காயல் பட்டிணம் ஜலீல் – புத்தாண்டு கொணடாட்டம்!
காலண்டர் ஃபாத்திஹா! ‘ஜமா அத்துல் உலமா’ தடுத்து நிறுத்துமா?
”யார் பிற மதக்கலாச்சாரத்தை பின் பற்றுகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவர் இல்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கும் போது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு மார்க்கத்தை தங்களின் மனோ இச்சைக்கு தக்கவாறு மாற்றிக்கொண்டு வழிகெடுக்கும் சுயநலவாதிகள் இருக்கவே செய்கின்றனர்.
காலண்டரை இவரிடம் கொடுத்து ஃபாத்திஹா ஓதி வீட்டில் மாட்டினால் அருள் வளம் கொழிக்கும் என மூட நம்பிக்கையில் இன்று இரவு 12 மணிக்கு மக்கள் லைன் கட்டி நின்று காலண்டரை வைத்து ஃபாத்திஹா ஓதி வழி கெட்டு போகும் காட்சியை டீ வி யில் வேறு நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்…!
மேலிருக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் நமக்கு தோன்றிய ஒரு யோசனை…
தமிழகத்திலுள்ள ஆலிம்களின் சபையான ”ஜமா அத்துல் உலமா சபை” உடனடியாக களத்தில் இறங்கி இதுபோன்ற செயல் இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானது என்பதை நேரடியாகவோ அவ்வூரிலுள்ள ஆலிம்களின் மூலமாகவோ எடுத்துச்சொல்லி களைய வேண்டியது கட்டாயம். இதைக்கூட “ஜமா அத்துல் உலமா சபை” செய்யவில்லையென்றால் “நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஒரு முஸ்லிமின் கடமைகளில் முக்கியமானதொன்று” என்று மேடையிலும் மஸ்ஜிதிலும் பயான் செய்வதில் அர்த்தமில்லை.
எங்களால் இவற்றையெல்லாம் எவ்வாறு தடுக்க இயலும்…?! என்று அவர்கள் கருதுவார்களேயானால்… தீமையைக்கண்டால் கரத்தால் தடுக்க இயலாமல் மனதால் தடுத்து விலகியிருத்தல் எனும் நிலையை அவர்கள் மேற்கொள்வார்களேயானால்… தீமையைக்கண்டு மனதால் வெறுத்து ஒதுக்குதல் என்பது ஈமானின் பலகீனமான செயலாகும்…. எனும் கூற்றின்படி அச்சபையிலுள்ளவர்கள் ஈமானின் கடைசீ தட்டில்தான் இருக்கிறார்களா…?!
வீண் விவாதமாக இதை நாம் சொல்ல வரவில்லை. எங்கெல்லாம் இதுபோன்ற பித் அத்துகள் கண்டும் காணாமல் விடப்படுகிறதோ அங்கெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ளின் “சுன்னத்துகள்” குழிதோண்டிப்புதைக்கப்படும் செயலும் நடந்து கொண்டு வருவது கண்கூடு. எனவே ”சுன்னத்வல் ஜமாஅத்”தின் தலமைபீடமாக பரைசாற்றும் ஜமாஅத்துல் உலமா சபை நேரடியாக களத்தில் இறங்கி இது போன்ற ”பித்அத்”துகளை களைய முன்வர வேண்டும்.
முஃமீன்களின் ஈமானை பாதுகாப்பதற்காக, உடனடியாக ஜமா அத்துல் உலமா சபை இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
”ஜமா அத்துல் உலமா” மட்டுமின்றி இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் இதுபோன்ற செயலைதடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
-எம்.ஏ.முஹம்மது அலீ
{jcomments on}