Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உண்மையிலேயே உலமாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்! (1)

Posted on December 31, 2012 by admin

உண்மையிலேயே உலமாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்! (1)

[ நீங்கள் அல்குர்ஆனையும் பின்பற்றவில்லை; ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றவில்லை; நேர்வழி நடந்த கலீஃபாக்களையும் பின்பற்றவில்லை; நபி தோழர்களையும் பின்பற்றவில்லை; அந்த நான்கு இமாம்களையும் பின்பற்றில்லை; யூத, கிறிஸ்தவ ஊர் பெயர் தெரியாத அநாமதேய பேர்வழிகளின் சுய நலத்துடன் கூடிய கற்பனைக் காவியங்களையே பெரிதும் மதித்துப் போற்றி, அவற்றையே வேத வாக்காகக் கொண்டு, நீங்களும் வழி கெட்டு, பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறீர்கள்.

பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களைத் திருப்திப்படுத்தி ஆதாயம் அடைய, ஷைத்தானின் தூண்டுதலின் அடிப்படையிலுள்ள அவர்களின் மனோஇச்சைக்கு ஏற்றவாறுதான் நீங்கள் ‘பிக்ஹு’ என்ற பெயரால் மார்க்க சட்டம் சொல்லுகிறீர்கள். ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இறைவனது நேரடி தெளிவான கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் சுய கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் எந்த அளவு வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

சுயநலத்துடன் கற்பனை செய்த பொய்யான இட்டுக்கட்டிய ஹதீஸ்களைக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளைப் புறக்கணிக்கிறீர்கள். 

 அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், அவனது தூதருடைய சொல்லுக்கும் மாற்றுக் கருத்துக் கொள்வது பகிரங்கமான வழி கேடு என்றும், அது நிரந்தர நரகில் சேர்க்கும் என்று கூறும் அல்குர்ஆன் 33:36, 66, 67, 68 எச்சரிக்கையின் அடிப்படையிலேயும் கூறுகிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து சிந்தித்து முடிவெடுக்க முன் வாருங்கள்.

மவ்லவிகளாகிய நீங்கள், மார்க்கம் அறியாத முத்தவல்லிகள், தலைவர்கள் முன்னால் கைகட்டி வாய் பொத்தி, அவர்கள் காலால் இடும் கட்டளைகளை நீங்கள் தலையால் நிறைவேற்றிவரும் நிலைமாறி, அந்த முத்தவல்லிகளிலிருந்து, தலைவர்களிலிருந்து, செல்வந்தர்களிலிருந்து அனைவரும், மார்க்க அறிஞர்கள் முன் கைகட்டி, வாய்பொத்தி, அந்த அறிஞர்கள் காலால் இடும் கட்டளைகளை அவர்கள் தலையால் நிறை வேற்றிடும் அற்புதமான நிலை உருவாகிவிடும். இன்றைய மவ்லவிகளாகிய உங்களின் இவ்வுலக வாழ்க்கை நிலை பாழ்பட்டதாக ஆகிவிட்டாலும், உங்களின் மறுஉலக வாழ்க்கையாவது சீர்படுவதுடன் எதிர்கால மார்க்க அறிஞர்களின் எதிர்கால நிலையாவது உயரும். மவ்லவிகளாகிய நீங்கள் தயாராவீர்களா?] 

  உண்மையிலேயே உலமாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்! (1)   

அல்குர்ஆன் 2:44, 61:3, 62:5 அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மவ்லவிகள் கண்டு கொள்வதாக இல்லை; தவ்றாத் கொடுக்கப்பட்டு அதை ஓதுவதன்றி அதன்படி செயல்படாத யூத ஆலிம்களை, ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் என்று அல்லாஹ் கடிந்து கூறுவது போல், அல்குர்ஆன் கொடுக்கப்பட்டு அதை ஓதுவதன்றி அதன்படி செயல்படாமல், முன்னோர்களின் கற்பனைகளின்படி செயல்படும் இந்த மவ்லவிகளும் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் என்பதில் சந்தேகமுண்டா? சுய விளக்கங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் வசனங் களைப் பொய்ப்பிக்கும் இந்த மவ்லவிகளின் உதாரணம் மிகக் கெட்டதாகும் என்பதை மறுக்க முடியுமா? (மீண்டும் பார்க்க 62:5)

