ஒற்றுமையா.? அல்லாஹ்வின் கயிறா? எது வேண்டும்.?
முஹம்மத் ஆஷிக்
[“80-களின் மத்தியில் மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் ‘ஒற்றுமைக்கு’ வேட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து மக்களை காக்க, அப்போது… ஜும்மா பயான்கள், ஆடியோ கேசட்டுகள், வீதி மேடைகள், சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்… என இங்கெல்லாம் ”ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக தவறாக சொல்லப்பட்டு வந்தது. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்… அது இதுதான்..!
அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)
ஆனால், மேற்கண்ட வசனத்தில் பிராக்கட் போட்டு ‘ஒற்றுமை’யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். ‘நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)
“ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்” என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.
இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், “அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது.]
சென்ற வருடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வோர் வாரமும், இரண்டு நாள், இரவு அரை மணி நேரம் “ஒற்றுமை வேண்டி” ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான ஒரே ஒரு “முஸ்லிம் இயக்கமாக” உருவாக்கிவிடுவது என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அனைத்து இயக்கங்களையும் தனித்தனியாக அழைத்து “ஒன்று படுங்களேன்” என்று மிகுந்த பொருட்செலவில் ஒற்றுமைக்கான அறிவுரை கூறப்பட்டது. பலவாரங்கள் நான் அதை பார்த்து வந்தேன். இறுதியில் விளைவு பூஜ்யம்..! ஏன்..? எதனால்..? எப்படி இந்த ஒற்றுமை முயற்சி நம் இயக்கங்களிடையே பலனளிக்காமல் போனது..? என்ன தவறு நேர்ந்தது இதில்..? ஏனோ இதை யாருமே சிந்திக்கவில்லை..! ‘எதனால் பிரிந்தனர்’, ‘அதற்கு என்ன காரணம்’, ‘அதனை இப்போது தீர்க்க வழியுண்டா’… என்றெல்லாம் விவாதிக்காமல், வெறுமனே “ஒன்று படுங்கள்” “ஒன்று படுங்கள்” எனப்பட்டனர். அதனால், யாருமே ஒன்று படவில்லை. ஆனாலும், அதேபோன்ற “ஒற்றுமை வேண்டும்” என்ற கோஷம் மட்டும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
சகோ..! நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லன். அது ரொம்ப அவசியம் நமக்கு. ஆனால், அதை உண்டாக்க நாமாக நம் இஷ்டத்துக்கு ஏனோ தானோ என்று முயற்சி செய்யாமல்… இவ்விஷயத்தில் அல்லாஹ் சுபஹானஹுதஆலாவும் அவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் முயற்சிப்பதே நம்மிடையே ஒற்றுமை ஏற்பட முழுப்பலனளிக்கும் என்று மிக உறுதியாக தெரிவிக்கவே இந்த பதிவு..!
70-களில் நம்மிடம் ‘ஒற்றுமை’ இருந்தது. இஸ்லாத்திற்கு எதிரான எல்லாவித பித்அத், அனாச்சாரம், ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைகளிலும் நம்மிடம் ‘ஒற்றுமை’ இருந்தது..! அன்று அரசியலிலும் கூட ஒரே கட்சி என்ற ‘ஒற்றுமை’தான் நிலவியது..! காரணம், அப்போது மக்கள் அனைவரும், பள்ளி இமாம்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்களோ அதையே இஸ்லாம் என்று நம்பி வந்த காலம். ‘அவர்கள் சொல்வது சரிதானா’ என்று உரசிப்பார்க்க இப்போதுள்ளது போன்று தர்ஜுமாக்கள் எனும் உரைகல் அப்போது இல்லை.
இந்நிலையில்தான், 80-களின் மத்தியில் மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் மேற்படி ‘ஒற்றுமைக்கு’ வேட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து மக்களை காக்க, அப்போது… ஜும்மா பயான்கள், ஆடியோ கேசட்டுகள், வீதி மேடைகள், சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்… என இங்கெல்லாம் ”ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக தவறாக சொல்லப்பட்டு வந்தது. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்… அது இதுதான்..!
அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)
ஆனால், மேற்கண்ட வசனத்தில் பிராக்கட் போட்டு ‘ஒற்றுமை’யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். ‘நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)
“ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்” என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.
இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், “அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது என்றும்…
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2;256)
……குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகள் மூலமே தெளிவும் பெற்றனர். எனவே, ‘அல்லாஹ்வின் கயிறை’ அதாவது… “திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே முஸ்லிம்களிடையே ஒற்றுமை உருவாகும்” என்று இங்கே தெளிவாக புரிகிறது.
ஆனால், “குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச்சொல்வதால் உண்மையில் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்” என்று இஸ்லாத்திற்கு விரோதமான தீய செயல்களில் இருப்போர் அதற்கு நேர் மாறான விளக்கத்தை தருகின்றனர். இது ஓர் அரசியல் சூழ்ச்சி சகோ..!
ஆனால், ‘அல்லாஹ்வின் கயிற்றை’ நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் நமது பிடியை நாம் விட்டு விடாமல், அவர்களையும் பிடிக்குமாறு, நன்மையை ஏவி அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும். அவர்கள் மீறினால், அவர்கள் செய்யும் தீமையை தடுக்கவும் வேண்டும். ஹி…ஹி… இதை நானாக சொல்ல வில்லை சகோ..! அல்லாஹ்வே அந்த வசனத்துக்கு அடுத்து சொல்லிக்கொண்டே செல்வதை நீங்களே படியுங்கள்..!
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்- 3 : 104)
இதுதான் தெளிவான சான்று. இதைப்பின்பற்றி இதன்படி செய்யாவிட்டால் என்னவாம்..? நரகக்கேடாம்..! இதையும் நான் சொல்லலீங்க..!
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப்பிரிந்து விட்டோரைப்போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்- 3 : 105)
நன்மையை ஏவினால் ஒற்றுமை குலையாது. ஆனால், தீமையை தடுத்தால் ஒற்றுமை குலையும். பகைமையும் வெறுப்பும் நமக்குள் உண்டாக்கும். இப்படியெல்லாம் ஒற்றுமையை குலைப்பது சரியா..? –சந்தேகம் வருகிறதா..?
‘உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன்- 60 : 4 -ல் முற்பகுதி)
அப்பாடா..! இப்போ ஓகேவா..? இனி வேறு ஏதேனும் உங்களுக்கு தயக்கம் உண்டா “ஒற்றுமையை குலைக்கும்” ஏகத்துவ வேலையிலே..?
ஹலோ..! ஹலோ..! சகோ.ஆஷிக்..! நிறுத்துங்கள். அந்த வசனம் இறைநிராகரிப்பாளர்கள் சம்பந்தப்பட்டது. அது முஸ்லிம்களிடத்தில் எங்ஙனம் பொருந்தும்..?
அட..! யாருங்க அது..? ‘இணைவைத்தல்’ எவ்வளவு பெரிய பாவம்..? தர்ஹா தட்டு தாயத்து செய்வினை ஷிர்க் என்று முஸ்லிம்களே அதை செய்துவிட்டால், அப்புறம் அவர்கள் யார்..?
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 4: 48)
அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன்: 5:72)
உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்- 15 : 94)
அதெல்லாம் சரிதான் சகோ..! இணை கற்பிக்காமல் மற்ற பாவங்களை செய்வோரிடம் எப்படி சண்டை போட்டு ஒற்றுமையை குலைக்க முடியும்..?
அப்படியா..? கொஞ்சம் இருங்கள்… இதையும் தொடர்ந்து படியுங்கள்..!
