இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்! (2)
[ o ஆலிம்களே! உங்களது இமாமத் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக மக்களுக்குள் குரோதத்தைமூட்டி பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் நீங்கள் அடையும் ஒவ்வொரு இலாபமும் ஹராமானதே என்பதை ஆலிம்களாகிய உங்களுக்கு விளங்காமல் போனதேன்?!
o ஆயிரக்கணக்கான… ஏன் லட்சக்கணக்கான முஸ்லிம்களை திருமணம் முடிக்க தகுதியற்றவர்களாக ஆக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்? இவருக்கென்று வானவர் எவரேனும் வஹீயைக் கொண்டு வந்து ரகசியமாகக் கொடுத்துவிட்டுச் சென்றாரா?! அதையாவது சொல்லட்டும்?!
o நபிமார்களுக்குக்கூட அளிக்கப்படாத உரிமையை உங்களுக்கெல்லாம் வழங்கியது யார்? சொல்லுங்கள்… சொல்லுங்கள்… சொல்லுங்கள்…! இங்கு சொல்லவில்லையென்றால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் கேட்பானே… அஞ்ச வேண்டாமா அவனுக்கு?!
o லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பிறப்பை கேவலப்படுத்திப்பேசிய அந்த மனித மிருகம் மறுமையில் அதை… -ஒவ்வொரு பெண்ணின் கற்பின்மீதும் சுமத்திய குற்றச்சாட்டை நீரூபிக்காதவரை நரகத்திலிருந்து ஒரு அடி கூட சுவனத்தின்பால் எடுத்துவைக்கமுடியாது எனபது இஸ்லாம் கூறும் எச்சரிக்கை!
o சில ஆலிம்கள் பல்சமயக்கூட்டங்களில் பேசும்போது மதரஸாக்களைப்பற்றிக் குறிப்பிடும்போது “நாங்கள் விஞ்ஞானிகளையோ தொழில்நுட்ப வல்லுநர்களையோ உருவாக்கவில்லை ஆனால் (நல்ல)மனிதர்களை உருவாக்குகிறோம்” என்று சொல்வது வழக்கம். இவரைப்போன்றவர்களைக் காணும்போது தப்பித்தவறி சில மிருகங்களையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது.]
இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்! (2)
அல்லாஹ்வை விடுத்து ”தர்ஹா வேண்டுதலை” ஊக்குவிக்கும் ஆலிம்களே! அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சுங்கள்!
ஹா! எங்களுக்கே புத்திசொல்லி மிரட்ட வந்துவிட்டீர்களோ!” என்று சம்பந்தப்பட்ட எவரேனும் எண்ணுவார்களேயானால் நிச்சயமாக இதிலுள்ள எச்சரிக்கை முழுக்க முழுக்க அவர்களுக்குத்தான். ஆம்! 7 வருடமோ, எட்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ படித்து(!!!) பட்டம் பெற்றும், தவறான வழியில் சென்றுகொண்டிருக்கும் ஆலிம்களைத்தான் நேரடியாக குறிப்பிடுகிறோம்.
நம்மில் சிலரிடம் தொழுகையில்லாவிட்டாலும் ஏதோ ஒரு இடுக்கில் ஈமானாவது மிஞ்சியிருக்கும். ஆனால் ஐவேளையும் தொழக்கூடிய சிலரையும் வளைத்து அவர்களை மூளை சலவை செய்து அவர்களின் ஈமானுக்கே உளை வைத்து தொழுகையற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாக அவர்களை மாற்றுவதற்குத்தானோ மதரஸாக்களில் மக்கள் பணத்தில் படித்து பட்டம் பெற்றீர்கள்?!
