கற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா
இங்கே நமது இந்தியா ஒழுக்க கேடுகளிலும், பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கிறது.
சமீபத்தில் தில்லியில் பேருந்து ஒன்றில் பெண் கற்பழிக்கப்பட்ட செய்தி இந்தியாவை உலுக்கியது.
ஐந்து வயது சிறுமி முதல் எழுபது வயது பாட்டி வரை வன்மமான முறையில் கற்பழிக்கப்படும் ‘கற்பழிப்பு தேசமாக’ இந்தியா மாறியுள்ளது.
National Crime Records ன் படி இந்த வருடம் இம்மாதம் டிசம்பர் வரை நாடு முழுவதிலும் 2,56,329 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றதாம்.
அதில் 2,28,650 குற்றங்கள் பெண்களுக்கு எதிரானது தாம். அதிலும் 26% கற்பழிப்பு குற்றங்களாம். வெளிநாட்டு முன்னணி பத்திரிக்கைகள் ‘இந்தியாவில் கற்பழிப்பு கூக்குரல்கள்’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கும் பொழுதெல்லாம் மக்கள் தரப்பில் இருந்து இரண்டு கோரிக்கைகள் எழும்பும்.
ஒன்று: பெண்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும்.
மற்றொன்று: கடுமையான சட்டங்களை இயற்றி, கற்பழிப்பில் ஈடுபடுவோர்க்கு கடும் தண்டனை தர வேண்டும்.
இவ்வாறான நேரங்களில் சிலர் அதிகபட்சமாக மரண தண்டனை தர வேண்டும் என்றும், இன்னும் சிலர் இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போன்று மரண தண்டனை என்றும் சொல்வதுண்டு.
பொதுவாகவே மக்கள் இஸ்லாம் என்றாலே கைவெட்டு, கால்வெட்டு. தலைவெட்டு என்று விளங்கி வைத்துள்ளார்கள்.
இது மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்துள்ள கற்பனை பிம்பமாகும்.
மேற்கூறப்பட்ட அம்மூன்றும் இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களின் ஒரு பகுதி தானே தவிர அம்மூன்றும் மட்டுமே ஷரிஅத் சட்டங்கள் அல்ல.. அவ்வாறே அம்மூன்றும் மட்டும் இஸ்லாமும் அல்ல..
சிலர் நினைப்பது போன்று இந்திய மக்களின் வாழ்க்கை நெறி மாறாமல் அம்மூன்றையும் இந்திய குற்றவியல் சட்டங்களில் சேர்த்தாலும் குற்றங்கள் ஒன்றும் குறைந்தும் விடாது.
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
கள்ளன் பெரியவனா
காப்பான் பெரியவனா
கள்ளன் தான் பெரியவன்
நம்மை பொருத்தவரை இந்திய மக்களின் வாழ்க்கை நெறி மாறாமல் எத்துணை கடுமையான, மரண தண்டனையை விட கொடிய தண்டனையை கொண்டு வந்தாலும் சரி இந்த அவலங்களை தடுத்து நிறுத்த முடியாது.
ஏனெனில், கற்பழிப்பு நடந்த டெல்லியில் இரவு 8.00 மணிக்கு மேல் பெண்களை வைத்து ஒரு நிறுவனம் வேலை வாங்க வேண்டுமெனில்,அந்நிறுவனம் தொழிலாளர் நலத்துறையிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் எனும் விதிமுறை உள்ளது.
அது மட்டுமல்ல.. நமது இந்திய தேசத்தில் எல்லா மாநிலங்களிலும் பெண் போலிசார் இருக்கவே செய்கின்றனர்.
பீச், பார்க், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் எல்லா பகுதிகளிலும் பெண் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவே செய்கின்றனர்.
அரசாங்கம் முடிந்தளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தான் உள்ளது.
அதற்காக ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு போலிஸ் என்ற விகிதத்தில் எந்த நாட்டிலும் பாதுகாப்பு தர முடியாது.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சுயமாக அவன் திருந்தாத வரை யாராலும் அவனை திருத்தி விட முடியாது.
அவ்வாறே சுயகட்டுப்பாட்டுடன் மனிதர்கள்
ஒழுக்கமாக இருக்காத வரை சமூகத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது.
ஏனெனில் சட்டங்களில் உள்ள நெளிவு சுளிவுகளின் வழியாக மனிதர்கள் தப்பித்து விடவே செய்வார்கள்.
ஆகவே சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் தான் சமூக அவலங்களை நிரந்தரமாக ஒழிக்கும்.
அத்தகைய சுய கட்டுப்பாட்டினையும், ஒழுக்கத்தையும் இஸ்லாம் மனிதனுக்கு தருகிறது.
முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்கள் அமலில் இல்லாத இந்நாட்டில் வாழ்கிறோம், அதே டெல்லி, கல்கத்தா, மும்பை , பெங்களுர், சென்னை போன்ற நகரங்களில் அரை குறை ஆடை நாகரிக பெண்கள் வலம் வரத்தானே செய்கிறார்கள்.
முஸ்லிம்கள் தவறுகளில் ஈடுபடுகிறார்களா? இல்லையே!!!
இன்னும் சொல்வதெனில் இந்தியாவை விட மிக மோசமான ஆடை குறைப்பு பெண்கள் வாழும் அமெரிக்கா, ஐரோப்பாவில். முஸ்லிம் ஆண்கள், பெண்கள் ஒழுக்கமாக வாழவில்லையா?
கற்பு என்பதற்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாத நாடுகள் தாம் மேற்கத்திய நாடுகள்
அங்கு முஸ்லிம்களை ஒழுக்கமாக வாழ வைத்துள்ளது எது?
சட்டங்களா? அல்லது ஆடைகளா? இரண்டும் இல்லை
அங்கே இஸ்லாமியர்கள் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் வாழ்வதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
இஸ்லாம் மனிதனின் அடிமனதில் சுய ஒழுக்கத்தை விதைக்கிறது. சுய கட்டுப்பாட்டுடன் அவனை வாழ வைக்கிறது. அவனது உள்ளத்தை எல்லா வகையான அசுத்தங்களில் இருந்தும் பரிசுத்தப்படுத்துகின்றது. உள்ளம் சுத்தமாகி விட்டால் எல்லாம் சுத்தமாகி விடும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “(மக்களே!) அறிந்து கொள்ளுங்கள். மனித உடலில் ஒரு சதைப் பகுதி உள்ளது. அது சீரானால் உடம்பின் எல்லா பகுதிகளும் சீராகும். அது சீர்கெட்டுப் போனால் உடலின் எல்லா பகுதிகளும் சீர்கெட்டுப் போகும். அறிந்து கொள்ளுங்கள். அது தான் உள்ளம்.” (நூல்: புகாரி, முஸ்லிம்)
மனிதர்களை இறைவனுக்கு அஞ்சி, மனசாட்சியுள்ள மனிதர்களாக வாழச் செய்யும் மார்க்கம் இஸ்லாமே.
அத்தகைய இஸ்லாம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கை நெறியாக ஆகாதவரை இந்நாட்டில் குற்றங்களை குறைக்க இயலாது.
இஸ்லாம் வந்து விட்டால் எல்லாம் வந்து விடும்.
கண்ணியமான ஆடை, குற்றங்களை குறைக்கும் வலிமையான சட்டங்கள், இதற்கெல்லாம் அப்பால் மனிதர்களை குற்றங்களில் ஈடுபட விடாமல் தடுக்கும். சுய கட்டுப்பாடு – சுய ஒழுக்கம் இவையும் வரும்.
source: வெள்ளிமேடைநியூ