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)
இங்கே… “அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர்” என்றால்.. என்ன அர்த்தம்..? குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணித்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றாமல் விட்டோர்தானே..? ஆக, அவர்கள் நம் குடும்பதாராகவே இருந்தாலும் நமக்கு “அல்லாஹ்வின் கயிறு தானே” முக்கியம் சகோ..? ஒற்றுமை அல்லவே..? சரிதானே..? ஆக, “ஒற்றுமையை குலைக்க” தயாராகுங்கள்..! 🙂
இப்படி ‘அல்லாஹ்வின் கயிற்றை’ பற்றிப்பிடிப்போரை பலர் ஆளுக்கு ஒரு பிரச்சாரம் செய்து குழப்பி வெவ்வேறு திசைகளில் இழுத்துச்செல்கின்றனரே..? இப்போது நாம் யாரை-எந்த இயக்கத்தை பின்பற்றுவது..? ஒருவருக்கொருவர் முரணாக அல்லவா கூறுகின்றனர்..?
இப்படியெல்லாம் குழப்பமே வேண்டாம் சகோ..! மனிதனை படைத்து ‘முதல் மனிதஜோடியே இவ்வுலகில் எப்படி வாழ்வது’ என்பதற்கு இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியை (
catalog – manual) கூடவே கொடுத்துதானே இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான்..? நம்மை மட்டும் இப்படி அனாமத்தாக பதிலின்றி விட்டுவிடுவானா..? உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்கள் ஆக்கி பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன்- 7:3)
ஆக, அல்லாஹ் இங்கே சொல்வது என்ன..? நாம் குர்ஆன் மற்றும் நபி வழிகள் இவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டுமாம். எந்த அறிஞறையோ, பெரியாரையோ, ஆசிரியரையோ அதற்கு பொறுப்பாக்கி பின்பற்றக்கூடாதாம்.
ஆனால், எனக்கு அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிவு இல்லையே..? நான் மவுலவி இல்லையே..? ஆலிம் இல்லையே..? பின் எப்படி குர்ஆன் நபிவழி அறிவது..?
இப்படித்தான் நாம் நம்மிடம் இல்லாத இஸ்லாமிய அறிவிற்காக ஒவ்வொரு உலமாவாக கேள்வி கேட்டுக்கொண்டு பதிலுக்காக விளக்கத்திற்காக தொங்கிக்கொண்டு இருக்கிறோம்.
ஆலிம்/மவுலவி :- உங்களை யாருங்க இப்படி எல்லாம் ஆக வேண்டாம் என்று தடுத்தது..? டாக்டர் ஆகிறீங்க.. இஞ்சிநியர் ஆகிறீங்க.. கலெக்டர் ஆகிறீங்க.. ஆனால், ஆலிம் மட்டும் ஆக மாட்டீங்களா..?
மற்றதெல்லாம் ஆகணும்னா அதுக்கு படிப்பு மட்டும் போதாது. சான்றிதழ் வேண்டும். உதாரணமாக, ஒரு அஞ்சு வருடம் வீட்டில் அமர்ந்து கடும் பிரயத்தனப்பட்டு மூன்று வருட சட்டக்கல்வியை கரைத்து குடித்துவிட உங்களால் முடியும்தானே..? அந்த அறிவைக்கொண்டு நீங்கள் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் அருமையாக வழக்காடி வெல்ல முடியுமா..? அங்கே
BL டிகிரி சர்டிஃபிகேட் அல்லவா கேட்பார்கள். அதை வைத்து பார் கவுன்சிலில் பதிவும் பண்ணி இருக்க வேண்டுமே..? ஆனால், மறுமையில் அல்லாஹ்விடம் ஆலிம் ஆகவேண்டுமானால்… “ஏழு வருஷம் மதரசாவில் படித்த பட்டம் எங்கே” என்று அல்லாஹ் கேட்பான் என்றா நினைக்கிறீர்கள்.? அல்லது, ஏழு வருஷம் படித்து பட்டம் பெற்றும் அனைத்தையும் மறந்து விட்டால் அவர் அல்லாஹ்விடம் ஆலிம் ஆகுவாரா..? சஹாபாக்கள் எந்த மதரசாவில் படித்தனர்..? ஆக, ஆலிம் என்றால் அறிந்தவர்-கற்றவர்..! அவ்ளோதான்.