உங்களுக்குக் கிடைக்காத உலகக்கல்வியை எந்த அளவுக்கு மட்டம் தட்டமுடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டி அதில் தோல்வியைத் தழுவிய ஆத்திரமோ என்னவோ… ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வார்களே அதுபோல ஆலிம்களில் சிலருக்குள்ள கருத்து வேறுபாட்டில் சந்தடி சாக்கில் உள்ளுக்குள் புகுந்து – தர்ஹா நம்பிக்கையை உள்ளுக்குள் புகுத்தி “சுன்னத் வல் ஜமாஅத்” பெயரை கபளீகரம் செய்யும் உங்கள் முயற்சியை மதரஸாக்களில் உங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் சந்ததிகள் வேண்டுமானால் நம்பி வழிகெட்டுப்போகலாமே தவிர பள்ளியிலும் கல்லூரியிலும் உன்மையாகவே படித்து பரீட்சை எழுதி பாஸ் பண்ணி பட்டம் பெற்ற முஸ்லிம் ஆண்கள் பெண்கள் ஏமாற மாட்டார்கள். உங்களால் ஏமாற்றவும் முடியாது. கல்வி கற்பதில் முன்னேற்றம் கண்டு வரும் இன்றைய முஸ்லிம்கள் மார்க்க விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார்கள்.
ஆலிம்கள் என்றால் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்கள்.. அவர்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு என்று மக்கள் நம்பியிருந்த காலமெல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. அதைக்கண்டு பொறுக்காத காரணத்தாலேயே ஆலிம்களான உங்களுக்குள் உண்டான கருத்து வேறுபாட்டுக்கு மக்களை பகடைக்காயாக உருட்ட முனைந்துள்ளீர்கள்.
இமாம்களைப் பின்பற்றுவதாக நீங்கள் சொல்வதெல்லாம் வேஷம் என்பதை உங்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மிக நன்றாகவே புரியும். ”சுன்னத் வல் ஜமாஅத்” எனும் பெயருக்குள் ஒளிந்துகொண்டு வேஷம் போட்டுக்கொண்டு குளிர்காயும் உங்களின் முகமூடி கிழிக்கப்பட்டு வருகிறது, இன்ஷா அல்லாஹ் விரைவில் முழுவதுமாக கிழிபடும்.
இமாமத் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத நிலையில் மக்களுக்குள் விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்துவிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்று எண்ண வைக்கிறது உங்களில் சிலரது நடவடிக்கைகள்! ஆதாரம் தேவையானால் இன்ஷா அல்லாஹ், அள்ளி வீச முடியும் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு.
முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பிரபல மதரஸா உள்ள ஒரு ஊரில்… ஏன் மறைத்துச் சொல்வானேன்… நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்… நாகை மாவட்டம் நீடூர் நெய்வாசல்! நாகை மாவட்டதிலேயே முஸ்லிம்கள் அடர்ந்து வாழும் ஊர். அவ்வூரின் ஜாமிஆ மஸ்ஜிதின் துணை இமாமாக இருப்பவர் அவ்வூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகிறார்… “தவ்ஹீது இயக்கத்திலுள்ளவர்களுடன் திருமணம் போன்ற சம்பந்தங்களை வைத்துக் கொள்ளாதீர்கள்….!!!”
அறிவுள்ள எந்த முஸ்லிமும் சொல்லத் துணியாத ஒரு வார்த்தையை இமாமாக இருந்துகொண்டிருக்கும் ஒருவரால் எப்படி சொல்லமுடிகிறது? பரீட்சையெழுதி பட்டம் பெற்றாரோ அல்லது 7 வருடம் பொதுமக்கள் அளித்த தர்மத்தில் காலத்தை ஓட்டி பட்டம் பெற்றரோ தெரியவில்லை! ஒழுங்காக படித்து தஹ்ஸில் வாங்கியிருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் அவரிடமிருந்து வந்திருக்காது என்று எண்ணும் வேளையில் இவர் ஒரு தரீக்கா வாதியாம்! அதுவும் ஒரு வேஷம் என்பதற்கு அவரது இந்த ஒரு பேச்சே போதும்.
