நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா? (1)
சகோதரி யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன்..
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் செய்தி இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டின் பல பகுதிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், போராட்டம்,லோக் சபா, ராஜ்சபா சோகமயம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.
லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,
ராஜ்யசபாவில் பேசிய நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் “இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது என்றும் எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலை அல்லது வருத்தம் தெரிவித்ததா??? இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் சோக மழையை ராஜ்ய சபாவில் பொழிந்துள்ளார்.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலா வரும் திரு. அண்ணா ஹாசரே அவர்களும் தன் கடும் கண்டனத்தை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தன் ஆதரவையும் தெரிவித்ததோடு, கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிரான விசாரணைக்கு விரைவு கோர்ட் அமைத்து ,கடுமையான சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும் என்றார்.
டெல்லி நகரம் கற்பழிப்புத் தலைநகரமாக மாறிவருவது வேதனையளிக்கிறது என்று டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் நடிகை ரோகிணி, நடிகர் அப்பாஸ் மற்றும் அவரது மனைவி எர்ரம்அலி மற்றும் அப்பாசின் இணையதள நண்பர்கள் அனைவரும் மெரீனா கடற்கரையில் திடீர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மாணவ மாணவிகளும் அங்கே குலுமியுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது, கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
கலைத்துறையாக இருக்கட்டும், அரசியல் துறையாக இருக்கட்டும், அரசாங்கமாக இருக்கட்டும், பொது மக்களாக இருக்கட்டும், உண்மையில் நீதிமான்களாக இருக்கின்ற உங்களின் மனதில் இருந்து இது போன்ற வருத்தமும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கமும் எழுந்து இருந்தால் இதை இந்தியாவில் உள்ள எந்த மூலை முடுக்கிலும் நிகழும் இது போன்ற அனைத்து கொடூரங்களுக்கும் அல்லவா தெரிவித்து இருக்க வேண்டும். இன்று மட்டும் உங்கள் மனசாட்சி உங்களை தட்டி எழுப்பியதன் நோக்கம் என்னவோ???
இது போன்ற அட்டூழியங்கள் இன்று தொடங்கியது அல்ல, காலம் தொட்டு பெண்கள் இது போன்ற இடருகளுக்கு உள்ளாக்கபடுகிறார்கள். அதை கண்டும் காணாமல் அரசும், அரசியல்வாதிகளும் தங்கள் சொகுசு வாழ்க்கையில் ஈடுபடுவதும், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டம் தீட்ட தொடர்வதுமே வழக்கம்.
இன்று எழுந்த இந்த குரல் இதற்கு முன் எத்தனை எத்தனை அட்டூழியங்கள் பெண்களுக்கு என்று அல்லமால், ஒரு ஒட்டு மொத்த மக்களுக்கு எதிராக நடந்த போது எங்கே சென்றார்கள். இவர்கள்? நீதிக் குரல் எதை பார்த்து எழுகிறது, மனிதனின் நிறத்தை பார்த்தா???, இல்லை வாழும் இடத்தை பார்த்தா??? இல்லை அவர்கள் எந்த மதம் என்பதை பார்த்தா??
அவர்கள் எதுவாக இருந்தாலும் மனிதனின் நிறம் வேறுபட்டாலும் எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உடம்பில் ஓடும் இரத்தத்தின் நிறமும் சிவப்பு தானே, சிட்டியில் வாழ்ந்தாலும் பட்டி தொட்டிகளில் வாழ்ந்தாலும் பெண் என்பவள் பெண் தானே, மதம் எதுவாக இருந்தாலும் கிடைக்கும் வலி, வேதனை, அவமானம் ஒன்று தானே. யாராக இருந்தாலும் நீதி ஒன்று தான், நீதி என்பது அனைவர்க்கும் சமம் என்கின்ற சட்டம் எங்கே??? நீதி என்பது அனைத்து இடங்களிலும் பேசுவதில்லை என்பதற்கு பல இடங்களில் ஊமையாக இருந்துள்ளது என்பதை நிருபிக்க இதோ உங்கள் பார்வைக்காக சில தருணங்கள்….
குஜராத் இனப் படுகொலை :
இன்று நடந்த கொடூரத்திற்கு இவ்வளவு எதிர்ப்பும், போராட்டமும் தெரிவிக்கின்ற இந்த அரசாங்கமும், அரசியல் வாதிகளும், பொது மக்களும் எங்கே போய் விட்டனர் அன்று???
இன்று நல்லவர் வேஷம் போட்டு கோசம் போடும் இதே பா.ஜ.க அரசின் முன்னிலையில், சாதுர்யமான திட்டப்படி கடந்த 2002-ஆம் வருடம் குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, எட்டு மாதம் பருவமுடைய குழந்தை உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரிவதை கண் சிமிட்டாமல் கண்டு ரசித்தனர் அந்த பாசிச பயங்கரவாதிகள். இந்த இனப் படுகொலை கலவரத்தில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண் மகனையும் இவ்வுலகக்கு கடவுள் நேரடியாக அதிசய உயிராக அனுப்பி விடவில்லை. பெண் என்பவள் இத்துணை துன்பங்கள் ஆண்களால் அடைய நேரிடும் என்பதை முன்னரே அறிந்தோ என்னவோ கடவுள் இப்படி ஒரு மாபெரும் கிருபையை ஒவ்வொரு உயிரையும் ஒரு பெண்ணின் மூலம் அனுப்பி வைக்கிறான். அப்போதாவது நீங்கள் பெண்கள் மீது இரக்கப்படுவீர்களா, அவர்களை துன்புறுத்தாமல் விட்டு வைப்பீர்களா என்பதை சோதிப்பதற்காகவோ என்னவோ???
ஆனால் இதே குஜாராத் படுகொலையில் மனித உருவில் வந்த ஆண் மிருகங்கள் சில, கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர்.
இதை விட கொடுமை ஒரு பெண்ணுக்கு இவ்வுலகில் நடந்து இருக்க முடியுமா??? அந்த மனித மிருகங்களுக்கு, அந்த நிறை மாத கர்ப்பிணியின் வயிறை குத்தி கிழிக்கும் போது கூட தன்னை பெற்றெடுத்தவளும் பெண் என தோணவில்லையா??? ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தது இதற்கு தானா என்று வெட்கி தலைக் குனிய வேண்டாமா???
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.