மறைவான ”ரிஜ்க்” வேண்டும்
டாக்டர் மௌலானா முஹம்மது முஸ்தஃபா
சிலர் நன்மைகளை இபாதத் செய்கின்றனர். அதற்கு பகரமாக, கூலியாக வணிகம் செழிக்க வேண்டும். குழந்தை தேவை. மரியாதை, கவுரவம் நிலைக்க வேண்டும். பரக்கத் பெருக தானம் செலவழிக்கின்றனர். இதே நிய்யத்தில் குறிக்கோளில் மத்ரசா வளர்ச்சிக்கும் உதவுகின்றனர். இவர்களுடைய உதாரணம் காஃபிர்களை போன்றது. காஃபிர்கள் பெற்றோரை கவனிக்கின்றனர். வறியவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் நிய்யத் மறுமைக்கானதல்ல. துனியாவில் செழிக்க வேண்டும். அவ்வளவுதான்.
மூஃமின் நன்மை புரிந்தால் இரண்டு இலக்குகளை எட்டுகிறான்.
1. இறைவனை, நபியை திருப்திப்படுத்துவது.
2. துனியாவில் அமைதி, வளர்ச்சி.
வழக்கமான மைன்ட்செட் மனப்பிரமை, நன்மைக்கு கூலி ஆகிரத். நன்மைக்கு பூமியில் வெகுமதி வழங்கப்படும்.
சூரா தவ்பா அத்தியாயம் 9. வசனம் 120 ”இன்னல்லாஹ லாயுஜீஹு அஜ்ரல் முஹ்ஸினீன்” நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
ஆகிரத் நோக்கில் நன்மை புரிவோருக்கு பூமியிலும் நற்கூலி உண்டு. துனியா நோக்கில் நன்மை புரிவோருக்கு துனியா கிடைக்கும்.
நபிமொழி – ”ஹல் ஜஸாவுல் இஹ்சான் இல்லல் இஹ்சான்”
இஹ்சானுக்கு கூலி இஹ்சான் மட்டுமே. அல்லாஹ்வுடைய படைப்பினங்களுக்கு உதவியளித்தால் அல்லாஹ் உதவி பேரருள்புரிவான். ஆகிரத் நம்பிக்கையற்றவர்களுக்கு மறுமையில் எதுவும் கிடைக்காது. உலகில் வெகுமதி வழங்கப்படும்.
முஸ்லிம் எதை செய்தாலும் இறைவனுக்காக செய்வான். ”இக்லாஸ்” அர்த்தம் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வதாகும்.
சூரா அஹ்ராப் அத்தியாயம் 7, வசனம் 196 ”ஹுவ யத்தவல்ல ஸாலிஹீன்” நன்மையாளர்களின் புரவலர் ஸ்பான்சர், அல்லாஹ்.அபுதாவூத் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. மிக்தாது ரளியல்லாஹு அன்ஹு காட்டுக்குள் பயணிக்கிறார். ஒரு எலி புற்றுக்குள் சென்று தீனார் கொண்டு வருகிறது. நிறைய தீனார்கள் சேர்ந்தன. மறைக்காமல் அப்படியே மிக்தாது நபிகளாரிடம் விவரித்தார். இது உம்முடைய பணம். அல்லாஹ் நல்லவர்களுக்கு கூலி இதே விதமாக வழங்குவான். மறைவான ரிஜ்க் கதவுகளை நல்லவர்களுக்கு அல்லாஹ் திறந்து விடுவான்.
சூரா தலாக் அத்தியாயம் 65, வசனம் 2-3. ”வமய்யத்தகில்லா யஜ் அல்லாஹு மக்ரஜா வயர்ஜுக்ஹு மின் ஹய்ஷு லா யஹ்தஜிபு” அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு வழியை உண்டாக்குவான்.