தரீக்காவாதிகளின் கொள்கைப்படியே வைத்துக்கொள்வோம்… ஷரீஅத்.. ஹகீகத்… மஃரிபத் என்று அடுக்குகிறார்களே அதிலுள்ளவர்களின் தகுதியெல்லாம் இவ்வளவுதானா? அதாவது கலிமா சொன்னவர்களையெல்லாம் தகுயிழக்கச்செய்து காஃபிராக்குவது தானா? கேவலமாக இல்லை! இவ்வுலகில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் அல்லாஹ்வின் ஞானமில்லமல் நடப்பதில்லை. அவ்வாறு இருக்கையில் அப்படியென்ன அவசரம் ஆத்திரம் உங்களுக்கு?!
தவறான கொள்கைவெறி, சுயநலத்தைத்தவிர வேறு ஏதேனும் தெரிகிறதா இதில்?! இந்த அழகில் இவர் முரீது வழங்கும் ஷேக் என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள்! இவரைத்தான் அதே மஸ்ஜிதின் தலைமை இமாமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வாய் பெருமகனார்(!) பெருமகனார்(!) என்று துதி பாடுகிறார். (இவரை ஒரு பெரும் ஷேக் என்று நம்பக்கூடிய அப்பாவிகளைப் பார்த்து பரிதாபம் தான் வருகிறது.) பொய் சொல்வதற்கும் பொய்சாட்சி சொல்வதற்கும் கூட துளியும் அஞ்சாத இவர்கள் இருவரும் ஜாமிஆ மஸ்ஜிதின் இமாமாக இருப்பது; ஒரு காலத்தில் மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக இருந்த நீடூர் நெய்வாசலுக்கு மிகப்பெரும் கலங்கம் என்றே சொல்ல வேண்டும்.
வேதம் கொடுக்கப்பட்டவர்களை திருமணம் முடிப்பதற்கு அல்லாஹ்வே தனது திருமறையாம் அல்குர்ஆனில் அனுமதி வழங்குகிறான். தவ்ஹீத் இயக்கத்திலுள்ளவர்களெல்லாம் கலிமாவை ஏற்றுக்கொள்ளாதவர்களா? “தவ்ஹீத் இயக்கத்திலுள்ளவர்கள் இவரைக்காட்டிலும் குர்ஆனை அழுத்தமாக பின்பற்ற வேண்டும் எனும் கொள்கையைத் தானே வலியுறுத்துகிறார்கள். அவர்களையெல்லாம் திருமணம் முடிக்காதீர்கள் என்று இவர் சொல்கிறார் எனும்போது இவர் ஏகத்துவக் கொள்கையைகையான தவ்ஹீதை நம்பவில்லையோ…! வேறு ஏதேனும் கொள்கையில் இருக்கிறார் என்பதை அவர் அறியாமலேயே கொட்டிவிட்டரோ…!
ஆயிரக்கணக்கான… ஏன் லட்சக்கணக்கான முஸ்லிம்களை திருமணம் முடிக்க தகுதியற்றவர்களாக ஆக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்? இவருக்கென்று வானவர் எவரேனும் வஹீயைக் கொண்டு வந்து ரகசியமாகக் கொடுத்துவிட்டுச் சென்றாரா?! அதையாவது சொல்லட்டும்?!
நபிமார்களுக்குக்கூட அளிக்கப்படாத உரிமையை உங்களுக்கெல்லாம் வழங்கியது யார்? சொல்லுங்கள்… சொல்லுங்கள்… சொல்லுங்கள்…! இங்கு சொல்லவில்லையென்றால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் கேட்பானே… அஞ்ச வேண்டாமா அவனுக்கு?!
சகோதரரே! சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரை சில நாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. அதுவும் அந்த ஏக வல்ல அல்லாஹ்வை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
(உண்மையான அக்கரையுடன் அவருக்கு சொல்லிக்கொள்வோம் மீண்டும் கலிமா சொல்லி உங்கள் ஈமானை புதுப்பித்துக்கொள்ளுங்கள்… வெறும் வாய் மொழியாக மட்டுமல்ல, உறுதியான உள்ளச்சத்துடன். ஏனெனில் ”ஒரு முஸ்லிமைப்பார்த்து காஃபிர் என்று எவரேனும் சொல்வாரேயானால் ஒன்று சொல்லப்பட்டவர் காஃபிராக இருப்பார் அல்லது சொன்னவர் காஃபிராக இருப்பார்” என்பது நபிமொழி.)
