்தித்தால், தீதார் கிடைக்கும்.
பகலில் நல்ல சிந்தனையிருந்தால் கனவு நன்மையாய் வரும். கெட்ட சிந்தனை கெட்ட கனவையே தரும்.
துனியா சிந்தனையை ஆகிரத் சிந்தனையாக மாற்ற வேண்டும். சும்மா உட்கார்ந்தால் அல்லாஹ் திக்ரு மனதில் நிழலாட வேண்டும். மரணித்தால் ஷஹீது தியாகி கூலி உண்டு.
அல்லாஹ் கூறுகிறான் & நீ தனிமையில் என்னை யோசித்தால். நான் தனிமையில் உன்மை யோசிப்பேன். கூட்டத்தில் பேசினால் நானும் மலக்கு கூட்டத்தில் உன்னை குறித்து பேசுவேன்.
ஸலாம் அல்லாஹ்வின் திருநாமம். நமக்காக வானத்திலிருந்து இறக்கப்பட்டது. கழிவறையில் ஸலாம், போகும்போது வரும்போது ஸலாம் கூறாதீர். பதில் சொல்லவும் கூடாது. வாய் கொப்பளித்த பின்னரே ஸலாம் கூறலாம்.
ஸலாம் கூறும்போது ஏற்படும் அசர். தாக்கம், விளைவு வேறு எந்த வாழ்த்து கிரீட்டிங்ஸ் தராது. எம்மால் உமக்கு எவ்வித தொந்தரவு வராது. உறுதி தரப்படுகிறது. உமக்காக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
ஸலாம் புரிந்தால் இஸ்லாம் புரியும்.
நபிகளார் சிறிய பிள்ளைகளுக்கும் ஸலாம் முகமன் கூறுவார். ஸலாம் கற்றுக் கொடுப்பதாகும். மானம், கவுரவம் குறையப் போவதில்லை.
நபித் தோழர் ஒருவர் வீட்டில் மூன்றுமுறை நபிகளார் ஸலாம் கூறினார்கள். பதில் வரவில்லை. உள்ளே நுழையக் கூடாது. தொந்தரவு செய்யவில்லை. திரும்பிவிட வேண்டும்.
ஸலாம் அல்லாஹ்வின் திக்ரு. ஸலாம் கூறுவது சுன்னத். பதில் சொல்வது வாஜிபு. பதில் கூறாமல் மவுனம் காப்பது பாவம்.
வேறு ஒருவருக்கு ஸலாமை எத்திவைத்தால் மறக்காமல் சென்று சமர்ப்பிக்க வேண்டும். அது அமானத். உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அலைக்க வ அலைஹி ஸலாம். இதுதான் பதில்.
நிறைய முஸ்லிம்கள் ஸலாம் கூறாமல் இருட்டில் வாழ்கின்றனர். ஜஹாலத். உணவு, ஆடை பூரண கவனம். ஆனால் மார்க்க நடைமுறையில் கவனமில்லை. ஸலாம் எத்திவைத்தால் மூவருக்கும் சவாபு உண்டு.
மனிதர்களை மன்னிப்பதற்கு அல்லாஹ் ஏராளமான காரியங்களை ஏற்படுத்தியுள்ளான். மனிதர்கள் அறியாமையில் வாழ்நாளை கழிக்கின்றனர்.
சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறவேண்டும். தனியாள் ஜமாத்துக்கு ஸலாம் கூறலாம். நடந்து போகிறவர் உட்கார்ந்திருப்பவருக்கு ஸலாம் கூறலாம். வாகனத்தில் போகிறவர் நடப்பவருக்கு ஸலாம் கூறலாம். ஸலாம் கூறப்படுமேயானால் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தாதீர். வீட்டுக்குள் நுழையும்போது குடும்பத்தாருக்கு ஸலாம் கூறி நுழையலாம். ரஹ்மத், பரக்கத் பெருகும், முஸ்லிம்கள் தீய வார்த்தை பேசுவதற்கு கூச்சப்படுவதில்லை. ஆனால் ஸலாம் உச்சரிப்பதற்கு தயங்குகின்றனர். மனைவியிடம் ஸலாம் கூறினால் மதிப்பு உயரும். நெருக்கம் வரும்.
துஆக்கள் நம்மை காப்பாற்றுகின்றன. நமக்கு எதிரிகள் அதிகம், தொடர்ந்து சதிவேலை நடைபெறுகிறது. ஸலாம் ஒரு துஆ. ஸலாம் ஒரு பேக்கேஜ்.
தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
முஸ்லிம் முரசு ஜனவரி 2013