மவ்லவிகள், ஆலிம்கள் அல்லாமாக்கள், மவ்லானாக்கள் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள் மக்களிடம் மிகக் கடுமையாக எச்சரிக்கும் ஹராமான சம்பாத்தியங்கள் அனைத்தையும் பற்றி அல்குர்ஆனில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப் படுகின்றன. ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளும் ஹராமான சம்பாத்தியத்தைப் பற்றி சுமார் ஐம்பது (50) இடங்களில் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹராம்கள் அனைத்தையும் ஒருங்கே ஒருவன் செய்தாலும் மார்க்கத்தைப் பிழைப்பக்கிக் கொண்டிருக்கும் இந்த மவ்லவிகளை விட குறைந்த அளவு பாவியாகத்தான் இருப்பான் போலும். இந்த எச்சரிக்கைகள் இந்த மவ்லவிகளின் உள்ளங்களைத் தொடுவதாக இல்லை. காரணம் அல்லாஹ் 5:13ல் சொல்லுவது போல் அவர்களின் உள்ளங்கள் ஹராமான உணவால் இறுகிவிட்டன. இந்த 5:13 கூறும் இழிகுணங்கள் அனைத்தும் இவர்களிடம் காணப்படுகின்றன.

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் பெரும் கேடுகளை கீழ்வரும் இறைவாக்குகளை படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முடியும்.

2:41,78,79,109,146,159,161,162,174,175,176,188, 3:77,78,187,188, 4:44,46, 5:13,62,63, 6:20,21,26,27,91, 9:9,34, 10:73, 11:18-22, 31:6,

மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது ஹராம் என்பதைக் கூறும் இறை வாக்குகள். 11:29,51, 25:57, 26:109. 127,145, 164,180, 34:47, 36:21, 38:86, 52:40, 68:46.

மார்க்கப் பணிக்கு கூலி வாங்குகிறவர்கள் நேர்வழியில் இல்லை. கோணல் வழிகளில் இருக்கிறார்கள் என்பதை 36:21 இறைவாக்கு உறுதிப் படுத்துகிறது.

மக்களில் மிகப் பெருந் தொகையினர் வழிகேட்டில் சென்று நரகை நிரப்புவார்கள் என்பதை 32:13, 11:119 இறைவாக்குகளும், அதிகமான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள், நேர்வழியை விளங்கமாட்டார்கள், சிந்திக்கமாட்டார்கள், உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறும் பல இறைவாக்குகளும் உறுதிப் படுத்துகின்றன.

நேர்வழி நடந்து சுவர்க்கம் அடைபவர்கள் மிகமிக சொற்பமானவர்கள். அந்தச் சொற்பமான நேர்வழி நடக்கும் முஸ்லிம்களும் இந்த மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள் வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளும் இந்த மவ்லவிகள் வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் கட்டாயத்தில் – அவசியத்தில் இருக்கிறார்கள். நரகை நிரப்பும் பெருங்கொண்ட முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதாக இருந் தால் வழிகேடுகளைத்தான், கோணல் வழிகளைத்தான் நேர்வழி என்று அறிந்த நிலையிலேயே அவர்களிடம் சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஷைத்தானின் தூண்டுதலால், மக்களின் மனோ இச்சையும் வழிகேடுகளைத்தான் நேர்வழியாக அவர்களுக்குக் காட்டும்.

இந்த இடத்தில் நமது ஆதித் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையைவிட ஷைத்தானின் துர்போதனைக்கு, அவனின் மதிமயக் கும் ஆசை வார்த்தையில் மயங்கியதை – தவறிழைத்ததை இங்கு நமது கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் ஷைத்தான் தனக்கும், தனது சந்ததிகளுக்கும் பகிரங்கமான விரோதி என்பதை அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைக் கொண்டும், தனது சொந்த அனுபவத்திலும் கண்டு கொண்டவர்கள். (பார்க்க 2:30-39, 7:11-25, 15: 30-43, 18:50,20:116-127 26:95, 34:20, 38:74-85) அந்த ஆதத்தையே மதி மயங்கச் செய்து, மனோ இச்சைக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை மீறச் செய்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? இன்னும் அல்குர்ஆனில் ஷைத்தானைப் பற்றிய எச்சரிக்கை களைப் பாருங்கள்.