இதுமட்டுமின்றி ”சுன்னத்வல் ஜமாஅத்”திலுள்ள பல சகோதரர்கள் தவ்ஹீத் இயக்கத்தைச் சார்தவர்களுடன் நட்பு பாராட்டுவதை சகித்துக்கொள்ள முடியாமல் சுன்னத்வல் ஜமாஅத் சகோதரர்களையும்கூட “வஹ்ஹாபி” என்று கொஞ்சம்கூட நா கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யக்கூட தயங்காதவர்கள் இவர்கள் என்பதும் உண்மை.
இங்கு ஒரு சத்தியமான உண்மையை எடுத்துச்சொல்லியே ஆகவேண்டும். பொதுமக்களைப் பொருத்தவரை அனைவருமே ஒற்றுமையாக இருப்பதையே விரும்புகின்றனர். ஆனால் மார்க்கத்தை சரியாக விளங்காத இறையச்சம் என்றால் என்னவென்றே அறியாத ரெண்டுங்கெட்டான் ஆலிம்கள் தான் மக்களை கூறுபோட்டு பிரிக்கும் காரியத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆலிம்களே! உங்களது இமாமத் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக மக்களுக்குள் குரோதத்தைமூட்டி பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் நீங்கள் அடையும் ஒவ்வொரு இலாபமும் ஹராமானதே என்பதை ஆலிம்களாகிய உங்களுக்கு விளங்காமல் போனதேன்?!
”பசுத்தோல் போர்த்திய புலி” என்று சொல்வார்களே (இவர்களை புலி என்று கூட சொல்ல முடியாது நரி என்று சொல்வதுதான் பொருத்தம்) அதுபோல ஆலிம்கள் எனும் உயர்வான அடையாளத்துக்குள் இமாம் எனும் உயர் பதவிக்குள் ஒளிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது கேடுகெட்ட ”ஷிர்க்”கான தர்ஹா நம்பிக்கையை முஸ்லிம்களிடம் புகுத்துவதற்கு முயன்று கொண்டிருக்கும் வேளையில்…., தவ்ஹீத் சகோதரரகளும் அவர்களுடன் நட்பு பாராட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உண்மையாளர்களின் விழிப்புணர்வு தங்களுடைய கனவுகளை குலைத்துவிடுமோ எனும் அச்சத்தில்; என்ன பேசுகிறோம், அதன் கருத்து எவ்வாரெல்லாம் பொருள் கொடுக்கும் என்பதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் – உண்மையில் சொல்லப்போனால் வெறித்தனமாக… ஆம், எந்த ஒரு முஃமினும் மற்ற முஃமினைப்பார்த்து சொல்லக்கூடாத வார்த்தைகளால் வசைபாடி தான் ஒரு சாக்கடையிலும் கடைந்தெடுத்த சாக்கடை என்பதை நிரூபித்தும் காட்டியுள்ள இவர்தான் பெருமகனாராம் பேஷ் இமாமுக்கு!!!
கலிமா சொன்ன காரணத்திற்காக இவரை முஸ்லிம் என்று சொல்லலாமே தவிர இவரைப்போன்றவர்களை முஸ்லிம் என்று சொல்வது இஸ்லாத்துக்கே கேவலம். மாற்றுமத சகோதரர்களுக்குத் தெரிந்தால் கூட காரித் துப்புவார்கள்… “உங்கள் மதகுருமார்கள் இவ்வளவு கேவலமானவர்களா என்று!
அப்படி அவர் என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா?
ஒட்டுமொத்த தமிழகத்திலுள்ள முஸ்லிம்களும் கேளுங்கள் இந்த முட்டாளின் வார்த்தையை (ஏன் முட்டாள் எனும் சொல்லை இங்கு பயன்படுத்துகிறேன் என்பதை இறுதியில் சொல்கிறேன்).
தவ்ஹீது இயக்கத்தைச் சார்ந்தவர்களெல்லாம் “கருவின் குற்றமாம்”!
என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா சகோதரர்களே!