சுவர்க்கம் அடைதல் மட்டுமே நம் இலட்சியம் என்றால், யாரும் ஆலிம் ஆகலாமே..! அதற்கு நாம் இஸ்லாமிய மார்க்கத்தை கசடற கற்க வேண்டும்..! கடுமையாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். கற்றபடி வாழ வேண்டும். நாமே நமக்கான – நம் இஸ்லாமிய வாழ்க்கைக்கான ஃபத்வாக்களை வழங்கிக்கொள்ளும் அளவுக்கு உறுதியான தெளிவான அறிவை பெற வேண்டும்.
இப்படியாக… நன்மையை ஏவி தீமையை தடுத்து நல்லமல்கள் செய்து ஏக இறைவனை மட்டுமே வணங்கி பித்அத்களை புறக்கணித்து நபிவழியில் வாழ்ந்தால்… அப்படி வாழும் நாம் யார்..? நமது பெயர் என்ன..?
என்னது… தவ்ஹீத்வாதியா..? ஏகத்துவவாதியா..? அது நாமே நமக்கு வச்சிக்கிட்ட பெயர்..! அந்த பெயர் வேண்டாம். ஏதோ நாம் முஸ்லிம் அல்லாத வேறொரு பிரிவினர் என்பது போல ஆகிறது..! இப்படி வாழும் நமக்கு ஒரு பெயர் அல்லாஹ் வைத்திருக்கிறான்..! அதைக்கொண்டே நம்மை அழைத்துக்கொள்வோம். அது என்ன..?
உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்குர்ஆன்- 22:78-ல் இடைப்பகுதி)
ஆம்..! நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்ன்ன்னர் முதல்மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதலாக… இதோ இன்றைக்கும் “அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடித்து” வாழும் மக்களுக்கும் பெயர் முஸ்லிம்கள்தான்..!
இப்படி வாழும் மக்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் போதும், அப்படி தீமைகளில் மூழ்கி இருப்போரிடமிருந்து தம் இருப்பை பிரித்துக்காட்ட அல்லது அந்த தீமையை தடுக்கும் பணியில் உண்டாகும் எதிர்ப்பை களத்திலும், சட்டரீதியாக வழக்குகளிலும் சமாளிக்க, ஜனநாயக அரசியல் ரீதியாக தம் கருத்தை அரசுக்கு கொண்டு போக “ஒரு முஸ்லிம்களின் அமைப்பு” என்று ஒன்று இருத்தல் அவசியம் ஆகிறது.
அப்படி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஓர் அமைப்பாக உருவாகி உண்டானோரில், பின்னாளில் மார்க்க விஷயங்களின் புரிதல்களிலோ, தாவா பணிக்காக அந்நிய நிதியை பெறுவதா-வேண்டாமா என்ற கருத்திலோ, அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்ற முடிவிலோ, தம்மீதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் ‘தான்தான்’ என்ற ஈகோ காரணமாகவோ மேலும் மேலும் மேலும் பிரிந்து விட்டனர்..! ஆனால், அவர்கள் அனைவரும் ‘தாம் அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போராக’ இருக்கும் பட்சத்தில் தம்மை ‘முஸ்லிம்கள்’ என்றே அழைத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
அப்படி அவர்கள் ‘அல்லாஹ்வின் கயிற்றை’ பற்றிப்பிடிப்போராக இருந்திருந்தால் இவ்வுலக பிரச்சினைக்காக பிரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இதில், ‘யாரிடம் எங்கே தவறு’ என்று அறிந்து, அலசி ஆராய்ந்து அதைக்கண்டு, உடன்பாடு கண்டு, பின் அதை களைந்து, அவர்களுக்குள் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபடவில்லை என்றால்… அதற்கு சாத்தியமில்லை என்றால், ஒவ்வொரு முறையும் பிரிந்த இருவரில் ஒருவரிடம் தவறு இருப்பது உறுதி..! எந்த அமைப்பிடம் எந்த விஷயத்தில் தவறு உள்ளது என்று அறிந்து அதனை அந்த விஷயத்தில் நாம் புறக்கணிக்க வேண்டும்.
For read more: http://onlyoneummah.blogspot.in/2011/09/blog-post_24.html