2:168,208,268, 4:38,60,119,120, 6:43,142, 7:201,202 8:48, 14:22, 16:63, 17:27,53, 61-65, 22:3, 24:21, 25:27-30, 29:38, 31:21, 35:6, 36:59-65, 41:36, 43:62, 47:25, 58:19, 59:16 ஷைத்தானைப் பற்றிய இந்த அனைத்து அல்குர்ஆன் வசனங்களையும் நடுநிலையோடு, பொறுமையோடு நிதானமாகப் படித்து, உணர்கிறவர்கள், ஷைத்தான் எப்படி எல்லாம் சாகசங்கள் செய்து மனிதனை மதிமயங்கச் செய்து அவன் காட்டும் கோணல் வழிகளை நேர்வழி போல் நம்பச் செய்து கழுத்தறுக்கிறான்; அதற்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்கள், கேவலம் இந்த அற்ப உலக வாழ்க்கைக்காக, அந்த ஷைத் தானின் துர்போதனைகளையே நற்போ தனைகளாக மக்களை நம்பச் செய்து அவர்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளுகிறார்கள் என்பதை எளிதில் விளங்க முடியும்.

அதனால்தான் மார்க்கத்தைக் கொண்டு பணம் பண்ணும் இந்த மவ்லவிகள் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்று அடிக்கடி கூறி வருகிறோம். அவர்கள் மக்களை நேர்வழியிலிருந்து வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள் என்பதை, அல்குர்ஆன் நேரடியாக, தெளிவாகச் சொல்லும் ஒரு கருத்தை மாற்றி இதை இப்படி விளங்க வேண்டும், அப்படி விளங்க வேண்டும், என்று கூறி அந்த வசனத்தின் அசல் கருத்தை மாற்றி விடுவார்கள். இது 2:159, 161, 162 இறைவாக்குகள்படி பெருங்குற்றம் என்பதை உணர மாட்டார்கள்.

இதற்கு இந்த ஆக்கத்தை எழுதிக் கொண்டிருந்தபோதே நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாகத் தருகிறோம். இரண்டு காதியானி சகோதரர்கள் எம்மை சந்திக்க வந்தார்கள். அவர்களது பேச்சில் பல ஆதம்கள் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை எடுத்து வைத்தனர். உடனே நாம் எமது வாதத்தை வைக்காமல் அல்குர் ஆன் 4:1 இறைவாக்கை எடுத்துக் காட்டி, அதில் ஒட்டுமொத்த மனிதர்களையும் அழைத்து ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் பல்கிப் பெருகச் செய்தான் என்று அல்லாஹ் நேரடியாகவே கூறுகிறான் என்று அல்குர்ஆனில் இருப்பதை அப்படியே எடுத்து வைத்தோம்.

உடனே அவர்கள்..

இந்த குர்ஆன் வசனத்தில் உள்ளது நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் நீங்கள் நஃப்ஸ் ஆன்மா என்பதைத் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு நஃப்ஸ் – ஆன்மா என்று குறிப்பிடுவது ஆதத்தை அல்ல; அல்லாஹ்வையே குறிப்பிடுகிறது; மனிதனை அல்லாஹ் தனது சாயலில் படைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறான் என்று சுய விளக்கம் கொடுத்து ஷைத்தானைப் பின்பற்றினார்கள். இப்படி அவர்கள் கூறியதும் எமக்கு மிகக் கடுமையான கோபம் வந்து விட்டது. தயவு செய்து உங்களின் சுய விளக்கத்தை நிறுத்துங்கள். உங்களோடு பேசுவதில் பலனில்லை. “அல்லாஹ்வின் அடியார்கள், மூடர்கள் அவர்களுடன் வார்த்தையாட முற்பட்டால் ‘ஸலாம்’ சொல்லி விலகி விடுவார்கள்” என்ற 25:63 அல்குர்ஆனின் கட்டளையை எடுத்துக் கூறி முற்றுப்புள்ளி வைத்தோம்.