அறியாதபுரத்திலிருந்து ரிஜ்க் வழங்குவான்.”வமய்யத்தவக்கல் அலல்லாஹி ஃபஷுவ ஹஸ்புஹூ” நம்பிக்கையாளருக்கு அல்லாஹ் போதுமானவன்.”இன்னல்லாஹ் பாலிகு அம்ரிஹீ கத்ஜ அலல்லாஹு லிகுல்லி ஷய்இன் கத்ரா.” காரியங்களை நிறைவாக்குவான் இந்த வசனங்களை ஃபஜ்ர் மற்றும் மக்ரிபு தொழுகையில் மூன்று முறை ஓதி வரவும். மிக்தாதுக்கு அல்லாஹ் உதவி செய்ததை போல உங்களுக்கும் உதவி செய்வான். ஒரு வழியல்ல பல வழிகளில் ஆதாயம் வழங்குவான். சிரமங்களிலிருந்து வெளியாக்குவான். ஹராம் விலக வேண்டும். நன்மை புரிய வேண்டும். நபிகளாரை இதாஅத் செய்யவேண்டும்.
”மன்அதா அ ரசூல் ஃபகத் அதா அல்லாஹ்” அல்லாஹ்வை இதாஅத் செய்வதற்கு ஒப்பாகும்.
தமது விருப்பத்தை விட்டொழித்து அல்லாஹ்வின் விருப்பத்தை மேலோங்கச் செய்வோருக்கு அல்லாஹ் கைப் மறைவான வழிகளை ஏற்படுத்துவான். மீட்சி கிடைக்கும். பிரச்னையிலிருந்து வெளியே வரமுடியும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மூலம் உதவி புரிவான். மற்றவர்கள் முன் கையேந்த விடமாட்டான்.
அல்லாஹ்விடம் துஆ கேட்போம். சஜ்தா உனக்கு மட்டும். அதே போன்று உதவி நீயே அருள்வாய். யாரிடத்தும் மண்டியிட அனுமதிக்காதே.
துஆ கேட்டால் படைப்பினம் உம்மிடம் உதவி கோரிவரும். இல்லையேல் நீங்கள் பிறரிடம் உதவி கேட்டு அலைய வேண்டியிருக்கும்.
உமது நிலைமை மாற துஆ கேட்கவேண்டும். சூரா ரஃது அத்தியாயம் 13, வசனம் 11. ”இன்னல்லாஹ லா யுகய்யிரு மாபி கவ்மின் ஹத்தா யுகய்யிரு மாபி அன்ஃபுஸிஹிம்.”
எந்தவொரு சமுதாயமும் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.
தனிமனிதனுக்கு இது நன்றாகவே பொருந்தும். எமது கரத்தை கொடுக்கிற கரமாக்கு. துஆ கேட்கலாம்.
ஜக்காத் வாங்க ஆசைப்பட்டால் அது நடக்கும். இந்த வருடம் 4 பார்ட்டி அடுத்த ஆண்டு ஆறு பணக்காரனிடம் சென்று பிச்சை கேட்க வேண்டிவரும்.
”யத்தவல்ல” – நிறைய அர்த்தம் உண்டு. புரவலர், நண்பர், உதவியாளர்.
நிபந்தனை. தீமையிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனித்து, மறைவாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு பயப்படு.
தாவூத் அலைஹிஸ்ஸலாம் நோக்கி அல்லாஹ் கூறுகிறான். சூரா ஸபா, அத்தியாயம் 34, வசனம் 13. ”இஹ்மலூ ஆல தாவூத ஷுக்ரா.”
இரும்பை அறிமுகமாக்கினான். ஆட்சி கொடுத்தான். தாவூது, வாரிசுகள் நன்றி கூறுமாறு அல்லாஹ் ஏவுகிறான். பாவங்களிலிருந்து விலகி தொழுகையை நிலைநாட்டுவதே நன்றி கூறுவதாகும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவீர். இது நன்றி செலுத்தும் ஒரு முறை, வழி.சூரா இபுராஹிம் அத்தியாயம் 14, வசனம் 7 ”ல இன் ஷக்கர்தும் ல அஜீதன்னகும்” நன்றி செலுத்தினால் நிஃமத்துகளை அதிகப்படுத்துவான்.
=தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
முஸ்லிம் முரசு டிசம்பர் 2012