இவர்களெல்லாம் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் என்கிறார். ஷைத்தான் கூட இப்படியொரு குற்றச்சாட்டை- முஸ்லிம் என்று மட்டுமல்ல வேறு எந்த ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவர்ககளின் மீதும் கூட சுமத்த அஞ்சுவான். (உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன என்பது நபிமொழி) அப்படிப்பட்ட கேவலமான வார்த்தையை – அதுவும் ஜும்ஆ பயானில் “மலமாக கக்குகிறார்” என்றால் இவர் உள்ளத்தில் எந்த அளவு குரோதமும் வஞ்சகமும் ஒளிந்திருக்கிறது! அல்லாஹ்வின் அச்சம் கடுகளகாவாவது இருக்க முடியுமா இவரைப் போன்றவர்களிடம்?!
இப்படிப்பட்டவர்களை உருவாக்கியதற்காக அவர் கற்ற மதரஸாக்கள் வெட்கப்பட வேண்டும். அவரின் மவ்லவி பட்டத்தை தகுதியழக்கச் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லையென்றால் ”ஜமா அத்துல் உலமா” சபை துணிவுடன் களமிறங்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த ஆலிம் சமுதாயமும் மக்கள் முன் கேவலப்பட்டு நிற்கும் காலம் நெருங்குவதை கண்கூடாகக்காணும் சூழ்நிலை உருவாகலாம். அல்லாஹ் அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலிருந்து நம் சமுதாயத்தைக் காப்பானாக.
சில ஆலிம்கள் பல்சமயக்கூட்டங்களில் பேசும்போது மதரஸாக்களைப்பற்றிக் குறிப்பிடும்போது “நாங்கள் விஞ்ஞானிகளையோ தொழில்நுட்ப வல்லுநர்களையோ உருவாக்கவில்லை ஆனால் (நல்ல)மனிதர்களை உருவாக்குகிறோம் என்று சொல்வது வழக்கம். இவரைப்போன்றவர்களைக் காணும்போது தப்பித்தவறி சில மிருகங்களையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது.
இனியாவது மதரஸாக்களில் இதுபோன்ற மிருகங்களை உருவாக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். இஸ்லாம் என்றால் அமைதி – சாந்தி என்று சொல்லிக்கொண்டு அமைதியை கெடுக்கும் அத்தனை காரியங்களுக்கும் தூபம் போடும் இவர்களைப்போன்றவர்களை உருவாக்காதீர்கள்.
இஸ்லாமைப்பற்றியும் அதன் கொள்கையைப்பற்றியும் அரைகுறையாக படித்துக்கொடுத்துவிட்டு பேருக்கு ஒரு பட்டத்தையும் கொடுத்து அனுப்பிவிடும் வழக்கத்துக்கு மூட்டை கட்டிவிட்டு உலக மக்கள் அனைவரையும் நேசிக்கும்படி கற்றுக்கொடுங்கள். முஸ்லிம்களையே நேசிக்கத்தெரியாத மனிதர்களை உருவாக்கிவிட்டு எப்போது மற்றவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும் (உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற அந்த) தஃவா பணியை செய்யப்போகிறீர்கள்?
கற்புள்ள பெண்ணின் மீது அவதூறு சொல்வது நரகத்திற்கு வழிகாட்டும் செயல் என்பதை அவரும் அவருக்குப்பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்களும் சிந்திக்க மறந்ததேன்! ஒரு பெண்ணை குற்றம் சுமத்துவதே பாவம் எனும்போது லட்சக்கணக்கான நம் சமுதாயப்பெண்களின் கற்புக்கு கலங்கம் விளைவிக்கும் வார்த்தையை, சொல்வதற்கே வாய்க்கூசும் வசைபாடலை பாடிவிட்டு கொஞ்சமும் இறையச்சமில்லாமல் ஒருவர் இருப்பாரேயானால் இவரைவிட முட்டாள் இவ்வுலகில் வேறு எவர் இருக்க முடியும்? சொல்லுங்கள்.
லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பிறப்பை கேவலப்படுத்திப்பேசிய அந்த மனித மிருகம் மறுமையில் அதை – ஒவ்வொரு பெண்ணின் கற்பின்மீது சுமத்திய குற்றச்சாட்டை நீரூபிக்காதவரை நரகத்திலிருந்து ஒரு அடி கூட சுவனத்தின்பால் எடுத்துவைக்கமுடியாது எனபது இஸ்லாம் கூறும் எச்சரிக்கை! இதை அவரும் அவரது சிஷ்யர்களும் நினைவில் கொள்ளட்டும்.
உங்களுக்கு உண்மையாக இறையச்சம் இருக்குமானால் குற்றம் சுமத்தியவர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்டு இவ்வுலகிலேயே மீட்சி பெறுங்கள். இல்லையெனில் மறுமை உங்களுக்கு கேடாகவே முடியும் இஸ்லாத்தின் பார்வையில்!
இவரால் அவதூறுக்குள்ளானவர்கள் மறுமையில் “படுபாவி! நாங்களா கற்பிழந்தவர்கள்? நாங்களா கேடுகெட்டவர்கள்?” என்று உங்களையும் நீங்கள் கொட்டிய அசிங்கங்களை கேட்டு உள்ளம் குளிர்ந்தவர்களையும் பாடாய் படுத்தும் அவலநிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வுலகிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடம் “தவ்பா”ச்செய்து கொள்ளுங்கள். இல்லையேல்… நீங்களே… நிரப்பிக்கொள்ளுங்கள் உங்கள் தலையெழுத்தை!
இனியாவது இஸ்லாமை தெளிவாக புரிய முயற்சி செய்யுங்கள்.
ஆலிம்களே!
நீங்கள் நபிகளாரின் வாரிசுகள்தான், உண்மையாளர்களாக இருந்தால்! அதைவிடுத்து நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் மீறி – நீங்களே ஒரு நபியாக கற்பனை செய்துகொண்டு புதிது புதிதாக மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களை புகுத்தாதீர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
அல்லாஹ்வுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இன்றைய முஸ்லிம் சமூகம் முன்பைவிட அதிக அக்கரையுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ”தர்ஹா நம்பிக்கையை நஞ்சாக ஊட்டி” ”அல்லாஹ்வின்மீது அவநம்பிக்கையை” ஏற்படுத்தும் எவராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக சமுதாய விரோதிகள் மட்டுமல்ல சமுதாய துரோகிகளே!
முஸ்லிம் சகோதரர்களே!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தை பேணி நடப்போம். ஷிர்க் மற்றும் பித்அத்துகளை குழிதோண்டிப் புதைப்போம். ஏனெனில் எங்கெல்லாம் ஷிர்க்கும் பித்அத்தும் கண்டும் காணாமல் விடப்படுகிறதோ அங்கெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகள் அலட்சியப்படுத்தப் படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பித்அத்துக்கு சுன்னத்தை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுன்னத்துகள் – ஹராமான நிலைக்கும்கூட தள்ளப்படுகின்றன. (நவூதுபில்லாஹ்) அதுவும் இவர்களைப்போன்ற ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகின்றன.
எனவே,
o சமுதாயத்தைத் துண்டாடி குளிர்காய நினைக்கும் ஆலிம்களிடம் எச்சரிக்கையாக இருப்போம்.
o அல்லாஹ்வை முழுமையாக நம்பினால் மட்டுமே வெற்றி.
o அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. மாயக்காரனான ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விடாதீர்கள்.
o அல்லாஹ்வின் ரஹ்மத்தின் மீது நம்பிக்கையிழந்து விடாதீர்கள்.
o அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்திலிருக்கிறது. அல்லாஹ் சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் மிக்கவன்.
o எல்லா முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஏகத்துவக்கொள்கையை ஓங்கச்செய்வோம்.
வஆகிர் தஃவானா அனில்ஹம்து லில் ஆலமீன்.
தவக்கல்(த்)து அலல்லாஹ்.
உங்கள் சகோதரன்
எம்.ஏ.முஹம்மது அலீ.