கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!
மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதில் கூத்தாடிகள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர்.
அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பரபரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.
அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம் காமத்தைத் தூண்டும் காட்சிகள். பெண்களை நிர்வாணமாகவும், ஆண்களை முழுமையாக உடல் மறைத்து ஆடை அணிபவர்களாகவும் காட்டும் மர்மம் என்ன?
ஆண்கள் ஜட்டியோடு காட்சி அளித்தாலும் பரவாயில்லை. அதனால் ஆபாசம், காம உணர்வு ஏற்படப் போவதில்லை. அதற்கு மாறாக பெண்களின் அங்கங்கள் தெரிந்தால் போதும் ஆபாசம், காம உணர்வு பீரிட்டு பாயும்.
அப்படியானால் இன்றைய கூத்தாடிகள் என்ன செய்கின்றனர்? இரண்டு கால் மனிதனை அறிவை இழந்து இரண்டு கால் மிருகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நாட்டில் ஈவ்டீஸிங், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை என நாளுக்கு நாள் கணக்கு வழக்கு இல்லாமல் பெருகி வருகின்றன. அநியாய அட்டூழியங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
முன்னர் பொய்க்கடவுள்களைப் கற்பித்த புரோகிதர்கள் மறைவாகச் செய்த மன்மத லீலைகள் நாத்திகம் தலைதூக்கிய பின்னர் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகி அந்த லீலைகள் பன்மடங்காகி வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் பவனிவர ஆரம்பித்து விட்டன. இயற்கையிலேயே இன விருத்திக்காக மனிதனிடம் காணப்படும் காம உணர்வு தவறான முறைகளில் தூண்டப்பட்டு எல்லை மீறி பெரும் தவறுகள் நிகழக் காரணமாகின்றது. இன்று நாட்டில் நீக்கமறக் காணப்படும் அனைத்து வகை அட்டூழியங்கள், கொடுமைகள், வன் செயல்கள், தீவிரவாதம் இன்ன பிற தீச்செயல்களை உரமிட்டு, நீர்பாய்ச்சி வளர்த்து வருவது கூத்தாடிகளின் நெறிகெட்ட செயல்களே!
சிறுவர்களுக்குப் புகைக்கக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள், குடிக்கக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள், விபச்சாரம், கற்பழிப்பு, களவு, கொள்ளை, கொலை என அனைத்து வகை ஈனச் செயல்களையும் கச்சிதமாகக் கற்றுக் கொடுப்பது கூத்தாடிகள். கள்ள ஓட்டு கலாச்சாரம், அரசியல்வாதிகளுக்கு தில்லுமுல்லு செய்து பணம் பண்ணி பெரும் தாதாக்களாக, தலைவர்களாகக் கற்றுக்கொடுப்பது கூத்தாடிகள், ஆண்கள், பெண்களின் அறிவை மழுங்கடித்து மூட நம்பிக்கைகளை, மூடச் சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் பல அநாச்சாரங்களை, அன்றும் இன்றும் அனைத்து மதங்களின் மதகுருமார்களும் வளர்த்து வந்ததை வருவதை இன்று கூத்தாடிகளும் வளர்த்து வருகின்றனர் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
விபச்சாரத்தில் ஈடுபடாமல் ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ நடிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இன உறுப்புகள் இணைவது மட்டும்தான் விபச்சாரமா? மனைவி அல்லாத பெண்ணை இச்சையுடன் பார்ப்பது கண்களின் விபச்சாரம், கையால் பிடிப்பது கை செய்யும் விபச்சாரம், முத்தமிடுவது வாய் செய்யும் விபச்சாரம், கட்டிப்பிடித்து கொஞ்சிக் குலவுவது உடல் செய்யும் விபச்சாரம், இந்த விபச்சாரங்களிலிருந்து விடுபட்டு நடிக்கும் ஒரு நடிகனையோ, ஒரு நடிகையையோ காட்ட முடியுமா! இந்த சில்லரை விபச்சாரங்களால் காமம் கட்டுக்கடங்காமல் தூண்டப்பட்டால், அது எங்கு போய் விடும்? அது விபச்சாரத்தை நிறைவு படுத்தும்.
அந்நியப் பெண்ணுடன் ஆட்டம் போட்டு, கட்டிப்பிடித்து, அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முழுநிர்வாணத்துடன் உருண்டு, பிறண்டு கொஞ்சிக் குலாவி, முத்தமிட்டு, காமத்தைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசி நடித்த கூத்தாடிகளில் ஆண்களிலும், பெண்களிலும் அதை நிறைவு செய்யாதவர்கள் அபூர்வத்திலும் அபூர்வம் என்று சொல்லி விடலாம்.
நடிகர்களில் சிலர் குர்ஆனை நேரடியாகப் படித்து நேர்வழியை விளங்கி இஸ்லாத்தைத் தழுவியவர்கள் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு சிறுசிறு தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர். நடிப்புத் தொழிலை ஏன் கைவிட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் நடிப்புத் தொழிலில் ஒழுக்கம் பேண முடியாது என்று உண்மை நிலையை மறைக்காமல் சொல்கின்றனர்.
ஒரு பிரபல நடிகை திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்வதில் தவறில்லை. ஆனால் கர்ப்பம் தரிக்காமல், எய்ட்ஸ் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பேட்டி கொடுத்து நாடே சிரித்ததை நாம் அறிவோம். அரசும், உயர்நீதி மன்றமும் ஓரின சேர்க்கையை அனுமதித்து சட்டம் இயற்றிய நிலையில் விபச்சாரத்தையும் அனுமதித்து சட்டமாக்குவது வெகு தொலைவில் இல்லை.
ஆம்! முஸ்லிம்களே! உலகை வழி நடத்திச் செல்லும் பொறுப்பிலுள்ள நீங்கள் ஆல இம்ரான் 3:102, 103 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வுக்கு எந்த அளவு பயபக்தியுடன் நடக்க வேண்டுமோ, அந்த அளவு பயபக்தியுடன் நடக்காமல், முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்ட நிலையில் மரணிக்கத் தயாராகாமல், அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை அப்படியே எடுத்து அதன்படி நடக்காமல், 7:3, 33:36,66,67,68 இறைக்கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் புரோகிதர்களையும் சினிமா கூத்தாடிகளையும் நம்பி, அவர்களின் தவறான போதனைகளை எடுத்து நடப்பதால், அதன் விளைவாக முஸ்லிம்களாகிய நீங்களே வழிகெட்டுச் செல்லும்போது மற்றவர்களுக்கு நீங்கள் நேர்வழி காட்டுவது எங்ஙனம்?
source: http://www.readislam.net/