இந்த 4:1 வசனத்தில் அல்லாஹ் “உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்தே படைத்தான்; அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்” என்று நேரடியாக கூறுகிறான். காதியானிகளின் சுய விளக்கப்படி அந்த ஆன்மா அல்லாஹ் என்றால், அல்லாஹ் தன்னிலிருந்தே தன் மனைவியைப் படைத்ததாகப் பொருள்படுகிறதே, உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் பெற்றெடுத்த பிள்ளைகள் என பொருள்படுகிறதே (நவூதுபில்லாஹ்) இது எவ்வளவு அபத்தமான விளக்கம். அல்லாஹ் எவரையும் பெறவுமில்லை என்ற 112:3 இறை வாக்குக்கு முரண்படுகிறதே! படைத்த இறைவனையே மறுக்கும், அவனுக்கு இணைவைக்கும் கொடிய குற்றம் என்பதை காதியானிகள் ஒருபோதும் விளங்க மாட்டார்கள். காரணம் அவர்கள் பெற்றிருக்கும் போதனை அப்படித்தான். அல்குர் ஆனில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு விளக்கியுள்ளதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அல்லாஹ்வின் விளக்கத்திற்கே மேல் விளக்கம் கொடுக்கும் அல்லாஹ்வை விட ஆற்றல்மிக்க அறிவாளிகள் (நவூது பில்லாஹ்) இந்த காதியானிகள்.

காதியானிகள் மட்டுமல்ல மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள் அனைவருமே அல்லாஹ், அவனது தூதர் விளக்கியுள்ளது உங்களுக்குப் புரியாது-விளங்காது; அதைப்புரிய வைக்கும் – விளங்க வைக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது; நாங்கள் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட ஆற்றல் மிக்கவர்கள் (நவூதுபில்லாஹ்) என்ற மேல் எண்ணத்தில் அல்குர்ஆனிலுள்ள நேரடியான – தெளிவான கருத்துக்களை திரித்து, வளைத்து, மறைத்து சுய விளக்கங்கள் கொடுத்து மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளுவார்கள். ஷைத்தானும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால், அந்த ஷைத்தானின் வலையில் சிக்கி இருக்கும் பெருங் கொண்ட மக்களும் இந்த மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் சென்று நரகில் விழுவார்கள், விளக்கில் விழும் விட்டில்களைப் போல்.

இப்போது இந்த மவ்லவிகளிடமும், உலமா சபைகளிடமும் நாம் பகிரங்கமாகக் கேட்கிறோம். அல்லாஹ் மக்களுக்காக அல்குர்ஆனில் விளக்கியுள்ளதையும், இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்காக நடைமுறைப்படுத்திக் காட்டியதையும், உலகிலுள்ள அனைத்து மக்களும் அவரவர்களது மொழியில் படித்து அல்லது படிக்கக் கேட்டு விளங்கமுடியும் என்று ஒப்புக் கொள்ளக் கூடியவர்கள் உங்களில் யாராவது உண்டா? அவற்றை நாங்கள் விளக்கித்தான் நீங்கள் விளங்க முடியும் என்று கூறக்கூடியவர்களே நீங்கள் அனைவரும். அதாவது அல்லாஹ்வை விட, அல்லாஹ்வின் தூதரைவிட மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது (நவூதுபில்லாஹ்) என்று ஆணவம் பேசும் நிலையில்தானே நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.

இந்த ஆணவம் எதுவரை உங்களிடம் காணப்படுகிறதோ அது வரை இந்த உலகிலும் உங்களுக்கு இழிவுதான். மறுமையிலும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் உலக முடிவு நாள் வரையுள்ள மக்கள் அனைவர் முன்னாலும் இழிவை அடைவதோடு மிகக் கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும். நீங்கள் அனைவரும் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும். மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்து, அந்த கூலிக்காகத்தானே பள்ளி முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலையில் கைகட்டி, பணிந்து கையேந்தி நிற்கும் மிகக் கேவலமான நிலை இருக்கிறது.

மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத பணம் படைத்த முத்தவல்லிகள், தலைவர்கள் இடும் கட்டளையை ஏற்று மார்க்க முரணான செயல்களை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்? அவர்களது அராஜக, குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால், பணி நீக்கம் என்ற பெயரால் பந்தாடப்படுகிறீர்கள்! இந்த இழிவுகளையும், கேவலங்களையும், ஊர்ஊராக அலையும் அவலங்களையும் எப்படி உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? பிழைப்புக்கு வேறு வழி தெரியாத காரணத்தால், வறுமை உங்களை பயமுறுத்துவதால்தானே இத்தனை இழிவுகளையும், கேவலங்களையும், நாடோடி வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள்? இந்த கூலிக்காகத்தானே மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் அல்லாஹ்வைவிட, அவனது தூதரைவிட, உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று ஆணவத்துடன் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb